யுத்தம் உறுதி: ஈரான்

தங்களின் அணுசக்தி நிலையத்தின் மீதான எந்த ஒரு தாக்குதலும் யுத்தத் திற்கான துவக்கமாகவே இருக்கும் என்றும் ஈரா னைத் தாக்கும் நாடுகள் வருந்த நேரிடும் என்றும் ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஹாரி கூறினார்.

அமெரிக்காவும், இஸ் ரேலும் தொடர்ந்து யுத்த மிரட்டலை எழுப்பி வரும் சூழ்நிலையிலேயே ஈரான் இவ்வாறு கூறியது. ஈரான் அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டி யிருந்தன.

பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஈரான் ரகசியமாக தயாரிக்கிறது என்றும் இவர்கள் குற்றம் சாட்டினர். ஈரானைத் தாக் கும் நோக்குடன் இஸ்ரேல் ராணுவப் பயிற்சி மேற் கொண்டதாக அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளி யிட்டிருந்தன.

இது ஈரானுக்கான முன்னெச்சரிக்கையாக மதிப்பிடப் பட் டது.

எரிசக்தி தேவைக்காக மட்டுமே தாங்கள் அணு சக்தித் திட்டத்தை செயல் படுத்துவதாக ஈரான் ஏற் கெனவே தெளிவுபடுத் தி யது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநாட்டின் இடையே, ஜூலை 9-ம் தேதி அமெ ரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை சந்தித்து மன் மோகன் சிங் முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அமெரிக்காவுடனான அடிமைச் சாசனமாக அணு சக்தி உடன்பாட்டை நிறை வேற்றியே தீருவோம் என்று தீவிரமாக உள்ள மன் மோகன் சிங், இடதுசாரிக் கட்சிகள் ஜூலை 7-ம்தேதி திங்கட்கிழமை வரை ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குகெடு விதித்திருந் தும் கூட, சமாஜ்வாதி கட்சி மற்றும் சில உதிரி கட்சி எம். பி.க்களின் ஆதரவுடன் தனது ஆட்சியை காப்பாற் றிக் கொள்ளவும் முயற்சித்து வருகிறார்.

இந்த சூழலில், அணு சக்தி உடன்பாட்டை உறு தியாக செயல்படுத்தி விடு வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சிடம் உறுதியளிக்கவும், இந்த உடன்பாடு குறித்து மேலும், பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமர் மன் மோகன் சிங் ஜி-8 மாநாட்டை பயன்படுத்தி கொள்கிறார்.

பிரதமரின் இந்த பய ணம் குறித்து செய்தி யாளர்களிடம் ஏற்கெனவே பேசிய அயல்துறை செய லாளர் சிவசங்கர் மேனன், மிக விரைவில் அரசு அமெ ரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற் றும் என்று கூறினார்.