ராஜீவ் காந்தி கொலையில் இந்திய அரசால் குற்றம்சுமத்தப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவர்களது கருணை மனு மீது தாமதமாக ஜனாதிபதி முடிவு எடுத்ததால் தண்டனை குறைக்கப்பட்டதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கூடவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்தது. தேர்தல் காலத்தில் தீர்மானிக்கும் பங்குள்ள தமிழ் இனவாதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நிலைமையைச் சிக்கலாக்கும் நோக்குடனும் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 3 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டனர். எனவே அவர்களையும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட், பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் கூறியது.
தமிழகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்கள் விடுதலைக்குச் எதிரான மனோநிலயைக் கொண்டிருந்த நிலையில் வாக்குக் கணக்குப்படி காங்கிரசும், பாரதீய ஜனதாவும் விடுதலையை எதிர்த்தன.
முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. முதலில் 3 பேர் விடுதலையை எதிர்த்தும், பின்னர் 4 பேர் விடுதலையை எதிர்த்தும் அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணை வருகிற 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தியின் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இக் கொலையின் பின்னணியில் இந்திய அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி நலன்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலர் வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு கூறினர்.
இதற்கிடையே 7 பேர் விடுதலையை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் கோர்ட்டுக்கு செல்லமுடியாது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 6–ந் தேதி மற்ற மனுக்களுடன் சேர்ந்து இந்த மனு மீதான விசாரணையும் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தார்.
இது இவ்வாறிருக்க இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டுவத்திருக்கும் வை’கோ இந்த வழக்குகளில் வாதாடிய ராம் ஜெத்மலானிகு விழா எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. மார்ச் 8ம் திகதி சென்னையில் இந்த விழவை ஏற்பாடுசெய்துள்ள வை.கோ மோடியை தமிழ் நாட்டிற்குள் நுளைப்பதற்கு ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி வருகிறார்.
Democracy is slow but democratic changes are permanent. They are all Prisoners of War. It is time to release them all and clear all the jails in India. .
But not in SL and that is your stance ?
விழா… forஜெத்மலானி… for what…? still they are in the jail…
“தமிழீழ விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தியின் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இக் கொலையின் பின்னணியில் இந்திய அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி நலன்களும் உள்ளடங்கியிருக்கலாம்” – there is no doubt… and some big shot behind this… only Late. Thiruvenkadam Velluppillai Pirabhaharan thorow the stone…
Ok Dr, these 7 are not Prisoners of War… they are Rajiv murder suspisious…
தேர்தலும் நெருங்குகிறது… சிதம்பரம் வீட்டை சுற்றியுள்ள பத்தைகளும் துப்புரவாக்கக்படுகின்றன…
Security was stepped up at the residence of Union Finance Minister P Chidambaram at Managiri in the district on Monday after a computer generated notice, signed by a pro-Tamil outfit, was found near his house.
Special striking force has been deployed near the house, police said.
Shrubs near the house have been cleared and police have been asked to provide additional security after a notice signed by ‘Tamilar Viduthalai Padai’ (Tamilar Liberation army) was found.
The notice demanded that authorities release all those arrested in connection with the Rajiv Gandhi Assassination case, and shutting down of the Kudankulam Nuclear Power plant in Tirunelveli district. It also condemned the Central Government for its ‘pro-Sri Lanka’ stand.
Officials said a ‘four-tier’ security would be in place whenever the Finance Minister visits his native place.
The notice has triggered a flutter at a time when attacks on congress offices in the state, allegedly by pro-Tamil outfits demanding release of seven convicts in the Rajiv Gandhi assassination case, have been reported. A few statues of Rajiv Gandhi were also damaged by unidentified persons.
Tension prevailed at Alwarkurichi in Tirunelveli district today after a bust of the Rajiv Gandhi was found damaged.