யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கு வாழ்வதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க போதியளவு நிதி வசதியில்லை என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கு உதவியளிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் போதிய நிதி இல்லாததால் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு பாரிய சவாலாக இருப்பதாகவும் இரு தலைமுறையினர் விதவைகளாக உளள்னர் எனவும் வுமன் இன் நீட்ஸ் எனும் அரச சார்பற்ற அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
புத்த கோயில்கள் கட்டவும்,இராணூவத்தினர்க்கு நினைவுத் தூபி எழுப்பவும் செலவாகும் பணத்தை இவர்களூக்கு செலவிடலாமே?சிங்கள மக்களூக்கு தமிழ் ஊர் காட்ட காசு தருவதாக பேசுகிறார்கள்?இதுவே சிங்களவர் என்றால் விட்டு விடுவீர்களோ?தமிழரும் இலங்கையர் என கருதினால் கைவிரிக்காது கை கொடுங்கள்.
பாவம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா….
இலங்கையின் கோடிக்கணக்கான பணம் புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களை அடக்கவும் அரசுக்கு சார்பான வெளிநாட்டில் வதியும் ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் செலவழிக்கப்படுகின்றதே.. அதை விடுத்து அந்தப் பணத்தை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவழிப்பதாக இருந்தால் ஆறு மாதத்துக்கு அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அப்படிச் செய்ய அரசாங்கம் முன்வரும் ப ட்சத்தில் அரசாங்கத்தின் நன்மதிப்பை உயர்த்த லெக்சிகோன்களும் வேறு ஆட்களும் தேவையில்லை.
அது சரி…எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கென மொனராகலை மாவட்ட அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு பதினைந்தாயிரம் மில்லியன்கள் வாரியிறைக்கப்படப் போகின்றதே… ஒரு நாள் பகட்டுக்காக அந்தளவு பெருந்தொகை எதற்கு…? அதனை வடக்கில் செலவழித்தால் பதினைந்து கிராமங்கள் மொத்தமாக மீள உயிர் பெறுமே… அரசாங்கம் ஏன் அப்படி சிந்திக்க மறுக்கின்றது…?
என்ன செய்வது… பினந்திண்ணிகளின் ஆட்சியில் இதைவிட உங்களால் வேறு எப்படித் தான் அறிக்கை விட முடியும்.. இல்லையா?