ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோதுமனிதவெடி குண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையும், மேலும் 24 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டது. நளினியின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால், அந்த கருணை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார்.
இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் இவ்வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனது “வாக்குமூலம்” பொய் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த மையப் புலனாய்வுத் துறையின்(சி.பி.ஐ.) ஓய்வு பெற்ற எஸ்.பி. தியாகராசன், “உயிர்வலி” என்ற ஆவணப் படத்திலும் பின்னர் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.
போலீசு மற்றும் நீதிமன்ற மோசடிகளால் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள பேரறிவாளன்.
“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன். இந்த நிலையில் கொலை வழக்கே வலுவிழந்து போனது என்பதும் போலி வழக்கிற்கு இந்திய அரசு தண்டனை வழங்க முற்படுகிறது என்பதும் தெளிவான வாதம்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது…
மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்…
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலால் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு கயிறை நெருங்கிய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அடுத்தக்கட்டமாக விடுதலை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது…