யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும்பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தாக்குதல்கள் மாணவர்;கள் மீதான
தாக்குதல் மட்டுமின்றி அனைத்துத் தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கிவைத்திருப்பதற்கான கொடூரக் தாக்குதலாகும். இது தமிழ் மக்கள் மீதான பேரினவாத ராணுவ ஒடுக்கு முறை நீடிக்கப்பட்டு வருவதையேவெளிகாட்டியுள்ளது. கடந்த 27ம் 28ம் திகதிகளில் யாழ்- பல்கலைக்கழகத்தில்மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.அத்துடன் மாணவர்கள் தமக்கான பாதுகாப்பு, சுதந்திரமான கற்றல், பல்கலைக்கழக சுற்றாடலில் இருந்து பாதுகாப்புப் படைகளை விலகச் செய்தல் போன்ற நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து வருவதையும் கட்சி ஆதரிக்கின்றது. இவ்வாறு புதிய- ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில், மாணவ மாணவிகளின் விடுதிகளுக்;குள் பலாத்காரமாகப்
புகுந்து அநாகரிகமான வழிகளில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடாத்தி இருக்கிறார்கள். இதனை மறுநாள் மாணவர்கள் அனைவரும் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தி கொண்டார்கள். அமைதியாக நடாத்திய
அப்போராட்டம் ஜனநாயக ரீதியானதாகும். அதனைத் தடுத்தே மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேற்படி தாக்குதல் இடம் பெற்ற வேளை அங்கு வந்த யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்
தூசிக்கப்பட்டதுடன் அவரது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று உதயன் நாளிதழின் ஆசிரியர் பிரேமானந் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் அரசாங்கத்தினதும் பாதுகாப்புப்
படையிகளினதும் தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டையே தெளிவுப்படுத்தி காட்டுகின்றது. எனவே மேற்படி மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்நகரில்;
இடம் பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி தமது ஆதரவை தெரிவித்துக் அவற்றில் கலந்து கொள்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி. கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்.
பு.ஜ.மா.லெ.க
பேச்சுரிமைக்கு இலங்கையில் அச்சுறுத்தல் – அமெரிக்கா கண்டனம் :
கொழும்பு,நவ.30(டி.என்.எஸ்) யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிகா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தவறான செயல். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது. பேச்சுரிமைக்கு இலங்கையில் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நவம்பர் 28ஆம் தேதி செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். இதனால் செய்தியாளர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அடக்குமுறை பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
Now there is a Inter University Centre to compete with the Inter University Student Federation. 1970 Intake to Peradeniya Campus. Patience and prudence must prevail in the North and East.
NEW NEW=================NEW============NEW INFOa newly created paramilitary, called Sri TELO that is operating along with the SL military. The paramilitary, consisting of some Tamils recently brought from camps in India and allegedly backed by New Delhi, hurriedly opened an office adjacent to the university campus a week ago
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35805