ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்து வை.கோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தத அறிக்கையில் சுப்பிரமணியன் சுவாமி என்ற தமிழினவிரோதி அமைச்சராகவிருக்கும் மோடியின் என்ற இனப்படுகொலையாளியின் வெற்றியை மகத்தான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை:
வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.
இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று. அந்த தினம் தமிழர்களுக்குத் துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார். ஆனால், அண்ணாவோ அது துக்க நாள் அல்ல, கொண்டாட வேண்டிய மகிழ்ச்சிகரமான திருநாள் என்று பெரியாரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்டு பிரகடனம் செய்தார்.
அதே அண்ணா 1965 ஜனவரி 26 ஆம் நாளை துக்க நாள் என்று அறிவித்தார். இந்தியாவில் இந்தி மொழியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிய முடிவினை 1965 ஜனவரி 26 அரசியல் சட்ட உத்தரவாதத்தோடு செயல்படுத்தும் நாளாக அமைந்துவிட்டதால், அந்த நாள் இந்தி பேசாத மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு துக்க தினம் என்று அண்ணா கூறினார். அந்த நாளை கருப்பு நாளாக துக்க தினமாக கடைப்பிடிப்போம் என்றும் அறிவித்தார்.
இன்று ஏறத்தாழ அதே மனநிலையில் இருக்கிறேன். அறிஞர் அண்ணா இந்தியக் குடியரசை எதிர்க்கவில்லை. இந்தி பேசாத மக்களுக்குத் தந்த வாக்குறுதியையும் மீறி, இந்தியை மட்டும் அரியணை ஏற்றுகின்ற தொடக்க நாளாக அமைந்ததால், தங்களது எதிர்ப்பையும், கசப்பையும் காட்டுவதற்காக கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார்.
அதே போலத்தான் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த இராஜ பக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் டெல்லியில் ஜந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மதிமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.
தமிழ் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய குற்றவாளியை இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கச் செய்வது அந்த விழாவின் உன்னதத்தையே அடியோடு நாசப்படுத்தி களங்கப்படுத்துவது ஆகும்.
தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு இராஜ பக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்; நிரந்தர வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இராஜ பக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.’
வை.கோ எப்படி நாடகமாடி ஈழ மக்களின் கண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதையும் வெளிப்படுத்தும் கட்டுரை:
poda losse. nee oru media nu sollatha da dubukku. congress ku support pantra dog thane inioru.com
அட பாடுங்களா? செய்திகளையே படிக்கின்ற பழக்கமே இல்லாமல் இப்படியொரு பதிலை சொல்லியுள்ளீர்களே? இன்னும் இந்த பிள்ளைப்பிடிக்கின்ற பிரபாகரனுக்கு போரிட தெம்பில்லாமல் சரணடைந்து செத்துப்போனவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்களே? வடிவேலு காமெடி போல இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்முது? வரச்சொன்னவனை விட்டுவிட்டு வந்தவனுக்கு எதற்கடா கருப்புக்கொடி 2013 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன் கருப்புக்கொடி காட்டியவன் இன்று பிஜேபி அலுவலகத்தின் முன் கருப்புக்கொடி போராட்டம் நடத்தவேண்டியதுதானே? நாய்களுக்கு காயடிக்கும் பொழுதுதான் தெரியும்
நீவிர் மனித வடிவத்தில் ….
Yes… Yes… Vaiko need something to come alive in media… In Diaspora media… For Diaspora transaction…
He can take Nedumaran… Seeman… Captain… & Thola Thirumavalavan with him…
பாம்பின் கால் பாம்பறியும்
பாரதப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மாண்பு மிகு நரேந்திர மோடி அவர்களுக்கு _ தமிழ் இனத்தை கொத்துக்கொத்தாக லட்சக்கணக்கில் கொன்று குவித்த சிங்கள கொலையாளி ராஜபக்சவை தயவு செய்து இந்திய நாட்டுக்குள் அழைக்காதீர்கள். ஏற்கனவே எரிந்து புண்ணாகி போன எங்கள் இதயம் மீண்டும் எரிய ஆரம்பித்துவிட்டது. பாரதிக ஜனதா என்ற விதை தமிழ் மண்ணில் முளைப்பதும், வளர்வதும், கருகுவதும் ,ஏன் உங்கள் எதிர் காலமே ராஜபக்சவை நீங்கள் தவிர்ப்பதில் தான் அடங்கியுள்ளது.
வைகோ மாமனிதர். அவர் பதவிக்காக எவர் காலிலும் விலமாட்டார். அவ்ர் தோல்விகளில் துவண்டுவிட மாட்டார். தமிழர்களின் மனதை புரிந்து கொண்டு அவர் குரல் கொடுப்பார். கொலைகாரன் ராஜபக்ச இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்று குரல் கொடுத்த முதல் மனிதன் வைக்கோ. இதை விருதுனகர் தொகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி. மு. க வும் காங்கிரசும் 2009ல் செய்த அதே தவறை மோடியும் செய்து விட்டார் முடிவை நாளைய வரலாறு கூறும்
Rajapaksa is a international criminal. He is the murderer of tamils. We have lost millions of tamils because of cruel action of Rajapaksa. The criminal should not be allowed to take part in Modi’s swear in ceremony.
Vaiko unequivocally supported Late Thiruvenkadam Veluppillai Pirabhaharan’s LTTE… not only LTTE… He supported other SL Tamil liberation organizations. .. including PLOTE..
And he is the first member of MP & chief of a political party detained for 18 months… in prison under Preventation of Terrorism Act…
He often goes to prison for Foot marches… Black flag demonstrations… so, this is not new for him…
In 1976/77 Indra Ghandi period he was in prison for more than a year. ..
When he was in Parliament with his vociferous speeches. .. With his party members always he attract attention issues..
The 2 time MP… Now after he lost in his Viruthu Nagarconstituency with a do-or-die political battle starting another black flag demonstration. .
And this lost is not new for him on 2009 election he lost the seat for Congress in 16,000 votes different. .. (received 291,423 votes – 38%)
This time getting received 261,143 votes against AIADMK’s 406,694 votes.. difference 145,551.
Hmm.. anyway he keeps busy. .
Today in Black flag demonstration Vaiko arrested with his 500 followers…
சிங்கள தலைமைகள் 60 வருடங்களிற்கு மேலாக வெற்றிநடைபோட உதவிக்கொண்டிருப்பவா்கள் இலங்கையில் பிறந்த அதே தமிழா்கள்தான் என்பதை நாம் உணா்ந்தால் வைகோவை நாம் குறை கூறவேண்டி வராது இன்றய நாட்களில் டக்ளஸ்,கருணா,பிள்ளையான் போன்றவா்கள் வடிவத்தில் தமிழன் சிங்களத்திற்கு முண்டு கொடுக்கின்றான்.போதாக்குறைக்கு புலம் பெயா்ந்த புதிய பணக்காரா்களும் புலிப்பினாமிகளும் அடக்கம்.
வைகோ மோடியை சந்தித்து தான் இப்படி ஒரு நாடகத்தை நடத்தப்போவதாக முன்னமே தொிவித்துவிட்டாா், சிலவேளை இது ராஐபக்ஷவிற்கும் தொியப்படுத்தப்பட்டிருக்கலாம்.