லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்) Thanks:thesam net.co.uk.