திருடும் பணத்தை அமைச்சர்களும் கட்சி உறுப்பினர்களும் பங்கு போட்டுக்கொள்வது பாராளுமன்ற வழமை. ராஜபக்ச குடும்பத்தினர் தமது உறவிர் வட்டத்தினுள்ளேயே இந்தப் பங்கீட்டை நிகழ்த்துவதால் கட்சியிலும் அமச்சர்கள் தரப்பிலும் பெரும் அதிர்ப்த்தி நிலவுகிறது. இதே வேளை ராஜபக்ச குடும்பத்தின் உள்ளேயும் பூசல்கள் உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ பொறுப்பின் கீழ் இயங்கும் நீலப்படையணியின் செயற்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விசேடப் பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் பிரதானிகளாக அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிபால அமரசிங்க மற்றும் திவயின பத்திரிகையின் செய்தியாளர் மனோஜ் அபேதீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நீலப்படையணியின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணித்து அந்த தகவல்களை தனிப்பட்ட ரீதியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மனோஜ் அபேதீர கடந்த காலங்களில் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கியதுடன் நாமால் ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவர் மனோஜ் அந்த அமைப்பில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.