ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழப்பு

14.09.2008.

Description ரஷ்யாவின் மத்திய நகரான பேர்மில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர்உயிரிழந்துள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.இப் பயணிகள் விமானத்தில் 88 பயணிகள் பயணித்துள்ளனர்.

ஏரோபுளொட் தேசிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் தரையிறங்கும் போது விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்