தென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த
முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தால் இவரை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறும் நிஷந்த முத்துகெட்டிகம, இந்தியா மற்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளிடம் அரசியல் தஞ்சக் கோரிக்கையை முன்வைப்பதாகப் பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளார். ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் இலங்கை அழகியான அனார்க்கலி குறித்த பிரச்சனை ஒன்றில் முத்துஹெட்டிகம கட்சியுடன் முரண்பட்டது ஊடகங்களில் வெளியான செய்திகளாகும்.