இலங்கை விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி லண்டனிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் கூடிய தமிழ் ஆர்ப்பாட்டக் காரர்கள், உயர்ஸ்தானிகராலயத்தின் வீசா வழங்கும் கட்டடத்தின் ஊடாக உயர்ஸ்தானிகராலயத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதன்போது இந்தியத் தூதரகத்திற்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டு உள்ளதாகவும் எனினும் சிறிது நேரத்தில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்துவரும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் அழைக்கப்பட்டு, உயர்ஸ்தானிகராலயத்துக்குள் நுழைந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.