ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்

prapakaranபிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.

இந்தப் பெயரை எப்போது உத்தியோக பூர்வமாக அறிவித்தனர் என்றோ அவர்களின் நடவடிக்கை குறித்த விபரங்களையோ நான் அறிந்திருக்கவில்லை.

பிரபாகரனின் இராணுவ வலிமை குறித்து தங்கத்துரைக்கு நேர்மறையான கருத்துக்களே இருந்தது. அவர் பிரபாகரன் உறுதியான போராளி என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

புதிய புலிகளாக நாம் செயற்பட்ட காலப்பகுதியிலும் அதன் பின்னர்ரும் பல தடவைகள் தங்கத்துரை குட்டிமணி போன்றோர் எம்மிடம் பயிற்சி பெற்றிருக்கின்றனர். தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல் முதலாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கூட தங்கத்துரை குட்டிமணி போன்றோரின் இராணுவ நடவடிக்கைகள் சில எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகவே உரிமை கோருமாறு அவர்கள் அனுமதித்திருந்தனர். தங்கத்துரை குட்டிமணி போன்றோர் தனியான குழுவாகச் செயற்பட்டாலும் எம்மத்தியில் பகை முரண்பாடு நிலவியதில்லை.

இவ்வேளையில் தங்கத்துரையும் பிரபாகரனும் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்வாறு சந்தித்த வேளையில் பிரபாகரனிடம் தங்கத்துரை அனுதாபம் காட்டியிருக்கிறார். புலிகள் இயக்கம் பிரபாகரனது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பதென்பதையும் அவர் தான் முதலில் தமிழீழத்திற்கான புலிகள் இயக்கத்தை பலம்மிக்கதாக உருவாக்கியவர் என்பதையும் தங்கத்துரை பிரபாகரனிடம் கூறியது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்குத் தான் அதிக உரிமை உண்டு என்பதையும் கூறியிருக்கிறார்.

மேலும் பிரபாகரனுக்கு ஏனைய எல்லோருடனும் அதிர்ப்தி இருந்தால் தம்மோடு இணைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதன் பின்பதாக சில நாட்கள் பிரபாகரன் சார்ந்த குழுவிலிருந்தவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய குழு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறை இவர்களை ஓரணியில் இணைத்திருந்தாலும், ஏனைய எல்லா உறுப்பினர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததால் பிரபாகரனால் அவர்களுடன் நீடிக்க முடியவில்லை.

இறுதியில் பிரபாகரன் புலிகள் இயகத்திலிருந்த ஏனையோரிடம் எஞ்சியிருந்த பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் கூட, அந்தப் பெயரை அவர் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிய வழங்கி விட்டுச்செல்கிறார்.

இவ்வாறு பிரபாகரன் விலகிச்சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆளுமை செலுத்துபவர்களாக அன்டன், மனோ மாஸ்ரர், தனி, ராகவன் போன்றோர் திகழ்ந்தனர். மனோ மாஸ்டர் போன்றோர் பின்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்க்கு தாமே உரிமையுடைவர்கள் என்று குறிப்பிட்டதை அறிந்திருக்கிறேன்.

புலிகளிலிருந்து தனியாக விலகிச்சென்ற பிரபாகரன், தங்கத்துரை வழி நடத்திய ரெலோ என்ற அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

துரையப்பா கொலை நடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் இலங்கை அரச படைகளால் பிரபாகரனோடு இணைந்திருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவ்வேளையில் பிரபாகரன் தனிமைப்பட்டிருந்தார். எமது உதவியை நாடி எமது ஊரை நோக்கி அப்போது அவர் வந்த வேளையில் உண்பதற்கு மூன்றுவேளை உணவோ, தங்குவதற்கு நிரந்தர இடமோ இருந்ததில்லை. பதினேழு வயது பிரபாகரனின் தனியனாக நின்றிருந்தார்.

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது. அதே போன்று தான் சார்ந்த இயக்கத்திடமிருந்து அனைவராலும் நிராகரிக்கப்பட்டு தனிமையடைந்த இரண்டாவது நிகழ்வு இவ்வேளையில் நடைபெறுகிறது.

இனிமேல் தனது வாழ் நாள் போராட்டம் என்று வரித்துக்கொண்ட பிரபாகரன் போராடுவதற்காகவே தங்கத்துரை குட்டிமணி சார்ந்த அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

பிரபாகரன் எந்த நடவடிக்கைக்கும் மறுவார்த்தையின்றி ஒத்துழைக்கும் போக்கைக் கொண்டிருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவரும் பிரபாகரனோடு சென்று தங்கத்துரை – குட்டிமணி குழுவில் இணைந்து கொள்கிறார்.

1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா அச்சகத்தில் சுந்தரம் கொலைசெய்யப்பட்ட நடவடிக்கையானது பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ரெலோ இயக்கத்தில் அவர் உறுப்பினராக இருந்த வேளையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

மனோ, அன்டன், தனி,ராகவன்,சசி,பண்டிதர்,சங்கர்,ஆசீர், போன்ற- பேபி சுப்பிரமணியம் தவிர்ந்த – அனைவரும் பிரபாகரனோடு ரெலோ இயக்கத்திற்குச் செல்லாமல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயற்பட ஆரம்பிக்கின்றனர்.

தங்கத்துரை குழுவோடு இணைந்த பிரபாகரன் சில நாட்களிலேயே பண்டிதர், சங்கர், போன்றோருடன் தனித்தனியாகப் சந்திக்கிறார். அவர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ரெலோவில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு கோருகிறார். உடனடியான இராணுவச் செயற்பாடுகளற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் விரக்தியுற்ற இளைஞர்களான பண்டிதர், சங்கர், ஆசீர், புலேந்திரன் போன்றோர் பின்னதாக ரெலோ அமைப்பில் இணைந்து கொள்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவராக இணைந்து கொண்டதும் மறுபுறத்தில் மனோ மாஸ்டர், ராகவன், தனி, அன்டன் போன்றோர் தனிமைப்பட்டுப் போகின்றனர்.

அன்டன் ராகவன் போன்றோர் சில காலங்களின் பின்னர் இணைந்து கொள்ள மனோ மாஸ்டர், தனி ஆகியோர் தொடர்புகளற்று செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன். பின்னதாக 1984 காலப்பகுதியில் வல்வெட்டியில் புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டார்.

*1980 ஆம் ஆண்டின் காலிறுதிப் பகுதியில் நடைபெறும் உடைவுகளும், இணைவுகளும் நிறைந்த இந்தச் சம்பவங்கள், பலர் மத்தியில் வெறுப்பையும் விரக்த்தியையும் உருவாக்குகின்றன. பல போராளிகள் போதைக்கு அடிமையாகின்றனர்.

இச் சம்பவங்கள் நடைபெற்ற அதே வேளையில் புளொட் இயக்கமாகப் பெயர் சூட்டப்பட்ட எமது குழுவில் பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. சந்ததியார் முழு நேரமாக எம்மோடு செயற்பட ஆரம்பிக்கிறார். சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. இராணுவத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்கதை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.

நாம்  எவற்றிற்கு எதிராகப் போராடினோமோ அவை அனைத்தும் மறுபடி உருவாக்கப்படுவதாக பலர் விரக்க்திக்கு உள்ளக்கப்படுகின்றனர். சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது. நாம் மக்கள் போராட்டம் என்ற அடிப்படையை முன்வைத்து உருவாக்கிய புதிய பாதை உமா மகேஸ்வரனின் வருகையோரு வேறு திசையில் பயணிப்பதாக உணர்கிறோம்.

*சம்பவங்களை நினைவிலிருந்தே எழுதுவதால் இனியொரு வாசகர்களின் பின்னூட்டங்களிலிருந்தும், என்னோடு முன்பிருந்தவர்களுடனான உரையாடலின் மூலமும் செழுமைப்படுத்திக் கொள்கிறேன். முன்னைய பதிவில் 1980 பின்பகுதி என்பது 1979 பின்பகுதி எனத் தவறாகப் பதியப்பட்டதற்கு வருந்துகிறேன்.

குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.

(இன்னும்வரும்..)

தொடரின்  முன்னைய பதிவுகள்…

பாகம் 23 பாகம் 22 பாகம் 21 பாகம் 20 பாகம் 19 பாகம் 18 பாகம் 17 பாகம்16 பாகம்15 பாகம்14
பாகம்13 பாகம்12 பாகம்11 பாகம்10 பாகம்9
பாகம்8 பாகம்7 பாகம்6 பாகம்5 பாகம்4

158 thoughts on “ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்”

 1. தொடங்கியிட்டாங்கையா, திறந்திட்டாங்கையா,அடுத்த முற்சந்தி முடிவெடுப்புக்கான கும்மாங்கூத்துக்களம் ,இனி நித்திரை கொண்டாப்போலதான்,ம்ம்ம்

  1. கட்டு கதை 70%நான் 1979 இல் இருந்து 1984 ஆம் வரை  இவர்கலி ஒன்ட்ரு சேர்கக எடுத முயட்ஷிகல் எல்லாம் முரன்பாடுகல் ஆனால் ஐயர் கதயில் பெரும் குழப்பமும் முரண்களும் தெரிகின்றன. 

 2. ஐயரின் எழுத்தில் பெரும் குழப்பமும் முரண்களும் தெரிகின்றன. பின்னூட்டங்களுக்கு அவ்வப்போது பதில் கொடுத்திருந்தால் ஓர் தெளிவு ஏற்பட்டிருக்கும்.

  1. ஐயர் தானாக எழுதுவதாக தெரியவில்லை

 3. நீங்கள் பிரிந்து போகும் போது,அதி குறைந்தது ஒரு வருடத்திற்கு ஆயுத ரீதியான எந்த முயற்சியுமற்று,அரசியல் அமைப்பைக் கட்டுதல் மட்டும் என்கிற அடிப்படையில் புதிய பாதைக் குழுவாகப் புறப்பட்டீர்கள்.அதனடிப்படையில் உங்களுடமிருந்த ஆயுதம்,பணம் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டு,உங்கள் சுயாதீன முயற்சிக்காய் புதிய பாதை’யில் நடைபயில உணர்வு’ பூர்வமாய் அனுமதிக்கப்பட்ட ஒரு வரலாற்றை ஒரு முறை நினைவில் மீட்டு எழுதுங்கள்..

 4. அஹா அடடா !. தமிழ் ஈலா புளிகளுக்களில் இருந்து விலகி மாட்டரு போராட்ட குழுவுடன் சேர்ந்த முதலாவது “துரோகி”: இவன் தானா ? அடப்பாவி செய்யுறது எல்லாம் சுயநலத்துக்காக செய்து போட்டு பிறகு மட்டறவன் கருது சொன்னால் துரோகி.இப்ப விளன்க்குது ஏன் ? யாரு ? குட்டிமணியும் தங்க துறையும்.கட்டி கொடுத்தார்கள் என்று.பாவம் ஸ்ரீ சபாரத்தினம்…ரோட்டுல போன ஓணானை போகட்டுல போட்ட கதைதான்.. குட்டி மணிக்கும் தங்கதுரைக்கும் ஸ்ரீ சபாரத்னாதுக்கும்…கடைசியாக கொலை செய்தது தவிர வேறு வேறு மக்கள் எளிட்ச்சி கூட்டம் , விடுதலை பாடுகள் எண்டு ஒண்டுமே நடக்கலியா ?

 5. “வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”.ஈழத்தமிழர்கள் நாம் வீழ்ந்து கிடக்கிறோம்.எம்மைத் தூக்கிவிடத்தான் இப்போது ஒருநல்ல தலைவன் இல்லையே. அன்று 35 வருடங்களுக்கு முன், தமிழரிடம் எதுவுமே இல்லை போராடுவதற்கு. ஆனால் நல்ல ஒரு தலைவன் மேதகு.பிரபாகரன் இருந்தான். ஆனால் இன்று போராட எல்லா வசதியும் இருந்தும், தலைவன் தான் யாரும் இல்லை.[ அவ்வேளையில் பிரபாகரன் தனிமைப்பட்டிருந்தார். எமது உதவியை நாடி, எம் ஊரைநோக்கி வந்த வேளையில்,உண்பதற்கு மூன்று வேளை உணவோ,தங்குவதற்கு நிரந்திர இடமோ இருந்ததில்லை. 17 வயது பிரபாகரன் தனியே நின்றிருந்தார்.யாருமற்றநிலையிலும் , ஆயுதம் தாங்கி ,சிங்கள அரசுக்கு எதிராகாப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சி இருந்தது]—< வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை அவெர் பின்னாழில் நிருபித்து விட்டார்.ஆனால் அன்றே பதவி, பணம்,ஆட்பலம், ஆயுதம் எல்லாம் வைத்து இருந்த நீங்கள் எல்லாரும் பின்னாளில் என்னதான் உருப்படியாய்ச் செய்தீர்கள்……………………………………………………….

  1. vanniyan,

   நன்றி, நன்றி,,நன்றி,,, நான் நினைத்தவற்றை நீங்கள் பதிவுசெய்திருக்கிறீர்கள்

   17 வயது பிரபாகரன் தனியே நின்றிருந்தார்.யாருமற்றநிலையிலும் , ஆயுதம் தாங்கி ,சிங்கள அரசுக்கு எதிராகாப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சி இருந்தது]—வேறு எவரால் அபப்டிச்சிந்திக்கதானும் முடிந்தது?

   இதுதான் தமிழனின் வீர கல்வெட்டு, எவர் என்ன புறணி பேசி திருப்திப்பட்டுக்கொண்டாலும் ,தமிழர் தலைவர்(தலைவன்) பிரபாகரனே,,,அவை முடிந்த முடிவு,,,

   1. கடந்த பல நூற்றாண்டாய், தமிழரது போராட்டம் , தமிழராலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அது எதிரிகளாலே அல்ல. இதுதான் நிய வரலாறு. இன்றும் கூட எமது போராட்டத்துக்கு அதுதானே நடந்தது. வைக்கலில் படுத்திருக்கும் ” நாய்” தானும் வைக்கோலை சாப்பிடாது, சாப்பிட வரும் “மாட்டையும்”சாப்பிடவிடாத கதைதான் ,இந்த துரோகிகள் கூட்டம் என்றுமே செய்யும் வேலை. தாங்களும் தமிழருக்கு எதுவும் செய்யமாட்டார்கள், முன்னின்று செய்பவர்களையும் விடமாட்டார்கள்: எந்த எதிரிக்கு எதிராகப் போராடினார்களோ, இன்று அந்த எதிரிக்கே அடிமை சேவகம் செய்கிறார்கள்:1990 அளவில்நம்ம “

    1. அப்ப நீர் ஏன் போராடவில்லை?

  2. என்ன போராட்டம்? தமிழரின் விடுதலைக்கா? ஈழத்தமிழரின் விடுதலைக்கா?
   அல்லது தமிழரை அடக்கி வாழும் தமிழரின் விடுதலைக்காவா?
   பண மோகம் கொண்ட தமிழ்ரின் உலகினை ஏமாற்ரி வாழும்போராட்டமா?
   தமிழரில் சிங்கள் அரசுடன் சேர்ந்து தமிழரை ஆழ்வது யார் என்னும் போராட்டமா?
   ஈழ்த்தமிழரரின் பெயரால் பிரபாகரனின் தலைமையில் புலிகள் நட்த்தியது தமிழரின் அதிகாரம்
   காக்கும்
   போராட்டமேயாகும். இதில் தமிழரின் உருமையென்பதெல்லாம் அரசியல்
   வியாபார தந்திரமாகவே அமைந்துள்ளது.

   புலத்தில் தமிழரை ஏமார்ரியது யார்?
   சிங்களவனா? இலங்கையில் அரசுடன் சேர்ந்து பதவிகளிற்கு போராடுவது யார்?
   தமிழனைத் தமிழன் ஏமாற்ரி வாழ்வதை விடுதலையென்னும்
   சொல்லுடன்
   சேர்த்து தமிழரின் விடுதலை யென்று தமிழரை இனியும் பலியாக்க வேண்டாம்.
   துரை

  3. 17 வயது பிரபாகரன் தனியே நின்றிருந்தார். SIRUPILLAI VELAANMAI VILAINTHUM VEEDU VANTHU SERAATHU. THIS IS A GOOD EXAMPLE.

   1. இந்திய சினிமாவுக்கு ஆயிரம் கதைகள் கிடைக்கிறன

    1. “Supper!”
     உங்களுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைவு தானா?

     1. சாப்பாட்டுக்கும் சமாசாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த பிராணிகள் மனித இனம் எனப்படும்.

  4. ஓம் பிரபாகரன் சிங்கள அரசிற்கு எதிராக போராடினார்தரன்.ஆனால் யாருக்காக போராடினார் என்பதுதான் பெருத்த சந்தேகம். மக்களுக்காக போராடவில்வை போராடவேண்டும் எனபதற்காகதான் போராடினார் போலும். 

 6. ஜயரின் பதிவுகள் பல இடங்களில் காலகணிப்பீட்டை ஊகத்தில் கூறுவதால் உண்மையான பல விடயங்களையும் குழப்பத்திற்கும்; சந்தேகத்துக்கும் இடமளிக்கிறது.
  1.1983 காலம் வரை பிரபாகரன் டெலோவில் இருந்ததாக கூறுவதற்கு இடையில் பல்வேறு சம்பவங்கள் புலிகள் இயக்கத்தின் பெயரில்நடந்துள்ளது.
  அ.1982.11.27 இல் சங்கரின் மரணம்
  ஆ.சாவகச்சேரி பொலிஸ்நிலையதாக்குதல்
  இ.சீலன்(ஆசீர்),ஆனந் மரணம்
  ஈ.நெல்லியடியில் பொலிஸ் வாகனத்துக்கு தாக்குதல்
  இன்னும் பல. காலத்துடன் விடயம் முரண்படுகிறது.

  2. சுந்தரம் சுட்ட சம்பவத்தை நன்கு அறிந்த அப்போது புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவரின் கருத்துப்படி சுந்தரம் சித்திரா அச்சகத்தில் கிட்டுவால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் பஸ்தியான் அச்சகத்தில் தன்னை சந்தித்து உரையாடிச்சென்றவர் என்ற தகவலை சொன்னவர் தான் பிரபாகரனின் புலிகள் இயக்கத்துடனேயே தொடர்பில் இருந்ததாக கூறுகிறார். இது பலத்த முரண்பாட்டை சுட்டுகிறது.

  3. சுந்தரத்தை புலிகள் சுடுவதற்கு முன்னர் சுந்தரத்துடனோ அல்லது பிரபாவுடனோ தொடர்பு பட்ட மயிலிட்டி இந்திரன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி ஜயர் சொல்லவேண்டும். அதேபோல் கழுகுபடை ஜெயா மாஸ்ரரின் கொலை பற்றியும் கூறவேண்டும். இந்த செய்தி அப்போது சிந்தாமணி பேப்பரில் மட்டும் சிறிய கட்டம்கட்டிய செய்தியாக வந்திருந்தது.

  4. பிரபாகரன் சிறிசபாரத்தினத்தின் முறுகலில் பிரபாவின் ஆதரவாளர் ஜெயம் சிறியால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் கூறவேண்டும்.
  5.மனோ, அன்டன், தனி,ராகவன்,சசி,பண்டிதர்,சங்கர்,ஆசீர், போன்ற- பேபி சுப்பிரமணியம் தவிர்ந்த – அனைவரும் பிரபாகரனோடு ரெலோ இயக்கத்திற்குச் செல்லாமல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயற்பட ஆரம்பிக்கின்றனர்……………. இந்த பகுதியில் கூறப்பட்ட சசி என்பவர் 13 பேரது உடைவின் போதே புலிகள் இயக்கத்தில் இருந்து முற்றாக விலகிவிட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். சசியை தேவைப்பட்டால் உறுதிப்படுத்தலாம். சசி தற்போது கனடாவில் உள்ளார்.

  6. பிரபா டெலோவில் இயங்கிய சரியான காலப்பகுதியும் விபரமும் இராசுப்பிள்ளைக்கும், ஜெலோ(உதயன்)க்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதுவதே சிறப்பானது.

  1. அப்பாடி..கொலைகள்  தவிர வேறு ஏதாவது நல்ல காரியங்கள் பற்றி கேட்க மாடீங்களா…? ரத்த களரி..இதில் சிங்கவர்கள் பற்றியோ சிங்கள பெயரோ சொல்லப்படவில்லையே ? போட்டது எலாம் தமிழ் போடியனுகளை தானா ? நல்லா இருக்குடி ! 

   1. அந்த நேரம் பிரபாவை போட்டிருந்தால் சிலவேளையில் தமிழீழம் கிடைத்ததிருக்கும்

  2. சிங்களப் பொடியனுகளைப் போடாதது தான் உங்கள் மனவருத்தமா?

 7. சந்தேகத்தைக் கிளப்பும் ‘ஐயரின்’ தொடர்…
  ”1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்.”
  என்று கூறும் ஐயா,
  சுந்தரத்தின் கொலைக்காகவே இந்தச் ‘சப்பைக்கட்டை’ கட்டியிருக்கிறார்.
  பாருங்கள், அவர் சொல்வதை….
  ”1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.”
  இந்தியாவில் வைத்து நாகராஜாவை கடத்திய மற்றும் நாபாவைக் கடத்த முற்பட்ட சம்பவங்கிளில், சிறீசபாரத்தினம் பிரபாவுடன் சென்றிருந்தது இதை நியாயப்படுத்துமா?

  1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ம் திகதி:-
  யாழ்.வெலிங்டன் திரையரங்குக்கு முன்பாக அமைந்திருந்த ‘சித்திரா அச்சகத்தில்’ வைத்து சுந்தரத்தைச் சுட்டுக்கொன்றது, புலி உறுப்பினரான சாள்ஸ் அன்ரனியே.
  மே’19இல் பாண்டிபஜாரில் புளட்டும், புலிகளுமே சுடுபட்டனர். இதில் புலிதரப்பில் பிரபாவும், ரகு -ராகவனும் பங்குபற்றவில்லையா?
  இதையடுத்து…
  மே’27இல், அளவெட்டியைச் சேர்ந்த பி. இறைகுமரன், மற்றும் இவரது நீண்டகால நண்படருமான ரீ.உமைகுமரன் ஆகிய இருவரையும், 7 ஆயுதம் தாங்கிய புளட் உறுப்பினர்கள் வயல்வெளியில் வைத்து (அளவெட்டி) படுகொலை செய்தனர்.
  இதில் Cultivation officer ஆகப் பணியாற்றி வந்த இறைகுமாரன் ‘ தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணியின்’ செயலாளராகவும் இருந்து வந்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘இளைஞர் குரல்’ பத்திரிகை ஆசிரியருமாக இருந்த இவர், கூட்டனியின் ‘சுதந்திரன்’ 20 ஆவது இதழுடனும், (80- ஏப்பிரல்’ 29 இல்) கோவைமகேசன் .21 வது இதளுடனும்
  முரண்பட்டுக் காண்டனர். இருப்பினும் இறைகுமாரன் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் (இரு வருடங்களின் பின்) கூட்டணியின் மாவட்டசபைகளை ஆதரித்து வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விரு அரசியற் படுகொலைகளில் உமைகுமாரன் விடுதலைப்புலி அமைப்பில் இருந்தார்.

  ஐயா,தொடந்து இப்படி எழுதுகிறார்…

  ” தங்கத்துரை குழுவோடு இணைந்த பிரபாகரன் சில நாட்களிலேயே பண்டிதர், சங்கர், போன்றோருடன் தனித்தனியாகப் சந்திக்கிறார். அவர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ரெலோவில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு கோருகிறார். உடனடியான இராணுவச் செயற்பாடுகளற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் விரக்தியுற்ற இளைஞர்களான பண்டிதர், சங்கர், ஆசீர், புலேந்திரன் போன்றோர் பின்னதாக ரெலோ அமைப்பில் இணைந்து கொள்கின்றனர்.
  இவ்வாறு ஒவ்வொருவராக இணைந்து கொண்டதும் மறுபுறத்தில் மனோ மாஸ்டர், ராகவன், தனி, அன்டன் போன்றோர் தனிமைப்பட்டுப் போகின்றனர்.
  அன்டன் ராகவன் போன்றோர் சில காலங்களின் பின்னர் இணைந்து கொள்ள மனோ மாஸ்டர், தனி ஆகியோர் தொடர்புகளற்று செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன்.”
  ஆனால், மேற்குறிப்பிட்ட அரசியற்படுகொலை, மற்றும் அரசியற்படுகொலை முயற்சிகளின் பின்னர்: ‘அருளர்’ ஆல் ஓர் ஐக்கிய முன்னணிக்கான கூட்டத்துக்கு எல்லா அமைப்புகளுக்கும் அழைப்பு விடப்பட்டும் இருந்தது. புலிகள் இதில் பங்குபற்றவில்லை என்றாலும், அக்கூட்டம் தொடர்பாக தமது கருத்தை மடலாக எழுதி அனுப்பியும் இருந்தனர். இம்மடல் பிரபாகரனின் கையெழுத்துடனேயே அனுப்பிவைக்கப்பட்டும் இருந்தது!

  இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இத்தொடரை ‘ஐயர்’தான் எழுதுகிறாரா? என்ற பலத்த சந்தேகங்களும் எழுகிறது…
  ரூபன்
  24 08 10

  1. ஐயர் இல்லாவிட்டால் ஆர் என்றுநினைக்கிறீர்கள்?
   இன்னமும் சாகாத பிரபாகரனா? கே பியா?

  2. இங்கே பிரபா ,கிருபா ஆகியோரால் 1974 இல் துரையப்பா படுகொலை.1975 இல் புதிய புலிகள் தமிழ் ஈழ விடுதலை புலிகளாக வளர்ச்சி .1982 இல் லெப்.
   சங்கர் .வீரச்சாவு.1884 இல் கப்டன் .பண்டிதர்.1981 கே,கே,எஸ் வீதியில் இராணுவம் மீதான் அடி .குட்டிமணி,தங்கத்துரை கைது 1981இல் .1983இல் 
   திருநெல்வேலி தாக்குதல் ,  இதில எங்க 1984 மட்டும் பிரபாகரன் டெலோ 
   இயக்கத்தில் இருந்திருப்பார்.இவரிண்ட கதைய பார்த்தல் 1986 டெலோ 
   மீதான தாக்குதலின் பின்னர் தான் புலிகள் பிறந்ததோ .பிரபாகரன் இல்லையென்றால் எதையும் யாரும் எழுதலாம் என்பதாகி விட்டது .யார் 
   இந்த ஐயர் நான்  அறிய இவர் பிளாட் போல இருக்கு .சும்மா கதவிடுரர் .

 8. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து விலகினாலோ அல்லது வேறு அமைப்பில் சேர்ந்தாலோ மரண தண்டனை என்ற விதிமுறை பிரபா, பேபி விடயத்தில் என்னவாயிற்று.

 9. “அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.”
  “1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன். பின்னதாக 1984 காலப்பகுதியில் வல்வெட்டியில் புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டார்.”
  ஐயர் அவர்களே சிறு திருத்தம்: பேரவை நாகராஜனை எச்சரிக்கும் நோக்கோடு தான் பிரபாகரன் அணியினரால் கடத்தி எச்சரித்து விடுதலை செய்கின்றனர். நாகராஜன் தற்போது வெளி நாடொன்றில் தட்டிச்சுத்தின பணத்தோடு இருக்கிறார் அவரை கேட்டால் ஐயாண்ட கோமனத்திட்குள் என்ன இருக்கு எண்டு தெருயுமல்லோ. மனோ மாஸ்டர் படுகொலை செய்யப்பட்டது பருத்தித்துறையில். பலமணிநேர விவாதத்திற்குப் பின் ரஞ்சன் லாலா கிட்டு போன்றோர்களால் தம்பசிட்டி பாடசாலையில் வைத்து கொல்லப் பட்டார். பிரபாகரன் சார்பானவர்களால் தமது கோரிக்கைகள் மனோ மாஸ்டர் ஆல் ஏற்று கொல்லப் படாத நிலையில்அனாதரவாக ஒரு உண்மை போராளி துரோகியாக மௌனிக்கப் பட்டார்.

  1. பிரபாகரன் சார்பானவர்களால் தமது கோரிக்கைகள் மனோ மாஸ்டர் ஆல் ஏற்று கொள்ளப் படாத நிலையிலனாதரவாக ஒரு உண்மை போராளி துரோகியாக மௌனிக்கப் பட்டார்.

   அந்த ஒரு போராளி மட்டுமல்ல ஒட்டுமொத்த போராட்டமே அதற்காகதானே மெளனிக்கப்பட்டது.

 10. LACK OF POLITICAL KNOWLEDGE, LACK OF COMMUNICATIONS, LACK OF EXPERIENCE, LACK OF UNDERSTANDING, LACK OF PLANS.LACK OF UNITY, LACK OF PUBLIC INVOLMENT, LACK OF ADMISTRATIVE SYSTEM ALL GOT TOGETHER DESTROYED NOT ONLY OUR GREAT LEADERS BUT ALSO THEIR AIM, GOAL, AMBITIONS, DREAMS, LIFE, LOVED ONES, AND EVERONE AND EVERYTHINS. TODAY , WE ARE THE REAL VICTIMS OF DISUNITY OF OUR LEADERS. AT THE SAME TIME, WE HAVE A BOOK CALLED ” DESTRUCTION OF DISUNITY” TO READ FOR EVERYONE. NOW THE TIME HAS COME TO EVERYONE TO LEARN THE POWER OF UNITY FROM OUR SHATTERED LOST GENERATIONS. IF WE SLEEP OR IGNORE OR MISS THIS TIME, OUR NEXT GENERATIONS WILL NOT FORGIVE US FOREVER.

  1. LACK OF INTELIGENCY OF THE LEADER HAS TO BE INCLUDED.

 11. பொய்ம்முகங்களுக்கு!

  1. பிரபாகரன் குழுவினர் டெலோ அமைப்பில் குரும்பசிட்டி நகைக்கடைக் கொள்ளைக்கு சற்று முன்னதாக சேர்ந்து கொண்டார்கள்.பின்னர் பாண்டி பஜார் சூட்டு சம்பவத்திற்கு முன்னதாக பிரிந்து விட்டார்கள்.ரூபன் இனியுங்கள் நாட்குறிப்பை தேடிப்பாருங்கள்.அய்யரின் பஞ்சாங்கக் கணிப்பு(1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார். ) தவறானது.

  2. கிட்டுவுக்கும் சுந்தரம் கொலைக்கும் சம்பந்தமேயில்லை,.சசி என்பவர் 13 பேரது உடைவின் போதே புலிகள் இயக்கத்தில் இருந்து முற்றாக விலகவில்லை (……….. சுந்தரம் சித்திரா அச்சகத்தில் கிட்டுவால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு…..Proffessor
  )

  3.சுந்தரம் கொலை டெலோ அமைப்பின் கீழ் நிகழ்த்தப்பட்டது(சுந்தரத்தின் கொலைக்காகவே இந்தச் ‘சப்பைக்கட்டை’ …………………………………… ரூபன்
  ).

  4
  .நாகராசாவை கொல்வதற்காகவே(பேரவை நாகராஜனை எச்சரிக்கும் நோக்கோடு தான் பிரபாகரன் அணியினரால் கடத்தி எச்சரித்து விடுதலை செய்கின்றனர்…. S.G.Raghavan ) கடத்தப்பட்டார்;ஆயினும் பல்வேறு அழுத்தங்களால் தப்பித்துக் கொண்டார்.அரசியல் உரிமையை எழுத்தில் அர்ப்பணம் செய்தபின் டெலொ அமைப்பினர் விடுதலை செய்தனர்.

  1. உங்களின் முதலாவது பகுதிக்குப் பதில் தரவேண்டிய தேவை இல்லை!
   ஏனெனில்..
   உங்கள் மூன்றாவது பகுதிக்கான கீழ்வரும் விடையில் அதன் பதிலும் அடங்கும்…
   சுந்தரத்தின் படுகொலை, ‘துரோகத்தின் பரிசு’ என்ற தலைப்புடன் அன்றே புலிகளால் உரிமை கோரப்பட்ட ஓர் அரசியற் படுகொலை!! தான்..

   ரூபன்
   25 08 10

   1. சுந்தரம் படுகொலை துரோகத்தின் பரிசு என்ற பெயரில் வந்த துண்டு பிரசுரத்தின் முதன்மை பிரதிகளில் ஒன்று தமிழ் அரங்கம்.நெற் இன் ஆவணப்பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

   2. நீங்கள் தூக்கிப் பிடிக்கிற கல்வெட்டுகள் சரித்திரப் பேராசிரியர் பட்டத்திற்கு உதவலாம்,மாறாக டெலொ அமைப்பினால் சுந்தரம் கொலை நிகழ்த்தப்பட்டது.அந்த விசையுந்திகள் பின்னாளில் விடுதலைப்புலிகளாக வரித்துக் கொண்டவர்கள்.முன்னரும் டெலொவின் கொலைகளை புலிகள் உரிமை கொண்டாடினார்கள்.அதை அய்யரும் உறுதிப்படுத்தி உள்ளார்.இதுவும் அவ்வாறே. இன்னும் புரிந்து கொள்ள அவசியம் ஏற்படின் இந்தக் கேள்வியின் பதிலைத் தேடுங்கள். சுந்தரத்தின் கொலை பற்றி நாகராசாவின் துண்டுப் பிரசுரம் தொடர்பாக டெலோத் தலைமை ஏன் நாகராசாவை கடத்த வேண்டும்?

    1. ஏனோ தெரியவில்லை ‘தமிழ் வாதத்துக்கு’ இப்படி ஒரு கோபம்!

     ”நீங்கள் தூக்கிப் பிடிக்கிற கல்வெட்டுகள் சரித்திரப் பேராசிரியர் பட்டத்திற்கு உதவலாம்,மாறாக டெலொ அமைப்பினால் சுந்தரம் கொலை நிகழ்த்தப்பட்டது”
     இந்த பொல்லாத கோபத்துக்கு….

     ”அந்த விசையுந்திகள் பின்னாளில் விடுதலைப்புலிகளாக வரித்துக் கொண்டவர்கள்.முன்னரும் டெலொவின் கொலைகளை புலிகள் உரிமை கொண்டாடினார்கள்.அதை அய்யரும் உறுதிப்படுத்தி உள்ளார்.”
     இப்படி ஒரு நெம்புபோலை பயன்படுத்துகிறார்கள்…. (பக்கவாதம்) – பீடித்த ”தமிழ்வாதம்”

     முதலில்….

     இதுவரையான உரிமைகோரப்படாத, மனிதனின் பச்சசை இரத்த்தில் மிதந்த தெருக்கொலைகள்…நிகழ்ந்த (அனைத்து இயக்கங்களும் நடாத்திய படுகொலை!) சூழலில், நடந்த சுந்தரத்தின் மரணம். (அரசியற் படுகொலை, புலிகளால் உரிமைகோரப்பட்டிருந்தது)
     சுந்தரத்தின் படுகொலை சரி பிழைக்கு அப்பால்…
     இது மக்கள் முன் (புலிகாளால்) கோரப்பட்ட ஒரு கோரிக்கை!

     இது ”கல்வெட்டு” அல்ல என்பதை, அன்பர் புரிந்து கொள்ள வேண்டும்! இது மக்களிடம் கோரப்ட்ட உரிமை!

     மக்களிடம் கோரப்பட்ட கோரிக்கையையே மீண்டும், நான் கேள்விக்காக வைத்தேன்.
     இதே தமிழ் (பக்க)வாதத்திடம், ஓர் எளிமையான கேள்வி….

     சுந்தரத்தின் படுகொலை வரைக்கும் ‘ரெலோ’ இயத்தினர் தம்மை ஒர் விடுதலை அமைப்பாக மக்களிடம் வெளிப்படுத்தி இருக்கவில்லை!

     யாருக்குமே தெரியாத ‘ரெலோ’ அமைப்பில் பிரபாகரன் இணைந்தார் என்று நீர் எவ்வாறு கூறுகின்றீர்? ( நீர்வேலிக் கொள்ளை வரைக்கும், -ரெலா- ஒப்ரோய் தேவனும் பங்காற்றி இருக்கவில்லையா?) இதைவிடவும், ‘சுதந்திர வேட்கை’ என்ற புத்தகத்தில்: அடேல் பாலசிங்கத்தின் பதிவு…
     ”1981 இலே இரண்டாவது தடவையாகச் சென்னைக்குச் செல்கிறோம். திரும்பவும் அமைப்புக்குள் பாரதூரமான பிரச்சினைகள் காணப்பட்டன. இந்தக் காலகட்டத்திலேயே பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலை அமைப்புடன் (TELO) கூட்டு ஒன்றை நிறுவினார். அவ்வேளை சிறீசபாரத்தினம் ரெலோவின் தற்காலிகத் தலைவராக இருந்தார்.
     இது எழுத்துருவில் ஐயா வாழ்ந்த காலத்தில்(தமி்ழ்வாதம் உட்பட) வெளிவந்த வரலாற்றுப் பதிவு… நன்றி: ‘சுதந்திர வேட்கை’ பக்: 67 –

     ‘ரெலோ’ என்ற அமைப்பு எப்பொழுது மக்களிடம் பேசியது… தமிழ்வாதம் வாசகருக்கு விடையளிக்கவும்…

     ஐயாவின் கருத்துப்படி…

     ”இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.
     இந்தப் பெயரை எப்போது உத்தியோக பூர்வமாக அறிவித்தனர் என்றோ அவர்களின் நடவடிக்கை குறித்த விபரங்களையோ நான் அறிந்திருக்கவில்லை.”

     இப்பொழுது ”தமிழ்(பக்க)வாதத்துக்கு…
     இவர் இப்படி வாதிடுகிறார்…

     ”பின்னாளில் விடுதலைப்புலிகளாக வரித்துக் கொண்டவர்கள்.முன்னரும் டெலொவின் கொலைகளை புலிகள் உரிமை கொண்டாடினார்கள்.அதை அய்யரும் உறுதிப்படுத்தி உள்ளார்.”

     ஐயரின் பதிவின் படி ,’ரெலோ’வின் ஒரு கொலையையே – பஸ்தியாம்பிள்ளை’ கொலையின் பின்னான புலிகளின் உரிமை கோரலில் கோரப்பட்டது. (இது குட்டிமணி சிறையில் இருந்தபோது நடந்த கொலை!)

     ‘ரெலேவின் கொலைகளை ‘அல்ல அன்பரே!
     புலிகளின் மேற்படி (பஸ்தியாம்பிள்ளை கொலை உரிமைகோரல்!) இலங்கை உளவு இஸ்தாபத்துக்கான (வெளிப்படுத்தலான) உரிமைகோரலே. புலிகளால் கோரப்பட்ட உரிமைகோரலில் கொல்லப்பட்ட அத்தனை பொலீசாரும் கடைமைபுரிந்த பொலீஸ் நிலையம் உட்பட, இவ் உரிமை கோரல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.( விதிவலக்காக ஊடகம் ‘வீரகேசரி’)

     இதில் உள்ள விசித்திரம்…

     இவ் உரிமைகோரும் கடிதத்தில் உமாமகேஸ்லரன் கைச்சாத்திட்டுள்ளார்.

     வடக்குக்-கிழக்கில் இருந்த உமா மகேஸ்வரன் சாந்தனின் ஊடாக (மேலதிக தகவலுக்கு ஐயாவின் பதிவுகளை புரட்டிப் பார்க்கவும்)
     ‘செட்டி’ உளவாளியாக மாறியதை – சாந்தன்- ஊடாக அறிகிறார்….

     இதே சாந்தனிடம் உரிமைகோரும் கடிதத்தை எழுதி தலைநகருக்கு அனுப்புகிறார்..
     இவ்வாறுதான் ஐயாவின் வரலாறு தொடர்ந்தும் பேசி வந்தது!….

     ஊர்மிலா இக்கடிதத்தை ‘தட்டச்சில்’ ஏற்றி எல்லாம் ”’சுபமாக” முடிகிறது . இது ஐயாவின் வரலாற்து சரித்திரம்:

     ஐயாவிடம் கேட்கக்கூடாத கேள்வி (பல பக்கவாத பஞசாயத்து ) உமாமகேஸ்வரின் கையெழுத்து( இவர் வடக்குக் கிழக்கில் இருக்கிறார்) எவ்வாறு ஊர்மிலாவின் தட்டச்சில் இவரின் கையொப்பம் எல்லாக் கடிதத்திலும் -கொழும்பில் பிரசுரம் ஆக – இவ்வளவு இடத்துக்கும் – இடப்பட்டு அனுப்பப்பட்டது????

     இதற்கு கட்டயமாக, ஐயரும், தமி்ழ்வாதமும் நேர்மையான கருத்தை வெளியிட முடியுமா?

     பி.கு.
     நாகராசா கடத்தல் தொர்பாக ஐயாவின் கடந்தகால கருத்துக்களை கேட்டு என் காதுகளே ‘புளித்துப்’போய்விட்டது! ”ரெலோ” தலைமை என்று ‘தமி்ழ் (பக்க) வாதம் பிதற்துவது யாரென்று கூறமுடியுமா?

     அடுத்து எனக்குக்கு கொம்பு முளைப்பதற்று நான் ஒன்றும் போராசிரியர் அல்ல! மேலும் வரலாறு என்பது மக்களால் மட்டுமே படைக்கப்படுகிறது!! ‘சாகச கொட்டைகளில் நிகழும்- திரீல்- அரசியல்’ வரலாற்றைப் படைக்குமா???

     தொடரும்…

     ரூபன்
     27 08 10

     1. பஸ்தியாம்பிள்ளை கொலை செல்லக்கிளி அம்மானால் முருங்கன் காட்டு 
      பகுதியில் இடம்பெட்டது .

  2. ச்சா ! சும்மா சொலாப்படாது ஒவ்வொரு கொலைகைக்கும் கணக்கு வழக்கு வச்சிருகாங்கோ. நம்ம பசலுக கணக்கு பிழை விட்டா கொவிசுருவாங்கோ. அசத்தலான ஞபக சக்தி. புல்லரிக்குது.!

 12. ஐயர் அவர்களின் ‘ஈழப்போராட்டத்தின் பதிவுகள்’ தொடர்ந்து வாசிப்பவனில் ஒருவன் என்ற முறையில், ஒரு சில கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்.
  முதலாவதாக போராட்டத்தின் ஆரம்பம், வரலாறு தெரியாத பலர் இதை… ஐயரை ஓர் மூத்த போராளியாக ஏற்று ஐயரின் அனுபவத்தினூடாக வரும் தொடர் பதிவுகளை ஓர் ஆவணமாக எடுத்து வாசித்து அவற்றை அலசி… சரி பிழைகள்… விட்ட தவறுகளை உணர்ந்து… உண்மைகளை அறிய முற்பட்டு… தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது வரும் பதிவுகளில் நடந்த நிகழ்வுகள் என பதியப்படும் சில நிகழ்வுக்கான… தகவல்களுக்கான… பதிவுகளில் சில முரண்பாடுகள் தெரிகின்றன.

  இதில், நான் சுட்டிக்காடுவது, ஐயர் அவர்களில் பிழை கண்டு பிடிக்கும் நோக்கத்தில் இல்லாமல் “யாரோ பெடியள் அடிபடுறாங்கள், அதில் தமீழீழம் கிடைத்தால் நாமும் சுகமாக வாழலாம்” என்று இருக்கும் எம் ஈனம் கெட்ட யாழ் மேலாதிக்க தமிழ் மந்தைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட மக்கள் விடுதலை என்று புறப்பட்ட சகல இயக்கங்களும் தாம் தான் உண்மையான மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் புறப்பட்டவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது மட்டுமல்லாமல் இயக்கங்களின் ஆரம்ப வரலாறுகளை தெரியாமல் திசை தெரியாமல் திரிபவர்களுக்கும், இன்று இந்த நிலை வந்தும் முகத்திற்கு நன்முகம் காட்டி உதட்டளவில் ஒற்றுமை பேசி இன்றைய தமிழ் தலைமைகள் தேநீர் கூட்டங்கள் போடுமிடத்து அவர்களை சேர்ந்தவர்கள்… அவர்களின் வாலுகள் மற்றவர்களை எங்கு கழுத்தறுக்கலாம், பழி தீர்க்கலாம் என்று திரியுமிடத்து, இவ் அமைப்புகளின் முகமூடி பினாமி இணைய தளங்கள் சக தேநீர் அருந்தும் அமைப்புகளின் மேல் தமது காழ்ப்புணர்ச்சியை காட்டுமிடத்து ஐயர் அவர்களின் பதிவு ஓர் ஆவனாமகவும், புதிய பாதை என்று நாம் கடந்து வந்த பழைய பாதையில் விட்ட தவறுகள் இம்மினதிர்க்கு ஓர் படிப்பனையாக மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நடக்கப் போகிற பாதையில் சரியாக அடி எடுத்து வைப்பதற்கு மட்டுமல்லாமல் நடந்த உண்மையான தரவுகளை சரியான விதத்தில் சகலரும் அறிய வேண்டும் என்னும் ஆவலினாலேயே.

  மேலும் இப்பதிவுகளில் வரும் சில தகவல்கள் சில புதுச் சிக்கல்களை உருவாக்கும் போலும் தெரிகிறது. அத்துடன் பிரபாகரன் குழு, சுந்தரம் குழு என்று பிரிந்த பின் குட்டிமணி தங்கத்துரை இலங்கை இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட பின் பிரபாகரனின் குழு இராசுப்பிள்ளையுடன் சேர்ந்து இயங்கிய காலங்கள் சில வேறுபடுகின்றன போல் தெரிகிறது. அத்துடன் “1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்” என்ற தங்களின் பதிவை அந்நேரம் ‘தம்பி’ பிரபாகரனுடன் இருந்த முக்கியமாக இராகவனுடனும் இராசுப்பிள்ளையுடனும் தொடர்பு கொண்டு எப்போ பிரிந்தார்கள் என்பதை நிச்சயப் படுத்தினால் தங்களின் பதிவின் மூலம் உண்மைகளை அறிய விரும்பும் பலருக்கும் பயனாக இருக்கும் என நம்புகிறேன். (சேலத்தில் இராசுப்பிள்ளையுடன் இருந்த “தம்பி’ பிரபாகரன் 1982 இலிலேயே 11 பேருடன் பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்து விட்டதாக அக்காலங்களில் அறியக்கூடியதாக இருந்தது, இதன் பின்பே பாண்டி பஜார் சம்பவமும் நடைபெற்றது, நாகராஜா அவர்கட்கும் இதன் விபரங்கள் தெரிய சந்தர்ப்பம் இருந்தது)

 13. “……..உமைகுமாரன் விடுதலைப்புலி அமைப்பில் இருந்தார்.”__ரூபன்
  உமா கொலை செய்யப்படும் போது புலியில் உறுப்பினராக இருந்தாரா?

  ” …………தம்பசிட்டி பாடசாலையில் வைத்து கொல்லப் பட்டார். பிரபாகரன் சார்பானவர்களால் தமது கோரிக்கைகள் மனோ மாஸ்டர் ஆல் ஏற்று கொல்லப் படாத நிலையில்அனாதரவாக ஒரு உண்மை போராளி துரோகியாக மௌனிக்கப் பட்டார்”__ராகவன்

  கோரிக்கைகள்????? பாடசாலையில் வைத்து கொல்லப் பட்டார்??????

  1. உமைகுமாரன் இறுதியாகக் கொலை செய்யப்பட்டும் இருந்தார்.

   இவ்விறுதிக் கொலையில் அடிபாடு நடந்ததாக ‘அளவெட்டி வட்டாரத்தில்’ (முற்போக்கு!?) அன்று சென்னையில், ஓர் இரவுக் கலந்துரையாடலில் (1984இல்) பேசப்பட்டது. புளட்டின் 7 இரானுவ நபகளில் ஒருவருக்கு அதில் கால் முறிந்து போகும் அளவுக்கு பாதிப்பும் ஏற்பட்டிருந்தாக, அவரின் மரணம் அன்று போசப்பட்டது….

   உண்மையில் ‘தேசியத்தின்’ கேள்விக்கு புலிகள் தான் திருப்தியான பதிலை அளிக்க முடியும்.

   இக்காலத்தில் புலிகள் எல்லா அமைப்புக்குள்ளும் (ஏன் கள்வர் கோஸ்டிக்குள்ளும்) ஊடுருவி இருந்தனர்…

   உங்களின் கேள்வி இப்படி இருக்கிறது….

   ”உமா கொலை செய்யப்படும் போது புலியில் உறுப்பினராக இருந்தாரா?”

   இதை என்னால் ஒருபோதும் அதாரப்படுத்த முடியாது. (இவ்வுரிமை புலிகளின் தலைமைக்கே உரியது (பிரபாகரனுக்கே !)
   எனது பதிவு இப்படித்தான் இருந்தது….இது சரியான பதிவே! -என்னைப் பொறுத்தவரை- என்றுதான் என்னறிவுக்கு நம்புகிறேன்.

   “……..உமைகுமாரன் விடுதலைப்புலி அமைப்பில் இருந்தார்.”

   ரூபன்
   28 08 10

  2. பாடசாலைக்கு வெளியே..ரோட்டில் வைத்து கொல்லப்பட்டார்…
   கிட்டண்ணா பள்ளிக்கூட புனித்ததை காத்துட்டார்…
   புலிகள் எல்லாம் ஏன் நாய்கள் மாதிரி கொல்லப்பட்டார்கள் என்பதை இத்தொடரை வாசிக்கும் போது புரிகிறது….

 14. ஐயரின் பதிவாகட்டும், இல்லை மற்றவர்கள் பதிவாகட்டும், இதில் ஒரு பக்கத் தகவல்கள் மட்டுமே விளையாடுகிறது. சரி அதிருக்கட்டும், அந்தகாலத்தில் மற்ற குழுக்கள் எந்த கொலையும் செய்யவில்லையோ. எல்லோருமே காந்திய வழியை ஏற்றுக்கொண்டிருந்தார்களோ? ஒன்றை மறைக்க எத்தனை இட்டுக்கட்டு. 

  அந்தக் காலப் பகுதியில் அனைத்து குழுக்களுமே ஒருவரையொருவர் மாற்றிமாற்றி கொலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நோக்கம் என்ன? வெறும் புலிகளை மட்டும் சொல்வதின் நோக்கம் என்ன? 

  இவ்வளவு இருந்தும் மக்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை ஐயர் எழுதத் தயாரா? இல்லை மற்றவர்கள்தான் எழுதத் தயாரா? எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் எந்த அளவுக்கு சரியாக நின்றார்களோ அவர்களை மக்கள் ஆதரித்தார்கள் என்ற உண்மையை ஏன் மூடி மறைக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. அந்தக் காலப் பகுதியில் எல்லா இடங்களிலும் விடுதலைப் புலிகள் பரந்து விரிந்து கிடக்கவில்லை. ஆனால் மற்ற பகுதியில் இருந்த எந்த அமைப்பும் மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை, மறுநிலையில் நிலைத்திருக்க முடியவில்லை. வெறும் இந்த குழுக்களுக்கிடையில் போராட்டம் மட்டுமே போராட்டத்தினை தீர்மானித்தது என்று கூறும் கிணற்று தவளைகளாக இருக்கவேண்டாம். மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றவர்கள் வீழ்வது கிடையாது. தோல்விகள் என்பது வேறு நிலைப்பே இல்லாதது வேறு. புலிகள் இன்று தோற்றவர்கள். மற்றவர்கள் நிலைக்கவே முடியாமல் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறியவர்கள், ஒரு சில அமைப்புகளைத் தவிர. குழுச் சண்டையையே வரலாறாக எழுதி உங்கள் அறிவிலித் தன்மையை காட்டவேண்டாம். அன்று இனஒடுக்குமுறை, இல்லை மற்ற முழு அரசியல் என்னவாக இருந்தது, அதில் எந்தெந்த அமைப்புகள் என்ன நிலை எடுத்து போராடினார்கள், ஒவ்வொரு வரலாற்று திருப்புமுனையிலும் யார்யார் எதிரியிடம் சரணடைந்தார்கள், யார் யார் போராடினார்கள் என்று எழுதுவது வரலாறு. வெறும் உள்குத்து வேலைகளை மட்டும் எழுதுவது வரலாறு என்று யார் சொன்னது. அது ஒரு பகுதி மட்டுமே. ஆனால் தீர்மானிக்கும் பகுதி இல்லை. இதை எல்லாம் வென்ற வரவேண்டியது மக்கள் செல்வாக்கு, சமரசமில்லாத எதிரியை எதிர்த்தப் போராட்டம். இதில் போராடுவோரின் இடையே தவறுகள் இருக்கலாம், ஆனால் இலக்கை நோக்கியப் ப்யனத்தில் சமரசம் கூடாது. அரசியல் விமர்சனம் கற்க வேண்டியது, தனி நபர் விமர்சனம் உள்நோக்கம் கொண்டது.

  1. மக்கள் ஹிற்லரை ஆதரித்துள்ளனர்.
   மக்கள் ராஜபக்சவை ஆதரித்துள்ளனர்.
   ஆதரவை மட்டும் வைத்துச் சரிபிழைகளை முடிவுசெய்ய இயலாது.

  2. அண்ணா சிதம்பரி,

   புலிகளில் இருந்த போது நடந்த சமவங்களை ஐயர் எழுதுகிறார். மற்ற இயங்கள் குறித்த ஆய்வுக்கடுரையை அவர் எழுத வ்ல்லை

  3. மக்கள் எங்கே ஆதரித்தார்கள்.. இவ்வளவு கொலைகளையும் பார்த்த மக்கள் இந்த மிருகங்களுக்கெதிராக கதைக்கமுடியுமா???
   மக்கள் பொழுதுபோக்காக பொராடியது இந்திய ராணுவ வண்டிகள் முன் தான்.. ஏன் என்றால் சண்டைநடக்க வில்லை என்றால் அவன் கொல்லமாட்டான் என்ற தைரியத்தில்…

 15. னாகராஜ கடத்தபட்டது ராசுப்பிள்ளையாலும் பிரபாரகரனாலும் மட்டுமே. இதில் சிறீ சம்பந்தபடவில்லை.. ராயப்பேட்டையில் உள்ள விஜயா லொட்ஜில் வைத்து நாகராஜா கடத்தி செல்லப்ப்ட்டு மகாபலிபுரம் கடற்கரையில் கழுத்தளவு மணலில் புதைக்கபட்டு சாவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்புகிராயா என்று பிரபாகரன் கேட்டார். நாகராஜா மன்னிப்பு கேட்டப்டியால் விடுவிக்கபட்டார். இது நடந்தது 1982 இல் பிரபாகரனூம் சிரீயும் ராசுப்பிள்ளையும் கூட்டுத்தலைவராக இருந்தபோது. குட்டிமணியும் தஙக்த்துரையும் ஜெகனும் வெலிக்கடை சிறையில் இருந்தார்கள். உமாவும் சுந்தரமும் சந்ததியாரும் தான் வீடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரை பயன்ப்டுத்தினார்கள். மனோ மாஸ்டர் அலல. அப்போது ராகவன் பிரபாகர்னுடந்தான் இருந்தார்.

 16. ம்னோமாஸ்டர் பருத்தித்துறையில் வைத்து கொல்லப்பட்ட போது மனோமாஸ்டர் டெலோ உறுப்ப்பினர்.

 17. நான் 1985,சென்னையில் திரு.காசியானந்தனிடம்(கவிஞர்) கேட்டது,கலைஞர்(கருணாநிதி) ஏன் சிறீ சபாரத்தினத்தை ஆதரிக்கிறார்,வே.பிரபாகரனை ஆதரிக்கவில்லை என்பது.அவர் கூறிய பதி,”பிரபாகரன் கலைஞர் தலைமாட்டில் அமர்ந்தார் ஆனால் சபாரத்தினம் கால்மாட்டில் அமர்ந்ததால் அவரை ஆதரிக்கிறார் என்று!”.அப்போது ஏனோ முரசொலி மாறனுக்கு விடுதலைப் புலிகளை கடுமையக பிடிக்காது,அப்போது மாறனுக்கு கீழ் இருந்த எம்.பி. யான வை.கோபால்சாமி(வைக்கோ),பிரபாகரனை ஆதரிப்பதற்கு,கலைஞரின் குடும்ப அழுத்தத்தின் எதிர் விளைவாக இருக்கலாம்.என்னைப் போன்றோருக்கு அப்போது(16 வயது) வித்தியாசம் தெரியாது,ஆனால் திராவிட இயக்க “தமிழ் உணர்ச்சி” டமாரங்களினால்,இவர்களை அதரித்து பின் சென்றோம்.1987 ல் பேபி சுபிரமணியத்தை மு.கருணநிதி சந்தித்து,பிரபாகரனின் கடிதத்தை வாங்கியது பத்திரிக்கைகளில் வந்திருந்தது!. இதை எதற்கு பதிகிறேன் என்றால்,கே.பி. யின் வைகோவை பற்றியான பேட்டிக்குப் பிறகு,பிரபாகரனை வைகோ எதன் (அரசியல்) அடிப்படையில் ஆதரிக்கிறார் என்பதை தரவுப்படுத்த வேண்டும்.ஏனென்றால் விஷயங்கள் ஒரு ஆபத்தான காலக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது, தமிழர்கள் எனப்படுபவர்களின் கட்டுபாடுகளில் இல்லை!.ஒரு பில்லியன்(உருப்பினர்கள்), ஏழைகளே இல்லத,எல்லாநாடுகளிலும் பெரும் சொத்துக்கள் கொண்ட கத்தோலிக்க நிறுவனம் (மு.க.கனிமொழி?) ஆதிக்கம் ஆதிகமாகிறது.அடுத்தக் கட்ட தமிழீழ கோரிக்கை என்பது பழைப்படி இந்தியாவின் கருவியாகவோ(பாகிஸ்த்தனை மட்டும் நன்கு அறிந்த (முள்ளிய வாய்க்காலையும் சேர்த்து) இந்திய உளவுத்துறை),அல்லது ஐயரின்? தற்போதைய தரவுகளுக்கு எதிமறையாகவோ அமையலாம்!.

  1. 25 வருடங்களின் முன்னமே கருணாநிதியை,காசியானந்தன் கிடத்தி’ விட்டரா?அவரது சிந்தனைதான் தமிழினத்தை ‘மல்லாக்கக் கிடத்தி மண்டையில் கொத்தியிருக்கிறது. சிறி இந்தியாவின் கைப்பொம்மையாக இருத்தலைக் கைப்பற்றிக் கொண்டதே கருணாநிதியின் அரசியல் புனர்ஜெனமம்.
   மாறாக பிரபாகரன், கருணாநிதியின் முடி’யற்ற தலையில் ஏற முயன்றுதான் வழுக்கிப் போனார்.

   1. கவிஞர்? மு.க.கனிமொழி,மற்றும் கத்தோலிக பாதிரியார்(லயோலா கல்லூரி,ஐக்கஃப்,மாறன் சகோதரர்கள்) ஆகியோரின் மே19 முன்,பங்குபற்றி வெளிச்சம் பாய்ச்சப்ப் படவேண்டும்!.கலைஞர் கருணாநிதி தன்னுடையநெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் தான் வழிகாட்டியல்ல,விதிவிலக்கு என்று அறிவித்திருக்கிறார்.அவர் பல கட்டுடைப்புகளை(நெகட்டிவ்) நிகழ்த்தியிருக்கிறார்.தன்னுடைய மறக்கமுடியும திரைப்படத்தில்,தமிழ்ச்சூழல் குடும்பப்பெண் விபச்சாரியாக மாறுவதாக சித்தரித்திருந்தார்.இன்றும்கூட அப்பெண்கள் விபச்சாரத்திற்க்கான கவர்ச்சியை(சந்தைப்படும்) கொண்டிருக்கவில்லை?,இருந்தாலும் தன்சூழலில்,திரைப்படத்துறையில்(கலைத்துறை)அது ஏற்ப்படுத்திய கிக்,வெற்றியளித்தது.திராவிடக்கொள்கையின் பலவீனத்தால் இதயக்கனியை பறித்தெடுத்தார்.1971 எமர்ஜென்ஸியை எதிர்த்தவர்களில்? முதலில் இந்திராவுடன் கூட்டு வைத்தவர் இவர்.திராவிட இயக்க உருவாக்கத்தில் நேரெதிர் மறையான பாரதிய ஜனதாவுடன் முதலில் கூட்டுவத்தவரும் இவரே!.வாரிசு என்பதையெல்லாம் கடந்து முழு குடும்பத்தையும் அறியணை ஏற்றியவரும் இவரே!.இதெல்லாம் “தமிழ் உணர்ச்சியின்” பலவீனமே!.இதற்குக் காரணம்..கலைஞர் பிறந்த ஊரிலேயே பிறந்து,அவருடைய பள்ளியெலேயே படித்து,அவரைப் போலவே திரைப்படத்தில்,அதே காலக்கட்டத்தில்,சென்னையில் குடியமர்ந்த தஞ்சை திருவாரூரை சார்ந்த,”ஆரூர் தாஸ்” அவர்களின்,ஆனந்தவிகடன் வெளியீடான,”கோட்டையும் கோடம்பாக்கமும்” என்ற புத்தகத்திலிருந்த வரிகள் “கலைஞருக்கும் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கும்,கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.ஒருசமயம் மவுண்ரோடு தேனாம்பேட்டை அனபகத்தில் நடந்த தி.மு.கா. செயற்குழு கூட்டத்தில்,கலந்துக்கொண்ட எஸ்.எஸ்.ஆர்.,”கழகத் தலைமை மாறவேண்டும்” என்றுக் கூறப்போக,கலைஞருடைய ஆதரவாளர்களால்(சமூகநீதியின் பால்(மு.க.அழகிரியை தாழ்த்தப்பட்டவருக்கு? மணமுடித்தது,ஜோசப் ஸ்டாலின்? பெயர்),கலைஞரின் தேனொழுகும் தமிழ் உணர்ச்சி பேச்சைக்கேட்டு ,எஸ்.எஸ்.ஆரின் உறவினரான “என் தந்தையும்” சேர்ந்து) தாக்கப்பட்டார்,அவருடைய சட்டை கிழிக்கப்பட்டது!.அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார்.
    “கலைஞர்கள்” அரசியலுக்கு வருவதனால் விளையும் இந்த விபரீத நிகழ்வுகள் அன்றைக்கே நடந்தேறின.அறிஞர் அண்ணா,எஸ்.எஸ்.ஆரை நாடாளுமன்ற உறுப்பினாராக்கினார்..”அரச மான்ய ஒழிப்பு” மசோதா நிறைவேற்றியதற்குக் காரணமே,எஸ்.எஸ்.ஆர். போடாத அவருடைய ஒரே ஓட்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது!.”- பக்கம்- 155.
    இதே போன்ற ஒரு “தமிழ் உணர்ச்சிகர நிலையில்” என் பதினேழு வயதில்,1986 ல்,அவருடைய இரு மகன்களும் நேரடியாக கூறினார்கள் என்று,எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிராக இலங்கைப் பிரச்சனையில்,சில தாக்குதல்களை மேற்கொண்டு சிறை செல்ல வேண்டியதிருந்தது..திருந்த மாட்டோமே… பிறகு ஏன் கஸ்பார்….கடைசிநேர காலில் விழல்!.அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை,நிரந்தர நண்பனும் இல்லை என்பது சர்வதேச அரசியலில்,அதுவும் “டேக்டிகல்” விஷயங்களில் சரிப்பட்டு வராது என்ற ஆராய்ச்சி அறிவு கூடவா இல்லை!.நிறுவனப்படுத்தப்பட்ட நகர்வுகளுக்கு(உதா:சிங்கள பவுத்த தேசியம்),ஒரு வித “நிரந்தரத் தன்மை” “ஸ்ட்ராடிஜிக்” அடிப்படையில் உண்டு.அதற்கொப்ப ஒரு நிரந்தர தன்மை அரசியலை மட்டுமே இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பு வைக்க முடியும் என்பது இராணுவ விஞ்ஞானம்.அல்லாவிட்டால் உயிர் பலிகள் நடக்குமிடத்து,கோமாளித்தனமாக மாறிவிடும்(முளியவாய்க்கால் போல்).

    1. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி நிர்வாகத்தினர்,பல அப்பாவி தமிழ் இளைஞர்,யுவதிகளை படுகொலை செய்தவர்கள்.மகாக்கவி பாரதியாரின் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்பதற்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்திலிருக்கும் கன்னிகா ஸ்திரீகளுக்கும்?,பாதிரிகளுக்கும் வெகுதூரம்.மிகவும் ஜாதி வெறி பிடித்தவர்கள்.”ஜாதி சான்றிதழைப் பார்த்துதான்” இவர்கள் கல்லூரி அனுமதி அளிப்பார்கள்!.பூர்வீகக் குடிகளின் சுய சிந்தனை வளாராதிருப்பது ஒன்றெ இவர்களின் இருப்புக்கு உத்திரவாதம் என்று,பிரேசிலிலும்,பிலிப்பைன்ஸிலும் நிறுவியவர்கள்!.முள்ளியவாய்க்காலில் இவர்களின் பங்கு அதிகம் என்றே தோன்றுகிறது!.

   2. “…..அதற்கொப்ப ஒரு நிரந்தர தன்மை அரசியலை மட்டுமே இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பு வைக்க முடியும் என்பது இராணுவ விஞ்ஞானம்.அல்லாவிட்டால் உயிர் பலிகள் நடக்குமிடத்து, கோமாளித்தனமாக மாறிவிடும்(முளியவாய்க்கால் போல்).”

    முள்ளிவாய்க்கால் இந்தக் கோமாளிக்குக் கோமாளித்தனமாகத் தெரிகிறதோ?

    1. (முளியவாய்க்கால் போல்?)- கோமாளித்தனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம்!(உங்களைப் போன்றோர்கள்).நான் பல்லைக் கடித்துக் கொண்டு பல கருத்துக்களை வைத்தாலும்,இலங்கைத் தமிழர் பிரச்சனையை விடுத்து,அந்த வட்டத்திற்கு வெளியில் இருக்கும் என்னையே குறிவைப்பது இதற்குச் சான்று!.

   3. பிரபாகரன் பரம்பரையே எம்.ஜி.ஆரை கடவுளாகக் கொண்டவர்கள் அவராவது கருணாநிதியோடு கால்பந்து ஆடுவதாவது.இதில் பிரபாகரனது தாழ்வு மன்ப்பான்மையும் ஒரு காரணம்.அவர் தன்னையே நம்பாதவர் இதுதான் அவரது கோபங்களூக்கு எல்லாம் காரணம்.பின்னாளீல் பாலசிங்கம் போன்றோர் அவரது பலகீன்ங்கள பயன்படுத்தி அவரது தேடும் ஆற்றலை ஒழித்து வட்டத்திற்குள் வைத்து விட்டனர்.கடைசியில் சந்தேகங்கள் அவரது வியாதியாகியது என்பதே உண்மை.

   4. உங்கள் உளறல்கட்கு நீங்களே உரை எழுத வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு.
    உங்களுக்கு விளங்காத பிரச்சனைகள் பற்றி நீங்கள் முழக் கணக்காகப் பேசினால் மற்றவர்கள் என்ன செய்வது?

    உங்களுக்கு இது ஏமாற்றமாயிருக்கலாம்: உங்களை யாருமே குறி வைக்கவில்லை.
    உங்கள் இடுகைகளில் ஏகப் பெரும்பாலானவற்றை யாருமே கவனிப்பதில்லை என்று விளங்கியிருக்க வேண்டும்.
    உங்கள் “கொட்டைப் பாக்கு” இடுகைகள் வரும்போது அவை இடத்தை வீணாக்குவதால் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

   5. JF,
    உங்கள் உளறல்கட்கு நீங்களே உரை எழுத வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு.
    உங்களுக்கு விளங்காத பிரச்சனைகள் பற்றி நீங்கள் முழக் கணக்காகப் எழுதினால் மற்றவர்கள் என்ன செய்வது?

    உங்களுக்கு இது ஏமாற்றமாயிருக்கலாம்: உங்களை யாருமே குறி வைக்கவில்லை.
    உங்கள் இடுகைகளில் ஏகப் பெரும்பாலானவற்றை யாருமே கவனிப்பதில்லை என்று விளங்கியிருக்க வேண்டும்.
    உங்கள் “கொட்டைப் பாக்கு” இடுகைகள் வரும்போது அவை இடத்தை வீணாக்குவதால் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

 18. மனோ மாஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டபோது டெலோ இயக்க உறுப்பினர் அல்ல
  அவர் 1984 முற்பகுதியல் டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களை கொலை
  செய்ய சதி செய்ததாக டெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் ரமேஷ் ,சுதன்
  ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னையில் ஒரு மறை இடத்தில் அடைத்து
  வைக்கப்பட்டனர் இவர்களை விடுதலை செய்வதற்காக மனோ மாஸ்டர் தனது
  ஆதரவாளர்கள் மெரீனா கடற்கரையில் எதிர்ப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர்
  இதன் பின் ரமேஷ் ,சுதன் விடுதலை செய்யப்பட்டனர் ,டெலோ இயக்கம் மனோவையும்
  அவர் சாந்தவர்களையும் இயக்கத்தை விட்டு வெளியேற்றபட்டனர் பின் மனோ ,ரமேஷ் .
  சுதன்,புலிகளின் உதவியுடன் நாட்டுக்கு போனர்கள் அதன் பின் மனோ மாஸ்டர்
  சுட்டுகொல்லப்பட்டார் இதை யார் செய்தார்கள் ?

  1. மனோ மாஸ்டர் தம்பசிட்டி பாடசாலை மதிலோரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். யாரும் உரிமை கோரவில்லை. எனினும் அக்காலத்தில் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட சுவரொட்டியொன்றிலிருந்த “விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை” என்ற வாசகங்கள் கொண்ட பகுதி மனோ மாஸ்டரின் கையினுள் (அல்லது உடையினுள்) செருகப்பட்டிருந்தது.
   பின்னர் டெலோவினர் அவரது உடலைப் போறுப்பேற்றுச் சென்றனர். அவர்களால் ஒரு அஞ்சலிப்பிரசுரமும் வெளியிடப் பட்டது.

  2. சசியின் தகவல் சரியானதே.

   “…இதை யார் செய்தார்கள் ?…..sasi”

   மனோ’ குண்டுகளால் துளைக்கப்பட்ட போது,புலிகளின் சுவரொட்டியை ஓடிச்சென்று கிழித்தபடி இறந்து போனதாகச் நம்பகரமான செய்தி உண்டு.

   1. இக கொலை நடந்த சில நிமிடங்களில் நான் அங்கு போனேன். அப்போது எனக்கு அவரை யாரென்று தெரியாது. ஆரம்பத்தில் சிலர் “சமூக விரோதி” ஒன்று சுட்டுக் கொல்லப்பட்தாகவும் கூறத்தொடங்கினர். எனினும் சில நிமிடங்களில் உண்மை வெளியானது.

    அவர் சுவரொட்டியைக்கிழிக்க முயன்ற போது சுடப்பட்டதாக முதலில் சிலர் கதை கட்டத் தொடங்கியது உண்மைதான். எனினும் சுடப்பட்வர் மனோமாஸ்டர் என்பது தெரியவந்ததும் அந்தக் கதை அடங்கி விட்டது.

    1. நான் பார்த்த போது டெட் பாடி சைக்கிளோடு இருந்த்தது… சுவரொட்டியை கிழித்திருக்க சான்ஸ் இல்லை..

     1. ஏன் பஸ்டா அவர் போஸ்டரை கிழித்து ஆப்டரா ஸூட் பண்ணப்பட்டு டெட் ஆகி இருக்கலாம் இல்லையா?

  3. தமிழ்வாதம்:
   நம்பகமான செய்திகள் நம்பகமான சாட்சிகளிடமிருந்து வரவேன்டும்.
   உங்கள் நம்பகமான சாட்சி யார்?

   சில “நம்பகமான செய்திகளை” விடப் பச்சைப் பொய்களில் கூடிய உண்மை இருக்கலாம்.

  4. உங்கள் தகவல் சரியானது தான். ஆனால் உங்கள் கேள்வி “இதை யார் செய்தார்கள் ?
   ” உண்மையை தேடும் நோக்கிலானதா? இல்லை உண்மையை புதைக்கும் நோக்கிலானதா? எது எப்படியோ…….
   புலிகள்

   தாம் தான் கொன்றதாக இயக்கத்திற்குள் மட்டுபடுத்தப்பட்ட அளவில் கூறினாலும் உரிமை கோராது ஒளிந்து கொண்டனர். இக் கொலை பற்றி இயக்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டது………

  5. தங்களின் தகவலில் சொல்லப்பட்ட சுதன் , ரமேஸ் ஆகியோரில் ஒருவர் சிறியால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றுநினைக்கிறேன். மரினா பீச்சில் உண்ணாவிரதம் இருந்ததில் ராஜீவ் கொலை சூத்திரதாரி சிவராசனும் பங்கு பற்றியிருந்தார். சிவராசன் அதே டெலோ இயக்கத்தில் இருந்தவர். சுதன், ரமேஸ் பிரச்சனையின் பின்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். அதேபோல் அக்காலத்தில் டெலோவில் இருந்த பல பெண் போராளிகள் புலிகள் இயக்கத்திலும் இணைந்தனர். சோதியா கூட அதில் ஒருவர் தான்.

   சுதன், ரமேஸ் பிரச்சனையில் புலிகளால் காப்பாற்றப்பட்டு நாட்டுக்கு கூட்டி வரப்பட்டவர்களில் அண்மைக்காலத்தில் சிறி டெலோவில் செயற்ப்பட்டுவரும் ஜேர்மனியில் வசிக்கும் பெரியநந்தனும் ஒருவர். பெரியநந்தன் பின்னர் தாஸ் குழுவினருடன் தொடர்பில் இருந்தவர். அதேபோல் சிதம்பரநாதன் என்ற கரவெட்டியை சேர்ந்த டெலோ உறுப்பினர் புலிகளுடன் சேர்ந்து இயங்கியவர்.

   1. றமெஷ் தான் கொல்லப்பட்டவர். காரணம் நான் அப்போது சென்னையில் இருந்த போது, இடை இடையே சுதன் எங்களிடம் வருவார். பழக அன்பான மனிதர். இது செப்டெம்பர் 1985 – மார்ச் 1986 வரை இருக்கும். வெளியில் குறிப்பாய் கனடா போகவிரும்புகிறதாய் அடையரில் வைத்து சொன்னார். பிறகு எதும் தொடர்பில் இருக்கவில்லை.

 19. MR. SITHAMPARAM ! THANK YOU FOR YOUR SUPER COMMENTS. WE ALSO KNOW THAT BUT STILL , WE WOULD LIKE TO SEE WHAT IYAR IS TRYING TO SAY IN THE END.

 20. DAVID BS Jeyaraj Writes….

  Here is a reply from Vaiko against KP’s “accusations”.
  I must warn you that there is ample amount of rhetoric in it.

  http://www.youtube.com/watch?v=hl3_MuG3vi8
  http://www.youtube.com/watch?v=15elr7dOJlc
  http://www.youtube.com/watch?v=DktLaleJNNY
  http://www.youtube.com/watch?v=cdWGqGld7pY
  http://www.youtube.com/watch?v=uiBiVukQInU
  http://www.youtube.com/watch?v=Rv5QpfjMJLg

  I feel sorry for the viewers but am releasing this comment as a source of comic relief…………DBSJ

  1. வைக்கோ எழுதிய கைக்கூ(Haiku) கவிதை இது.

   “அவர் உயிரோடிருக்கிறார்.

   அவர் மீண்டும் வருவார்.

   பிரபாகரன் மாவீரர் திலகம்.”

   1. வைக்கோ எழுதிய ” கைக்கூலி” கவிதையாக்கும்.

 21. கிட்டு “மாமா ” தான் மனோ மாஸ்டரை சுட்டார்.இது ஊர் அறிந்த ரகசியம்.

 22. மனோ மாஸ்டர் கொல்லப் பட்டது பாடசாலைக்கருகில் தான், அவரை புலிகள் கொல்வதற்க்காக துரத்தி வந்து பாடசாலைகருகில் கொன்றனர். அக்காலத்தில் புலிகள் அமைப்பில் இயங்கிய ராகவன் இப்படுகொலை காலத்தில் வடமராச்சிப் பகுதியில் இருந்ததாக ஒரு கேள்வி ஞானம். அவரிடம் கேக்கலாம். மனோ கொல்லப் பட்டபோது அவர் டெலோ வில் இல்லை. மனோ விடம் புலிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை அவர் ஏற்று கொள்ளவில்லை. அவர் புதிய அமைப்பு ஒன்றை கட்ட முயற்சித்து இருந்தார். நாக ராஜன் பிரபாகரனுடன் சேர்ந்து பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார் பின்னர், நான் அவன் இல்லை என்ற அவரது முள்ளமாரி தனத்தால் தான் நாகராஜன் புலிகளால் எச்சரிக்கப்பட்டார். எது என்னவோ போராட வெளிக்கிட்டவர்கள் தமக்குள் முரண் பட்டு நின்ற போது அவர்களை ஆற்றுகை படுத்தி ஒன்றுமைபடுத்த ஒரு தரும் இல்லையே! அந்தோ பரிதாபம்! அமுதலிங்கம் போன்றோர் இந்த பிளவுகளை அதிகம் விரும்பினர். அதன் மூலம் தமது கதிரைக்கு ஆபத்து வராது என எண்ணினர்.
  கருணாநிதி டெலோ வை ஆதரிக்க, டெலோ வை அக்காலத்தின் எதிர் கூட்டணியான மத்திய அரசு ஆதரித்தது. MGR புலிகளை ஆதரித்தார் ஆனால் அவர் மத்திய அரசுடன் கூட்டணி வைத்து இருந்தார். வாசகர்களுக்கு ஏதாவது விளங்குகிறதா? DMK , ADMK மூலமாக இந்திய உளவுத்துறை தமிழ் இயக்கங்களை தனக்கு ஏற்றவாறு கையாண்டது. உலகில் யூத இனத்திற்க்கு அடுத்த நிலையில் உள்ள ஈழப் புகழ் மடையர்கள் எவ்வித பகுப்பாய்வும் இன்றி தான்தோன்றி தனமாக நடந்து முற்று பெற்றனர். இந்த இன்னொரு இணையமும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பமான விவாதங்களை தோற்றுவிக்கிறது. பாருங்கள் இங்கு கூட நீங்கள் யாருமே பொது நிலை ஒன்றை எய்தும் நிலைப்பாட்டில் இல்லையே! இனி எமக்கு என்ன தீர்வு என்பது பற்றியோ தமிழ் மக்களின் செல்நெறி எது என்பது பற்றியோ உங்களிடம் எந்த தீர்வும் இல்லையே. சும்மா சுதப்பி கொண்டுதான் இருக்கிறியள். இதனைத்தான் இன்று இந்திய இலங்கை புலனாய்வு நிறுவனக்களும் அதன் ஏஜண்டுகளும் மனதார விரும்ப்புகின்றன. இந்த இன்னொருவில் ஒற்றுமைபடாத தட்டுவாணி தமிழர் கூட்டம் அன்று எடுத்தேன் பிடித்தேன் என்ற நிலையில் தமிழர் விடதலை கூட்டணியால் உருவேற்ற பட்ட இளையர் கூட்டத்தின் ஒற்றுமை பற்றி ஆதங்கபடுவது அனாவசியமானது.

  1. அப்போது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பிளவுகளை ஏற்படுத்தி இப்போ சாராசரி 5 குடும்பத்தில் ஒருவர் என்று பலிகொடுக்கப்பட்டு மாறா வடுவாக உருவெடுத்திருக்கும் பிரச்சனை சும்மா இணையத்தில் பின்னூட்டு விடுவதால் தீர்ந்து விடாது. காலம் எடுக்கும் ஆனால் காலத்தின் கட்டாயம் அதுநடந்தே ஆகும்.

  2. மிக அருமை. தெளிவான சிந்தனை.

  3. 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர்
   பாண்டிபசாரில் இரவு 9.45 மணிக்கு, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஈழ
   விடுதலைக்கான போராளிக் குழுக்கள் எதுவுமே வளர்ச்சிப் பெறாத காலம்.
   விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், இராகவன் ஆகியோரும்,
   புளோட் அமைப்பைச் சார்ந்த உமாமகேசுவரனும், நேருக்கு நேர் சந்தித்த போது
   துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். உமாமகேசுவரன் காயமடைந்தார்.
   பிரபாகரனும், சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில்
   உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில், சட்டம் ஒழுங்கு
   பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின்
   பேரில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் மோகன்தாகு உரிய நடவடிக்கைகளை
   மேற் கொண்டார். அப்போது இந்திய உளவுத் துறையில் கூடுதல் இயக்குனராக
   இருந்தவர் எம்.கே.நாராயணன். சென்னை யில் நடந்த துப்பாக்கி சூடு
   சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே டெல்லியிலிருந்து சென்னைக்கு பறந்து
   வந்தார் எம்.கே.நாராயணன். காவல்துறை இயக்குனர் மோகன்தாசை சந்தித்து –
   பிரபாகரன், உமாமகேசுவரன் மீது நட வடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டா
   தீர்கள்; நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
   பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து, இதையே வலியுறுத்தினார்.
   ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆரோ, இது எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப்
   பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நேருக்கு நேராக
   கண்டிப்பாகக் கூறிவிட்டார். ராஜிவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட
   ஜெயின் ஆணைய விசாரணையின் போது காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அளித்த
   வாக்குமூலத்தில் (2.1.1996) இதைப் பதிவு செய்துள்ளார்.

   பிரபாகரன், உமா மகேசுவரனைப் பிடித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 5
   லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.
   பிரபாகரனும், உமா மகேசுவரனும் சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டார்கள்
   என்ற தகவல் கிடைத்தவுடன், சிறீலங்காவின் காவல்துறை தலைமை அதிகாரி
   (அய்.ஜி.) ருத்ரா ராஜசிங்கம் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். மத்திய
   அரசின் அனுமதியின்றி, இலங்கைக் காவல்துறை அதிகாரி தமிழ்நாடு வந்திருக்க
   முடியாது.

   தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்து, காவலில் வைக்கும் நடவடிக்கைகளை
   துரிதப்படுத்த வேண்டாம் என்று உளவுத் துறை அதிகாரி எம்.கே. நாராயணன்,
   தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த
   வேண்டிய அவசியமென்ன? உடனடியாக – இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன்,
   தமிழகத்துக்கு வர வேண்டும்? இந்த நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உண்டு.
   கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட நான்கு ஈழப்
   போராளிகளையும், தமிழ்நாட்டில் காவலில் வைக்காமல், சிறீலங்கா அரசிடம்
   ஒப்படைக்க, இந்திய உளவுத்துறை திட்டமிட்டதே இதற்குக் காரணம். இப்படி ஒரு
   சதி நடக்கிறது என்ற நிலையில், அன்று காமராசர் காங்கிரஸ் கட்சி என்ற
   பெயரில் கட்சி நடத்தி வந்த பழ. நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்
   கூட்டினார். தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை இலங்கை
   அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக
   அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி யது. இந்த அனைத்துக் கட்சிக்
   கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதியை எம்.ஜி.ஆர். அனுப்பி
   வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர்
   எம்.ஜி.ஆர்., கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை மரியாதையுடன் நடத்துமாறு
   காவல் துறைக்கு உத்தரவிட்டார். அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும்
   திட்டமில்லை என்று காவல்துறை இயக்குநர் மோகன்தாகு அறிவித்தார்.
   எதிர்கட்சியிலிருந்த கலைஞரும், போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதை
   எதிர்த்துப் பேசிய தோடு, உடனடியாக பிரதமர் இந்திரா காந்திக்கு தனது தூதர்
   ஒருவரை அனுப்பி, உளவுத் துறையின் நாடு கடத்துமுயற்சிகளை நிறுத்தக்
   கூறினார். உளவுத் துறையின் சதித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

 23. ர்மேஸ் சீறீசபாரத்தினாலும் அடைக்கலனாதன் செல்வத்தாலும் கொடுமையானமுறையில் கொல்லப்பட்டார். அதே சிறீ பின்னர் கிட்டுவால் கொல்லப்பட்டார். சிறி வஞசகமாக தாசை விருந்திற்கு அழைத்துகொன்றார். உமா சந்ததியரைகொன்றார் . உமா பின்னர் தன் இயக்கதவனால் கொல்லப்பட்டார். உமா ஒரு கொலைபடையையே வைத்திருந்தார். டம்மிங் மூர்த்தி டம்மிங் கந்தசாமி. மாணிக்கதாசன். பின்னர் இவர்கள் புலிகளால் கொல்லபட்டார்கள். மூர்த்தி பற்றி தெரியவைல்லை. செட்டி கண்ணாடி ப்த்மனாதனைகொன்றார். பின் செட்டி பிரபாகரனாலும் குட்டிமனியாலும் கொல்லப்டட்டர்.

  1. என்ன இடையில் விட்டு விட்டீர்கள் .

  2. மனோ உங்கள் கொலை பட்டியல் உணவு சங்கிலி போலுள்ளது ஆனால் கடைசி நுகரியை வேண்டுமென்றே மறந்து விட்டீரோ?

   1. கடைசியில் பிரபாவும் அனாமத்தான ஒரு சிங்கள சிப்பாயால் கொல்லப்பட்டான்..
    அதர்மம் அழிந்து தர்மம் மறுபடியும் தலை தூக்கியது…

    1. ஒரு அதர்மம் அழிந்து இன்னொரு அதர்மம் தலை தூக்கியது.

  3. “… பிரபாவும் … ஒரு சிங்கள சிப்பாயால் கொல்லப்பட்டான்..
   அதர்மம் அழிந்து தர்மம் மறுபடியும் தலை தூக்கியது…” — ஏடு குண்டல வாடா

   அதனால் தான் இப்போது இலங்கை “மகிந்த தர்மம்” தழைத்தோங்கித் தலை விரித்துப் பேயாட்டம் ஆடுகிற நாடாகி விட்டதா?

 24. “——–புலிகள் அமைப்பில் இயங்கிய ராகவன் இப்படுகொலை காலத்தில் வடமராச்சிப் பகுதியில் இருந்ததாக ஒரு கேள்வி ஞானம்—-” ராகவன் ( கனடா)
  அன்றைய புலியும் இன்னாளில் சிறீலங்காவிற்கு திக் விஜயம் சென்ற ராகவன் இப்படுகொலை நேரத்தில் இலங்கைத் தீவில் இருக்கவில்லை.

 25. கிட்டு ஒரு கொடியவன்,பெண் பிள்ளகளூக்கு தோள் காட்டித் திரிந்த நாய்ப்பயல்.பொன்னம்மானை மட்டுமல்ல அவனது தோழன் விக்ரரையே போட்டுத் தள்ளீயவன்.இரக்கமில்லா இவனால் மென்டிஸ் உயிர் இழந்தான்,சீறீ காட்டுமிராண்டித்தனமாய் சுட்டுக் கொல்லப்பட்டான்.எப்போதும் தன்னை ஒரு கீரோவாக நினைத்துக் கொண்ட கோமாளீ கிட்டு.இவனேல்லாம் இராணூவத்திற்கு மாமாவாய் இருந்ததாலோ என்னவோ கிட்டு மாமா.சன்னதி என்றூ மண்ட சுகமில்லாதவனையே புலிகள் தீவுப் பகுதியில் போட்டுத் தள்ளீனர் இத்தனைக்கும் அவர் மீன் பிடித்து வாழ்ந்தவர்.இப்படி சொல்லிக் கொண்டே போகும் போது அம்மான் என்ற ஒருவரது அட்டகாசங்களூம் நினைவில் வந்து போகிறது.

 26. இங்கு இடுகைகளைப் படிக்கும் போது விரக்திதான் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும். நடந்த தவறுகளுக்கு நாம் எல்லாம் சேர்ந்து தண்டனை வாங்கிக் கொடுக்கப்போகிறோமா. யாருக்கு கொடுக்கப்போகிறோம். அதைத்தானே முள்ளிவாய்க்காலில் செய்து விட்டோம். இன்னும் எமது வன்மம் அடங்கவில்லை. இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் எமக்குத் தேவையா. இடதுசாரிகளோ அல்லது வலதுசாரிகளோ விடுதலை வேண்டி நின்ற நாம் எப்படி அப்பாவி மக்களைக்கொல்லும் அரசுடன் சேர்ந்து நின்றோம். தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு தானே. எமது மக்களுக்கு நாம் கொடுத்தது காணாதா. நாம் முட்டாள்கள் போல் எமக்குள் மோதிக்கொண்டிருப்போமாயின் எமது இளைய சமுதாயம் எம்மீது காறித்துப்பும். நாம் விழித்துக்கொள்வோம். இன்னும் ஆயிரம் சுந்தரங்களும் மனோக்களும் சந்ததியார்களும் அடையாளம் தெரியாமலே பலி வாங்கிவிடுவோம். எமது மக்களுக்கு ஒட்டு மொத்தமாக நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்போம். விடுதலையடைந்த எமது தேசத்தில் எமது குற்றங்களுக்கு விசாரணை வைப்போம்.

 27. வேலையத்தவர்களுக்கும்,, இயலாவாளிகளுக்கும்,,
  குறை கூறியே மனநிறைவடைபவர்களுக்கும்,,,
  வாயால் பந்தல் போடுபவர்களுக்கும்,,,இனியொரு”
  அருமையான பொழுது போக்கை அறிமுக்கப்படுத்தியிருக்கிறது,,,
  கீழ்வரும் பாடல் போலலலலலலலலலலலலல,,,,,

  என்னாண்டிபொன்னாண்டி
  என்னபொன் காக்காப்பொன்
  என்ன காக்கா அண்டங்க்காக்கா
  என்னண்டம் பனையண்டம்
  என்ன பனை தாளிப்பனை
  என்னதாளி நிறத்தாளி
  என்ன நிறம் ஓட்டுநிறம்
  என்னோடு பாலோடு
  என்னபால் கள்ளிப்பால்
  என்னகள்ளி சதுரக்கள்ளி
  என்னசதுரம் நாய்ச்சதுரம்
  என்னநாய் வேட்டை நாய்
  என்னவேட்டை பண்டி வேட்டை
  என்ன பண்டி ஊர் பன்றி
  என்ன ஊர் கீரையூர்
  என்ன கீரை அறக்கீரை
  என்னறம் பள்ளியறம்
  என்ன பள்ளி மடப்பள்ளி
  “என்னமடம் ஆண்டிமடம்”
  “என்னாண்டிபொன்னாண்டி”

  “நெக்கற்றிவ்வான சிந்தனை கொண்ட சகோதரர்களுக்கு” மற்றவர்களல்ல
  கொஞ்சம் பொசிற்றிவ்வாகவும் சிந்தித்துப்பாருங்கள்,
  (நெக்கற்றிவ்வானவர்களுக்கு மட்டும்)

 28. துரோகிகளை அளிக்கிறோம் என்று அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி சுந்தரம் ,ஜெயா மாஸ்டர் , அமிர்தலிங்கம்,மாத்தையா என்று கொலை தாண்டவம் புரிந்த புலிகள்
  இன்று உலகம் முழுவதும் துரோகிகளை வளர்த்து விட்டு முடிந்து போய் விட்டார்கள். இன்னும் கொஞ்ச தலை களண்டதுகள்
  தலைவர் வருவார் என்று பாடிக்கொண்டு திரியுதுகள். இலங்கையில் ஒரு கே பி, கருணா இங்கால நெடியவன் கொடியவன்
  இந்த முன்னாள் புலிகள் இருக்கிற தமிழரையும் வித்து தின்னப் படும் பாடு சொல்லி மாளாது. சேர்த்த பணத்த சுருட்டிக்கொண்டு
  பதுங்கிக் கொண்டிற்ருதுகள் கொஞ்சப் புலிகள், பிழைப்புக்கு வழிதெரியாமல் விழி பிதுங்கி திரியுதுகள் இன்னும் சில புலிகள்
  இப்படி ஒரு நிலையை தமக்குள்ளே உருவாக்கி விட்டவர் யார்?( பாவம் அந்த மாவீரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில்
  இருக்கும் போராளிகளும் தமது வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் மக்களும் தான்)

  1. உங்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிகிறேன். அது தான் உண்மை.

 29. ஐயா அவர்களுக்கு,
  தமிழில் எழுதப்பட்ட இரண்டு இதிகாசங்கள் ஆன மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றில் பல ஆயிரம் கிளைக் கதைகள் உள்ளடக்கப்பட்டது போன்று, ஆரம்பகால கட்டத்தில் புலிகள் இயக்கம் உடைந்து சீர் குலைந்த பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் பல நூறு சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை எல்லாவற்றையும் உங்கள் ஒருவரினால் ஒருகிணைக்க முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் உங்களுடைய கடும் முயற்சியினால் தமிழ் வாசிக்க தெரிந்த இக்காலத்து இளைஞர்களுக்கு ஓரளவிற்கேனும் கடந்த கால நிகழ்வுகள் அறியப்படுத்தப்படுவது வரவேற்க்கதக்கதாகும்.
  புலிகள் இயக்கத்தின் பெயரை யார் பாவிப்பது என்ற பிரட்சனை உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கு இடையில் எழுந்த போது அருளரின் மஸ்தியத்துவத்தில் புலிகள் இயக்கத்தின் பெயரை யாரும் பாவிப்பது இல்லை என்று உடன்பாடு காணப்பட்டது. பிரபாகரன் இந்த பெயரை தான் பாவிக்க மாட்டேன் என்று லங்கா ராணி அருளர் அவர்கட்கு உறுதி மொழி வழங்கி இருந்தார்.
  அடுத்து உங்களுடைய முந்திய பாகத்தில் பிரபாகரன் இயக்கத்தினை விட்டு வெளியேறும் பொழுது அவரிடம் இருந்த கைதுப்பாக்கியினை கையளித்துவிட்டு போகுமாறு சுந்தரம் கேட்டிருந்ததினை நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த சம்பவத்தில் இருந்தே பிரபாகரனுக்கு சுதந்தரத்தின் மீது கடும் பகை உணர்வு ஏற்பட்டு இருந்தது. சுந்தரத்தினை தனித்து தன்னால் கொலை செய்ய முடியாது என்பதினால் ரெலோ இயக்கத்துடன் இணைந்து பிரபாகரன் தனது பகை உணர்வை தீர்த்திருந்தார். அது மட்டும் அல்லாது உமா மகேஸ்வரனுக்கு பக்க பலமாக இருக்கும் சுந்தரத்தினை கொலை செய்தால் உமா மகேஸ்வரனுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்து முடியும் என்றும் அவர் நம்பியிருந்தார். சுந்தரத்தினை கொலை செய்வதற்காகவே ரெலோவில் பிரபாகரன் இணைந்திருந்தார். தங்களது ஊரவன் என்பதினால் குட்டிமணியும் தங்கத்துரையும் பிரபாகரனுக்கு புகலிடம் வழங்கி இருந்தார்கள்.
  சுந்தரம் கொலைசெய்யப்பட்டதும் அந்த கொலை கண்டித்து நாகராஜா துண்டு பிரசுரம் ஒன்ரினை அச்சிட்டு வெளியிடுவதற்கு முயன்று இருந்தார். இதனை வெளியிடுவதற்கு நாகராஜாவிற்கு பாதுகாப்பு பிரட்சனை இருந்தமையினால் அதனை இ.பி.ஆர்.எல்.எவ் நாபாவிடம் கொடுத்து வெளியிடுமாறு கேட்டிருந்தார். இதனை அறிந்த ராகவன் அதனை வெளியிடவேண்டாம் என்று நாபாவிடம் எச்சரித்த போதும், நாபா அதற்கு உடன்பட மறுத்து அதனை வினியோகத்து இருந்தார். இந்த சம்பவம் ஐயா அவர்களின் பதிவில் பதிக்கப்படவில்லை.
  நீர்வேலிவங்கி கொள்ளைக்கு பின்னர் விலகிசென்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பிரபாகரனுடன் இணைந்ததும், குட்டிமணி , தங்கதுரை ஆகியோருக்கு பிரபாகரன் தண்ணிகாட்ட நினைத்தார். வங்கி கொள்ளையில் கிடைத்த பணத்தினை பங்கிடுவதில் ஏற்பட்ட பகையுணர்வினாலேயே குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் பிரபாகரணால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னர் வெலிக்கடை சிறையில் வைத்து ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் குண்டர்களினால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். குட்டிமணி,தங்கத்துரை ஆகியோரரை ஜே.ஆருக்கு பிரபாகரன் காட்டிகொடுத்ததினை விளக்கமாக எழுதமுற்பட்ட சபாலிங்கத்தினை பிரபாகரன் ஆளைவைத்து கொலை செய்திருந்தார்.
  இப்படியாக தான் கொல்லப்படும் வரை மாற்றுகருத்து¨டையவர்களை கொலை செய்வதினையே பிரபாகரன் தனது பிரதான செயற்பாடாக கொண்டிருந்தார். கிளிநொச்சி பறிபோகும் தறுவாயில் கூட வவுனியாவில் மாற்று இயக்க உறுப்பினர்களை கொலை புரியும் செயலை பிரபாகரன் நடத்தி இருந்தார்.மகாபாரதயுத்ததிற்கு ஒரு கண்ணன் போன்று ஈழத்தமிழர்களின் இளைஞர் தொகையினை குறைப்பதற்கே பிரபாகரன் அவதாரம் எடுத்திருந்தார் என்று கூறினால் அது மிகையாகாது.
  மற்றும் ஒரு விடயத்தினையும் இங்கு கூறிசெல்ல விரும்புகிறேன். பிரபாகரன் தலமையிலான புலிகள் இயக்கம்தான் சிங்கள படையினருக்கு எதிரான பல வேற்றிகரமான தாங்குதலை நிகழ்த்தியது என்று ஒருவர் பதிவு செய்திருந்தார். அவரிடம் ஒரு கேள்வி? பல தாக்குல்களை நிகழ்திய பிரபாகரன் தலமையிலான புலிகள் தமிழ் மக்களுக்காக விட்டு சென்றது என்ன? பெற்றுகொடுத்த வெற்றிகள் எவை? ஒரு துண்டு நிலம் கூட இன்று எங்கள் கையில் இல்லை. திரும்பிய இடமெல்லாம் அரச படைகள். தேசிய தலைவரின் சாதனைகள் பொறிக்கப்படவெண்டியவையே!
  நிதர்சணன்

  1. ஆமா இப்படியே உளருங்க. நீங்கள் விடுதலைக்காக காட்டிக்கொடுப்பையும் பிரிவினைகளையும் தவிர்ந்த ஒரு நல்ல செயல் செய்துள்ளீர்களா? இப்பொழுது வந்து பிரபாகரன் என்னத்தை விட்டு சென்றார் என்று கேளுங்கள். ஏன் நீங்கள் ஏதாவது செய்திருக்க வேண்டியது தானே அட இல்லாவிட்டால் சற்று ஒதுன்கியாவது இருக்க வேண்டியது தானே.வைக்கல் பட்டடை நாய் போல இருந்துவிட்டு இன்று வந்து அடுத்தவன் மேலே குற்றம் சாட்டுங்கள்.

   1. எதை சரவணன் காட்டிகொடுப்பெஙிறீர்கள். நீங்கள் போராட்டத்திற்கு தலைவனை உருவாக்காமல் . தலைவனுக்காக போராட்டத்தைநகர்த்தி மக்களுக்கு துரோகம் செய்வதற்கு துணை போனது மட்டுமல்லாமல் , மக்களை உணர்வுபூர்வமாக சிந்திக்க விடாமல் உணர்ச்சி பிழம்பாகவே வைத்திருக்க விரும்புகிறீர்கள். இதுதான் எதிர்புரட்சி ( நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அறியாமல் உளறுகிறீர்கள் என்பது நீங்கலாக) நீங்கள் செய்து கொண்டிருப்பது எதிர்புரட்சி, மக்கள் விரோதம், குறுந்தேசியவாதம்.

    1. யாரோ பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் தான் இருக்கின்றார் என்று காட்டிக்கொடுத்ததால் தான் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். அந்தக் காட்டிக்கொடுத்தவரை கண்டுபிடியுங்கள். தயவுசெய்து காட்டிக்கொடுத்தார்கள் என்று சொல்கின்றாரகள்? யார்? யாரை! காட்டிக்கொடுத்தார்கள் என்று சொல்லமுடியுமா?

  2. பிரபாகரன் விட்டு சென்றது : இராணுவ வெற்றிகளால் மட்டும் நாம் விடுதலை அடைந்து விட முடியாது என்ற மாபெரும் உண்மை அதிக விலை கொடுத்து எமக்கு கற்று தந்திருக்கிறார்.

  3. (மகாபாரதம், இராமாயணம் இரண்டுமே வடமொழிக் காவியங்கள். ஒரு கிளைகதை கூடத் தமிழர் வழங்கியதல்ல
   அக் கதகள் இல்லாமலே அக் காவியங்களை வாசித்து விளங்கலாம்.)

   ஐயர் சில சமயங்களில் பிரதான ஓட்டத்திலிருந்து விலகுவது போலத் தெரிந்தாலும் அடிப்படை நோக்கம் புலிகளயும் பிரபாகரனையும் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பைச் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுவது தான். பிறரது கருத்துக்கள் என்பவற்றை அவர் மிகக் குறைவாகவே பாவித்துள்ளமை இங்கு பொருத்தமானது.
   அவசரப் படாமல் பொறுமையாய் வாசித்துத் தகவல்கள் தவறானால் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுவது நல்லது,
   புலி ஆதரவு x புலி எதிர்ப்பு என்ற நிலைப்பாடுகளிலிருந்து வரும் பல குறுக்கீடுகள் விளைவிக்கும் வீண் விவாதங்கள் தவிர்க்கத்தக்கன.

   1. குரானும்,பைபிளூம் எங்கிருந்து வந்தது அவையெல்லாம் நம்முடையதில்லையே கரம் மசாலா நம்மில் அனேகருக்கு அவை வேதநூலாக இல்லையா?

 30. பலர் முயற்சி செய்கிறார்கள் தமிழினம் என்றுமே ஒன்றிணையாமல் தடுப்பதற்கு. அது ஒன்று போதும் நாம் முற்றாக அழிவதற்கு. எமது எதிரி மிகுந்த புத்தியுடன் நகர்கிறான். தமிழனைத் தர்மத்தை தவிர காப்பதற்கு ஒன்றும் இல்லை.

 31. ‘கடந்த கால நிகழ்வுகளை அறியப்படுத்துவது’ என்கிற பேரில் கற்பனைச் சரடுகளை அவிழ்த்து விடக் கூடாது.

  நிதர்சணன்! இப்படி எழுந்தமானமாக தரிசனம் தரலாகாது.உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்,அது உங்களுக்கு உரியதே. ஆனால் சம்பவங்களைப் புனைவதும்,திரிப்பதும் வரலாறாகும் எனக் மனக் கோட்டை கட்டாதீர்கள்.

 32. இப்படி எலோருமே பயன் தரும் வகையில் எழுதினால் படிக்க நல்லா இருக்குமே.

 33. நிதர்சணன் மாமாக்கு, மருமகன் வன்னியன் எழுதிக்கொள்வது.மாமா, நுனிப்புல் மேய்கிற மாதுரி , அங்க தொட்டு , இங்க தொட்டு சில தொடுப்புக்கதைகளை வைச்சு, மொட்டம் தலைக்கும் , முழங்காலுக்கும் நீங்களும் உங்க கூட்டமும் முடிச்சு போட நினைக்கிறீர்கள்: வாழ்த்துக்கள். தமிழ்மக்களின் தேசியத்தலைவர்.திரு.பிரபாகரன் அவெர்கள் தமிழ்மக்களுக்கு என்ன விட்டுச்சென்றார் எண்டு புலம்புறியள்: உங்களுக்கு என்ன மாமா , உங்கள் பாட்டன், பூட்டி ” விட்டுச்சென்ற” சொத்தை அனுபவித்துக்கொண்டு ,கேள்வி மேலக் கேள்வியாய்க்கேக்குறீர்கள்.இதே கேள்வியை ஏன் மாமா வானத்தைப் பாத்து தந்தை செல்வாவிடமும் கேட் க்காமல் விட்டீர்கள். அவெரும் , அவெர் கட்சியும் போராட்டம் நடத்தி இளையர்களை உசிப்பிப்போட்டு, கடசியில , கடவுள் தான் தமிழரைக் காப்பாற்றவேண்டும் எண்டு போட்டு அவெரும் போய்ச்சேர்ந்துட்டார்.அப்படியே பின்னாடிப் போய் வரலாறைப் புரட்டுங்கோ. நம்ம வன்னிய ராசா பண்டாரவன்னியன் போராடி என்னத்தை மாமா விட்டுச் சென்றார்.அங்காலா யாழில் சங்கிலியன் கதை மட்டும் என்னவாம். சரி இதுகளை விடுங்கோ. ஏதோ மகாபாரதக் கதை சொன்னீங்கள்:ஏன் அங்க மட்டும் என்ன வாழுதாம். கண்ணன் எவ்வளவு சூழ்ச்சிசெய்தும், போராடியும், உயிர்களை பறித்தும் கொடுத்த வெற்றியை பாண்டவர்கள் இறுதியில் என்ன செய்தார்கள். ” “சோமபானத்தைக் ” குடித்து விட்டு , ஆத்தங்கரையில் உள்ள இரும்பு போன்ற ஒரு வகைப் புல்லால் ஆள் ஆளுக்கு அடிபட்டுச் செத்தார்களாமே. இல்லை நான் கேட் கிறேன் எல் லா இயக்கமும் ஒண்டு சேர்ந்து போராடி இருந்த்தால், ஈழத்தை உலகம் தங்க தாம்பாளத்தில் வைத்து தந்து இருக்குமோ. ஒரு போதும் இருக்காது. அதுதான் உண்மை. மாலை தீவைப் பிடிச்ச புளட்டுக்கே , அன்று இந்தியா ஒரு சாம்பிள் முள்ளிவாய்க்காலைக் காட்டிப் போட்டுது. பாலஸ்த்தீனம், காஸ்மீர், தமிழீழம் உலகத்தில் ஒரு போதும் தீர்க்க முடியாத பிரச்சனைகள்.அதுக்காக நாம் தமிழர் போராட்டத்தை கைவிட முடியாது. நீர் ஓடினால்தான் அது நதி.ஓடாமல் ஒரு இடத்தில் தேங்கி நின்றால் அது குட்டை. குட்டை நாறி மணந்து ஒருநாள் அது இல்லாமலே போய் விடும். நதியப் போல தமிழரை, தேசியத் தலைவர் . மேதகு திரு .வழிநடத்திச் சென்றார்.மூத்த இனங்களில் ஒன்றான தமிழ் இனம் போராடியே வாழ்ந்ததினால் தான் இதுவரை இந்த பூமிப் பந்தில்நிலைத்துநின்று இருக்கு. தலைவர் பிரபாகரன், பண்டாரவன்னியன் சங்கிலியன், கட்டப்பொம்மன், எல்லாருமே தமிழர்கள் இந்த பூமிப் பந்தில்நிலைத்துநிக்க வேண்டும் என்றே போராடினார்கள். இனியும் இளையர்கள்நாங்களும் தலைவர் வழியில் போராடியே தீருவோம் மாமா. “சும்மா இருப்பதை விட , எதாவது செய்”::இதை உங்கள்நினைவில் வையுங்கள் மாமா.

  1. மாமா மருமகன் என்றூ நீங்கள் உறவு கொண்டாடும்போதே நீங்களூம் கே,பி யாகி விட்டீர்கள்.பாலகுமாரன் போன்றோரே பிழகள் சொல்ல முடியாமல் அரசவைக் கவிஜராய்த்தான் காலம் தள்ள முடிந்தது,புதுவையின் புகழ் கூடுவதாய்க் கருதப்பட்டு அவரே வியாசனானார்.யோகி சிந்திக்கவே விடவில்லை.இன்னும் சூசை கூட சந்தேகிக்கப்பட்டார் இப்படி தலைக்கு சைக்கோகுணம்.திருநெல்வேலித் தாக்குதலின் போது தல ஜீப்பிற்கு பின்னால் பதுங்கி இருந்ததாய்க் கதைகள் உண்டு.ஆக அவரது பயந்த சுபாவம் எப்படி இத்தனை பெரிய இயக்கத்தை கட்ட வைத்தது என்பது ஆச்சரியம் அதிசயமும் கூட.யாராவது அத பற்றீ எழுத மாட்டீர்களா?

   1. அதிசயமான கேள்வியொண்டு கேட்டுவிட்டீரகள். இனி நீங்கள் தான் துரோகி. தல பயந்தபடியாலதான் கடைசியாக செத்தார். அதுகூட விழங்கவில்லை உங்களுக்கு.

  2. ஆக எல்லாத் தலைமையும் தோத்தது தானே அதனால பிரபாகரனும் தோத்தா பிசகில்லை என்று சொல’லுறியள் போல. பிழையான வழியில போராடினால் தோல்வி தான் மிஞசும் என்று மற்றவர்கள் படிச்சுப் படிச்சு சொல்லேக்குள்ள அவனுகளுக்கு மண்டேயில போட்டு அந்தக் குரலுகளை அமத்திப்போட்டு இப்ப ஞாயத்தைப் பாருங்கோ!

   “பாலஸ்த்தீனம் காஸ்மீர் தமிழீழம் உலகத்தில் ஒரு போதும் தீர்க்க முடியாத பிரச்சனைகள்.அதுக்காக நாம் தமிழர் போராட்டத்தை கைவிட முடியாது” என்கிறீர்கள். தயவு செய்து சொல்லுங்கோ “ஏன் போராட வேணும்?’

   1. ….ஏன் போராட வேணும்..? நண்பர் வோட்டெர்..இதுக்கு நான் பதில் சொல்லுறதை விட, பட்டிமன்றத்தலைவர் திரு.லியோனி சொன்ன பதில் உமக்கு பொருத்தமாய் இருக்கு மென்று நினைக்கிறேன்.ஒருவர் தன் நண்பரைக் கேட்டாராம், வாவேன் வெளிய போவோம் எண்டு, உடனேநண்பர் கேட்டாராம், வெளியபோய் என்ன பண்ண எண்டு, உடனே அவெர்நண்பரிடம் சொன்னாராம் வெளியபோய் படம் பாக்கலாம்தானெ எண்டு. உடனேநண்பர் சொன்னாராம், படம் பாத்து என்ன பண்ணிறது எண்டு. சந்தோசமாய் படம் பாத்துட்டு , உணவுவிடுதியில சாப்பிடலாம்தானே எண்டாராம். உடனேநண்பர் சொன்னாராம் , சாப்பிட்டு……..?இப்படித்தான் இருக்குநண்பரே உமது பதிலும். அந்த ஒருத்தருக்கு வாய்த்த பைத்தியக்காராநண்பர் போல, ஒட்டு மொத்த ஈழத்தமிழருக்கும் வாய்த்த பைத்தியக்காரத்தமிழர்கள் தான்நீரும், மாமணியும்,துரையும்.எக்ஸ் போன்றவர்களும். புலிகழ் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா, இல்லையே அவெர்களும் எம் மத்யில் இருந்து தானே உருவானவர்கள். பெரும்பான்மை தமிழ் சமூகம் என்னநினத்ததோ, அல்லது விரும்பியதோ, அதைத்தானே புலிகள் செயல்படுத்தீனார்கள். போராட்டம் என்றால் இழப்பு வரத்தான் அண்ணே செய்யும். இழப்பைப்பாத்துப் போராட்டத்தைக் கை விட முடியுமோ.ஒருவேளை அகிம்சைய் வழிப் போராட்டத்தைச் சொல்லுறியளோ..? எடுத்த உடனேயேநாம் தமிழர் என்ன ஆயுதப்போராட்டமோ நடத்தினோம்.காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம்நடத்தினவை தலையில அடி வேண்டினதையெல்லாம் மறந்து போனிங்களோ. ஈழத்தமிழருக்கு…….அகிம்சைப்போராட்டமும் சரி வராது, ஆயுதப் போராட்டமும் சரி வராது எண்டால், அப்போநாங்கள் ஈழத்தமிழர் என்ன வழிப் போராட்டத்தையண்ண நடத்திறது.பயந்தவர்கள், சக்தி இல்லாதவர்கள்,மானம் கெட்டவர்கள், சூடு சொரணை இல்லாதவர்கள், தயவு செய்து ஒரு ஓரமாய்ப் போய் உக்காருங்கோ. யார் இருந்தால் என்ன , யார் போனால் என்ன , யார் வந்த்தால் என்ன, எம் மண்ணையும் , எம் மக்களையும், காக்கும் போராட்டத்தை தொடர்பவர்கள் பின்னால், பெரும்பான்மைத் தமிழர்நாம் அணிர்திரள்வோம்.நீங்கள் எல்லோரும் வாயால் கூடத் தமிழீழத்தைப் பெற்றுத் தந்து இருக்க மாட்டீர்கள். ஆனால் தேசியத் தலைவர் செயலிலாவது முயற்சித்துப் பாத்தார். “நீ எதை அதிகம் நினைக்கிறாயோ ,நீ அதுவே ஆகுறாய்” நாம் பெரும்பான்மைத் தமிழர் தமிழீழத்தையே நினைக்கிறோம் , அதை நிட்சியம் அடைந்தே தீருவோம். ஆனால் நீங்கள் [ மாமணி, எக்ஸ், துரை , தமிழ்மாறன்]……? நாய்களுக்கும் கனவிலும் “எலும்புத்துண்டுதான் ” வருமாம்.

    1. a voter
     Posted on 09/02/2010 at 4:28 am

     ஐயா மாமணி அவரைச் சும்மா விடுங்கோ. “மனம் முள்ளிவாய்க்காலிற்குப்பின் ஒருவகை பேதலிப்புக்குள்ளாகி ” என்று விக்கி எழுதினது இவரைப் பற்றித் தானே.
     விக்கி எழுதியதை முதலிலேயே பார்த்திருந்தால் நான் பதிலெழுதி மினக்கெட்டிருக்க மாட்டன்

     1. இப்பிடியானவர்க்ளுக்கு நாங்கள் தான் ஆதரவா இருக்கவெனும் மாமணி அவ்ர்களுடய குமுறல்களை கேட்டாலே பாதி குணமாயிடும் பிளீஸ் வெந்த்த புண்ணில்……………………….

 34. நிதர்சனன் எழுதியது தான் நிதர்சனம் சரவணன் அவர்களே யாரையாவது செய்ய விட்டாரா? மொத்தத் தமிழரையும் குத்தகைக்கு எடுத்தது போல் அல்லவா
  புலிகள் செயற்பட்டார்கள். உலக அரசியலை உள்வாங்கி செயற்படாமல் ஹீரோ விளையாட்டு காட்டி முழு தமிழ் சமுதாயத்தையும் தெருவில விட்டது யார்?
  பூச்சிக்கு மருந்து அடிக்கிற விமானத்தை பறக்க விட்டு முழு உலகையும் விழிக்க வைத்து அவர்களது பகையை சம்பாதித்து இருந்த படிச்சவங்களை எல்லாம்
  போட்டு தள்ளி கொஞ்ச நஞ்ச அநியாயமா புரிந்தார்கள். சின்ன மெண்டிசை கைது செய்த புலிகள் பின்பக்கமாக விலங்கிட்டு நாய்க்கு சாப்பாடு கொடுப்பது
  போல் சாப்பாடு கொடுத்ததால் அவர் கோப்பையை காலால் அடிக்க அன்றே அவரை கத்தியால் குத்திக் கொன்றானே கிட்டு . துர்கை அம்மன் கோவிலில்
  கொள்ளை அடித்து அந்த நகைகளை கடலில் கொட்டினான்களே . முழுத் தமிழ் இனத்தையும் தெருவில விட்டது மட்டுமா இன்னும் இருந்து கொண்டு
  அளாளுக்கு அடிபட்டு கொண்டு இருக்கிறாங்கள்.மற்ற இயங்கங்களும் பிழை விட்டது தான் ஆனால் துரோகத்தின் உச்சம் புலிகள் தான்.

 35. இங்கு வந்து குப்பை கொட்டும் பலருக்கும் எமது போராட்டத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை.நாலு இணயங்களில் வாசித்துவைட்டு இங்கு வந்து கொட்டுகின்றார்கள்.போராட்டத்தில் சம்பந்தப்பட்டவன்,அதனால் பாதிக்கப்பட்டவன் அந்த சம்பவங்களை எழுதும் போது இவர்களால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடாத குற்ற உணர்வால் வெறுமன சப்பைகட்டு கட்டுகின்றார்கள்.இயக்கங்களில் இருந்தவர்களுக்கு ஜ்யரின் பதிவை வாசிக்கும் போது அதன் உண்மைத் தன்மையும் சில ஊகிப்புக்களையும் புரிந்துகொள்ளமுடியும்.அவர்கள் பின்னோட்டம் எழுதும் போது சம்பந்தப் பட்டவர்களின் பெயர்,ஆண்டுகளை கூட எழுதுகின்றார்கள். மேலே கருத்தெழுதிய வன்னியனுக்கு போராட்டத்தில் எவரையும் தெரியாது அவரது ஆக்கம் சும்மா குத்துமதிப்பாக எதோ ஆண்டபரம்பரை ஆளநினைப்பதில் என்னதவறு என்று உசுப்பேற்றப் பட்டவரே ஒழிய வேறொன்றுமில்லை.இவர்களுக்கு சபாலிங்கம் யாரென்று கேட்டுப் பாருங்கள்தெரியாது.ஆனால் போராட்டத்தை பற்றி பக்கம் பக்கமாக வீர காவியம் படைக்க நிற்கின்றார்கள்.கடைசில் என்னத்தை அடைந்தர்கள் என்றால் சரித்திரத்தில தலைவற்ற பேர் எப்பவும் இருக்கும் எஙின்றார்கள்.மக்கள் முகாமில் இருப்பது பற்றி அவர்கள் என்றும் கவலைப் பட்டதில்லை.ஏனேனில் இவர்கள் மக்களுக்காக போராடவே இல்லையே.

  1. ரதன்
   சிலவற்றை புறக்கணிப்பதே அவற்றுகுரிய பதில்.
   அவர்கள் எல்ல இடங்களிலும் குப்பை கொட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.
   மிதிக்கக் கூடப் பெறாது — விலகி நடவுங்கள்.
   இவர்களின் நீளமான உளறல்களை யாருமே வசிப்பதில்லை. ஏதோ மனத் திருப்தி. அதை ஏன் கெடுக்கிறீர்கள்?

   1. அதுதான் உண்மை ஜோக்குக்கு வேண்டுமானால் ஏதாவது சீண்டி எழுதலாம், கறுப்பான ஊற்றுக்களை அள்ளி பரிசோதனை செய்துகொண்டிருக்காமல் புறக்கணித்துவிடுவது சாலச்சிறந்தது,நேரமும் மிச்சம்,

   2. திரு.எக்ஸ், மன்னிக்கணும்..குப்பையை நான் கண்ட இடத்திலும் கொட்டுவதில்லை. அதை பொருத்தமான இடத்தில் , பொருத்தமானவர் இடத்தில் தான் கொட்டி இருக்கிறேன்.நீர் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளும், இந்த உலகத்தில் “வேண்டாதது” என்ற ஒன்றுமே இல்லை. கொஞ்சம் விளக்கி சொன்னால், நீர் வாழப்பழம் சாப்பிட வேணும் என்றால், வாழப்பழத்தோலை நீக்கி எறிந்துவிட்டுத் தான் வாழப்பழத்தை சாப்பிடுவீர். ஆனால் நீர் ஒன்றை மறந்து விடாதேயும், வாழப்பழத் தோல் இல்லாமால் , வாழப்பழம் இல்லை. இந்த உலகில் தேவையானது , தேவை அற்றது என்றது எதையுமே பிரித்துப் பாக்க முடியாது. எல்லாமெ தேவையானதுதான். எனவே நீரும் , றுக்குவும் ஆற , அமர இருந்து , எனது குப்பையைக் கிண்டி பயன் பெறவும்.

  2. கொட்டப்படுபவை குப்பைகளல்ல தமிழ் சமுதாயத்தின் மாதிரிகள். இவை மீள் தயாரிப்பின் மூலமே சீர்செய்யப்படவேண்டும். தாழ்வு மனப்பாண்மையும், குற்ற உணர்வுமே மற்றவனை துரோகியாக முத்திரை குத்த வெகு முனைப்பில் நிற்கிறது.

   1. //தாழ்வு மனப்பாண்மையும், குற்ற உணர்வுமே மற்றவனை துரோகியாக முத்திரை குத்த வெகு முனைப்பில் நிற்கிறது.// மாமணி கூறுயதுபோல தேசியத்தலைவரின் ஆளுமையும் வீரமும் விவேகமும் ,எதிரிகளுக்கும் துரோகக்கூட்டங்களுக்கும் தாழ்வுமனப்பாண்மையை ஏற்படுத்தி பிதற்ற வைத்திருப்பது கண்கூடாகத்தெரிகிறது, மாமணி நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்,

    1. இராணுவம் அகல கால் வைக்கும்போது தலைவர் உள்ளுக்கு விட்டு அடிச்சாரே அடி அதை இந்த நூற்றாண்டின் சிறந்த இராணுவ வியூகமாக கருதலாம்.
     இந்த விடயத்தை நன்றாக ஆராய்ந்து என்னை பராட்டியமைக்கு நன்றி மணியன்.

   2. நீங்கள் யாருக்கு இதைச்சொல்கின்றீர்கள். செத்துப்போனவருக்கா?

  3. தோழா ரதன்… தமிழ் மக்களுக்கு செய்வதைச் செய்து இருந்தால், சபாலிங்கம் என்ன, அவெர் அண்ணா மகாலிங்கம், அவெர் அப்பா முத்துலிங்கம் எண்டு எல்லாச் சிவலிங்கங்களையும் நீர் சொல்லாமலே நானும் தமிழ்மக்களும் என்றோ அறிந்து இருப்போம். சபாலிங்கம் என்ன தந்தை செல்வாவா இல்லை,நமது தேசியத் தலைவருக்குத் தான் ஒப்பானவரோ. அப்படி என்றால் எங்கள் இடத்து வன்னியசிங்கத்தைபற்றித் தெரியுமோ, அல்லது சுந்தரம்பிள்ளையைத் தெரியுமோ. ” சரித்திரப்பக்கத்தில் ” எப்பவும் தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரன் பெயரும் , “தரித்திரப்பக்கத்தில்” உமதும், உங்களது கூட்டத்தினரது பெயரும் , ஆமாம் எப்பவும்நிலைத்தே நிக்கும்.

   1. புராணக்கதைகளிற்கொப்பான சோடனைக்கதைகளிலும், பக்தி இலக்கியங்களைபோன்ற தனிமனித ஆராதனைகளிலும் வளர்ந்த மனம் முள்ளிவாய்க்காலிற்குப்பின் ஒருவகை பேதலிப்புக்குள்ளாகி சுயபரிசோதனைக்கு பதில் உலகத்தை தூற்றுகின்றது. சுனாமியை ச்ர்வதேச சதியென்று துக்கிக்கவும், பருவக்காற்றை முக்காலமும் உணர்ந்த சூரியத்தேவனின் இயற்கைபாலான நுண்ணுணர்வின் வெற்றியென்று சிலாகிக்கவும், ஊழிக்காற்றை துரோகிகளின் சதியென்று சிற்ற்ம் கொள்ளவும் செய்கிறது. இவர்களால் விரும்பினாலும் உண்மைபேசவோ, சுயப்ரிசோசதனைக்கு தங்களை உட்படுத்தவோ இயலாது. முடிந்ததே இவ்வளவுதான்.

    1. விக்கி சரியான கருத்து ஆனால் எவ்வளவு பேர் புரிந்திருப்பர். சற்று இலகு மொழியில் எழுதினால் பலர் புரிந்து விட்டு பின் உங்களை திட்டுவர்.

   2. வன்னியன் உமக்கு ஏரம்பு , வீராசாமி இருவரையும் தெரியுமா?

    1. ஐயா மாமணி அவரைச் சும்மா விடுங்கோ. “மனம் முள்ளிவாய்க்காலிற்குப்பின் ஒருவகை பேதலிப்புக்குள்ளாகி ” என்று விக்கி எழுதினது இவரைப் பற்றித் தானே.
     விக்கி எழுதியதை முதலிலேயே பார்த்திருந்தால் நான் பதிலெழுதி மினக்கெட்டிருக்க மாட்டன்

 36. முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.http://thesamnet.co.uk/?p=21934

  தேசம்: வவுனியாவில் உள்ள மற்றைய இயக்கங்கள் பற்றி என்ன சொல்ல முடியும். வவுனியாவில் சில பிரச்சினைகள் கடத்தல்கள் நடப்பதாக அறிகிறோம். சிலர் தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்றும் சிலர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

  லிங்கநாதன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் 1977ம் ஆண்டிலிருந்து காந்தீயமாக உருவெடுத்து மக்களுக்கு உதவி செய்தும் காட்டுக்குள்ளே இருந்த இயக்கமாக, ஜனநாயக சக்தியாக இருந்தவர்கள் நாங்கள் – புளொட். எங்களுக்கு கடந்த தேர்தலில் வந்த பின்னடைவு எங்கட வேலைகளை தடைப் பண்ணியுள்ளது. ஏனைய கட்சிகளை பொறுத்த வரையில் பெரிதாக ஒண்டுமில்லை. ஆனால் இங்கே நடக்கிற கொலைகள், கொள்ளைகள் கடத்தல்களில் ஆரம்பத்தில் நடந்தவைகளுக்கு புலிகளுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. காட்டுக்குள் இருந்து வந்த புலிகளுக்கு ஒரு உதவியும் கிடைக்காமல் பல களவுகளில் ஈடுபட்டவர்கள் இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

  தேசம்: இலங்கை அரசின் உளவுப் படையினராக முன்னாள் இயக்க உறுப்பினர்களில் பலர் (முன்னாள் புலிகள் , முன்னாள் ரெலோ, முன்னாள் புளொட் இப்படி எல்லா இயக்கத்தவர்களும்) இருப்பதாக ஜரோப்பாவில் பரவலாக பேசப்படுகிறதே. இது எந்தளவு உண்மை. இவர்களில் பலர் தமக்கு நினைத்த மாதிரி பல வேலைகளை செய்துவிட்டு போய்விடுகிறார்கள் என்றும் பேசப்படுகிறதே?

  லிங்கநாதன்:இங்கும் நீங்கள் சொல்வது போன்ற பல கதைகளை அறிகிறோம். எப்படி உண்மையை அறிவது. நான் புளொட் பற்றி சொல்லுவது என்றால், 2009 ஆகஸ்ட் 10ம் திகதியிலிருந்து இன்று வரையில் இயக்க ரீதியாக கொலையோ, யாரிடம் காசு வாங்கியதாகவோ அல்லது மக்கள் விரோதமான எந்த நடவடிக்கைகளுமே நடக்கவில்லை, திருணாவுக்குளத்தில் ஒரு பெண்பிள்ளை சம்பந்தமான சம்பவம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே இயக்கத்திலிருந்து விலத்தப்பட்டவர். இதில் தவறு என்ன என்றால் இப்படிபட்டவர்களை நாம் இயக்கத்திலிருந்து விலக்கியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவித்திருந்தால் இப்படியாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது வந்திருக்காது. அதைவிட வவுனியாவில் பிரதேசங்களில் உள்ள பொது மக்களிடம் எம்மைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கோ. அப்படி ஏதும் தவறுகள் இருந்தால் என்னிடமும் பேசுங்கோ நாங்கள் முடிந்தளவு எமது தரப்பு விளக்கத்தை தருவோம்.

  இவரின் பேட்டியை பார்த்தீர்களா?
  இவரிடம் ஓர் கேள்வி.
  தோழரே, தாங்கள் சொல்வது சரிதான். தங்கள் கூற்றுப்படி, உமா மகேஸ்வரனை தெரியாதவர்கள் (காணாதவர்கள், பேசாதவர்கள்), முக்கியமாக உமா மகேஸ்வரனின் கொலைக்கு பின் பிறந்தவர்கள் உமா மகேஸ்வரன் இறந்ததற்காக கொண்டாடப்படும் வீர மக்கள் தினம் கொண்டாடப்படக்கூடாது. நான் சொல்வது சரிதானே. இதை முதலில் உங்கள் அங்கத்தினர் என்று சொல்பவர்கட்கு சொல்லுங்கள். தங்கள் இயக்கம் ஏன் வெளிநாடுகளில் உமா மகேஸ்வரனின் உட்கொலை, ஜனநாயக மறுப்பு கலாசாரம் தெரியாமல் வீரமக்கள் தினம் கொண்டாடுகிறார்கள்?
  காந்திய வழியில் வந்தவர்கள் என்று சொல்கிறீர்களே, காந்தியத்தில் இருந்த எத்தனை பேர் தற்போது தங்கள் இயக்கத்துடன் சேர்ந்து இயங்குகிறார்கள்? காந்தியம் சந்ததியார், எஸ். எ. டேவிட் எங்கே?

  இலங்கை இந்திய நாடுகளில் சுதந்திர தினத்திற்கு பின் பிறந்தவர்களும் அப்படித்தானே? தாங்கள் அடுத்த முறை நகரசபை பிதாவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதை ஓர் சட்டமாக்க முயற்சியுங்கள்.

  தங்களின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நான், தாங்கள் எதையோ சொல்ல வெளிகிட்டு “ஏதோ மாற்றான் செய்தால் எல்லாம் பிழை என்ற” நோக்கில் சொல்வது தங்களின் அரசியல் அனுபவத்தை கிழே தள்ளுகிறது.

  “2009 ஆகஸ்ட் 10ம் திகதியிலிருந்து இன்று வரையில் இயக்க ரீதியாக கொலையோ, யாரிடம் காசு வாங்கியதாகவோ அல்லது மக்கள் விரோதமான எந்த நடவடிக்கைகளுமே நடக்கவில்லை” என்று சொல்கிறீர்கள்.
  அப்போ 2009 ஆகஸ்ட் 10ம் திகதி வரை இயக்க ரீதியாக கொலை, எல்லோரிடம் காசு வாங்கியது, மக்கள் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்று சொல்கிறீர்கள், சரிதானே?
  நகரசபையிலோ, பாராளுமன்றத்திலோ மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படாத காலத்திலேயே இப்படியென்றால்?

  காந்திய வழியில் வந்த தங்களிற்கு 2009 ஆகஸ்ட் 10ம் திகதி வரை இயக்க ரீதியாக கொலை, எல்லோரிடம் காசு வாங்க, மக்கள் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட எந்த மக்கள் ஆணை தந்தார்கள் என்பதையும், 2009 ஆகஸ்ட் 10ம் திகதி பின் ஏன் இவற்றை விட்டு விட்டீர்கள் என்பதையும் சற்று விளக்கமாக சொல்வீர்களா?
  – தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் ஓர் தோழன் மணித்துரை

  அத்துடன் ஐயரின் புளொட் உருவாக்கத்திற்கும் இவரின் பேட்டிக்கும் முரண்பாடுகள் இருந்தாலும் ஆரம்ப கொலை கலாசாரத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

  1. தேர்தல்களில் புளட்டுக்கு விழுந்ததாக கூறப்படும் வாக்குகளில் பல லிங்கநாதன் என்ற தனிப்பட்டநபருக்காக விழுந்ததாகவே கூறுவர். 2009 ஆகஸ்ட் 10 க்கு முன் கொலை, கொள்ளை, வழிப்பறிப்பு எல்லாம் செய்ததாக தானே ஒதுக்கொள்வதன் மூலம் தானும் அதற்கு உடந்தை என்பதை மறந்து வாயை கொடுத்து…………………………………

 37. தேசம் நெட்டில் வந்த புளொட் தோழரின் 2009 ஆகஸ்ட் 10 க்கு முன் கொலை, கொள்ளை, வழிப்பறிப்பு எல்லாம் தாமே செய்ததாக ஒதுக்கொள்ளவதை இன்னும் தொடர்கிறது என வலுச்சேர்க்க அடுத்த அரச சார்பு வேப்சயிடில் அவர்களே போட்டிருக்கிறார்கள். சுந்தரம் பிரிந்தபோது கையில் எடுத்த வன்முறை, கொள்ளை, இன்னும் சுந்தரம் பாதையிலேயே தொடர்கிறது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று புலியில இருந்து பிரிஞ்சவையும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்று நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில டக்கிலச வேற கிண்டல். தாங்களும் செய்ய மாட்டினம் மற்றவையையும் செய்யவிடமாட்டினம். இதில தாங்கள் காந்தியதில இருந்து வந்தவை என்று காதில ஒரு பூ. இங்கை ஐயர் பதிவுல எல்லாம் வரலாறு வருகிறது. உமா மகேஸ்வரன் புளொட் தொடங்கினதோ, ஐயர், சந்ததியார், சுந்தரத்தோட அதில சேர்ந்ததோ.

  August 30th, 2010

  முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத்தர், முன்னைநாள் புளொட் உறுப்பினர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

  மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரிய கட்டைக் காட்டில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து ஏறத்தாழ 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசியொன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சந்தேக நபர்களான பொலிஸ் இன்ஸ்பெக்டரும் பொலிஸ் உத்தியோகத்தரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே முன்னைநாள் புளொட் உறுப்பினர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்படி வர்த்தகரின் வீட்டினுள் புகுந்து அவரை அச்சுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத் தொலைபேசியொன்றையும் அபகரித்துச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  இக் கொள்ளையில் கூட்டுச் சேர்ந்திருந்த மேற்படி அமைப்பின் உறுப்பினர் தலைமறை வாகியிருந்ததாகவும், மேற்படி வர்த்தகரின் கைத்தொலைபேசி எண்ணின் ஊடாக தொழில்நுட்ப முறைமையைப் பயன்படுத்தி முதலில் சந்தேக நபர்களுள் ஒருவரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விசாரணைக்கு உட்படுத்தியதன் மூலம் அபகரிக்கப்பட்ட கைத்தொலைபேசியைக் கைப்பற்ற முடிந்ததோடு, சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

  http://www.neruppu.com/?p=27962

  1. மன்னாரில் பொலிஸாருடன் இணைந்த கொள்ளையில் ஈடுபட்டவர் தமது உறுப்பினர் இல்லை என்கிறது புளொட் அமைப்பு!
   August 30th, 2010
   Save & Share
   மன்னாரில் பொலிஸாருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் தமது அமைப்பின் உறுப்பினர் இல்லை என்கிறது புளொட் அமைப்பு. மன்னார் முருங்கன் சூரிய கட்டைக்காட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து 23 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணம் தங்கை நகைகள் கொள்ளையடித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத்தருடன் புளொட் உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

   இது குறித்து புளொட் அமைப்பு மறுப்பு தெரிவித்து நெருப்புக்கு செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளது.

   கொள்ளை சம்பவத்துடன் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கும் புளொட் அமைப்புக்கும் தொடர்புகள் இல்லையெனவும், இவ் செய்தியானது தமது அமைப்பு மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செய்தியாகும். இதனை ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் வெளியிட்டு வருவதாகவும் புளொட் அமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   Source: http://www.neruppu.com/?p=27989

 38. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!
  பதிவேற்றியது பி.இரயாகரன் Thursday, 02 September 2010 20:53 பி.இரயாகரன் – சமர் 2010
  E-mail Print PDF
  எழுத்து (பெருப்பிக்க – சிறுப்பிக்க)

  பெருப்பிக்கசிறுப்பிக்க

  இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

  கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார். கடந்தகாலத்தில் இதை, பல தளத்தில் தொழிலாக செய்தவர் தான். நாம் அறிய முதன் முதலில் ஒரு நபரை பிடித்து வைத்துக்கொண்டு, அவரை விடுவிக்க கட்டைப் பஞ்சாயத்தை செய்த தகவல் இதுதான். தன்னுடன் அரசியலில் இருப்பவர்களுக்கு இதை நியாயப்படுத்த, மார்க்சியத்தை கையில் எடுத்து அவர் கூறிய விளக்கங்கள் வேறு. அது என்ன என்பதையும் பார்க்க முன், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று முதலில் பார்ப்போம்.

  முன்னாள் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியரும், முதல் ஜரோப்பிய தமிழ் தொலைக் காட்சியான ரீ.ரீ.என் நிறுவனத்தை நடத்தியவரும், இன்று டான் தொலைக்காட்சியை இலங்கையில் நடத்துபவருமான குகநாதனை, இந்தியாவில் பொலிசாரின் துணையுடன் சிலர் அவரை பிடித்து வைத்திருந்தனர். ஒருபுறத்தில் இதை கைது என்றும் கூறலாம். கட்டைப் பஞ்சாயத்து சார்ந்த, பொலிஸ் நடத்தும் இரகசிய மாபியாத் தொழில் என்றும் சொல்;லாம். 30 இலட்சம் தந்தால் விடமுடியும் என்று நாவலன் தொடர்பு கொண்ட குகநாதனின் முதல் ஜரோப்பிய தொலைக்காட்சியான ரீ.ரீ.என் யை, வழமை போல் புலிகள் மாபியா வழிகள் மூலம் கைப்பற்றியது முதல் பின்னர் எல்லாளன் படைப்பிரிவால் துரோகி என்று துண்டுபிரசுரமும் வெளியிட்டு அவரைத் துரோகியாக்கினர். இது போன்று பல கதைகள் உண்டு. புலிகள் வழமை போல் தாம் அல்லாதவரை துரோகியாக காட்டும் வரை, இவரும் பலரைப் போல் புலிக்கு ஆதரவாகத்தான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையை நடத்தி வந்தார். புலிகள் அவரைத் துரோகியாக்கிவுடன், அவரை தனிமைப்படுத்தி இந்த துறையில் இருந்தும் திட்டமிட்டு ஒதுக்கினர். இதன் பின் இன்று இலங்கையில் டான் தொலைக்காட்சியை அவர் நடத்துகின்றார். இப்படி இதற்கு நீண்ட அரசியல், உள்ளீடாக உள்ளது.

  இந்த நிலையில் தனிப்பட்ட இருவருக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடையத்தில் தான், குகநாதனை இந்திய பொலிஸ் பிடித்து வைத்துக் கொண்டனர். இப்படி இந்திய பொலிசாரின் துணையுடன், ஒரு மாதத்துக்கு முன் இந்த பணப் பேரம் நடந்தது. கைது என்பதன் பின்னணியில் பணப்பேரமாக இருந்ததால், இது கைதல்ல. இது கட்டைப் பஞ்சாயத்தாக பரிணாமத்தைப் பெற்று, மற்றொரு அரசியலாகின்றது. இதன் பின்னணியில் தமிழக புலியாதரவு பிழைப்புவாத தமிழ்தேசியக் கும்பல் இருந்துள்ளது. இவருடன் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஈடுபட்ட நபரின் தம்பி, சபா நாவலனின் இனியொரு இணையத்தில் “முற்போக்காக” (பெயர் தவிர்க்கப்படுகின்றது) தமிழ் தேசியம் பற்றி தொடர்ச்சியாக எழுதுபவர். இப்படி இதன் பின்னணியில் புலிசார்பு தமிழ்தேசியம் சார்ந்த சில வழக்கறிஞர்களும் தலையிட்டு, பணப்பேரத்தை நடத்தினர்.

  இப்படி திடீரென பொலிசார் மூலம் பிடித்துவைத்துக் கொண்ட பின்னணியில் வழக்கறிஞர்கள், பொலிஸ் என்று ஒரு கூட்டு களவாணிக் கும்பல், திரைமறைவான பணப் பேரங்கள் நடத்தியிருக்கின்றது. இந்தக் கைது நடந்த அடுத்த ஒரு சில மணி நேரத்தில், அவருடன் சபா நாவலன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 30 இலட்சம் தந்தால் உடன் விடுவிக்க முடியும் என்ற பேரத்தை நடத்துகின்றார். பாரிசில் உள்ள ஒருவரின் பெயரைக் (பெயர் தவிர்க்கப்படுகின்றது) குறிப்பிட்டு, அவர் பொறுப்பு நின்றால் உடன் அவரை விடுவிக்க முடியும் என்று பேரத்தை நடத்துகின்றார். இப்படி இந்த விவகாரத்தில் சபா நாவலன் மாமா வேலை பார்க்கின்றார். பல போட்டி மாமாக்கள் இந்த தொழிலில் இருப்பதால், இதன் பின் என்ன நடந்தது என்பதும், இது எப்படி முடிவுற்றது என்பதும் வௌ;வேறு கதைகள்.

  இங்கு பொலிஸ், தமிழினவாதிகள் கூட்டாக பணப் பேரத்தை நடத்தினர். அதன் மாமாக்களில் ஒருவராக சபா நாவலனும் செயல்பட்டார். இந்த மாமா வேலைக்கு சிலர் தொழில் என்றும், சிலர் உதவி என்றும் கூட, ஆளுக்காள் விளக்கம் கொடுக்கலாம்.

  இந்த விளக்கத்தைத் தாண்டியும் சபா நாவலன் இதற்கு ஒரு விளக்கத்தை, தன்னுடன் அரசியல் செய்வோருக்கு மத்தியில் கொடுத்துள்ளார். அதைத்தான் குறிப்பாக ஆராயத் தூண்டுகின்றது.

  குகநாதன் குடும்பம் தான் தன்னை இதில் தலையிடக் கோரியதாக கூறியுள்ளார். இது ஒரு பொய். இவரை பொலிசின் துணையுடன் பிடித்து வைத்திருந்தவர்கள், இவரின் அரசியல் நண்பர்கள்.

  குகநாதன் தான் இவரைக் கோரினார் என்று கூறிய சபா நாவலன், இதில் ஏன் தன்னை தலையிடக் கோரினர் என்றால், கடத்தியது மார்க்சிய இயக்கம் என்பதால்தான் என்றார். இப்படி இதை இனம் தெரியாத கடத்தல் என்று புதுக்கதையைப் புனைந்துள்ளார். இப்படி அவர் கூறிய தகவல்கள், யார் என்று எம்மை ஆச்சரியப்பட வைத்;தது.

  குகநாதனை தமிழகத்தில் உள்ள மார்க்சிய இயக்கத்தில் ஒன்றுதான் கடத்தியதாகவும், தனக்கு இந்திய மற்றும் சர்வதேசிய மார்க்சிய இயக்கத்துடன் தொடர்புகள் இருப்பதால், தன்னை அடையாளம் கண்டு குகநாதன் தன்னை இதில் தலையிட்டு விடுவிக்கக் கோரியதாக கதை கூறியுள்ளார். அவர்களுடன் கதைத்து விடுவிக்கவே, தான் தலையிட்டதாக கூறியுள்ளார்.

  இப்படி ஒரு மாதத்துக்கு முன் நடந்த இந்த விவகாரத்தின் பின்னனணயில்

  1. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், அட யார் அந்த மார்க்சிய இயக்கம், அதுவும் தமிழகத்தில் என்று தகவல்களை நாம் திரட்ட வேண்டியிருந்தது.

  2. ம.க.இ.க. வுடன் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை, சபாநாவலன் உள்ளடங்கிய குழு அறிவித்தும் இருந்தது. இந்த நேரம் இதை நடுச்சந்திக்கு நாம் கொண்டு வந்தால், அதைக் குழப்பவே இந்நடவடிக்கை என்று திரிப்பார்கள் என்பதால், இதைப்பற்றி எழுதுவதை நாம் பிற்போட்டோம். அந்த ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்பாக, நாம் அபிப்பிராயம் கூட சொன்னது கிடையாது. ஆனால் நாம் ம.க.இ.க. உடன் தொடர்பு கொண்டு, இதை அவர்கள் ஊடாக நிறுத்த முயன்றதாக, அவதூறு பொய்ப் பிரச்சாரம் வேறு இன்று செய்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில், இலண்டன் போராட்டம் வீம்புக்கு நடத்திய விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம். அந்தக் கோசங்கள் எவையும் சமூகத்தின் முன் கொண்டு சென்று, கிளர்ச்சி பிரச்சாரம் செய்து நடத்திய போராட்டமல்ல. வெறும் விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம்.

  3. பணம் கோரியது யார்? கடத்தியது யார் என்ற விடை எமக்கு தெரிய வேண்டியிருந்தது.

  4. குகநாதனுடன் இது பற்றி உரையாடும் சூழலும் கிடைத்தது.

  இப்படி இதன் பின்னணி தேடிய போதுதான், புலிப்பினாமி மாமாக்கள் தான் பொலிசின் துணையுடன் பிடித்து பணப்பேரத்தை நடத்தியது எமக்கு தெரியவந்தது.

  இதில் ஈடுபட்ட சபா நாவலன் தன் மாமா தனம் மூலம் பொலிஸ் பிடித்து வைத்திருந்தவரிடம் பணத்தைக் கறக்க முனைந்ததை மூடிமறைக்க, தமிழகத்து மார்க்சிய இயக்கத்தை இழிவுபடுத்தி தன்னை நியாயப்படுத்துகின்றார். ம.க.இ.க. வின் தொடர்பு மூலம் நடத்துகின்ற அரசியல் ஒருபுறம், இதன் பின்னணியில் மார்க்சிய இயக்கத்தை சம்பந்தப்படுத்தி காட்டிய போது நாம் அதிர்ந்துதான் போனோம். “இனியொரு” மற்றும் “புதிய திசைகள்” முதலான அரசியல் பொதுத்தளத்தில், தன் “மார்க்சிய” அரசியலை தக்கவைக்க, இதற்கு இப்படி ஒரு முடிச்சு மாற்றித்தனமான மாமா கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்.

  இதுதான் நாம் அறிந்ததும், இதில் தெரிந்து கொண்டதுமாகும். இதை அவர் மறுக்கலாம்! அவருடன் அரசியல் செய்பவர்கள் கூட மறுக்கலாம்! இதை நீங்கள் தனிநபர் அவதூறு என்று கூறலாம்! இதைப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் கூறலாம்! சரி எதுவாக இருந்தாலும், இது தவறான வாதம் என்றால், சரி என்ன நடந்தது என்று நீங்களாவது கூறுங்கள். நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம்.

  பி.இரயாகரன்
  02.09.2010

  1. நிச்சயமாக இதற்கு பதில்கூறக்கூடியளவுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால் என்.எல்.வ்.ரி யின் பெரும்தொகை ப்ணத்தை இரயாகரன் கையாடியதாகவே எனக்கு தெரிந்த என்.எல்.வ்.ரி யினது பல முக்கியஸ்தர்கள்(பெயர் வேண்டாமே) என்னிடமே கூறியிருக்கின்றார்கள். இதற்கு இருபதுவ்ருடங்களுக்கு மேலாக பொய்யும் புரளியுமாக பித்தலாட்டம் செய்யும் இரயாகரன் இப்போதாவது உண்மைபேசலாமே. உமாமகேஸ்வரனின் உறவினரான இரயாகரன் உமா கும்பலைப்போலவே சாதிய தன்மைகொண்ட இழிகுணத்தின் சொந்தக்காரர்.

  2. வணக்கம் மாமணி,
   ஐயர் அவர்களின் “ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகளிற்கும்”, குகநாதன் – இராயகரனிற்கும் என்ன சம்பந்தம் என்று இந்த பின்னூடலை இதில் இணைத்திருக்கிறீர்கள் என்று அறியமுடியுமா?

   1. இந்த இணைய தளத்திற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தமுண்டு அதனடிப்படையில் இராயகரனின் காழ்ப்புணர்வை எவ்வளவு தூரம் இன்னொரு தளநிர்வாகிகளில் காட்டுகிறார் என்பதை அதிகம்பேர் வாசிக்கும் ஐயரின் பதிவினூடே மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும். இனியொரு தளநிர்வாகிகள் எவ்வளவு தூரம் தங்களை சுயவிமரிசனம் செய்ய தயாராகவிருக்கிறார்கள் என்பதை பரிசோதனை பண்ணவுமே (உண்மையில் பதிவிலிருந்து அகற்றி விடுவார்கள் என்றே நம்பினேன்)

   2. மாமணி
    அதற்கான பதிலை இனியொருவில் வேறொரு இடத்திலல்லவா கேளாமலே வேறொருவர் எழுதியுள்ளார்.

 39. ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களினால்தான் தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர்:

  – அமரர் தர்மலிங்கத்தின் நினைவு தினத்தில் சித்தார்த்தன் உரை

  சிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்யவில்லை. எமது அமைப்பும் உட்பட தமிழ் மக்களுடைய இரட்சகர் என்று விளங்கிய தமிழினத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்போம் என்று ஆயுதம் ஏந்திய குழுக்களினால்தான் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வந்தார்கள். கொலை காரர்கள், கொலைக்கான சூத்திரகாரர் யார் யார் என்பது பற்றி மக்கள் நன்கு அறிவார்கள்.

  இவ்வாறு தமிbழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அமரர் தர்மலிங்கத்தின் 25 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார்.

  நேற்று முன்தினம் தாவடியில் அமைந்துள்ள அமரர் வீ. தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் த. சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன், முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் வவுனியா நகர சபைத் தலைவர் லிங்கநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

  அமரர் தர்மலிங்கத்தின் புதல்வர் சித்தார்த்தன் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, கட்சியின் ஆதரவாளர்கள், அபிமானிகள் பலர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

  தர்மலிங்கத்தின் நினைவுக்குழுத் தலைவர் க. கெளரிகாந்தன் தலைமையில் தூபிக்கு முன்னிலையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சித்தார்த்தன் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது,

  1948 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த பேரினவாதிகளால் எமது உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தது. தமிழ் தலைவர்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையின்மையே இந்நிலைக்குக் காரணமாகும். தமிழரசுக் கட்சியாக இருந்த ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்து அதைத் தொடர்ந்து மூன்றாகப் பிரிந்து தற்பொழுது பல்வேறு பிரிவுகளாக இயங்கி வருகின்ற தமிழினத்தின் நன்மை கருதி எதிர்கால சந்ததியினருக்காக அனைத்துக் கட்சிகளும் உரிமைகளைப் பெறுவதற்கு ஒற்றுமைப்பட வேண்டும்.

  இந்த அரசாங்கம் பயங்கரமானது. மிகக் கடினமானது எக்காலத்திலும் ஆயுதம் ஏந்திப் போராட முடியாது. ஆயுதம் ஏந்த முற்பட்டால் தமிழினம் முற்றாக அழிந்து விடும். இலங்கை இரண்டாகப் பிரிவதை இந்தியா ஒரு போதும் விரும்ப மாட்டாது. இது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. தனி நாட்டை எப்போதும் அடைய முடியாது. மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

  (ஐயர் அவர்களின் ” ஈழப் போராட்டத்தில் பதிவுகளுடன் தொடர்புடையதால் இப்பின்னூட்டத்துடன் இணைக்கப்படுகிறது)
  நன்றி!
  – அலெக்ஸ் இரவி.

 40. அலெx.எரவி@க்மைல்.சொம்
  Pஒச்டெட் ஒன் 09/04/2010 அட் 2:21 அம்

  ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களினால்தான் தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர்:

  – அமரர் தர்மலிங்கத்தின் நினைவு தினத்தில் சித்தார்த்தன் உரை

  சிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்யவில்லை. எமது அமைப்பும் உட்பட தமிழ் மக்களுடைய இரட்சகர் என்று விளங்கிய தமிழினத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்போம் என்று ஆயுதம் ஏந்திய குழுக்களினால்தான் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வந்தார்கள். கொலை காரர்கள், கொலைக்கான சூத்திரகாரர் யார் யார் என்பது பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் எனற விபரங்கள் பார்த்தேன் 512 புலிகளால் 198 இலங்கை இராணுவத்தால் 19 வாகன விபத்து 8 புளட் 4 அமைதிபடை 3 வெடிவிபத்து 1 ஈரோஸ்

 41. புளொட்டின் முள்ளிக்குள முகாம் புலிகளால் சிங்கள இராணுவத்தின் உதவியுடன் தகர்க்கப் பட்டபோது சங்கிலி ,வசந்தன் உட்பட முன்னணி போராளிகள்
  பலரும் உயிர் இளந்தனர். இந்த நிலையில் கொழும்பில் இருந்த புளொட் உறுப்பினர் பலரும் விரக்தி நிலைக்கு தள்ளப் படுகின்றனர் . அதை தனக்கு
  சாதகமாகப் பயன்படுத்தி ஆச்சிராஜன் மூலமாக சித்தரும், வெற்றியும் காய்களை நகர்த்தி ஏனைய கொழும்பு மாவட்ட முக்கிய உறுப்பினர்களையும்
  இணைத்துக்கொண்டு நடத்தப் பட்டதே உமாமகேஸ்வரன் கொலை தனது இயக்க உறுப்பினர்களையே படுகொலை செய்த உமாவை நான் நியாயப்
  படுத்தவில்லை.படுகொலை பற்றி பேச சித்தருக்கு உரிமை இல்லை. எல்லோருமே நானா நீயா என்று போட்டி போட்டு படுகொலை செய்தவர்கள்தான்.
  மாணிக்கதாசன் படுகொலையிலும் சித்தரின் பெயர் அடிபடுகுது ஆனால் அதன் உண்மை தன்மை தெரியவில்லை. உமாவை படுகொலை செய்தவர்கள்
  பின்னர் போதைமருந்து கடத்தலில்(இதுவும் படுகொலைதான்) கொழும்பில் கொடிகட்டி பறந்தவர்கள் இப்படியாகத்தான் எங்கள் வரலாறு போகுது.

  1. போதை மருந்து கடத்தல், கள்ளக்கடத்தல்,வங்கிக் கொள்ளை, கப்பம் மூலம் வாழ்க்கைநடத்துபவர்கள் தான் காவியநாயகர்களாக ஈழப் போராட்ட வரலாறை வரைகிறார்கள்,மேடையில் பேசுகிறார்கள்,பேட்டி கொடுக்கிறார்கள்,அறிக்கை விடுகிரறார்கள் காலப்போக்கில் உண்மை வரலாறுவெளி வரலாம் ?? இந்த லட்சணத்தில் “””””” எங்கள் வரலாறாவது””” மண்ணாங்கட்டியாவது

   1. எப்போதும் வரலாறூ என்பது தொடர்ந்து கொண்டுருக்கும்.படித்துக் கொண்டிருக்கும் போது தீடிரெனக் காணாமல் போய் வந்து தத்துவம் பேசிய நண்பர்கள நினைத்துப் பாருங்கள். விடிவதற்கு கனவு கண்ட காலத்தில் ஒரு சுகம் இருந்தது.

 42. ‘உமாவின்’ கொலையின் முக்கிய நபர் (உமாவின் மெய்ப்பாதுகாவலர்) பின்னாளில் சுவீசில் வைத்து குடும்பத்துடன் அழிக்கப்பட்டார். (அவரும், மனைவியும்).

  ஊமாவின் படுகொலை அவ்வியக்கத்தில் இருந்த ஆறு பேரால் உரிமைகோரப்பட்ட ஓர் அரசியற் படுகொலை! (இந்தியாவில்)..

  அதைவிடவும்…

  ”உமாவை படுகொலை செய்தவர்கள்
  பின்னர் போதைமருந்து கடத்தலில்(இதுவும் படுகொலைதான்) கொழும்பில் கொடிகட்டி பறந்தவர்கள் இப்படியாகத்தான் எங்கள் வரலாறு போகுது.”

  இதை ஆதாரமாக ‘அலெக்ஸ்’ எழுதுவது நல்லது!!

  ரூபன்
  04 09 10

 43. உமாவை படுகொலை செய்த முக்கியநபரை சுவிசில் கொலை செய்தவர் விடுமுறை விசாவில் சுவிஸ் வந்த மாணிக்கதாசன் மற்றும் ————– . இவர்கள் உமா விசுவாசியாக காட்டிகொண்டு சுவிசில் வசித்தநபரை போடக் காரணம் தங்கள் “றோ” தொடர்பு வெளியில் தெரிந்து விடுமென்ற பயம்தான். உமா கொலையில் தராக்கிக்கும் தொடர்புண்டு. சுழிபுரம் ஆச்சி ராஜன் “றோவின் நேரடி கண்காணிப்பில் இருந்தபடியால் இவர்களுக்கு பிரச்சனையிருக்கவில்லை.

  1. சுவீசில் படுகொலை செய்யப்பட்டவர்கள் (உமாவின் மெய்ப்பாதுகாவலரும் அவரது மனைவியும்) இவர்களுடன் நீண்டகாலமாக இவர்கள் வீட்டில் தங்கியிருந்த – உளவாளி – ஒருவராலேயே நடத்தப்பட்டதாக அப்பொழுது அறிந்தேன்.

   இது சரியான தகவலா? ‘மாமணி’……..

   ரூபன்
   05 09 10

   1. இல்லை ரூபன், எனக்கு மற்றவர் பற்றி தெரியாது ஆனால் தாசன் இதில் பங்கு கொண்டது பற்றி உமாவின் மிகத்தீவிர விசுவாசி ஒருவர் மூலம் அற்ந்தேன். முதலில் மனைவியை கொன்று விட்டு காத்திருந்து பின் கணவரை கொன்றதாக என்னிடம் சொன்னார்.

 44. உனது தந்தையரும் இன்றையபடுகொலைக்கு காரணமனவர் என்பதனை ஒப்புக்கொள்; தமீழீழ பிரகடனத்தில் அவரும் ஒருவர், உடுவில் தொகுதி உனது பரம்பரைக்கென்ற கனவில் மிதந்தனி ஒரு காலத்தில் , கடைசியில் இலவு காத்த கிளியின் கதையாக போய்விட்டது உன்னையோ உனது குடும்பத்தையோ இனிஒருபொளுதும் தமிழினம் ஏற்றுக்கொளளமாட்டாது.

 45. Puli Padai (LTTE) no longer an asset to Tamils but a Liability!

  • Puli Padai (LTTE – Tigers) should be dismantled completely, because they are no longer an asset to Tamils, but a liability and a new organisation should be formed, learning from the mistake of LTTE, in the event of Sri Lankan Government refusing to grant rights to Tamils.
  • Though Talaivar (Pirabaharan) and his boys made lot of blunders, Tamil people whole heartily supported them, as they were fighting and won several battle, specially Elephant Pass battle and Katunayaka Airport attack.
  • Tigers were having a de facto state and managing it in a Totalitarian Dictatorship manner and Tamil people tolerated this because Tamil people believed one day we will get Eelam and we can run a Democratic Government.
  • History will not forgive Prabaharan – said Anita Pratab – Indian Journalist. He killed innocent Tamil, Singhala & Muslims civilians, leaders of other Tamil groups and its members, prominent Tamil Leaders, inner party massacre and murders, murder of Rajive Gandhi. Thus he changed the course of Tamil freedom struggle and made it a terrorist war and Tamil struggle end in a disaster and refused to compromise despite the advice of Anton Balasingham and EROS Balakumar and did not realise that COMPROMISE IS NOT OPPORTUNISM BUT IT IS ART OF SERVIVAL.
  • Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE)
  • He made several mistakes and led us to the present position. First mistake is killing individuals. First Killing as admitted by him is that of Duraiappa. Duraiappa was a Young Mayor of Jaffna, Lawyer and defeated GG Ponnambalam at Jaffna Electorate. He was very popular among the poor people of Jaffna electorate and helped Jaffna Town people a lot. During 1970 Parliamentary Election Amirthalingam, Sivasithamparam and GG Ponnampalam lost the election. GG Ponnampalam gave up politics and abandoned Tamils and look after his wealth accumulated by him.
  • Amirthalingam and Sivasithamparam wanted to win the next election at any cost. S.J.V Selvanayagam after telling the Tamils that he is the leader who could safeguard Tamils, at the end he said, only God has to save Tamils and he could not do any thing, Tamils wasted their time with him.
  • Yogeshwaran wanted to contest Jaffna seat, but Duraiappa was a stumbling block. The Trio Amir, Siva and Yogeshwaran spread slanders about Duraiappa and branded him as Police informant and instigated Young boys to kill him, Young and immature Prabahana and Amir’s eldest son plot to kill Duraiappa and Pirabaharan carried out the murder.
  • Amirthalingam became Leader of Opposition and told Tamil people that he will get Eelam, other wise his body will come to eelam, covered by Raising Son Flag of TULF. But he ended up getting DDC- District Development Council and cheated Tamils.Jaffna Library was burned by UNP during DDC election
  • Pirabaharn and Umamaheswaran had a gunfight in Chennai and were in Madras jail. They were released on bail pending the Criminal case hearing. Pirabaharan jumped the bail and came to Jaffna and organized the Thinnaveli attack.
  • JR and UNP organized 1983 riots and Promoted Pirabaharan as Tamil leader and Indra Gandhi gave Training and Arms.
  • After the unfortunate death of Indra Gandhi, Rajiv Gandhi came to power and Pirabaharan was about to lose Vadamarachi Operation and Rajiv Gandi Saved him by intervening and send Indian Army and signed the Indo Sri Lanka agreement.
  • After the Indian Army leaving Sri Lanka with the joined action of LTTE and Premadasa, Pirabhan Killed Arirthalingam, Premadasa and Rajiv Gandhi. These are major mistakes on the one-man ruler.
  • LTTE chased out Muslims from Jaffna and Karuna and Karikalam led this Muslim eviction because some Muslim thugs and home guards attacked Tamils in Batticaloa. Karuna and LTTE killed Muslims civilians in Mosque.
  • Puli Padai (LTTE) also forcibly evicted half a million Tamils from Jaffna Peninsula and herded them into Vanni after the defeat of LTTE in Jaffna during 1995.
  • LTTE killed Premadasa and helped Chandrika to come to power and Chandrika is equally bad as Premadasa. Chandrika captured Jaffna and started war against LTTE and ended up in lousing Vanni and Elaphatpass.
  • LTTE forced thirteen EROS MPs to resign at gunpoint after 1989 election and allowed Douglus Devananda to become a minister.
  • Instead of fighting one enemy at a time, Pirabaharan fought ten enemies at a time and he only wanted money and Children of Tamils and never seek or listen their advice
  • During the final battle in January – May 2009, 300,000 thousand Tamils were taken as human shield by Tigers at gun point, under the excuse of tactical withdrawal. Using Tamil civilians as human shield, Tigers fired shell at the Army while hiding among civilians and deliberately invited Army’s retaliation and killed several civilians. Tigers fired shell at fleeing civilians and killed thousands and thousands of Tamil civilians. Kidnapped young girls and boys and forced them to fight, with out giving any Training. Three hundred thousand Tamils should be killed then only we will get Eelam like Kosovo – This is Tiger’s thinking and philosophy.
  • Whether we like it or not Mahinda will be the leader for very many years and he will be the ruler of whole of Sri Lanka and he made history by killing ‘ASURAN’ Pirabaharan and he also wants to make history by solving Tamil problems.
  • LTTE used Tamils as human shield during the 2009 Vanni War and prevented Tamils leaving war zone at gun point (Taliban did not do this in Swat Valley in 2009) and Tigers are solely responsible for the death of several innocent Tamils and several are wounded and disabled. LTTE said that they are the sole representative of Tamil and sole protectors of Tamils and now say that only god can save Tamils. Tamils have wasted 30 years with LTTE for nothing
  • It will be a good tactics for Tamils to work with Mahinda to release 300,000 Tamils and Thousands of Tiger Boys and Girls trapped because of Pirabaharan’s and Puli Padai’s – (LTTE) mistakes.
  • Tamils should join Sri Lankan Army and Police in large numbers, the Diaspora Tamils Boys and Girls should join UK, USA, Australia, Canada, NATO, Indian and European Army. WITH OUT A TAMIL ARMY, TAMILS HAVE NOTHING.
  • Educated and Diaspora Tamils and Tamils living in Sri Lanka should get involved Sri Lankan National Political Parties, sixty years of experience shows regional parties getting involved in Parliamentary Politics are of no use and detrimental to Tamils other wise Karuna, Pillaiyan and Douglus will be our Tamil Leaders. Regional Parties may get involved in Local and Provincial Politics.

 46. உமாவை கொலைசெய்தவர்கள் போதை மருந்துக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் சொல்லும்படி ரூபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
  இதை எழுதுகிறேன். 1989 நான் சென்னை புதுப்பேட்டையில் lodge ஒன்றில் தங்கி இருந்தபோது புளொட்டின் முன்னாள் மன்னார் பொறுப்பாளர் எனது நண்பர் நடேசு
  அவர்களின் சகோதரர் நாகராஜா அவர்களும் என்னுடன் தங்கி இருந்தார். அவரை சந்திக்க ஆச்சிராஜன் அடிக்கடி அங்கு வருவதும் பெரும்பலாலும்
  அந்தப் பகுதில் அவருடன் உமா கொலையின் பின் கொழும்பில் இருந்து பிரிந்து வந்தவர்கள் நடமாடுவதும் வழமை. பின்னர் அவர்கள் புதுப்பேட்டையில்
  தான் இருப்பதாகவும் அறிந்தேன். காலப்போக்கில் அவர்கள் என்னுடனும் அறிமுகமானார்கள். ஆச்சிராஜன் உதவி செய்யும் மனப்பான்மை படைத்தவர்
  ஆனாலும் அதிகம் பேசமாட்டார். இவருடன் புளொட்டில் இருந்து வெளியேறியவர்களை தன்னிடம் இருந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு
  இருந்தார். அதனால் அவர்மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஒருமுறை நகராஜாவை தேடி போலீஸ் வந்தபோது தான் இவர்கள் போதைகடத்தல்
  செய்வதாக அறிந்தேன்.பின்னர் நாகராஜா இவர்களுடன் சேர்ந்து கடத்தல் செய்வதாக அறிந்திருந்தேன்.

 47. அலெக்ஸ் உமது சொந்தப்பெயரை அறியமுடியுமா?

 48. பிரபாகரன் தங்கத்துரையுடன் இணையும் போது அதற்கு டெலோ என்ற பெயரோ வேறு எந்தபபெயரும் இல்லை. அது ஒரு குழுவாகத்தான் இயங்கியது. அந்தக்குழுவினருடன் சிறுவயதில் இருந்தே இணைந்திருந்தவர்தான் பிரபாகரன். பின்னர் இவ்ர் செட்டியுடன் சேர்ந்து அளவெட்டி கூட்டுறவுச்சங்கக்கொள்ளையில் மாறன் கலாவதி இன்பம் போன்றோருடன் சேர்ந்து ஈடுபட்டார். பின்னர் செட்டி விலக்கபட்டார். பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது(தமிழ்ப்புதியபுலிகள்) மாறன் கலாவதிபோன்றோரே இருந்தனர். தமிழ்ப்புலிகள் இயககம் ஆரம்பித்த ஆண்டு 1974 இறுதிப்பகுதியில். அயயர் வந்து இணைந்தது. 1976 இல் கடைசிப்பகுதியில். இவர் உண்மையில் மாறன் கலாவதியிடம்தான் கேட்டிருக்கவேண்டும். முதல் பகுதியை எழுதும்படி

 49. September 13th, 2010
  Save & Share
  -எஸ்.எஸ்.கணேந்திரன்
  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் 23ம் ஆண்டு நினைவுநாள்.

  1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் தற்போதைய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒண்றாக இருந்து அருந்தி மத்தியானச்சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்து கைகுலுக்கி சென்ற புலிகளின் நயவஞ்சகத்தன்மையை அறிந்திராத புளொட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள்.

  இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத்தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளொட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே.

  இந்தத்தருனத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத்தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச்செல்லவேண்டும் என வற்புறுத்திய பவனின் ஆலோசனையும் (தற்போது கனடாவில் இருக்கின்றார்) வாசுதேவாவின் புலிகள் அப்படி செய்யமாட்டார்கள் என்ற மித மிஞ்சிய நம்பிக்கையால் கைவிடப்பட்டது.

  இதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாகவேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்து கொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா, கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்ற சமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

  நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற சிந்தனை எனக்கு நீங்கவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவியபோது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை த்ற்செயலாக சந்தித்தபோது அவரிடமே எனது கேள்வியைக்கேட்க இப்படி எத்தனை கதைகள் வரும் என மட்டுமே சிவராம் பதிலளித்தார்.

  பாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப்புறப்பட்ட வாசுதேவா, கண்னன், சுபாஸ், ஆனந்தன் உள்ளிட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று எரித்தும் முடித்தார்கள் புலிகள்.

  இச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத்தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக சித்தா என்பர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

  ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளொட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக்கேட்டபோதும் எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்கமுடியாற்போனது. அடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால் முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது.

  கொடி களட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால் இங்கிருந்து செல்லுங்கள் என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்.

  மிகவும் கேவலாமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம்?

  1. இலக்கு நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்திவிடுகின்றது. என்ற மாக்கியவல்லியன் வாதத்தை புலிகள் தங்கள் அரசியல் அடிநாதமாக கொண்டிருந்தார்கள். நயவஞ்சயமாக அப்பாபிள்ளை.அமிர்தலிங்கம் உட்பட பலரை படுகொலை செய்திருக்கின்றார்கள். இது அருவருக்கத்தக்க பாசிச குணாம்சம்தான். புலிகளால் ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஒரே காரணத்தினால் புளட் கும்பல் புனிதர்களாக கருதப்பட கூடியவர்களல்ல. எண்பதுகளின் ந்டுப்பகுதியில் புளட் இயக்கம் சிதறியதன் பின்னர் உமாவுடன் மிஞ்சியவர்கள் மாணிக்கதாசன் போன்ற தெருப்பொறுக்கிகளும், வாசுதேவா போன்ற பிழைப்புவாதிகளுமே. ஏற்கனவே உமாகும்பலின் வவுனியா,மன்னார் ஊடான(நியாஸ், நடேசன்) போதைமருந்து கடத்தலும்( சிங்கள இளையோரை போதைக்கு அடிமையாக்குவதனூடாக போராட்டத்தை இலகுபடுத்தலாம்… இது முகுந்தனின் பொன்மொழி) உட்படுகொலைகளும் ஆவணப்படுத்தப்ப்ட்டுள்ளன. வவுனியாவிலும், மன்னாரிலும் தாசனும், நடேசனும் புலிஆதரவாளரையும், புலிகளையும் , புளட்டில் இருந்து விலகியோரையும் துரத்தி படுகொலை செய்துகொண்டிருந்தபோது மட்டுநகரில் புலிகளுடன் சமாதான சகவாழ்வுக்கு முயற்சித்தமை முரண்நகை.

   1. புளட் ஒன்றும் புலிகளை விட சிறந்த இயக்கம் கிடையாது.
    ஏற்கனவே உமாகும்பலின் வவுனியா,மன்னார் ஊடான(நியாஸ், நடேசன்) போதைமருந்து கடத்தலும்( சிங்கள இளையோரை போதைக்கு அடிமையாக்குவதனூடாக போராட்டத்தை இலகுபடுத்தலாம்

    இது ரொம்ம மிகைப்படுத்தப்பட்ட குற்றசாட்டு.

    1. மாமணி! இது மிகைப்படுத்தப்பட்டதல்ல. இதற்கு உண்மைவெளிச்சம் பாய்ச்சக்கூடிய புளட்டின் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர் திரு.யோகன் க்ண்ணமுத்து அவர்கள் அருகிலேயே உள்ளார். இன்று அவரும் “செலக்ரிவ் அம்னீசியா” விற்கு ஆட்பட்டிருக்கவும் கூடும். ஐயரின் அடுத்த பதிவு உமாகும்பலின் கபடத்த்னத்தை பற்றி பேசும் என எண்ணுகின்றேன்.

     1. மரதன் ஓட்டம் ஒடி முடித்த்தும்தான் மெடல் தருவார்கள் ஓடும் போதல்ல ஆக புலொட்டயும் புலியையும் விமர்சிப்பதை விடுங்கள்.இருவேறூ சித்தாங்களீல் ஓடிக்கொண்டிருந்த முகுந்தனும் இல்லை பிரபாகரனும் இல்லை.

 50. 1982 மாவட்டசபை தேர்தல் காலத்தில் கோப்பாயைச் சேர்ந்த பரமேசுவரன் என்பவர் கோப்பாயில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். இவர் தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர். இவரது கொலை பற்றிய விபரங்கள்  தெரிந்தவர்கள் அதைப்பற்றி எழுதவும்.

 51. i believe that i was one of them in the above groups. no one talk about me. no one talk about mendis.
  anyway. i still do not understand why people follwo the old things. they should accept new things that suite to us. Tamils are the superior race in the world. Tamils language is the olderst among hebrew, sankrist,& arabic. In addition, the first language that found sound and writings even before hebrew developed. Sankrist borrowed writings from Tamil

 52. தமிழீழ விடுதலை இராணுவத்தினட முக்கிய உறுப்பினரான ௯ச் சேகரின் கொலையின் பின்னணியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழககத்தின் சதி

 53. புளொட் இந்தச் “சமூகவிரோதிகள்” ஒழிப்பு நடவடிக்கையில் ஆரம்பகாலங்களிலிருந்தே ஈடுபட்டு வந்தது. புளொட் சிறுகுழு வடிவில் இருந்த ஆரம்பகாலங்களிலேயே இத்தகைய “சமூகவிரோதி” ஒழிப்புக்கள் ஒரு சிலரின் முடிவாக இருந்து வந்தது. புளொட்டால் மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் சில சமயங்களில் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட குரோதங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டன.

  சுழிபுரத்தைச் சேர்ந்த சிவனடியார் மகாலிங்கம் என்பவரை புளொட்டின் சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் “சமூகவிரோதி” எனச் சுட்டுக் கொன்றனர். ஆனால், பிற்காலத்தில் அதே சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் இக்கொலை பற்றித் தெரிவிக்கையில் சிவனடியார் மகாலிங்கம் தன்னை விடச் சாதியில் மேலான புளாட் உறுப்பினரின் உறவினரான கணவனை இழந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்தமையாலேயே அவர் “சமூகவிரோதி” எனக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்..

  புளொட்டை பொறுத்தவரை 1983 இறுதிவரை மேற்கொள்ளப்பட்ட “சமூகவிரோதி” ஒழிப்பு நடவடிக்கைகளை புளொட்டால் செய்யப்பட்டவை என உரிமை கோரியிருக்கவில்லை. புளொட் என உரிமைகோருமிடத்து புளொட்டுக்கெதிரான உணர்வலைகள், எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் என புளொட் தலைமையிலிருந்தவர்கள் எண்ணியிருந்தனர். இதனால் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட “சமூகவிரோதி” ஒழிப்பு ” சுந்தரம் படைப்பிரிவு”, “காத்தான் படைப்பிரிவு”, “சங்கிலியன் பஞ்சாயம்” போன்ற வெவ்வேறு பெயர்களில் உரிமை கோரப்பட்டு வந்தது…..

 54. தமிழீழத்திற்காக எல்லோரும் நன்றாகத்தான் கொல்பட்டிருக்கின்றார்கள். எல்லோரையும் கொண்றவர் கடைசியில் தானும் கொல்லபட்டுவிட்டார் என்பது தான் ரொம்ப சிரிப்பான விடயம்.

  1. பாயிண்ட பிடிச்சீட்டீங்க. எல்லோரையும் கொன்னுகிட்டே இருந்தா தான் கொல்லப்படும்போது எவன் காப்பார்ற வருவான். ஒரு ஜெர்மானிய கவிதைதான் நினைவிற்கு வருகிறது. கவிஞர் பேருதான் புடிபட மாட்டேங்குது. உங்களுக்குத் தெரியுமா?

  2.  ஈழ விடுதலைக்காக கொல்லப்பட்டது எல்லாம் தமிழர்கள்தானா! அட இப்போதான் புரியுது. சிங்களன் ஏன் வென்றான் என்று.

 55. ஆளையாள் கொன்று இப்பொழுது நாசமாகப் போய் விட்டோம் இந்த நிலையில் பெரிய சாதனை படைத்த வி யிய்  யானிகள் கள் போல அவர்களின் பெயரும் … நாசமாகிப் போனவர்கள் .. வெறும் கொலைகாரர்கள் 

 56. சரியாய் சொன்னீர்கள் போங்கள் ! காலம் கடந்த ஞானோதயம் இருந்தாலும் , மனம் தாங்க வில்லை.

 57. ஐயா அவர்கள் புலிகளை மழுங்கடித்து அவப்பெயர் சூட்டுவதட்க்காக 
   உருவாக்கத்தை திசை திருப்பி அழுத்துகிறார் .1975 ஆம் ஆண்டுகளிலே 
  உருவானது வரலாறு .வரலாறுகளை  மழுங்கடிக்க வேண்டாம் ..

Comments are closed.