யாழ். மாவட்டம் வலிகாமம் மேற்கில் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும், சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின் றன.
இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கி அண்மையில் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ள மக்கள் மத்தியில் இந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துணைவிச் சந்தி, தொல்புரம் ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு புதிதாக இராணுவ முகாம்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் காலை மாலை வேளைகளில் நடைபெறுவதும் தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.