21.12.2008.
யு.எஸ். – நேட்டோ சப்ளை பாதையை பாகிஸ்தான் மூட வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் வலியுறுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக பொருட்கள் படகில் சப்ளை ஆகின்றன.
இந்த சப்ளை பாதையை பாகிஸ்தான் மூட வேண்டும் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்பாளர்கள் பெஷாவரில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது சமீபத்தில் பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்தும் எதிர்ப்பாளர்கள் கோபத்தை வெளிக்காட்டினர்.
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதிகளில் அல் கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்ப தாக அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
நம் நாட்டின் வழியாக ஆயுதங்களை கொண்டு சென்று நம்மையே தாக்குகிறார்கள் என போராட்டம் நடத்திய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாகாண தலைவர் சிராஜில் ஹக் தெரிவித்தார்.