தமிழீழத்தை உருவாக்கும் நிராயுத பொறி முறையில் நாடு கடந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் செயற்படுகின்றனர். இவர்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களையும் சாட்சியங்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றின் நிழலாகவே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலும் காணப்பட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் போது வெறும் 26 பேர் மாத்திரமே இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனதாக தகவல்கள் உள்ளது. பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுவது புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் திட்டமிட்ட இலங்கைக்கு எதிரான போலி பிரசார நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை இதனையே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன.
இலங்கை அரச பயங்கரவாதி கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவும் பேரினவாத்தில் பிழைப்பு நட்த்தவும் இவ்வாறு கூறும் அதே வேளை புலி ஆதரவாளர்களோ புலிகளும் அவர்களின் அரசியலும் இன்னும் வாழ்கின்றன எனப் புலம்பெயர் நாடுகளில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். ஆக, இலங்கை அரசும் புலம் பெயர் புலிகளும் ஒருவருக்கொருவர் ஊட்டி வளர்ந்துகொள்கிறார்கள்.
இது தானே காலம் காலமாக நடை பெறுகிறது.