ரஜீவ் காந்தி கொலை வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் பரவலாக எழுகின்றது. ஜெயலலிதா விடுதலை செய்யக் கோரி நடத்தும் நாடகத்தில் ஏழு அப்பாவிகளையும் சிறையின் உள்ளேயே நிரந்தரமாக வைத்திருக்கும் எண்ணம் பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்படுகின்றது.
பார்பன அதிகார எதிர்ப்பாக இருந்துவந்த தமிழக அரசியலில் ஜெயலலிதா உள் நுளைந்த போதே அது திராவிடத்தின் தன்மையை இழக்க ஆரம்பித்தது, அவரின் செல்வாக்கு உயர கருணாநிதி போன்றவர்கள் மிக இலகுவாக எந்த எதிர்ப்பும் இன்றியே காப்ரட் அரசியலுக்குள் தம்மை உட்செலுத்திக்கொண்டனர். சீர்த்திருத்தவாதமாக ஆரம்பித்த திராவிட இயக்கங்கள் பார்பனீயமாகவும் காப்ரட் அடியாட்களாகவும் மாறுவதற்கு ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.
உலகின் பயங்கரமான நிறுவனங்களில் இந்திய உளவுத்துறையான ரா (RAW) உம் ஒன்று. இந்திய வெளியுறவுக் கொள்ளைகளைகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல முடிவெடுப்பதிலும் அதன் பங்கு உள்ளது. இந்திய அதிகாரவர்க்கத்தின் கொலைகார அமைப்பாகத் தொழிற்படும் ரா, ஈழப் போராட்டத்தை அது ஆயுதப்போராட்டமாக உருவான காலத்திலேயே சிதைத்ததில் முக்கிய பங்கு வகித்தது.
1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராசன் உட்பட்ட குழுவினரால் கொலைசெய்யப்பட்ட ரஜீவ் காந்தியின் கொலை இன்னும் மர்மமாவே வைக்கப்பட்டிருப்பதால் அதன் பின்னணி அதிகாரவர்க்கத்தின் உள்முரண்பாடுகள் சார்ந்ததாகவே இருக்கும் என அனுமானிப்பதில் அதிக நேரம்பிடிக்காது.
தமிழீழ விடுதலப் புலிகள் கொலையை நடத்தியிருப்பினும் அதன் சூத்திரதாரிகள் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஒரு பகுதியே.
ரஜீவ் காந்தி கொலை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்பதை வன்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பிரபாகரனோ புலிகளின் அரசியலை வழி நடத்திய அன்டன் பாலசிங்கமோ மறுக்கவில்லை. அது ஒரு துன்பியல் சம்பவம், விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அது குறித்து தாம் பேச விரும்பவில்லை என பிரபாகரன் தெரிவித்தார்.
இந்திய இராணுவமும் புலிகளுக்கும் ரெலோ இயக்கத்திற்கும் உத்த்ர் பிரதேஷ் இல் இராணுவப் பயிற்சி வழங்கிய காலமான 1983 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ரொலோ இயக்கத்தில் சிவராசன் இணைந்துகொண்டார். ரகுவரன் என்ற இயற்பெயருடைய சிவராசனின் ரெலோ இயக்கத்தில் சந்திரன் என்று அழைக்கப்பட்டார். இலங்கையில் வடமராட்சிப் பகுதியில் பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள உடுப்பிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர்.ரொலோ இயக்கத்தில் இருந்த காலத்தில் சென்னை ஆள்வார்த் திருநகரில் ஏனைய போராளிகளுடன் வசித்த சிவராசன் புலிகளுடன் தொடர்பிலிருந்த காரணத்தால் புலிகளின் உளவாளி எனச் சந்தேகிக்கப்பட்டவர்.
1984 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு மீண்ட சிவராசன் புலிகளின் இராணுவப்பிரிவில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார். குண்டு வெடிப்பு ஒன்றில் தனது ஒருகண்ணை இழந்த சிவராசன் இந்திய அமைதிப்படை வடகிழக்கை ஆக்கிரமித்த வேளையில் கொக்குவில் – மானிப்பாய் பகுதியில் புலிகளின் பொறுப்பாளராகச் செயற்படுகிறார்.
கிட்டுவினதும் பிரபாகரனதும் நம்பிக்கைக்கு உரியவராகும் சிவராசன் ராஜிவ் காந்தியைக் கொலை செய்வதற்கான திட்டத்தில் தமிழ் நாடு நோக்கி அனுப்பிவைக்கப்படுகிறார். .
இதனைத் தவிர சிவராசனைக் கண்காணிப்பதற்கு டேவிட் என்பவர் புலிகளால் அனுப்பப்படுகிறார். டேவிட் உடன் சந்திரசாமி, சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருடன் தொடர்புகளைப் பேணியிருந்தார்.கொலையின் பின்னர் இலங்கைக்குச் சென்ற டேவிட் சில நாட்களில் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார். 23 உறுப்பினர்களுடன் தமிழ் நாட்டிற்குப் பயணம்செய்த டேவிட் இலங்கை கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் கடலில் மரணமடைகிறார்.
இந்தப் பின்னணியிலிருந்து கொலையை நடத்தியவர்களும் கொலையின் சூத்திரதாரிகளும் கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளும் குறித்த உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஈழத் தமிழர்களை அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக அழித்து நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக லட்சம் உயிர்களைக் கரைத்துவிட்ட பேரினவாதத்தை எதிர்கொள்ள நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. தமிழ் நாட்டின் நயவஞ்சகப் பார்ப்பன பாசிஸ்டுக்களும், உணர்வாளர்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைத் தமது கைகளில் எடுத்துக்கொள்ளும் பிற்போக்கு வியாபாரிகளும் தெற்காசியாவின் முக்கிய போராட்டங்களின் ஒன்றான ஈழத் தமிழரின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறார்கள்.
குர்திஸ்தான் போராட்டம் மற்றும் நேபாள உழைக்கும் மக்களின் போராங்கள் போன்ற பல போராட்டங்கள் அழிவுகளின் பின்னர் மீண்டெழ நீண்டகாலம் காத்திருக்கவில்லை. ஈழப் போராட்டம் அழிக்கப்பட்ட அதேவேகத்தில் அதன் எச்ச சொச்சங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்கான அனைத்துத் திட்டங்களையும் இலங்கைப் பேரினவாத பாசிஸ்டுக்களும், ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசும் மிக அவதானமாக வகுத்துக்கொண்டனர்.
தமிழ் நாட்டில் தமது அரசியல் பிழைப்பிற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையிலெடுத்துக்கொண்டவர்கள் இத் தொடர் அழிப்பின் முக்கிய பங்கை வகிக்கின்றனர். மக்கள் போராடத் தேவையில்லை, பிரபாகரன் வந்து போராடுவர் என்றும் அமெரிக்கா ஈழப் பிரச்சனையைத் தீர்த்துவைக்கும் என்றும் உளவுத்துறைகளின் திட்டத்தை அப்படியே வாந்தியெடுத்தனர் தமிழ் நாட்டின் உணர்வுகள் மரத்துப்போன உணர்வாளர்கள்.
போராட்டத்தில் நடந்த அரசியல் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டே உலகில் சாம்பல் மேடுகளிலிருந்து கூடப் போராட்டங்கள் மீட்சிபெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஈழப் போராட்டத்தின் தவறுகள் குறித்து மூச்சுக்கூட விடக்கூடாது என்று மிரட்டும் உளவு நிறுவனங்களின் கைக்கூலிகள் பிரபாகரனின் பின்னால் ஒளிவட்டத்தை ஏற்றினர்.
ஈழத்தில் இலங்கையின் கொடிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் புதிய வழிகளில் ஆயுதமேந்திய மக்கள் யுத்தமாக முன்னெழாதவாறு இவர்கள் பார்த்துகொள்கின்றனர். இந்த இனவாதிகளோடு இணைந்துள்ள அப்பாவிகள், தமது தலைவர்கள் உளவு நிறுவனங்களின் அடியாட்கள் போன்று செயற்படுகிறார்கள் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாத நேர்மையானவர்கள்.
குறைந்த பட்சம் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்களின் தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் மீதான கோரமான ஒடுக்குமுறைக்கு எதிராக தமதுகுரல்களை எங்காவது ஒரு மூலையிலாவது பதிவு செய்ய முடியாத இவர்கள் பிழைப்புவாதிகள் என மக்கள் தெரிந்து கொள்ளும் காலப்பகுதிக்குள் வடக்குக்கிழக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டுச் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம் மேலிடுகிறது.
இனிமேல் மக்கள் போராடவேண்டாம், பிரபாகரன் வருவர், அமெரிக்கா வரும் என்று இந்த நயவஞ்ச்கர்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் போதே வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கிழக்கில் 35 வீதமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. பல்தேசிய வியாபார நிறுவனங்களதும் இனவெறி இராணுவத்தினதும் நலன்களைச் சுற்றிய பொருளாதாரத்திற்கு மக்களை வாழப் பழக்கப்படுத்துகிறது பேரினவாத அரசு.
இதனையெல்லாம் கண்டுகொள்ளாத விசமிகள், ராஜபக்சவை தூக்கில் போடுகிறோம், பிரபாகரன் வானத்திலிருந்து குதிக்கிறார் என்றெல்லாம் ஒரு கூட்டத்தை பலியெடுக்கவென்றே வளர்க்கின்றனர்.
ரஜீவ் காந்தி கொலை தொடர்பான இவர்களின் ஆய்வுகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் குறித்த இவர்களின் கோமாளித்தனமான கருத்துக்களும் வழமைபோலவே அதிகாரவர்க்கங்களின் உளவுத்துறைகளின் எதிரொலிகள் போன்றே காணப்படுகின்றன. ஏழு பேரின் விடுதலை என்ற பெயரில் ராஜபக்சவிற்கு எந்தவகையிலும் குறைவற்ற பாசிஸ்ட் மோடியையும், ஈழப் போராட்டத்தை அழிக்கவென்றே வரிந்து கட்டிக்க்கொண்டு புறப்பட்ட்ட ஜெயலலிதாவையும் ஈழத் தமிழர்களின் கதா நாயகர்கள் ஆக்கிவிடுகிறார்கள்.
இன்று தாமே புலிகளின் தொடர்ச்சி எனப் புலம் பெயர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தமது பிழைப்பையும் பிற்போக்கின் இருப்பையும் தக்கவைத்துக்கொண்ட புலம் பெயர் நபர்களைக் கேட்டால் இன்று ரஜீவைக் கொலை செய்தது தாமே எனக் கூறமுடியாத நிலையிலிருப்பதாக கூறுகின்றனர்.
இலங்கை அமைதிப்படை என்ற பெயரில் நுளைந்த ராஜீவ் காந்தி காலத்து இராணுவம் நடத்திய இராணுவத் தர்ப்பாரில் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை இனவெறி இராணுவம் கூட வீடுகளின் கதவுகளைக் கூடத் தட்டியதில்லை.ரஜீவ் அனுப்பிய இராணுவம் வீடுகளின் கொல்லைப் புறங்களிலெல்லாம் குடிகொண்டது. ரஜீவ் காந்தி ஆட்சியில் போபால் பேரழிவில் சாரி சாரியாக மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர்.
சீக்கிய சமுதாயத்தையே பழிவாங்கும் வெறியோடு பஞ்சாபில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, உளவுப்படை “ரா” மூலம் பல சதிகளையும் கொலைகளையும் அரங்கேற்றி பழியை சீக்கிய தீவிரவாதிகள் மீது சுமத்தி பஞ்சாபையே இரத்தக்களறியாக்கிய ராட்சசன்தான் ராஜீவ்காந்தி. திரிபுரா இனவெறி தீவிரவாதிகளுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தும் அசாம், போடாலாந்து கிளர்ச்சியை சீர்குலைத்தும் உளவுப்படை “ரா” மூலம் சதிகளையும் இனப்படுகொலைகளையும் தனது குறுகிய அரசியல் ஆதரவுக்காக கட்டவிழ்த்து விட்டார் ராஜீவ்.
இவை மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றங்கள்; தேசத் துரோக, மக்கள் விரோத படுபாதகங்கள்; தலைமுறை தலைமுறையாக வடுக்களை ஏற்படுத்திய குற்றங்களாகும்.
அப்பாவி மக்கள் ரஜீவ் என்ற தனிமனிதனுக்கு எந்தக் கருணையும் காட்டமுடியாது. ரஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர்வடிக்க முடியாது.
இங்கு சிக்கல் அதுவல்ல ராஜீவ் கொலையின் சூத்திரதாரிகள் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஒரு பகுதியே. அவர்கள் புலிகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள், புலிகள் இந்திய உளவுத்துறை வழங்கிய பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் படுகொலைகளைத் திட்டமிட்டு மேற்கொண்ட்னர்.
ஆனால் சிவராசன் எழுதியிருந்த நாட்குறிப்பில் மத்திய பிரதேசத்தில் போபாலுக்குச் சென்ற அவர் டாக் என்பவருக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார் என்ற தகவலை நளினியின் வழக்குரைஞரான எஸ்.துரைசாமி என்பவர் தெகெல்கா இதழில் வெளியான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போய்விட்டது. (8.1-8.1-WR/JSS/90/Vollll) ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது கோப்பைக் காணவில்லை. பிறகு பொய்யாக, ஒட்டு வேலைகள் செய்து ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.
இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே. இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி, கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய குறிப்புகள் இடம் பெறவில்லை. இவை திருத்தப்பட்டவை என்றார். அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர், இப்போது ‘இளம் தலைவர் ராஜீவு’க்காக கண்ணீர் வடிக்கும் ப.சிதம்பரம்தான். கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. ப.சிதம்பரம் கூண்டில் ஏற்றி, ‘ஆம் கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) பின்னதாகத் தொலைந்து போயின.
இவ்வாறு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் இந்திய அதிகார வர்க்கத்திற்கும் ரஜீவ் காந்தியின் கொலைக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன.
இந்த நிலையில் ரஜீவ் காந்தியின் கொலைகளின் சூத்திரதாரிகளை மறைப்பதற்கு அதனோடு தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சிவராசன் குழுவினரைப் அழித்துவிட்டார்கள். கொலையுடன் நேரடியான தொடர்பில்லாதவர்களை பிடித்துவந்து சிறைகளில் அடைத்துவைத்துள்ளார்கள். இவர்களைச் சிறைப்பிடித்தமைக்கும் தூக்குத்தண்டனை வழங்கியதற்கும் ஜெயலலிதா மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். 91 ஆம் ஆண்டு ரஜீவ் காந்தி கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலைல் வெற்றிபெற்ற ஜெயலலிதா, ஈழ ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையிலடைத்தார்.
தி.மு,க உறுப்பினர்கள் பலரைத் தேசத் துரோகப் புலிகளின் ஆதரவாளர்கள் எனச் சிறையிலடைத்தார். பச்சோந்திகளான கருணாநிதி ஜெயாவின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போராடதால் பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் கருணாநிதி குறைத்தபோது, ‘-தேசத்தின் பிரதமரைக் கொன்றவர்களைக் காப்பாற்றும் கருணாநிதி’ என முழங்கியவர். புலிகளைப் பயங்கரவாதிகள் எனவும், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டம் எனவும் தமிழ் நாட்டில் நஞ்சைக் கக்கியவர். அண்மையில் நளினி பரோலில் செல்வதைக்கூட நிராகரித்தவர்.
இவ்வளவு தகமையும் பெற்ற ஜெயாவிற்கு நீதிபதி சதாசிவம் தீர்ப்புச் சொன்னதும் ஞானம் பிறந்ததன் பின்னணி என்ன? இது மத்திய அரசு சார்ந்த வழக்கு என்பதால் மானில அரசு மத்திய அரசின் உடன்பாடில்லாமல் ஏழு பேரையும் விடுதலை செய்யமுடியாது என்பது வெளிப்படை. இதனைத் தெரிந்துகொண்டும் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியதால் கருணாநிதியின் தமிழர் தலைவர் என்ற விம்பத்திற்கு அடி கொடுத்தார் என்பது வெளிப்படையாகத் தெரியும் செய்தி.
சோ ராமசாமி, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் ஆலோசனையில் செயற்படும் ஜெயா அடிப்படையிலேயே தமிழின விரோதி.
தீர்ப்பு வெளியிட்டு சில காலங்களில் தண்டனைக் குறைப்புகளூடாக கைதிகளை விடுதலை செய்யப்பட்டால் கொலையின் சூத்திரதாரிகள் குறித்த உண்மைகள் வெளியாக வாய்ப்புக்கள் உண்டு.
ரஜீவ் கொலையில் தொடர்புள்ளவர்களாகக் கருதப்படும் சுப்பிரமணிய சுவாமி போன்றவற்கள் விழித்துக்கொண்டார்கள். மானில அரசு நிறைவேற்ற முடியாத தீர்மானம் ஒன்றை முன்மொழியுமானால் விடுதலையை சாத்தியமற்றதாக்கலாம் என்பது அவர்கள் வியூகம். ஜெயலலிதாவின் தீர்மானத்தின் பினால் உள்ள இரண்டாவது நோக்கம் இதுவாகும்.
தமிழ் நாட்டுச் சிறையில் கால் நூற்றாண்டுகளாக விசாரணையின்றிச் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் உட்பட பலரும் இந்த அப்பாவி 7 மனிதர்களையும் போல விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.
ஈழத்தமிழர்களின் அவலத்திலும் இரத்ததிலும் பிழைப்பு நடத்தும் அனைவரும் இந்த உண்மைகளை மூடி மறைத்து அருவருப்பான அரசியலைத் தொடர்கின்றனர். இவர்களின் அரசியலுக்கெதிரான போராட்டம் ஏகாதிபத்திங்களுக்கும் இலங்கைப் பேரினவாதிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் சமந்தரமாக நகர்த்தப்பட வேண்டும்.
\\1984 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு மீண்ட சிவராசன் புலிகளின் இராணுவப்பிரிவில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார். //
சிவராசன், ரெலோதாஸ் உயிருடன் இருக்கும்வரை ( 1986 ) ரெலோ அமைப்பிலேயே இருந்தவர். தாஸ் கொல்லப்பட்டதற்கு பின் சிறிசபாரத்தினத்தை பலிவாங்குவதர்க்காக புலிகள் அமைப்பில் மேலும் சில ரெலோ உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டார்.
சுதன் ரமேஷ் என்போருடன் சிறீக்கு முரண்பாடு நிகழ்ந்த 84 களின் நடுப்பகுதி காலங்களில் (ஏப்ரல்,மே) சிவராசன் வெளியேறிச் சென்றார். தாசும் சிவராசனும் ஒரே காலத்தில் டெலொவில் இணைந்த உறுப்பினர்கள். அவர்கள் 84களில் ஒன்றாக இணைந்து செயல் பட்டிருக்க சாத்தியம் இல்லை.
you are correct mr SG