திரையுலகினர் மீதான மத்திய அரசின் 12.36 சதவீத சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திங்கள்கிழமை நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான திரையுலக அமைப்புகள் கலந்து கொண்டன.பல முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் நாலாயிரம் யூரோக்களுக்கு மேல் நிரக ஊதியமாகப் பெற்றுக்கொள்பவார்களுக்கு 25 வீத வீத வரி விதிக்கப்படுகின்றது. இந்திய அரசின் வரி விதிப்பு வீத 12.36 வீதம் என்பது 10 லட்சம் ரூபாவிற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கே விதிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் கறுப்புப்பணம் இந்தியாவுடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கது.
இந்த நிலையில் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 12.36 வீத வரி விதிக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தும் நடிகர்களின் மத்தியில் காப்ரட் நடிகர்களில் ஒருவரான ரஜனிகாந் வரிவிதித்தால் பணப்பதுக்கல் அதிகரிக்கும் என மிரட்டியுள்ளார்.
இவர்கள் போராடுவது பால்கட்டண உயர்வுக்காகவோ, பஸ்கட்டண உயர்வுக்காகவோ அல்ல. அபரிமிதமான தமது உழைப்பைப் பதுக்கிக் கொள்வதற்காக மட்டுமே.
தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் தென்னிந்திய சினிமாக் குப்பைகள் புலம் பெயர் நாடுகளிலும் கோடிகளாக பணம் சேர்த்துக்கொள்கின்றன. இவர்கள் இந்திய ஏழைகளின் வாழ்வை மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாழ்வையும் சுர|ண்டியே பணத்தைப் பதுக்கிக் கொள்கின்றனர்.
பெரிய நடிகர்கள் ஒரு படத்திற்கு 8 கோடி இந்திய ரூபாய் வாங்குகிறார்களாம். பிரித்தானிய பண மதிப்பீட்டில் ஏறத்தாள 1 மில்லியன் பவுன்ஸ். இவர்கள் படத்திற்கு அரைவாசி வருமானம் FMS என்று சொல்லப்படும் வெளிநாட்டு விற்பனையால் கிடைக்கிறது. தினசரி உழைப்பவர்கள் வருடத்திற்கு 2000 பவுன்ஸ் கூட மிச்சம் பிடிக்க முடியவில்லை. சினிமாக் கவர்ச்சி எமது உழைப்பை சுரண்டுவதை எப்போதுதான் எம் மக்கள் உணரப்போகிறார்களோ…
Solution is very simple, don’t watch their movies. If you can’t convince them why do you exasperate here.
உண்மையில் இந்தப்பிரச்சினையின் மையம் என்ன? குறைந்த வருமானம் கொண்ட திரைப்பட கலைஞர்களுக்கு வரியை ரத்து செய்வதோடு அதிக வருமானம் கொண்ட நட்சத்திரங்களுக்கு 30 சதவீதம் சேவை வரியாவது போட வேண்டும்.
ஆனால் கருப்பிலும் கோடிகளிலும் புரளும் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள இதை பொதுப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். சரிஇ இவர்களுக்கு உண்மையிலேயே வருமானம் இல்லை என்றால்இ வாழ்க்கையை நடத்துவது பிரச்சினை என்றால் என்ன செய்ய வேண்டும்?
ரஜினிஇ கமல் அஜித் விஜய் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ரேசனில் 30 கிலோ அரிச வழங்க வேண்டும் என்று போராடியிருந்தால் அது நியாயம். அதை விடுத்து எதற்கு இந்த போங்காட்டம்?
வினவு.கொம்
கமல்ஹாசனுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கை கோர்திருப்பது போன்ற படங்கள் சுவரொட்டிகளில் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ளன. கமலின் விஸ்பரூபம் திரைப்படம் விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை கலையுலக போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தமிழ் நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் இது விஸ்பரூபம் திரைப்படத்தை ஓடச் செய்யும் ஒரு முயற்சியெனத் றொ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது