இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இத் த்கவல்கள் முன்னதாக வாய்வழிச் செய்தியாக வெளிவந்த போதும் இப்போது திவயின என்ற அரச சார்பு சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்திருந்தார், எனினும், அயரின் புயற்காற்று காரணமாக இறுதி நேரத்தில் விஜயம் ரத்து செய்யப்பட்டது.
இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த தினத்திற்கு முன்னதாக பிளேக் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
- ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் அமரிக்காவால் கொலைசெய்யப்பட்ட வேளையில் பிரபாகரனும் ஒசாமா பின்லாடனும் ஒரே வகையான பயங்கரவாதிகள் என ஒ பிளாக் இலங்கையிலிருந்து கருத்து வெளியிட்டவர் எனக் குறிப்பிடத் தக்கது.
புலம்பெயர் தமிழர்கள் பலசாதனைகளை படைத்திருக்கிறார்கள். 2009-ல்
முடிவுக்கு வந்த உள்நாட்டுயுத்தம் முப்பது ஆண்டுகாலம் இவர்கள் அறிவும் இருந்திருக்காவிட்டால் இவ்வளவு காலமும் நீடித்திருக்காது.
1971-ல் ஜனதாவிமுக்தி பெரமுனையை ஒருசிலவாரங்களில் அடக்கியது
போல் ஒருபிரபலமான வங்கிக்கொள்ளைகாரனை செயல்இழக்க செய்வது போல் இலங்கை முதாலித்தவத்திற்கு முடிந்திருக்கும். இங்குதான் தமதுவர்க்கதன்மையை தொலைத்த லும்பனின் பாத்திரம் வருகிறது. இந்தலும்பன்கள் இலங்கையில் நடக்கும் கொலைகளைபற்றி துயரங்களை பற்றி என்றுமே கவலை கொண்டதில்லை. தமக்கு கிடைக்க கூடிய வாழ்விட உரிமையைப் பற்றியும்..எத்தனை கொலைகள் நாளாந்தம் இலங்கையில் வீழ்ந்தால் அத்தனையும் எமக்கு
கிடைக்கும் தங்கநாணயங்களே என கருதினார்கள். அதுவே இலங்கையில் உள்நாட்டுயுத்தம் நீடித்ததின் ஆதாரசுருதி.
ஓபிளேக்கும் புலம்பெயர்தமிழர்களும் ரகசியசந்திப்பை நடத்தினார்கள் என்பதை ஒரு பொய்யான செய்தியாகவோ வதந்தியாகவோ கருதிவிட முடியாது.அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கும் புலம்பெயர் லும்பன்களுக்கும் பலதேவைகள் இருக்கிறது. அவை வெவ்வேறானவை. ஒன்று சிழக்காசிய சந்தையை தன்பிடியில் வைத்திருப்பதற்கு இலங்கையும் ஒருமுக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்
லும்பன்களின் பாத்திரமோ கலைந்த கனவுமீண்டும் ஒட்டாத என்பதே! வரலாற்று விதியை யாரால் தடுக்க முடியும்?. அதை நாளைக்கு
நடப்பவை தான் உறுதிசெய்யமுடியும்.