இலங்கை மத்திய வங்கி அன்னியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படும் அன்னிய மூலதனத்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்ட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். அன்னிய வங்கிகளில் முதலிடுவதற்கும், பங்கு சந்தையில் முதலீடுகளை வாங்குவதிலும், வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குப் பணத்தை இலங்கையிலிருந்து எடுத்துச் செல்வதற்குமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தினர் தோல்வியடையும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான முன்னேற்பாடாகவே இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்திடம் இருப்பிலுள்ள பல மில்லியன் டொலர் மதிப்புடைய சொத்துக்களில் பெரும்பகுதியை , வங்கி முதலீடுகளாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும் இலங்கை தவிர்ந்த நாடுகளுக்கு மாற்றுவதற்குரிய முன் நடவடிக்கையே இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தப்பியோட வேன்ன்டியநிலை எர்படாது என கருதுகிரென்