21.10.2008.
லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர்நெட் சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் யாஹூ, கூகுள் மற்றும் ஆன்லைன் ஏல நிறுவனம் ஈபே ஆகியவை கணிசமான பணியாளர்களை வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியின் காரணமாக அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் ஐடி நிறுவன பணியாளர்கள்தான்.
யாஹூ நிறுவனத்தில் 14300 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 1000 பேரை ஏற்கெனவே நீக்கிவிட்ட இந்நிறுவனம், இப்போது மேலும் பலரை அடுத்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது.
ஆன்லைன் ஏல நிறுவனமான ஈபேயில் 16000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 10 சதவிகிதம் அதாவது 1600 பேரை அந்நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்குகிறது. இவர்களில் 10 ஆயிரம் பேர் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியில் உள்ளவர்கள். தனது மொத்த பணியாளர்களில் கணிசமான ஊழியர்களுக்கு பணிநீக்க உத்தரவு தயார் செய்து வைத்துள்ள கூகுள், இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அறிவிக்க உள்ளது.