The Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற தன்னார்வ நிறுவனத்தில் அபிவிருத்தி உதவித் தலைவராக பிரான்சில் நிலைகொண்டு வேலை செய்யும் எரிக் சொல்கையிம் தான் ராஜபக்சவின் கையாளாகவே வேலைசெய்தேன் எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவின் பல்வேறு செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானப் முனைப்புக்களுக்கு நோர்வே எவ்வாறு பங்களி;ப்பு வழங்கியது என்பது குறித்து புத்தகமொன்று அடுத்த ஆண்டில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில் இலங்கையில் நோர்வே வழங்கிய பங்களிப்பு பற்றி விபரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் பல நாடுகளில் நோர்வே அரசாங்கம் சமாதானத் தூதுவராகச் செயற்பட்டுள்ளது. நோர்வே சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட அனைத்து நாடுகளிலும் பேச்சுவார்த்தை போராட்டங்களை அழித்து மக்கள் படுகொலையிலேயே நிறவடைந்துள்ளது.