இலங்கையில் பல வருடங்களாக நடைபெற்ற யுத்தம் பல உயிரிழப்புக்களையும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது யுத்தம் முடிந்து நல்லதொரு எதிர்காலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதையே ஜேர்மன் விரும்புகின்றது என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் எச்.இ.ஜென்ஸ் புளோட்னர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை(21.12.2011) தன்னாமுனை மியான்மி மண்டபத்தில் இடம்பெற்ற, இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் செயற்றிட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற ஒரு தொகுதி இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை தமிழ்ப் பேசும் மக்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஒரு புறத்திலும் சிங்கள மக்கள் மீதான அடக்கும்றையையும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச அரசு ஏற்படுத்தியுள்ள சூழல் மேற்குநாடுகளுக்கு நல்ல சூழலாகத் தெரிவது வியப்புக்கு உரியதல்ல.
அரசுகள் இயந்திரமயமானது. ஜேர்மன் தூதுவர் இயந்திரத்தின் ஓர் அங்கமே அங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை. ஓர் அரசு ஏற்படுத்தும் சூழல்களை, ஏனைய அரசுகள் உள்வாங்குவதற்குரிய செயற்பாடுகளை இன்னொரு அரசு மூலமாகவே மேற்கொள்ள முடியும். அமைப்புகளினால் அல்ல. அமைப்புகள் உணர்ச்சிகொண்டவை. இயந்திரங்களுக்கு அது புரியாது.