ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸ் தீவிரமாக பங்காற்றியுள்ளதாக ருவாண்டா அரசு குற்றச்சாட்டு!

05.08.2008.
கடந்த 1994 ஆம் ஆண்டில் 8 லட்சம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸ் தீவிரமாக பங்காற்றியுள்ளதாக ருவாண்டா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இனப்படுகொலைக்கான தயாரிப்புகள் குறித்து பிரான்சுக்கு தெரிந்திருந்த போதிலும், அந்நாடு ஹூட்டு கிளர்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உதவியது என்று அந்நாட்டு நீதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. ஹூட்டு பிரிவினர்தான் இனப்படுகொலையை செய்துள்ளனர்.

மேலும் கொலைகளில் பிரெஞ்சுத் துருப்புக்கள் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது தொடர்பாக பிரன்சின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ள அந்த அறிக்கை, இவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது. ருவாண்டா இனப்படுகொலையில் தனக்கு எவ்வித பொறுப்பும் கிடையாது என்று பிரான்ஸ் முன்பு கூறியிருந்தது.
BBC