மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை (மே 21-ந்தேதி) ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசின் சார்பில் இன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ராஜீவ் காந்தியின் திருஉருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பகல் 12 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருகை தந்து ராஜீவ் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை வாசிக்க, அதை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், தலைமை செயலக ஊழியர்களும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
புலி ஆதரவு அமைப்புக்கள் எதிரிகளை நண்பர்களாக அறிவிக்கும் செயற்பாட்டைத் இன்னும் நிறுத்தவில்லை. ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்ற நாளன்று கோமாளித்தனமாக அனைத்துப் புலிசார் அமைப்புக்களும் அவருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பின. பல்லாயிரம் அப்பாவிகள் இலங்கை இந்திய அரசுகளால் கொலைசெய்யப்பட்ட நாளில் ரஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக மட்டும் ஜெயலாலிதா வருந்தியிருக்கிறார். அந்த நாளைக் கொடுஞ்செயல் நாளாக வேறு அறிவித்திருக்கிறார். யாரையாவது அணுகி, லஞ்சம் கொடுத்தும் ஆள்சேர்த்தும் எதையாவது சாதித்துவிடலாம் என எண்ணும் குறுந்தேசிய வாதிகள் ஜெயலலிதாவின் மாற்றத்தைத் தொடர்ந்து கருணாநிதியை மீண்டும் தமழர் தலைவர் என்று அறிவித்தாலும் வியப்படைவதற்கில்லை.
சரியான செய்தி, இந்த புலன் பெயர்ந்த தமிழர்கள் ஒருநாளும் மாறப் போவதில்லை
கொடுஞ்செயல் கொடுஞ்செயலே! முள்ளிவாய்காலில்த் தமிழர்கள் அழியக்காரணம் புலம் பெயர் புலித் தமிழர்களே, ரஜீவ் காந்தி சிதறிச் செத்து, இந்திய வளர்ச்சியில் பாரிய தடை ஏற்படக் காரணம் எம்ஜிஆர் புலிகளே! இரண்டு பாரிய கொடுஞ்செயலுக்கும் காரணம் இலங்கைத் தமிழர்களே! கொடுஞ்செயல் கொடுஞ்செயலே!