23.01.2009.
இன்று காலை மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இன்று தாக்கப்பட்டதாக அப்பத்திரிகையின் அலுவலக உத்தியோகத்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை அவரும் அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, இனந்தெரியாத சிலர் இவர்களது காரைத் தாக்கியுள்ளனர். காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் உபாலி தென்னக்கோன் உயிர் ஆபத்து ஏதுமின்றி தப்பித்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சரண்யன், சந்திரன் ராஜா,
வாழ்க வழமுடன்!!
மகிந்த அரசின் ஊது குழல் தேனீ இணைத்தளத்தின் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் அளவே இல்லை. ஊடகவியளார்கள் தாக்கப்படும் போதெல்லாம் “மூச்”!
இதோ ஒரு அண்டப் புழுகு:
//பொது மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்து இருக்கும்போது, புலிகள் இயக்கத்தினர் அவ் இடத்திலிருந்து அரச படைகள்மேல் செல் தாக்குதல்கள் செய்வதாலேயே அரச படைகள் அப் பகுதியை நோக்கி திருப்பி செல் தக்குதல்கள் செய்ய நேரிட்டு பொதுமக்கள் தப்பி ஓட வழியின்றி செல் தாக்குதல்களில பலியாகி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியொன்றில் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் இன்று குறிப்பிட்டுள்ளார்.//
அரச ஊதுகுழல் தேனீ வெளியிட்டுள்ள இந்தப் புழுகு ஒரு கேவலமான அண்டப் புழுகு. இமெல்டா சுகுமாரைக் கேட்டபோது அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை என்றார் மட்டுமல்ல ரெய்டர் எந்த இடத்திலும் இதுபற்றிக் குறிப்பிடவில்லை.
புலிகளை எதிர்ப்பது என்ற போர்வையில் வாசர்களை முட்டாள்களாக்கி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் இந்தப் பாதகர்கள், தமிழ் மக்களின் இரத்ததை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள்.
இளங்கோவன் இந்தியபடைஇலங்கையில்லிருந்த காலத்திலேயே புலிகளின் போராட்ட முறை இப்படித்தான்.அகதி
முகாமிலிருந்து கோவில்லுக்குள்ளிருந்து மருத்துவமனைகளில்லிருந்து தாக்குதல் தொடுத்துவிட்டு ஓடிஒளித்து
கொள்ளவது புலிகளின் யுத்ததந்திரோபாயம்.தேசியத்தலைவரின் சிந்தனையில் இப்படித்தான் தமிழ்மக்களை
போராட்டத்திற்கு கிளர்ந்தெழப்பண்ணுவதும் சர்வதேச அனுதாபத்தை அங்கீகாரத்தைப் பெறுவதும். இது இவ்வளவு
காலமும் உங்களுக்கு தெரியாதா?
இரண்டாவது //தமிழ்மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள் // உங்களுக்கு வார்த்தைகளை பாவிப்ப-
தில் அர்த்தம் தெரிவதில்லையா? தேனீ பணம் சேகரித்து செல் அடிப்பதில்லை. உலகத்தில்லுள்ள சில தமிழ் மரமண்டைகளுக்கு கருத்தாலேயே அடிக்கிறது.
புலம்பெயர்மக்களின் இரத்தத்தை உறுஞ்சி அங்குள்ள மக்களின் தலையில் “செல்”அடிக்கிறது புலிகள் தான்.
இவ்வளவு காலமும் புலிகளின் போராட்டம் “புண்டநீத்துப்பெட்டி”மாதிரி போனது இப்படியான வேலையால் தான்.
சந்திரன் இராசா,
இங்கு புலிகளைப் ப்ற்றிநான் பேசவில்லை.
தேனீ என்ற ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் இணையம், பொய்த் தகவல்களை வெளியிட்டு மகிந்த குடும்பத்தையும் அதன் இன அழிப்பையும் நியாயப்படுத்துகிறது என்பட்குதான்.
நானும் உங்கள் போலவே புலிக்கும் எதிரானவன் தான். ஆனால் பொய்த் தகவல்களை வெளியிட்டு மகிந்த குடும்பத்தின் கொலை வெறியை ஆதரிப்பவன் அல்ல.
இளங்கோவன் இன்றைய நிலையில் ஒன்றுமகிந்தா அரசாங்கத்தைப்பற்றி பேச வேண்டும் அல்லது புலிகளைப் பற்றி
பேசவேண்டும் மூண்றாவது பாதை கிடையவே கிடையாது.//மகிந்தா குடும்பதின் கொலைவெறியை ஆதரிப்பவன்
அல்ல// சந்தோஷம்.அப்படியே வைத்துக்கொண்டாலும் இதைவிட பத்துமடங்கு கொலைவெறியனை நாம் எம் இனத்தில் வைத்த புனிதப் பேர் சூட்டிவருகிறோம். எம்இனத்தில்லுள்ள கொலை வெறியனை முதலில் தோற்கடியுங்கள்.அதன்பிறகு மற்றைய இனத்தில்லுள்ள கொலைவெறியனை தோற்கடிக்க உங்களுடன் நானும்
கைகோற்கிறேன்.
தேனீ மீதான தாக்குதலானது உங்கள் அறியாமையால் ஏற்பட்டது அல்லது புலிகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட
நடவடிக்கையாகவே என்னால் கருதமுடிகிறது.
//இளங்கோவன் இன்றைய நிலையில் ஒன்றுமகிந்தா அரசாங்கத்தைப்பற்றி பேச வேண்டும் அல்லது புலிகளைப் பற்றி
பேசவேண்டும் மூண்றாவது பாதை கிடையவே கிடையாது// – சந்திரன் இராசா..
ஆஹா சந்திரன் இராசா.. இதைத் தானே நாங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இறுதியாக நீங்கள் அரசாங்கத்தின் ஆள் என ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அரசாங்கம் அப்பாவிகள் மீது குண்டுபோட்டால் அதைச் சரியென்பீர்கள். ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்தால் அதையும் சரியென்பீர்கள். உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் குண்டு துளைக்கும் வரை மகுந்த குடும்பத்தின் கொலைகளை அவர்களின் வியாபாரத்தை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள்.
இதற்கும் மேலாக, தேனீ என்ற ஐரோப்பிய இணையத்தளம் பொய்யான செய்தி போட்டிருக்கிறது என்று ஆதார பூர்வமாகச் சொன்னால், இல்லை அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குதிக்கிறீர்கள்.
நாளைக்கு உங்களது அரச கூட்டாளிகள் எங்களைக் கொலை செய்தால் அதையும் நியாயப்படுத்துவீர்கள்.
நீங்கள் தான் அசல் ஒட்டுண்ணிகள்!
இளங்கோவன் உன்மையில் நீங்கள்
புலி எதிர்பாளரா?????
அப்படியானால் எப்படி அவர்களுடன்
ரேடியோவில்…??
இளங்கோவன் ஒட்டுபடை / ஒட்டுண்ணி போன்ற வார்த்தைகள் அரசியல் நாரீகம்முள்ள வார்த்தைகள் இல்லை
கொலைகள்களுக்கு நியாயம் கற்பிப்பதும் இப்படியான வார்த்தைகளை சுலபமாக எறிந்து விடுவதும் புலிகளின்
வரலாற்றில் நாம் கண்டு கழித்தவையே ! இவைகள் எம்மை ஒன்றும் செய்து விடபோவதில்லை.
கண்னாடிமாளிகையிலிருந்து எதர்வீட்டு கண்னாடிக்கு கல் எறியாதீர்கள் அவனும் திருப்பி எறிந்தால் கண்னாடி
மாளிகை பொலபொலவென உடைந்து கொட்டுப்பட்டுவிடும்.
இதுவே தமிழர்வாழ்விலும் நடந்தேறியது.பிரபாகரன் காலத்தில் தான் குண்டுவீசும் விமானம் தமிழ் பகுதியில்
குண்டுகளை வீசியது .இது கண்னாடி மாளிகை கதையல்லவா?முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள்
நாம் ஏவுகணையால் அடித்து வீழ்த்துவோம் என புலிகள்தான் கதைஅளந்தார்கள்………இன்று பிள்ளைகள் சாகுது
என ஓலமிடுகிறீர்கள்.
பேரினவாதஅரசுயுடன் தீர்கவேண்டிய பிரச்சனைகள் ஏராளம்.அதற்குமுதல் முடிவுகட்டவேண்டியது புலிகளின்
சரித்திரம்.
//இளங்கோவன் உன்மையில் நீங்கள்
புலி எதிர்பாளரா?????
அப்படியானால் எப்படி அவர்களுடன்
ரேடியோவில்…??//
ஐயோச் சாமீ நான் அவனில்லை!
நான் இப்போது 5 மாதம் தான் ஐரோப்பாவில் இருக்கிறேன். முன்னம் இந்தியாவில். இன்னும் 5 மாதத்தில் மறுபடி இந்தியா. ஆளைப்பற்றிப் பேசாமல் எழுத்தைப்பற்றிப் பேசுங்கப்பா!
ஒன்று மகிந்தா அரசைப்பற்றி பேசவேண்டும் அல்லது புலியைப்பற்றி பேசவேண்டும் என்கின்றார் ராசா அண்ணர் >இதுதான் தேனித்தத்துவம்! புலிகளை தாக்குவது மகிந்தா அரசிற்கு சாமரை வீசுவது! தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசும் புலிகளும் பாசிச சக்திகளே! மக்கள் விரோதிகளே! மூன்றாவது பாதை கிடையாது எனகிறீர்கள்! அப்ப மகிந்தாவின் ஏ9 பாதையால் போனால் சரி வருமோ?
//ஐயோச் சாமீ நான் அவனில்லை//
ஏன் இந்த அவசரம் .இப்படி யாரை
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
யார் அந்த அவன் என தெரியபடுத்தலாமே.
//ஏன் இந்த அவசரம் .இப்படி யாரை
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
யார் அந்த அவன் என தெரியபடுத்தலாமே//
சாமீ நீங்கள் ஏன் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. உங்களுடைய முன்னதான பின் பனுவலிலிருந்து நீங்கள் வேறு யாரையோ நான் என்று எண்ணிக் கொள்வதாகப் புரிந்து கொண்டேன். ஆகவே நான் அவனில்லை என்று சொன்னேன். அவ்வளவுதான்.
இப்போ சந்திரன் இராசா, என்ன பக்கா பில்டப் எல்லாம்? கண்ணாடி வீடு பிளாஸ்டிக் வீடு என்று எல்லாம்?
எனது கருத்தை முன் வைத்து என்னை சமூகத் துரோகி என்று வேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால் நான் தேனீ இணையத் தளத்தின் பொய்ச் செய்திகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும், இலங்கை அரசாங்கத்தின் கொலைகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் புலியைப் பற்றியல்லவா பேசுகிறீர்கள்? யார்கேட்டார் உம்மிடத்தில் புலியைப்பற்றி?
இதோ ஒரு நேரடியான கருத்து.
நான் சொல்லுகிறேன் “நாளைக்கு உமது கடவுள் மகிந்தவுக்கு எதிரானவன் என்று உமது ராணுவம் என்னைக் கொன்று போட்டாலும் நீர் அதையும் நியாயப் படுத்துவீர். அதித்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்” .. நான் மேலே பல விடயங்கள் சொல்லியிருக்கிறேன் அவை பற்றியும் பேசலாமே?
//சாமீ நீங்கள் ஏன் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளக்கூடாது//
நீங்கள் எழுதுவது புத்திசாலிதனம் என்றால் அந்த புத்தி எனக்கு
வேண்டாம் .நான் முட்டாளாக வே இருந்துட்டு போகிறேன்.
ஆனால் ஒட்டுண்ணி என்னும் வார்த்தையை பாவித்தபோதே
உமதுநிலை உமது அறிவு பலர் அறிவர்.