இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் உள்பட 14 நபர்களை எfப் பீ ஐ கைது செய்துள்ளது. உள்ளக வர்த்தகக் குற்றவியல் தொடர்பான இக் கைதுகளின் பின்னர், பில்லியனரான ராஜரட்ணம் 100 மில்லியன் டொலர் பிணையில் விடுதலையானார். 20 மில்லியன் பணத்திற்காக 13 வேறுபட்ட குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று குழந்தைகளின் தந்தையான 52 வயதாகும் ராஜராட்ணம், தான் குற்றமற்றவர் என நிரூபிப்பேன் எனத் தெரிவிக்கிறார்.
உள்ளக வர்த்தகத் தகவல்களைப் பரிமாறும் நோக்கோடு இவரது தொடர்பாளர்களுடன் தற்காலிக, முற்பணம் செலுத்தும் கைத் தொலைபேசிகளைப் பாவித்திருந்தாலும், கோபர் என்பவருடைய கைத் தொலைபேசியை 2007 இற்கும் 2008 இற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒட்டுக்கேட்டதனூடாக எப்.பீஐ பெரும்பகுதித் தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
google போன்ற நிறுவனங்களின் உட் தகவல்கள் கூட, சட்டவிரோதமாக ராஜரட்ணத்துடன் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பங்குச் சந்தையில் ஒரு பெரும் பகுதியை இவர் முதலீடு செய்துள்ளமையும் குறிக்கத் தக்கது.