ரஷ்ய அமைதிப் படை கூடுதல் பார்வையாளர்களை நிறுத்த வேண்டும்!:தெற்கு ஒசெட்டியா வேண்டுகோள்!

25.08.2008.
தெற்கு ஒசெட்டியாவுக் கும், ஜார்ஜியாவுக்கும் இடையில் இருந்து வரும் எல்லைக் கோட்டில் கூடுதல் படைச் சாவடி களை ரஷ்யா நிறுவ வேண் டுமென்று தெற்கு ஒசெட் டியா பிரதமர் பொறுப்பில் இருக்கும் போரிஸ் சோச் சீவ் கூறியுள்ளார்.

லெனின்கோர்ஸ்க் பகுதி எல்லை கிராமங்களில் ஜார் ஜியா படை மற்றும் காவல் துறை பிரிவுகள் உள்ளன. தற்போது அங்கு எத்தனை பேர் உள்ளனர் என்று தெரியவில்லை என சோச் சீவ் கூறினார். அப்பகுதியில் மட்டும் ரஷ்ய அமைதிப் படை கூடுதல் பார்வையா ளர்களை நிறுத்த வேண்டு மென்று தெற்கு ஒசெட் டியா அதிகாரிகள் ரஷ்யா விடம் கேட்பார்கள் என் றும் அவர் சொன்னார்.

லெனின்கோர்ஸ்க் பகுதியில் ஜார்ஜிய படைக ளின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் தெற்கு ஒசெட்டியாவின் இறை யாண்மையை அங்கீகரிக்கு மாறு ரஷ்யாவிடம் அது கேட்டுக் கொண்டுள்ளது. தெற்கு ஒசெட்டியாவின் வேண்டுகோளை ரஷ்யா வின் இரு நாடாளுமன்ற அவைகளும் ஏற்றுக் கொள் ளும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

1990 முதல் தனியாட்சி நடத்தி வரும் தெற்கு ஒசெட் டியாவை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வர விரும்பிய ஜார்ஜியா ஆகஸ்ட் 8 அன்று படை களை அனுப்பியது. தெற்கு ஒசெட்டியாவின் பெரும் பான்மை மக்களிடம் ரஷ்ய பாஸ்போர்ட்டுகள் உண்டு, மட்டுமல்லாது அவர் களனைவரும் தனிப்பட்ட ஒசெட்டிய இனத்தவரா வார். அதையடுத்து ரஷ்யா தனது படைகளை அனுப்பி ஜார்ஜியப் படைகளை விரட்டியது.

பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோஸியின் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரஷ்யப் படைகள் நாடு திரும்பின.