Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் : உதுல் ப்ரேமரத்ன (சிங்கள மொழியிலிருந்து..)

இனியொரு... by இனியொரு...
05/23/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
19
Home பிரதான பதிவுகள் | Principle posts

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த ‘அதிர்ஷ்டம்’ இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த ‘புதையல்’ அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு ‘வெறுமனே’ பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள்.

இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள்.

தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த ‘இரண்டு வருடக் கொண்டாட்டம்’ ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள்.

வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம்.

நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான  ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நிதி சேகரிப்பு : நெதர்லாந்து அரசின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

Comments 19

  1. ravi says:
    15 years ago

    சிங்களர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தும் உளப்பாங்கையே கொண்டிருக்கின்றனர்.தன் நாட்டுமக்கள் மேலேயே அனைத்து விதமான கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி பாரிய தமிழினப்படுகொலைகளை கொலைகாரன் இராசபக்சே நடத்தியபொழுது கொண்டாடி மகிழ்ந்த இனம்தானே சிங்கள இனம் .ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்.வந்தேறி சிங்களர் கூட்டம் தமிழீழத்தைச் சூறையாடிவிட்டதே?கொலைகள் ,பாலியல் வன்முறை ,பிணத்தைப் புணர்தல் ,பிணத்தை உண்ணல்,நூலகத்தை எரித்தல்,ஆலயங்களை இடித்தல்,நச்சுக்குண்டுகள் விமானப்படைகள் கொண்டு பெரும் படுகொலைகள் இதுதானே உங்கள் வரலாறு ?போரிலும் அறம் காக்கும் சிறுபான்மைத்தமிழினத்தை எதிர்கொள்ளத்திராணியற்ற பேடிசிங்களக்கூட்டம் 32 நாடுகளிடம் பிச்சை யெடுத்து கொத்து குண்டுகளைப்போட்டு தமிழினத்தைக்குதறிவிட்டதே?ஐயகோ எம் தமிழினம் சிங்கள இனவெறியர்களால் அடைந்த கொடுமைகள் ஒன்றா இரண்டா?ஆயிரம் சமாதனங்கள் சொல்லட்டும் .யாம் ஏற்கமாட்டோம் .எம்மண்ணை விட்டு சிங்களமே வெளியேறு?எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் மானமுள்ள தமிழினம் இதனையே கேட்டகும் இதற்கே போராடும் 

    • THAMILMARAN says:
      15 years ago

      புலிகளால் பிடிப்ட்ட இராணூவத்திற்கு ப்ட்டரும் ஜாமும் தடவிய பாண் ஆனால் பிடிக்கப்பட்ட தமிழ்ப்போராளீகளூக்கு பழஞ்சோறூம் பச்சை மிளகாயும் இதுதான் புலிகளது அறம்.குடும்பம் குடும்பமாய் போருக்கு அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள் அழிக்கப்பட்ட பின்புதான் சரணடையும் நினைவு வந்தது புலிகளூக்கு.தன் குடும்பம் என வந்தபோதுதான் வலி தெரிந்தது ஆனால் புலிக்ள் புலிகளால் அழிந்தார்கள் புலம் பெயர்ந்த ம்ண்ணீல் புலிகளால உழைத்தார்கள்.இதில் மகிந்தா அரசியல் செய்கிறார்.ஒன்றூ மட்டும் உண்மை சிங்களவர் இல்லாமல் தமிழர் வாழமுடியாது தமிழ்ரும் சிங்களவரும் இணதல் ஒன்றே இலங்கைக்கு நல்லது.

  2. ravi says:
    15 years ago

    இத்தனைக் காலமாய்த் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்ந்து பட்டது போதும் இனியாவது தமிழர்கள் தனியாக வாழட்டும்.மீதித்தமிழரையும் கொல்லத்தான் சிங்களருடன் சேர்ந்து வாழச் சொல்கிறீரா?தேசிய இனப்பிரச்சனையின் அரசியல்தான் என்ன?

    • thurai says:
      15 years ago

      வடக்கு கிழக்கில் பிறந்து தென்னிலங்கை தெரியாமல்

      நாமுண்டு
      நம் தொழிலுண்டு என் வாழ்ந்த தமிழர் பலர். யாழ்ப்பாண்த்தில் பஸ்ராண்டின் முன்
      ஒரே ஒரு சிங்கள சிற்ரி பேக்கரி. வடபகுதி கடலோரங்களில்மட்டும் கள்ளக் கடத்தல் தடுக்க இராணுவம். அங்குமிங்கும் சில சிங்கள்குடும்பங்கள்.
      இது 30 வருடங்களின் முன்னர் இருந்த நிலமை. தமிழீழ விடுதலைப்போரே இன்று இவ்வளவு அழிவிற்கும் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கும் காரணம்.

      தமிழ் அரசியல் வாதிகளோ, புலம் பெயர் தமிழீழ விடுதலையின் ஆதரவாளர்களோ
      மானத்துடன் வடக்கில் வாழ்ந்த ஏழைகளின் நலன்களில் சிறிதளவேனும் அக்கறையில்லாதவ்ர்கள். தங்களிற்கு தமிழர்மத்தியில் அரியாசனம் வேண்டும் தமிழரை தாங்கள் ஆழ வேண்டும் சிங்களவ்ன் ஆளப்படாது இதுவே
      இவர்களின் நோக்கம். இதற்குப்பெயர்தானா விடுதலைப்போராட்டம்?. வியாபாரத்திற்கு அரச் உத்தியோகம் பெற சிங்களம் படிப்போம் உலகிலெந்த மொழியையும் ஏற்போம்.

      எந்த நாட்டிலும் போய் வாழ்வோம். கோவில்கட்டுவோம். ஆனால் சிங்களவ்ன்
      மட்டும்
      எங்கழுடைய தமிழ் பகுதிக்குள்கால் வைக்கப்ப்டாது. இதுதான் ஈழ்த்தமிழரின்
      குணமா? இவர்களின் கருத்தை யாரும் ஏற்பார்களா? இவர்கள் பயங்கரவாதிகளின்றி
      வேறு யாருமில்லை.-துரை

      • THAMILMARAN says:
        15 years ago

        நமக்கு ஏற்ற மாதிரி சூழல் அமைய வேண்டி நாம் நினைப்பதுதான் நம் சுயநலம், நமக்கு ஏற்றமாதிரி சூழல் அமைக்க முடியாதது நமது பலகீனம்.

  3. மானுடன் says:
    15 years ago

    இலங்கைக்குக்தான் நல்லது.தமிழர்களுக்க்கு நல்லது அல்ல?ஏனெனில் இலங்கை என்பது சிங்களம்தானே?

  4. அப்பு says:
    15 years ago

    துரை உமக்கு வரலாறு தெரியுமா?ஒட்டுமொத்த இலங்கையும் தமிழர்களின் தாய்மண்.வந்தேறிச் சிங்களம் 1700 ஆண்டுகளாகத் தமிழின அழிப்பை நடத்தி வந்துள்ளது.பிணம் புணரும் சிங்கள இனவெறி உமக்குள் உள்ளது.அதனால்தான் அறவழி நின்ற தமிழினத்தை பயங்கரவாதி என்கிறீர்.நீவிர் தமிழினத்துக்கு செய்த கொடுமைகளுக்கு புத்தர் ,ஏசு,காந்தி போன்றோர் இருந்திருந்தால் அவர்களே பயங்கரவாதியாகியிருப்பர். ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழர்க்கே என்ற இனவாதத்தை தமிழினம் கோரவில்லை.தெற்கில் விரட்டப்பட்ட தமிழினத்திலிருந்து மீதம் இருப்பவரே அங்குள்ளனர்.இது இரு வேறு தேசிய இனப்பிரச்சனை.இலங்கைக்குள் இரண்டு இறையாண்மைகள் உள்ளன. இதைத் தமிழினம் ஏற்றுள்ளது.உமது பாசிசபுத்தி சிங்கள இறையாண்மைக்குள் தமிழ் இறையாண்மையை அழிக்க முனைகிறது.காலம் சிங்கள பேரினவாதத்துக்கு சரியானப் பாடத்தைப் புகட்டப்போகிறது.மகிந்தாவால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள துரை போன்றோருக்கு இது புரிந்தும் பயனில்லை.

    • thurai says:
      15 years ago

      வந்தேறிச் சிஙகளம் எந்தநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்ததென்று விளக்குவீரா?
      எ

      ந்த் நாட்டிலை கூட காசு வருமென்று நாடுநாட அலையும் இலங்கைத் தமிழர்கழுக்கு
      தாய்நாட்டுப் பற்று உண்டா? தமிழ் மொழியை பயன்படுத்தி
      உலகமுழுவதும் பெரிய தொரு மாபியா கூட்டம் வாழ்வது தெரியாதா? இவர்கள்தான் சிங்களவ்ர்கள் தமிழர்களை கொல்வதற்கு வித்திட்டார்களென்பது புரியவில்லையா? தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் உங்களிற்கு பக்கத்து வீட்டிலை வாழும் தமிழரின் ந்ன்மை தீமைகளில்

      மன்ம் விட்டுப் பேசும் பழக்கம்முண்டா? அரசியலிற்குத்தமிழ், கூட்டம் கூடத்தமிழ், உண்டியல் குலுக்க்த்த்மிழ், வீட்டிற்கு வந்தவுடன் நான் யாரோ அவ்ன் யாரோ.

      தமிழிற்காக எத்தனை குடும்பத்தலைவர்களை, எத்தனை சமூகத்தின் தலைவர்களை, தமிழர்களிற்குத் தலைமைதாங்கக்கூடியவ்ர்களை தலையில்
      போட்டு கொன்றீர்கள். உங்களிடம் உள்ளது தமிழ் வெறியா அல்ல்து கொலை வெறியா? பண வெறியா?. பதிலை எதிபார்க்கின்றேன்.-துரை

      • பரதேசி says:
        15 years ago

        ஐயா துரை, நீங்கள் என்ன இனம்?

        • thurai says:
          15 years ago

          சிங்களவ்ர்களிடம் தமிழரை பலிகொடுக்காதீர்கள்
          போராட்டப்பாதை தவறானது எனக் கூறிய தமிழினம்தான் நான் . இன்று அல்ல கடந்த 30 ஆண்டுகளாக.
          போராட்டமென்றால் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று அன்று பதில்கிடைத்தது. ஏனெனில் மக்கள் அழிந்தாலும் புலிகள் வாழக்கூடியதாக இருந்தது.

          இன்று மக்களை அழிவு கொடுத்து தாங்கழும் அழிந்து விட்டார்கள். என்வே மகிந்தாவும்சிங்கள அரசும் குற்ரவாளிகள். குற்ரவாளிகள்தான்.
          கண்மூடித்தன்மான சுயந்லவாதிகளால் புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்பட்டதற்குப்
          பெயர் விடுதலைப் போராட்டமா? அதற்கு ஆதரவு கொடுத்தீர்களா? வெட்கமில்லையா? என்னை யார் என்று கேட்பதற்கு.-துரை

          • பரதேசி says:
            15 years ago

            நன்றி துரை, நீங்களே மஹிந்தவும் அவருடைய அரசும் குற்றவாளிகள் என்று ஒப்புக்கொண்டதற்கு, நான் யோசித்தேன் அவருக்குப் பின்னால் தான் ஒரு கணணியுடன் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று. நல்லது மஹிந்த என்னவெல்லாம் செய்தார் என்பதையும் எழுதுங்கள். வெட்கப்பட்டவர்களை அதைச் சரி செய்ய சொல்கிறீர்கள் அதுவும் நல்லதுதான். எப்படிச் சரி செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள்.

  5. அப்பு says:
    15 years ago

    சிங்களர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்தற்கான ஆதாரங்கள்(ஏதாவது இருந்தால் -முன் வையும்)உண்டா?உம்மிடமே வரலாறு இல்லை.மிருகமும் மனிதனும் சேர்ந்து உருவாக்கிய கூட்டுப்பிறப்பு என்கிறது உமது புராணம்.நீர்எங்கிருந்து வந்தீர் என்பதையும் நீர்தான் விளக்கவேண்டும்.உம் இனத்துக்கு வரலாறு எழுதுவது எம் வேலை இல்லை.சிங்கள பேரினவாத பயங்கரத்தால்தானே தமிழர்கள் புலம் பெயர்ந்து போனார்கள்?தாய்மண்ணை மீட்கவந்தால் சிங்களம் படுகொலைகளை அப்பாவி மக்கள் மேல் ஏவி தமிழினத்தை கொன்றுவிட்டு பழியையும் தமிழர்கள் மேல்போடுவது வறட்டுவாதம். சிங்களபாசிசத்தின் தமிழினப்படுகொலைகளை உலகமே காரிஉமிழ்கிறது.நீர் சிங்களத்துக்கு கூலிக்கு மாரடிக்கிறீர்?ஏன் நூலகத்தை எரித்தீர்?20 இலட்சம் தமிழர்களை கொன்றபோது புலத்தில் தமிழர்கள் இருந்தார்களா?1917தொடங்கி இதுவரை 20 இலட்சம் தமிழ்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.30 இலட்சம் தமிழர் பிறப்பு சிங்களபேரினவாதத்தால் தடுக்கப்பட்டுள்ளது.சிங்கள பேரினவாத்ததை கட்டமைக்க 1700 ஆண்டுகளாக இனப்படுகொலைகளைத்தவிர வேறு என்ன இலங்கையில் கிழித்தீர்.தமிழர்கள் மீதான கொலைகள் கொள்ளைகள் பாலியல்வன் முறைகள் கோயில்கள் இடிப்பு நில அபகரிப்பு  பிணம் புணர்தல் எரியும் சிதையில் நாய்களை அடித்து வீசும் கீழ் புத்தி………………………………… இதுதானே உமது சிங்களத்தின் வரலாறு? துரை நீர் யாரென்று அம்பலமாகிவிட்டீர்.நீர் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில்சொல்லியதில்லை.அதனால் புலம் பெயர்தமிழர்கள் புலம் பெயர்தமிழர்கள் என உங்கள் தூக்கத்தை வாங்கியவர் பற்றியே கதைக்கிறீர் .

    • thurai says:
      15 years ago

      6 கோடிக்குமேல் தமிழர் வாழும் தமிழகத்தைச் சுற்ரி எத்தனை மொழிபேசுகின்றார்கள்.
      அவ்ர்களெல்லாம் வந்தேறு குடிகளா? சாதி,மத, பிரதேசமென்று சுக்கு நூறக உடைந்து போயுள்ள தமிழரின் ஒற்றுமையெங்கே?
      எங்காவ்து சிங்களவனை எதிர்ப்பதை விட வேறு வழியில் ஒற்ருமையுண்டா?
      தன்னினத்தை தானே அழித்துக்கொண்டிருக்கும் இனம் தான் தமிழர் கொடுத்த பலியும் அடைந்த பயனும் போதாத இன்னுமா அழிவிற்கு வழிபார்க்கின்றீர்கள்.-துரை?

  6. ravi says:
    15 years ago

    அல்லக்கை துரைக்கு இந்த்தக் கட்டுரையில் சரியான சவுக்கடி?சிங்களம் இலங்கையின் பூர்வீக்கஃகுடியில்லை என்பது உலகவரலாறு.அது இப்பொழுது பிரச்சனையில்லை.சிங்கள தேசியத்தை தமிழர் ஏற்கும் பொழுது தமிழ்தேசியத்தை சிங்ங்களம் ஏற்று இரண்டு நாடுகளாக வாழ்வது ஒன்றே பிரச்சனைக்குத்தீர்வு.துரை நீர் உமது மனைவியுடன் அண்டைவீட்டில் குடியேறி வாழ்வீரா?உம்மை அண்டைவீட்டான் உம்மை விரட்டிவிட்டு உன் மனைவியைக்கவர்ந்தால் வாளாயிருப்பீரா?என்ன பிதற்றுகிறீர்?சிங்களத்து வால் பிடிப்பதை இனியேனும் நிறுத்து.இலசந்தா விக்கரமதுங்க போல் இரும் ?பாவி இராசபக்சே அவரையிம் கொன்றுட்டான்

    • thurai says:
      15 years ago

      யார் யாரை ஆழ உங்களிற்கு தனிநாடு வேண்டும். வன்னியை வைத்துக் கொண்டு உலகில் வாழும் தமிழரையெல்லாம் ஆயுதபலத்தால் பயமுறுத்தி
      வாழ்ந்த்தும் அதனால் உல்லாச வாழ்க்கைகள் வாழ்வதும் போதாதா? இந்த் துரோகிகளை கண்டு பிடித்தீர்களா? கண்டுபிடிக்கும் துணிவு உண்டா?
      அல்ல்து அவ்ர்களில் நீங்கழுமொருவரா?-துரை

  7. அப்பு says:
    15 years ago

    திராவிடம் என்றால் என்ன?சிங்களம் திராவிடம் இரண்டும் ஒன்றா?திராவிட இனவரையறைக்குள் வருகின்ற மொழிகள் யாவை?சிங்களம் எந்தக்குடும்பத்தைச்சார்ந்த மொழி?குமரிக்கண்டம் பற்றித்தெரியுமா?சரிஉமது நாட்டில் ஒருதமிழன் சனாதிபதியாக பிரதமராக வரமுடியுமா?சிங்களபேரினவாத சட்டத்திலேயும் இடமில்லை.சிங்கள மனத்திலேயும் இடமில்லை.ஆனால் தமிழர்கள் கடந்த 64 ஆண்டுகளில் தெலுங்கு மலையாளி கன்னடர் போன்றவரையே அதிகக்காலம் முதல்வராகத் தெரிவுசெய்துள்ளனர்.துரோகமும் கரப்பும் இனவாதமும் குரூரமனப்பாங்குடன் பிணம்புணரும் இழிகுணமும் கொண்ட உமது சாடிச  சிங்களபேரினவாத புத்திக்கு இவையெல்லாம் புரியாததில் வியப்பொன்றுமில்லை.தமிழர்கள் சுகவாழ்வு வாழ்கிறார்கள் என்ற பொச்செரிப்பு?புலம் பெயர்தமிழர்கள் மாபெரும் அரசியல் ஆற்றலாக விசுவரூபம் எடுத்திருப்பது தாங்க முடுயாமல் உமது பின்னூட்டங்கள் அனைத்திலும் கீறல் விழுந்த இசைத்தட்டாக அதையேஉளறுகிறீர்.ஆயிரம் ஆண்டுகள் எடுத்தாலும் சிங்களப்பேரினவாதம் செய்த கொடுமைகளை தமிழினம் மறக்காது .மன்னிக்காது.முதலில் முள்வேலிக்குள் இருக்கும் தமிழரை விடுவிக்க உமக்கு மனமிருக்கிறதா?ஆடுநனைகிறதே என்று ஓநாய் அழுததாம் ?

  8. செவ்வியன் says:
    15 years ago

    அப்பு இந்த துரை யாரென்று உமக்குத் தெரியுமா?உமது பின்னூட்டங்கள் உமக்கு இருக்கும் வரலாற்று அறிவை உணர்த்துகின்றன.இந்தத்துரை மூளைச்சலவை செய்யப்பட்டு காசுக்கு எழுதுபவர்.இவருடைய பின்னூட்டங்களில் சிங்கள இனவெறியும் வெளிநாடுவாழ்தமிழர்கள் மீதான பொறாமையும் தவிர வேறொன்றும் இருப்பதில்லை.இவர் பல்வேறு பெயர்களில் எழுதுபவர்.நீர் கேட்ட எந்தக்கேள்விக்கும் உருப்படியான பதில் தரவில்லை.இனியிம் தரமாட்டார் .அவருக்கு இடப்பட்ட கட்டளைப்படி அவர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அவர்.அவருக்குப்பதில்சொல்லி உமது நேரத்தை ஏன் வீண்டிக்கிறீர்?

  9. para says:
    15 years ago

    அப்பு,
    உங்களுக்கும் துரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் ரெண்டு பேருமே சனத்தை பற்றிக் எள்ளளவும் கவலைப்பட மாட்டீர்கள். ஒருவருக்கு தான் சொல்வது சரி மற்றவருக்கும் அப்படிதான். கட்டுரை பற்றி ஏதாவது சொன்னீர்களா?

  10. அப்பு says:
    15 years ago

    20 இலட்சம் தமிழர்களை இழந்த வலியும் எஞ்சியிருக்கின்ற தமிழரையும் அடிமைப்படுத்த நினைக்கின்ற சிங்கள பேரினவாதமும் ஒன்றா?கட்டுரைக்கு கருத்துரைக்காமல் வேறு எதைப்பற்றி கருத்துரைத்துள்ளேன் சொல்லுங்கள்?நீங்கள் அடிபட்டவனையும் அடிகொடுத்தவனையும் ஒன்று என்கிறீரா?நாட்டாமை பண்ணுவதைவிட்டு எம் கருத்துக்களுக்கு மறுப்புரையுங்கள்?விவாதிக்கத் தயார்.சிங்கள பேரினவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்  எஞ்சியிருக்கின்ற தமிழரை இணையவழி குழப்ப வந்துள்ளது உமக்குத் தெரியாதா?தமிழீழ விடுதலை தமிழ் மக்களுக்காக அன்றி வேறு யாருக்கு?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...