மகிந்த ராஜபக்ச சகோதரர்களும் சரத் பொன்சேகாவும் இணைந்து கொலை செய்ததாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படும் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலைசெய்தவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர் இன்று மரணமானார்.
36 வயதே நிரம்பிய ஜேசுதாசன் என்பவர் மீது கொலைக் குற்றம் சுமதப்பட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் அத்திடிய பிரதேசத்தில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பீ. ஜேசுதாசன் எனும் சந்தேக நபர் இருதய நோய் காரணமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று அறிவித்துள்ளார்.