வாஷிங்டன், ஜூன் 27-
இராக் மற்றும் ஆப்கானிஸ் தானத்தில் அமெரிக்கா நடத் திவரும் யுத்தத்துக்கு 16,200 கோடி டாலர்களை ஒதுக்க அமெரிக்க செனட் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒதுக் கீடு ஜனாதிபதியின் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஒதுக்கீடு குறித்து ஜனநாயகக் கட்சிக்கும் குடி யரசுக் கட்சிக்கும் இடையில் கடும் சர்ச்சை நிலவியது. இராக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கான கால அட்டவணை இணைக்கப் பட வேண்டும் என்று ஜனநா யகக் கட்சி கூறியது. 2006ம் ஆண்டில் செனட்டில் ஜனநா யகக் கட்சி பெரும்பான்மை பெற்ற போதும், இராக் யுத்த விஷயத்தில் புஷ்சை அக்கட்சி நிர்ப்பந்திக்கவில்லை. செனட் டில் இந்த நிதி ஒதுக்கீடு சட்ட வரைவு 92-6 என்ற வாக்கு களில் நிறைவேறியது.
2009ம் ஆண்டின் நடுப் பகுதி வரை இந்த ஒதுக்கீடு செல்லக்கூடியது. இந்தச் சட்ட வரைவின்படி, இராக் அரசு மறுகட்டமைப்புக்கு தேவை யான நிதியைச் செலவிட முடியும். ஆனால், இராக்கில் அமெரிக்கா நிரந்தர ராணுவ முகாம்களை அமைக்க இச் சட்ட வரைவு தடை செய்கிறது.
இத்துடன் இராக் யுத்தச் செலவுகளுக்கென இதுவரை 65,600 கோடி டாலர்களை அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் ராபர்ட் பைர்ட் கூறியுள்ளார்