வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களில் குறைந்தது பத்துவீதமானவர்கள் தேர்தலை நிராகரித்தால் நாடுகடந்த தமிழீழ அரசைச் சார்ந்த ருத்ரகுமாரிற்கு பணம் வழங்குவதாக பசில் ராஜபக்ச ருத்திரகுமாரிற்கு அனுப்பியதாகக் குறிப்பிடும் மினஞ்சல் ஒன்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் நடைபெற்றது போன்று இத் தேர்தலிலும் பணம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அது தேர்தலுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் எனவும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலின் அரசியல் பின்புலமே எமது கவனத்திற்குரியது.
தீவிர தமிழ்த் தேசியவாதிகளாத் தம்மை வெளிக்காட்டிக் கொண்டவர்களில் பலர் தேர்தலைப் பகிஷ்கரிக்கவே கோரிவருகின்றனர்.
தமிழ்ப் பேசும் மக்கள் தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்து அடிப்படையில் சரியானதே. மறுபுறத்தில் , இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் தேர்தல் புறக்கணிக்கபட்டால் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அது வழிசெய்யும் என்பது வெளிப்படையானது.
ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்து மற்றொரு பேரினவாதியான மைத்திரிபால சிரிசேன ஆட்சிக்கு வருவது ஓரளவு உறுதியாகிவிட்டது. இது ஒரு இக்கட்டான நிலைமை. பிரித்தானிய அரசின் வழி நடத்தலின் அடிப்படையிலேயே ஆட்சி மாற்றத்திற்கான காய்கள் நகர்த்தப்படுகின்றன. இவ்வாறான சூழல் ஒன்று ஏற்படும் என இனியொரு பல தடவைகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சார்ந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து மக்களை அணிதிடட்டிப் போராடுவதற்கான வெளி ஒன்றை ஏற்படுத்துமாறு இனியொரு கோரிக்களை முன்வைத்த போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களான புலம்பெயர் அமைப்புக்கள் இன்று வழி தெரியாமல் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தலைப் பகிஷ்கரித்தால் ராஜபக்சவிற்கு ஆதரவாகவும், வாக்களிக்கச் சொன்னால் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவாகவும் தேர்தல் முடிவுகள் மாறிச் செல்லும். இரண்டுக்கும் இடையே வேறு வழிகள் இல்லாத நிலையை உருவாக்கியதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பங்கு பிரதானமானது.
வேலைத்திட்டம் எதையும் முன்வைக்காமல் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் விரம்செறிந்த போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த இந்த அமைப்புக்களின் தலைமைகள், தம்மை புலி அடையாளத்தின் பின்ன்னாலும் பிரபாகரனின் பின்னாலும் மறைத்துக்கொண்டனர்.
மேற்கு ஏகாதிபத்தியங்களைப் பிடித்து ராஜபக்சவைத் தூக்கில் போடுவதாக புலம்பெயர்ந்த மக்களையும், புலத்திலிருந்தவர்களையும் ஏமாற்றி ஏகாதிபத்தியங்கள் சிரிசேனவிற்கும் ராஜபக்சவிற்கு இடையில் தெரிவை முன்வைக்கும் நிலைக்கு மக்களை இழுத்துவந்து அழிவின் விழிம்பில் நிறுத்தியவர்கள் எந்தக் கூச்சமுமின்றி இன்னும் அரசியல் பேசுகிறார்கள்.
பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவுப் படைகள் போன்றே நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டன. புலிகளை வன்னியில் குந்தியிருக்குமாறும் அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து காப்பாற்றும் எனவும் நம்பிக்கை கொடுத்து புலிகள் அமைப்பை அழித்து ஆயிரக்கணக்கான போராளிகளைச் வதை முகாம்களுக்குள் அடைப்பதற்குத் துணை சென்ற அதே நபர்களே புலம்பெயர் நாடுகளில் இன்று தேசியப் பிரமுகர்கள்.
மைத்திரிபால சிரிசேன ஆட்சிக்கு வந்தால் தாம் அரசியல் பிழைப்பு நடத்த போதிய எதிரிகள் இல்லாத நிலை உருவாகும் என்பது மட்டுமே இவர்களின் துயர்.
ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபாலவையோ, மைத்திரிபாலவிற்கு எதிராக ராஜபக்சவையோ முன்னிறுத்த முடியாது என்பது உண்மை. இது இரண்டிற்கு இடையில் இதுவரை புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை நிராகரித்துவந்த அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும். அந்த அரசியல் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்திற்கான புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும்.
ருத்திரகுமார் பசிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. மைத்திரி குழுவின் வெறும் அவதூறாகக்கூட இது இருக்கலாம். தேர்தலையும், புலி அடையாளத்தையும் மட்டுமே முன்வைத்து அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளின் பஞ் டயலாக்குகள் இவ்வாறான அனுமானங்கள் தோன்றத் துணை செல்கின்றன.
ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா இல்லையா என்பதல்லப் பிரச்சனை. இவ்வாறான பேரங்களுக்கு வெற்றுச் சுலோகங்களாலும் அடையாளங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் வழிசெய்யும் என்பதே உண்மை.
பிரபாகரனையும் புலி அடையாளங்களையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் அரசியலை நிறுத்தி மக்கள் சார்ந்த வேலைத்திட்டத்தையும் கோட்பாட்டையும் முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய வாக்குப் பொறுக்கும் அரசியல் சூழல் உணர்த்துகிறது.
இதில் உண்மை இருக்கலாம் காரணம் இந்த பசில் அமைச்சர் கடந்த வாரம் நாட்டில் இல்லை .அதனால் இந்த பேரம் நடந்திருக்க வாய்ப்பு இருக்கு இந்த mail என்பது ஸ்கான்பண்ணி பண்ணி ஜில்மார்ட் வேலை நடந்திருக்கலாம் .ஆனால் எவர் கேட்டாலும் சொன்னாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தருக்கு வாக்களிக்க மாட்டார்கள் . அதனால் இந்த பண பேரம் விடயம் நடந்திருந்தால் அரசுக்கு நஷ்டம்தான்.நீதி நேர்மையான தேர்தல் என்றால் மைத்திரி பெரும் வெற்றி அடைவார். மஹிந்தாதரின் கம்பனிய தெய்வம் நின்று கொல்லும். பாருங்கள். MMNilamdeen ஊடகம்.
“ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபாலவையோ, மைத்திரிபாலவிற்கு எதிராக ராஜபக்சவையோ முன்னிறுத்த முடியாது என்பது உண்மை. இது இரண்டிற்கு இடையில் இதுவரை புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை நிராகரித்துவந்த அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும்.”
அருமையான கருத்து.
“அந்த அரசியல் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்திற்கான புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும்.”
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையா? இலங்கையிலுள்ள சகல சிறுபான்மை இனங்களதும் தனித்தனி சுயநிர்ணய உரிமைகளிற்கான என்று கூறுவது வார்த்தை மயக்கங்களில் இருந்து விடுவிக்கும்.
சந்தேகமேயில்லை. 2009 போர் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு சென்று
பசிலையும் மற்றும் தலைவர்களையும் சந்தித்த புலம்பெயர் தமிழ்
அமைப்புகளை சேர்ந்தவ்ர்கள் யாரென்று பாருங்கள் . அவ்ர்களில் எத்தனி
பேர் உருத்திரகுமாரின் தோழர்கள் என தெரியும். அவர்கள் மீது
ஒரு கண்டனக் குரல் எழுப்பினாரா இந்த நாடுகடந்து தமிழர்களை
நடுக்கடலில் விடும் உருத்திரகுமார்..
நாளை மறுதினம் தேர்தல். ஏற்கனவே தபால் மூல வாக்குகள் அளிக்கப்பட்டு விட்டன. நாளை மறுதினம் பொது வாக்களிப்பு.
மக்கள் எல்லாச் சாத்தியப்பாடுகளையும் நம்புகிறார்கள். நாளாந்தம் வதந்திகள் பெருக்கிக் கொண்டு செல்கின்றன. சிறிய விடயங்களும் பெரிதாகவே தோற்றமளிக்கிறது. சந்தியில் இராணுவம் வந்து நிற்கிறது என்பது தற்போதைய பரபரப்பான செய்தியாக வந்து சேர்ந்தது.
இனவாதம் இன்னமும் தாக்கமுயைடதாக இருக்கும் என்ற கருத்து இன்னமும் வலுவடன் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் எதிர்தரப்பு என்பது பரந்ததாக மாறிவிட்டிருக்கிறது. வட>கிழக்குத் தமிழர்கள்>முஸ்லிம்கள்> தெற்கில் மனித உரிமை மறுக்கப்பட்டவர்கள்> சமூக உரிமை மறுக்கப்பட்டவர்கள்>பொருளாதார கஸ்டங்களை சந்தித்தவர்கள். ஆளும் கட்சியிலேயே உரிமை அற்றிருந்தவர்கள் என எதிரப்பாளர் கூட்டம் ஏகத்திற்கும் நிறைந்திருக்கிறது. சம்பந்தரோ> ஹக்கீமோ முடிவெடுத்துக் கூறுவததைக் கேட்பதற்காக யாரும் எதிர்பார்த்திருந்ததாக தெரியவில்லை. மலையகத்திலும் இந்த நிலை இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
தென்னிலங்கையில் மகிந்தரை பெரும் தலைவராகக் கொண்டாடியவர்களுக்குத்தான் பெரும் மனக்கவலையாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. இறுதியாக யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.
சுமுகமான தேர்தல் பற்றி அதிகாரங்களில் உள்ளவர்கள் என்னதான் கூறினாலும் யாரும் நம்பத்தயாரில்லை.
மக்கள் முடிவெடுத்து வாக்களிக்கக் காதிருக்கிறார்கள். ஆனால் பெரும் தலைவர்கள்தான குழம்பி-குழப்பி-தங்கள் முகமூடிகளை கழற்றி எறிந்து விட்டு நிற்கிறார்கள்….
அரசியல் கூட்டங்களுக்குப் போனால்… ஏதோ நாம்தான் இத்தனை காலமும் அயோக்கியர்களாவும் பொறுக்கிகளாவும் இருந்தது போன்ற பிரமை ஏற்பட்டுவிடுகிறது.
இவ்வளவுதான் கூறமுடியும்…
இலங்கை மக்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது….என்கிறார்கள்.