திருமாவளவன் அறிக்கை:
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 21-9-2012 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏராளமான பௌத்தர்களைக் கொண்ட வாக்கு வங்கியைக் குறியாக வைத்து அதனடிப்படையில் ராஜபக்சேவை அவ்விழாவுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றியுள்ள ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமில்லாத ராஜபக்சேவை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பாரதிய ஜனதாவும் வரிந்து கட்டிக்கொண்டு வரவேற்பதும், ஊக்கப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
அண்மையில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கைக்குச் சென்றிருந்த வேளையில் ராஜபக்சேவை தனியே சந்தித்து நீண்டநேரம் உரையாடியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். அச்சந்திப்பின் போதே இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கிற மனிதநேயப் பார்வை ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் இல்லை என்பதைத் தான் நம்மால் அறிய முடிகிறது.
இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையிலும் இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு என்றும் அதனால் சிங்களவருக்கு பயிற்சி அளிப்போம் என்றும் மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு என்பவர் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
அதைப் போலவே இன்று சுஷ்மா ஸ்வராஜ் தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் வீம்புக்கு ராஜபக்சேவை அழைத்து வருகிறார். அதற்கு இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இக்கட்சிகளின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் ராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறப்போராட்டத்தில் ஈடுபடும். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டனக் குரல் எழுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அற்ப்போராட்டம்நடத்தி தனது தாழ்தப்பட்ட சமூகத்தை காப்பாற்றுவாரா இவர், அதனை விட்டுவிட்டு குழம்ம்பிய குட்டையில் மீன்பிட்டிக்க முயற்சிக்கின்றார்
Veeran!! I agree with your view on Thiruma.But I’m afraid ,you are defending Mahinda for wrong reasons. BOTH are anti tamils. please check your spectacles. try the PEOPLE OPTICIANS , they will give you nice glasses. LET YOU BE ANTI TIGER,ANTI to any pro thesiya GRPS because of their past mistakes, but don’t be PRO Mahinda or pro GOSL.
Anti LTTE,or Anti VP,or anti to any arm groups doesn’t mean you have to be pro MR or pro to GOSL or PRO INDIA or pro west. this is the simple friendly message from me. upto you.if you don’t change your line of thoughts, you will be exposed. be warned. I’m ready to talk to you.
this is applicable to whoever attacking Veeran to defend VP or LTTE or INDIA or west as well.you will be exposed. be warned. I’m ready to talk to you. simple advice: please check your spectacles. try the PEOPLE OPTICIANS , they will give you nice glasses.
Is that the ony good optician you know?
ஏம்பா அவரோட வயுற்றுப் பொளப்புல மண்ண தூவப்பாக்குறே?
இனி காங்கிரஷொடு BJP யும் தமிலின விரோதி தான் அதுவும் சுஷ்மா
ஒரு துரோகி
Four Tamil parliamentarians from Sri Lanka came to Chennai when the war was on the final stages. Nobody was prepared to meet them. They hastily got an audience at the Chennai Press Club. The commander of the Indian Army Cantonment at Coimbatore had warned Thirumamalavan that they will not tolerate their violent behaviour anymore.
When did the army take over civilian admin in TN ?
இலங்கையில் தமிழகத்தை சேர்ந்த பலர் தொழில் செய்கின்றார்கள், கொழும்பில் பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் வணிக நிறுவனங்களை நடத்துகிறார்கள். இவர்களையெல்லாம், இலங்கை அரசு வெளியேற்ற முடிவு செய்தால் அதை தமிழக அரசு எப்படிப் பார்க்கும் என்று கேட்டார் நாராயணசாமி
அது தான்ப்பா பிளானே ? இது கூட தெரியாம ??
tamilnadu people slave on indiangoverment that do not write law
the indiangoverment slaveson tamilnaadu people continue that do not write law india weaksness nations prove few time
எல்லாம் நாடகம்…. congress & BJB Both are two sides of same coin. Through them away from Tamilnadu. Narayanasami & sushma both are Srilankan slaves….
Sharva, they had the Madras Regiment stationed at Nainy, Allahabad, Uttara Pradesh for a certain reason. Sri Lankan Tamils helped to realign mattes there.