Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
12/24/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
14
Home பிரதான பதிவுகள் | Principle posts

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 60 ஆண்டுகளாக தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனையைத் தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்திருக்கிறது. இன்று பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துக்காட்டத்தக்கது. வன்னியில் இன அழிப்பை நடத்தி முடித்த ராஜபக்ச பாசிசம் அதன் ஆதார சக்திகள் அனைத்தும் புடை சூழ இனச்சுத்திகரிப்பு நடைபெறும் நிலையில் மாணவர்கள் துணிந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இவர்களது போராட்டம் பாதுகாக்கப்படவேண்டும். அது அடுத்த நிலையை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆரம்பம்..

பேராசிரியர் கைலாசபதி போன்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளால் 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம், ஆரம்பத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாவிருந்து 1979 ஆம் ஆண்டு இலங்கையில் சுயாதீனமாக இயங்கும் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எதிராக தமிழரசுக் கட்சி போன்ற வலது சாரிக் கட்சிகள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவந்தன.

கைலாசபதி தோற்றுவித்த கல்விப் பாரம்பரியம் அங்கே அதிகாரவர்க்கத்திற்கு எதிரான உணர்வை ஆரம்பத்திலேயே விதைத்திருந்தது. மத்தியதர வர்க்க சிறு நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண சமூகத்தில் கைலாசபதியின் முற்போகான பாத்திரம் நிராகரிக்கப்பட முடியாத ஒன்று.

பின்னதாக பிற்போக்கு வாத வலதுசாரிகளின் ஆதிக்கம் 1977 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சு.வித்தியானந்தன் என்ற யாழ் வேளாள மேட்டுக்குடி சிந்தனையைக் கொண்ட தமிழரசுக் கட்சியின் அடியாள்  அரச செல்வாக்கோடு துணைவேந்தராகப் பதவியேற்றுக்கொள்கிறார். 1977 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வலதுசாரி அதிகார வர்க்கம் சார்ந்த தலைமையும் அதற்கெதிரான மாணவர் போராட்டங்களும் ஒன்றோடொன்று முரண்பட நிலையில் வளர்ந்து வந்துள்ளன.

வெகுஜன அமைப்புக்கள்..

உரிமைக்காகப் போராடுகின்ற மக்களின் போராட்டம் வெற்றியடைவத்ற்கன அடிப்படை என்பதே மக்களை அமைப்பாக அணிதிரட்டுவதிலிருந்தே ஆரம்பமாகிறது. காஷ்மீரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற அளவில் இராணுவம் நிலைகொண்டிருகின்ற போதிலும், யாழ்ப்பாணத்தைப் போன்று இலகுவில் மக்கள் போராட்டத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அழிக்க இயலவில்லை.

அங்குள்ள இஸ்லமிய மக்கள் தமது இஸ்லாமிய நிறுவனங்களில் ஒன்றுகூடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணையும் மக்களின் கூட்டு உணர்வு என்பது தனி மனிதர்களின் செயற்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமையும். தொழில் வளர்ச்சியடைந்த காலத்தில் தொழிற்சாலைகளில் மக்களின் ஒருங்கிணைவு புரட்சிகரமான தொழிற்சங்களை உருவாகுவதற்கும் அவை புரட்சிகரக் கடசிகளால் வழிநடத்தப்படும் போது சமூக மாற்றத்திற்கான போராட்டமாகவும் மேலெழுந்தன.

சேவைத் துறை என்பது மத்தியதர வர்க்கத்தின் பொருளாதர ஆதரமாகவும், சிறு நில விவசாயம் என்பது அதன் கீழணிகளின் உற்பத்தியாகவும் அமைந்த யாழ்ப்பாணத்தில் மக்கள் இயல்பாகவே கூடும் சமூக நிறுவனங்கள் அரிதாகவே காணப்பட்டன. சன சமூக நிலையங்கள், சிறிய பெண்கள் அமைப்புக்கள், பாடசாலை மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், அபிவிருத்தி சங்கங்கள் ஆகியன ஆங்காங்கு காணப்பட்டன.

இந்த நிலையில் தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாக விரிவடைகிறது. அதனோடு கூடவே தேசிய விடுதலைக்கான இயக்கங்கள் இராணுவக் குழுக்களாக உருவாகின்றன. அந்தவேளையில் மக்கள் மத்தியிலுள்ள வர்க்க முரண்பாடுகளையும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் முன்வைத்து வெகுஜன அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன.

இந்திய அரச ஆக்கிரமிப்பின் ஆரம்பம்…

இதன் அபாயத்தைப் புரிந்துகொண்ட இந்திய அரசு இயக்கங்களின் இராணுவ மனோபாவத்தை ஊக்கப்படுத்தி அவற்றைப் பலம்மிக்க இராணுவக் குழுக்களாக வளர்க்கும் நோக்கில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்க முன்வருகின்றது.

தமிழீழ தேசிய விடுதலை இயக்கம்(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), ஈழப் புரட்சிகர அமைப்பு(EROS) போன்ற இயகங்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி அவற்றின் மத்தியில் எஞ்சியிருந்த குறைந்தபட்ச போராட்ட உணர்வையும் மழுங்கடித்தது. புரட்சிகர இயக்கங்களாக உருவாக வேண்டிய விடுதலை இயக்கங்கள் அதிகாரத்திற்காக மோதிக்கொள்ளும் இராணுவக் குழுக்களாக மாற்றமடைந்தன.

80களில் யாழ்ப்பாணப் பல்கலைகழகம்..

எண்பதுகளில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலின் முன்னால் காணப்பட்ட புத்தகக் கடையில் மார்க்சிய நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக எந்த நேரமும் நூல்களை வாங்குவதற்கா அலைமோதும் மாணவர் கூட்டத்தைக் காணலாம். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவான சிங்கள மாணவர்கள் தென்னிலங்கையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து கருத்தரங்குகளில் கலந்துகொண்டனர்.

வெகுஜன அமைப்புக்கள் பல்கலைகழக்த்தில் கூட்டங்களை நடத்தின. சிறிய வெளியீடுகள், புதிய எழுத்தாளர்கள், போராளிகள் என்று பல்கலைக்கழகம் வெகுஜன அமைப்புக்களின் மையப்பகுதியாகச் செயற்பட்டது.

வெகுஜன அமைப்புக்கள் பலமற்றதாகக் காணப்பட்ட சமூகத்தில் யாழ்.பல்கலைக்கழகம் ஒரு வெகுஜன அமைப்பாகவே செயற்பட்டது. அதனை மயப்படுத்தி பலவீனமான வெகுஜன அமைப்புக்கள் இணைந்துகொண்டன.

சாகும்வரை உண்ணாவிரதம்..

1983 ஆம் ஆண்டில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அந்த ஆண்டு ஜூலைப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தெற்கு பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதமிருந்த்னர். தெற்கில் தாம் தொடர்ந்தும் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தம்மை தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு மாற்றுமாறே இந்த உண்ணாவிரதம் ஆரம்பமானது.

இவர்களது போராட்டம் வடக்கில் மாபெரும் எழுச்சியாக உருவெடுத்தது. இந்த எழுச்சியால் உந்தப்பட்ட இளைஞர்கள் பலர் சாரிசாரியாக இந்திய அரசின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காக இயக்கங்களில் இணைந்துகொண்டனர்.
அப்போது இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியிருந்தது. பல பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களில் முக்கிய உறுப்பினர்களாயினர். பல்கலைகழகத்திலிருந்து விடுதலைப் புலிகள் சார்பான மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பும், பின்னதாக கலாச்சாரக் குழு என்ற அமைப்பும் இயங்க ஆரம்பித்தன. முரண்பாடுகளை விவாதிக்கும் தத்துவார்த்த களமாக யாழ்.பல்கலைகழகம் காணப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகம் தேசிய இன ஒடுக்குமுறை மேலோங்கிய காலத்தில் தனது எல்லைக்குள் காத்திரமான பங்களிப்பை வழங்கிய போதும் போராட்டத்தின் அரசியல் தலைமை இந்தியாவினதும் பிற்போக்குவாத இயக்கங்களினதும் பிடியில் இருந்தமையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இயக்கங்களுக்கு ஆள்பிடிப்பதற்கான கருவியாக செயலாற்றி தனது உள்ளார்ந்த வலுவை இழந்துபோனது.

விடுதலை இயக்க இராணுவக் குழுக்களின் வருகை..

84 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் கொடுரமான இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட போராளிகள் துப்பாக்கிகளோடு வடகிழக்குத் தெருக்களில் உலாவ ஆரம்பித்தனர். இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. அரச சிவில் நிர்வாகம் சீர்கலைக்கப்பட்டடது. இயக்கங்கள் சிவில் நிர்வாகத்தைப் பிரதியிட்டன.

இன்னொரு அரசாக இயக்கங்கள் செயற்பட ஆரம்பித்தன. இலங்கை அரசின் அதே ஒடுக்குமுறை இயந்திரம் இப்போது இயக்கங்களின் கட்டுப்பாற்குள் வந்தன. அப்போது இயக்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்கள் அங்காகங்கே எழுந்தன. அவை இயக்கங்களை ஜனநாயக மயப்படுத்துவதற்குப் பதிலாக இயக்க முரண்பாடுகளை கையாள்வதற்குப் பயன்பட்டன. சிறிய இயக்கங்களாக உருவாகியிருந்த இயக்கங்கள் தாமும் அதிகாரம் செலுத்துவதற்கான உரிமையைக் கோரி போராட ஆரம்பித்தன. அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான அவர்களின் போராட்டத்தை சிறிய இயக்கங்கள் ஜனநாயகத்திற்கான போராட்டம் என அழைத்துக்கொண்டன.

TELO இயக்கம் அழிக்கப்பட்டது…

1986 ஆம் ஆண்டு ஏப்ப்ரல் மாதம் புலிகள் இயக்கத்தால் ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டது. ஒரு சில நாட்களுக்குள் முடிந்த இந்த அழிப்பில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றே ரெலோவில் இணைந்துகொண்ட போராளிகள் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மரணித்துப் போயினர்.

ரெலோ இயக்கத்தை அழித்தபோது போராட்டங்களை நடத்தமுயன்ற பல வெகுஜன அமைப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பல்கலைக்கழகத்துள் பல மாணவர்களும் அரசியல் முன்னோடிகளும் சிறிய கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது ஒரு புறத்தில் டக்ளஸ் தேவானந்தாவினதும் மறுபுறத்தில் புலிகளதும் ஆதரவாளரக் கருதப்பட்ட பேராசியர் சிவத்தம்பி இனிமேல் இந்த அழிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதில் பயனில்லை என்றும் ஏற்கனவே கள்வியன்காட்டுப் பகுதியில் போராட்டம் நடத்தும் வெகுஜன அமைப்புக்களோடு பேசுமாறும் முடிவெடுக்கிறார்.

மாணவர்களின் எதிர்ப்பு..

ரெலோ போராளிகளின் கோரமான கொலைகள் யாழ்ப்பாணம் முழுவதிலும் விரக்தியையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இது நடைபெற்று சில மாதங்களின் பின்னர் யாழ்.பல்கலைகழக்த்திற்கு புதிய மாணவர்கள் இணைக்கும் கல்வியாண்டு ஆரம்பமானது. அவ்வேளையில் புதிதாக இணைக்கப்படும் மாணவர்களைப் பகிடிவதை என்ப்படும் ராகிங் இற்கு உட்படுத்தக்கூடாது என புலிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ரெலோ அழிப்பின் போதான வன்முறைகளும் புலிகளின் ஆணையும் மக்கள் மாணவர் மத்தியில் விரக்தியையும் எதிர்ப்புணவையும் ஏற்படுத்தியிருந்தது. சில மாணவர்கள் அடையாளமாக பகிடிவதைகளை மேற்கொள்ள அவர்களைப் புலிகள் கைது செய்து விசாணைசெய்கின்றனர்.

விசாரணையின் போது தாக்கப்பட்ட அவர்கள் விடுதலை செய்யப்படவுடன் பல்கலைகழகத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு இரத்தவாந்தி எடுத்ததைக்கண்டு உணர்ச்சிவசப்பட்ட மாணவர்கள் இயக்கங்களின் வன்முறைக்கு எதிராகப் போராடுவதற்கு என அமைப்புக்குழு ஒன்றை உருவாக்கிக்கொள்கின்றனர். அங்கு ஏற்கனவே இருந்த மணவர் தலைமை புலிகள் மேற்கொண்ட வன்முறைக்கு எதிராகப் போராட மறுத்தமையால்,  அமைப்புக்குழு முழுமாணவர்களதும் ஆதரவோடு தோற்றுவிக்கப்படுகின்றது. மாணவர்களின் தலைமைச் அலுவலகம் அமைப்புக்குழுவால் கைப்பற்றப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நிலையில் அமைப்புக்குழுவிலிருந்த மாணவன் விஜிதரன் புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையில் மரணத்தைத் தழுவிக்கொள்கிறான்.

விஜிதரன் என்ற மானவனை விடுதலை செய்வதற்கான போராட்டம்…

அதன் பின்னர் அமைப்புக்குழுவிலிருந்தவர்கள் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். மாணவர்கள் சாகும் வரைக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகின்றது. இயக்கங்கள் தோன்றிய 80 களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அதிகளவில் மக்கள் கலந்துகொண்ட போராட்டமே விஜிதரனின் கைதிற்கு எதிரான ஜனநாயகப்போராட்டம். அதற்கு முன்னரும் பின்னரும் இதுவரைக்கும் பெரும் எழுச்சியாக எந்த ஜனநாயகப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. கிராமங்களிலிருந்து மக்கள் சாரிசாரியாகப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். பாடசாலைச் சீருடைகளுடன் மாணவர்கள் போராட்ட களத்திற்கு கால்நடையாக வந்தனர்.

இந்தப் போராட்டம் குறித்த காணொளி கீழே:

புலிகள் இயக்கத்திற்கு யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளரக இருந்த கிட்டுவின் உத்தரவின் பெயரில் மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். ஒரு மாணவனைப் பலிகொடுத்த பின்னரும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. சமரச முயற்சிகள், பேச்சுக்கள் தோல்வியுற்றன. குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.

வாரக்கணக்கில் வீடுகளுக்குச் செல்லாமல் நூற்றுக்கணகான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியிருந்தனர். இரவு வேளைகளில் பல்கலைக்கழகத்தின் வெளிவீதி வெறிச்சோடிக்கிடந்தது. 22 துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பாடசாலைகளிலும், கிராமங்களிலும் மாணவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். சாவக்கச்சேரி பாடசாலையில் பிரச்சாரங்களை முடித்துக்கொண்டு தங்கியிருந்த மாணவர்கள் அப்போது அப்பகுதியில் புலிகளின் பொறுப்பதிகாரியாகவிருந்த கேடி என்பவரின் தலைமையில் தாக்கப்பட்டு இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காணொளியில் கூறப்படுவது போன்றே போராட்டத்திற்கு 27 வெகுஜன அமைப்புக்கள் ஆதரவளித்தன. ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் அடையாள உண்ணாவிரதங்களிலும் அவர்கள் கலந்துகொண்டனர். அந்த வெகுஜன இயக்கங்களே போராட்டத்தின் அடிப்படைப் பலமாக அமைந்திருந்தன. அவர்களின் துணையின்றி மாணவர்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தியிருக்க முடியாது.

மாணவர்களின் முழக்கங்கள் தெளிவானவை:

1. இலங்கை அரசு பேரினவாத அரசாங்கம்.

2. இலங்கை அரசின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் சுதந்திரப் போராளிகள்.

3. போராளிகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, மக்கள் மீதும் மாணவர்கள் மீது அவர்களின் வன்முறையையே நாங்கள் எதிர்க்கிறோம்.

4. இயக்கங்களின் மக்கள் மீதான வன்முறை இராணுவ வாதத்தை அதிகரித்து மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி இயக்கங்களையே ஒரு நாள் அழித்துவிடும்.

இதைவிட இரண்டு முக்கியமான விடையங்களைக் காணலாம்:

முதலில் இயக்கங்கள் அனைத்தும் மாணவர்களது கோரிக்கைகளை நிராகரித்தாலும் இறுதியில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரண்டாவதாக போராட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் போராட்டமகக் காட்டமுயன்ற சுரேஷ் பிரமச்சந்திரனது முயற்சி தோல்விகண்டது.

உறுதியான அரசியல் தலைமை பல்கலைக்க்ழகத்திற்கு வெளியில் காணப்படாத நிலையில் ஜனநாயகத்திற்கான போராட்டம் அடுத்த நிலையை நோக்கி வளர்த்துச் செல்லப்படவில்லை என்பது போராட்டத்தின் தோல்வியாகும். தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறித்துக்காட்டத்தக்க போராட்ட்ங்களில் ஒன்றான விஜிதரன் விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டம் அரசியல் தலைமையின்மையால் பின்னதாக சில விசமிகளால் கொச்சைப்படுத்தப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் வங்கிக்கொள்ளையான ஹட்டன் நஷனல் வங்கியில் கொள்ளைடித்த பணத்தைச் சுருட்டிக்கொண்ட ரயாகரன் என்ற தன்முனைப்பு விசமி தன்னிடமிருந்த பணத்தை விஜிதரன் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக தளபாடங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தியதாகக் தனது இணையத்தளத்தில் எழுதியிருந்தான்.

மாணவர்களால் திட்டமிட்டு ஆபத்தான சூழலில், உயிரைப் பண்யமாக வைத்து, இரண்டு உயிர்களைப் பலிகொடுத்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பணம் வழங்கியதாகக் கூறிக் கொச்சைப்படுத்தும் ரயாகரன் போராட்டத்திற்கு தலைமைதாங்கியதும் தானே எனவும் கூறியது பலரை அருவருக்கச் செய்தது. விஜிதரன் போராட்ட அனுபவங்களையும் அதிலிருந்த கற்றலையும் வெளிக்கொண்டுவருவதயும் சிக்கலான ஒன்றாக மாற்றிவிட்டிருந்தது.

விஜிதரன் குறித்த போராட்டத்தின் வெற்றி, மாணவர்களது வெகுஜன அமைப்புக்களதும் வெற்றி. சிறிய அளவில் கணப்பட்ட வெகுஜன அமைப்புக்களை ஈ.பி.ஆர்.எப் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் இணைத்துக்கொண்டனர். புலிகளின் அழிவோடு அவைகளும் அழிந்துபோயின.

மிகவும் ஆபத்தான சூழலில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு பயன்படக்கூடியவற்றைக் கற்றுத்தfருகிறது. அன்று வெகுஜன அமைப்புக்கள் பலவீனமானக் காணப்பட்ட சூழலில் அவற்றை ஒருங்கிணைக்கும் புள்ளியாகப் பல்கலைக்கழகமே காணப்பட்டது, இன்று வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகமே வெகுஜன அமைப்பாகச் செயற்படும் நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

இந்த சூழலில் தமது ஒன்றுகூடும் உரிமைக்காக மாணவர்கள் முன்னெடுத்த் போராட்டங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். போராட்டங்களின் ஆதரவு சக்தியான வெகுஜன அமைப்புக்களுக்கு பதிலக சர்வதேச ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவு திரட்டப்பட வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆரம்பமாக முன்வைத்து இலங்கை பாசிச அரசிற்கு எதிரகவும் இந்திய ஆக்கிமிப்பு அரசுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் போராட்டம் திட்டமிடப்பட வேண்டும்.

இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு மேலும் கூர்மையடைந்திருக்கும் நிலையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கள் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் அணிதிரட்டப்பட் வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் எழும் போது மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் மக்களின் போராட்டம் இனவாத ஐதீகங்களைக் கடந்த மக்களின் விடுதலைக்கான போராட்டமாக மாற்றம் பெறும் என்பது சொல்லப்பட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களதும் சர்வதேச முற்போக்கு இயக்கங்கள் சூழ வாழும் புலம் பெயர் மக்களதும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்க எமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் பற்றும் மனித அபிமானமும் உடைய அனைவரும் மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்தால் மட்டுமே அறுபது ஆண்டுகள் சுறையாடப்படும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அடுத்த நிலையை நோக்கி முன்செல்ல முடியும்.

இனச்சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இலங்கை அரச பாசிசம் யாழ்.பல்கலைக்கழகத்தை ஒரு அபாயச் சின்னமாகவே கருதுகின்றது. அதனை அழிப்பதற்கான தனது வேலைத்திட்டத்தை துணைக்குழுக்களின் ஆதரவோடு ஆரம்பித்துவிட்டது. இதற்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இன்று ஆரம்பிக்கப்படாவிட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம்.

இலங்கை அரசிற்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிடுதலை மாணவர் போராட்டத்திலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதே இன்று எமக்க்கு முன்னால் உள்ள வினா..

இன்னும் வரும்…

முதல்பாகம்:

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து..

தொடர்புடைய பதிவுகள்:

பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள்
பல்கலைக்கழகம் மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்
யாழ்.பல்கலைகழக மாணவர் போராட்டம் தொடரும் : பிரதிநிதிகள் உறுதி
பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்
பல்கலைக்கழக மாணவிகளையும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு

 

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது!

இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது!

Comments 14

  1. P.V.Sri Rangan says:
    13 years ago

    அன்பு நாவலன்,பல்கலைக்கழக மாணவர்களது போராட்டம் குறித்த உங்கள் தொடருக்குப் பதிலெழுதுவதைத் தவிர்க்கவே விரும்பினேன்.அதுள், நீங்கள் கைவைத்த பகுதி ஜேர்மனிய மாணவர்களது 60களில் ஆரம்பித்த போராட்டம்,அதன் சாதக பாதங்கள் குறித்த புரிதலுள் உள்ள குறைபாடுகளால் நாம்முட்டிமோதுவதில் எனக்கு வேண்டாமெனப் போகிறது.

    யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்களர்ளது போராட்டம் எப்போதுபோலவே ஜேர்மனிய மாணவரது போராட்டதுடன் ஒப்பிடமுடியாததும்,அதன் குண-வர்க்வுணர்வுகளுக்கு அப்பாற்பட்டதுமென்பது எனது முடிபு.

    இன்று, ஆரம்பித்த யாழ்ப் பல்கலைக்கழகப் போராட்டத்தை நான் ஆதரிக்கப்போவதில்லை!அதற்கான காரணங்களை ஏலவே எழுதியும்விட்டேன்.இப்போதைய சூழலை மையப்படுத்தி ஜேர்மனிய மாணவர்களது போராட்டத்துள் டாக்டர் திரு.ரூடி டுச்கேயின் [Dr. phil.Alfred Willi Rudi Dutschke ]பாத்திரத்தை இணைத்துக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். சிலவுண்மைகளை நாம் மேலோட்டமாகப் பார்ப்பதால் அது பாரிய பின்விளைவுகளைச் செய்கிறது.

    Dr. phil.Alfred Willi Rudi Dutschke குறித்து வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கு ஜேர்மனிய மாணவர் போராட்டத்து முன்னோடிகளின் மிக முக்கிய மாணவியும் பின்னாளில் மறியலில் [ Stammheim-Prozess ]மரணித்தவளான உல்றிக்கே மைன்கொவ் [Ulrike Marie Meinhof ] Rote Armee Fraktion குறித்தும்பாரிய புரிதற்பாடிருக்கவேண்டும்.இது தாண்டியின்றும் உயிருடன் வாழும் தத்துவவாதி Prof.Dr. Oskar Negt, Prof.Dr. Herbert Marcuse குறித்த நீண்ட புரிதலும் அவசியமானது என்பது எனது தாழ்மையான கருத்து.

    இன்று,இரயாகரனது புரட்சிப் பாத்திரம் நமக்குள் எப்படிப்பட்டதாகவிருக்கிறது? இஃதே, ரூடி டுச்கேயினது பாத்திரமும்.
    அவரது சகல நடவடிக்கையுங்குறித்துத் தொடராக விவாதிக்க வேண்டும்.நீங்கள் தொடவிரும்பும் தளத்திலிருந்து தொடரலாம்.சிறு குறிப்பை உங்கட்கு இதுள் உணர்த்துகிறேன்.ரூடி டுச்கேயின் கேம்பிறஜ் கல்விக்கும்,வீடுமாறிக் குடியேறுவதற்குமான செலவை ஜேர்மனிய ஜனாதிபதி கூஸ்ரா கைனாமான் [Bundespräsident Gustav Heinemann ]தனது சொந்தப் பொக்கற்றிலிருந்து கொடுத்தார்.புரட்சிகரப் பாத்திரம், சுடுபடல்,வலிப்பு “பின் பொருட்டு” குளிநீர் தொட்டியில் கிடந்து மரணம், எனத் தொடரும் பலதையும் விவாதிக்கலாம்.யாழ்ப்பல்கலைக கழக மாணவர்போராட்டமும் இந்த வடிவத்துள் வினையாற்றுஞ் சூழலை நான் பிரத்தியேகமாகக் காணுகிறேன்.அவ்வளவுதாம்.நீங்கள் தொடர்ந்து விவவாதத்துள் இது வளர்வதை விரும்பினால் மீளத் தொடர்கிறேன்.

    நன்றி,
    ஸ்ரீரங்கன்
    24.12.2012

  2. veeran says:
    13 years ago

    போராட்டம் செய்யுங்கள், பின்பு அவர்கலை உனிவெர்சிட்ய் யை திறக்க சொல்லி போராட்டம், செய்ய வேண்டி வரும், அதற்குள் அவர்கள் அதனை மூடி அனுராதபுரதுக்கு மாற்றி விடுவர், இந்த வாய்சவடால் எல்லாம், லன்டனில் இருந்து பேசநல்லாத்தானிருக்கும், 

  3. suhirthan says:
    13 years ago

    “மெழுகுவத்தி வெண்ணைகள்”

    இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாமியாடிய மடையர்கள் கூட்டம்இ ஊழலுக்கு எதிராக சாமியாடும் மெழுகுவர்த்தி ஏற்றும் கூட்டம் போன்ற கெக்க பிக்க கூட்டத்தில் இப்போது புதிதாக பெண்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடும் டெல்லி கூட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. 

    இந்தக் கூட்டம் செய்கிற அளப்பரைகளைப் (ஓடுகிற காரை கவிழ்த்து உடைத்தல்இ காவலர்களைத் தாக்குதல்இ கூட்டமாக குய்யோ முறையோ என்று கத்துதல்இ வாய்க்கு வந்தபடி சட்டம் பேசுதல்இ தூக்கில் போடுஇ கொல்லுஇ குத்துஇ அடிஇ உதை என்று ஊளையிடுதல்) பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 

    ஒரு மலை வாழ்ப் பழங்குடிப் பெண்ணை ஆடைகளின்றி ஓட ஓடத் தெருக்களில் விரட்டி சாமியாடிய மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக எந்த ஊடகமும் இப்படி ஊளையிடவில்லைஇ எந்த முட்டாள் டெல்லி மாணவனும் வகுப்புகளைப் புறக்கணிக்கவில்லை. 

    காலம் காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவும்இ எளிய உழைக்கும் வர்க்கப் பெண்களுக்காகவும் இந்த மேதாவிகள் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகை இட்டதே இல்லை. சென்ற மாதத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தலித் பெண்ணுக்கு ஆதரவாக உள்ளூர் கல்லூரிப் பெண்கள் கூடக் குரல் எழுப்பவில்லை. 

    இதே மாதத்தில் பீகார் சாகர்ஷா மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கொலை செய்யப்பட்ட எட்டு வயது தலித் சிறுமிக்கு ஆதரவாக ஒரு மானங்கெட்ட ஊடகமும் ஊளையிடவில்லைஇ ஹரியானாவின் கைத்தல் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட “கர்ப்பிணிப்” பெண்ணின் அழுகுரலை எந்த ஊடகமும் ஒளிபரப்பவில்லை. 

    எந்த மருத்துவரும் நேரலையில் அவருடைய உடல் நலம் குறித்து அறிக்கைகளை வெளியிடவில்லைஇ கோஸ்வாமிகள்இ அம்மாமிகள்இ கரன் தப்பார்கள் யாரும் ஊடகங்களில் ஒப்பாரி இடவில்லைஇ சுஸ்மா சுவராஜ்கள் யாரும் மறந்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி முடக்கி விடவில்லைஇ எந்த பச்சனும் ஆவேசப்பட்டு அழவில்லை.

    ஊரகப் பகுதிப் பெண்களும்இ ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்களும் எக்கேடோ கெட்டுப் போகட்டும் இந்த தேசத்தில்இ ஊடக வெளிச்சம் பரவக்கூடிய இடங்களில் வாழும் மேட்டுக் குடிப் பெண்களின் மீது கை வைப்பவர்களை உடனே தூக்கில் போட வேண்டும். 

    எனது சொந்த மண்ணின் இறந்து போன பிஞ்சுக் குழந்தை கூடப் பெண் தானடா அயோக்கியர்களேஇ டெல்லிப் பெண்ணுக்காக நாடாளுமன்றத்தை முடக்குகிற மானஸ்தர்களேஇ தினந்தோறும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகவும் போராடப் பழகிக் கொள்ளுங்கள். 

    இன்றைக்குக் காட்டுகிற வெறியையும்இ வேகத்தையும் அல்லது அதில் ஒரு பத்து விழுக்காடாவது ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக நீங்கள் காட்டியிருப்பீர்களேயானால் எத்தனையோ பெண்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் இந்த தேசத்தில். 

    உங்கள் வீட்டுக்கு அருகில் வாழுகிற தலித் ஊராட்சி மன்றத் தலைவியின் மீது ஆசிட் வீசுகிற அயோக்கியர்களைக் கூட ஆராதனை செய்கிற மங்குனி மனிதர்கள் தானே நீங்கள்!!! உங்கள் தெருவில் கட்டி வைத்து நிர்வாணப்படுத்தப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களின் உடல் மீது வன்மத்தை வாரி இறைக்கும் மிருகங்கள் தானே நீங்கள்!!!

    வரிசையா நீங்க நடத்துற போராட்டங்களை எல்லாம் பாக்கும் போது வடிவேலு அண்ணன் சொல்ற மாதிரி “கெளம்பீட்டாங்கையாஇ கெளம்பீட்டாங்கையா” என்று சிரிக்கத் தான் தோணுது. குற்றவாளிகளைப் பிடித்தாயிற்றுஇ அவர்களை அடையாளமும் கண்டாயிற்றுஇ பாதிக்கப்பட்ட பெண்ணும் நலமடைந்து வருகிறார். 

    இப்ப எதுக்கு ரோட்டுல வந்து கரகாட்டம் ஆடுறிய???? உங்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் காவலர் சுபாஸ் தொமருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்களேஇ அவர்களின் கண்ணீர் என்ன கிளிசரின் போட்டாடா வழிகிறதுஇ மாக்கான்களா!!! 

    டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்ட பெண் விரைவில் நலம் பெறட்டும்இ குற்றவாளிகள் அதிகபட்ச தண்டனையை அடைவதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்கட்டும்இ கூடவே “இந்த மெழுகு வத்தி வெண்ணைகளையும் நாலு சாத்து சாத்தி உள்ள தூக்கிப் போடுங்க யுவர் ஆனர்” 

    உருப்படியா எதாச்சும் பண்ணுங்கடா மெழுகுவத்தி வெண்ணைகளா

    – கை. அறிவழகன்

  4. Tharmalinkam says:
    13 years ago

    //இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் வங்கிக்கொள்ளையான ஹட்டன் நஷனல் வங்கியில் கொள்ளைடித்த பணத்தைச் சுருட்டிக்கொண்ட ரயாகரன் என்ற தன்முனைப்பு விசமி தன்னிடமிருந்த பணத்தை விஜிதரன் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக தளபாடங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தியதாகக் தனது இணையத்தளத்தில் எழுதியிருந்தான்.//

    தாலி அறுப்பார் பேசும்”புரட்சி”-புரட்டென்பதேவுண்மை!

    http://srirangan62.wordpress.com/2012/12/24/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

  5. Tharmalinkam says:
    13 years ago

    முந்திய எனது பின்னூட்டங்களை ஏன் வெட்டினிர்கள்? சிறிரங்கன் எழுதி இருப்பதை இணைத்துள்ளேன். பொங்கு தமிழில் ரவி எழுதி உள்ளார். கொள்ள அடிக்கப்பட்ட பணத்தின் பெறுமதி 20 கோடி ரூபாய். 86 ஆம் ஆண்டில்… கணக்கு காட்டுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள். வட்டி காரனை விட மோசமானவ்ர்கள். அதில வேறு மக்களின் பணத்தினால் சியோன் சிவசேகர்மும் வாங்கபட்டுள்ளார்!

  6. thevan says:
    13 years ago

    அருமையான கட்டுரை,

    .

    .

    “ரயாகரன்” “வங்கிக்கொள்ளை” போன்ற தெரிவு செய்யப்பட்ட பந்திகளினால் முழு கட்டுரையின் பொருளே திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. பெரும் ஏமாற்றமாக உள்ளது.

    .

    .

    இந்த ரயாகரன் விவாதத்திற்குள் நுழைவது இங்கிதமில்லை,எனது நோக்கமுமல்ல. சமூக மாற்றம் சார்ந்ததுமல்ல.

    .

    இன்று விடயங்களை, நபர்களின் போட்டி, இணையங்களின் போட்டி அரசியலாக்கி மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எனது கண்களுக்கு தெரிகிறது. சமூகத்திற்கு தேவையான இவர்களது கருத்துக்கள், சிந்தனைகள் இவர்களது(ராய ,நாவலன் ,ஸ்ரீ ரங்கன் ) தனிநபர் குறைபாடுகளால் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

    .

    .

    இது என்னுமொரு பிரபாகரனிசமே (தனி நபர் தாக்குதல்,தனி நபர்அழிப்பு,character assassination )தவிர வேறொன்றுமில்லை .இவர்கள் ( .V.Sri Rangan ,அல்லது நாவலனோ )விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்தோ, ஜேர்மனிய மாணவர்களது போராட்டத்துளிலிருந்தோ ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.வெறும் தரவுகளை மனனம் செய்து ஒப்புவித்து தமது மேதவித்தனத்தினூடு மக்கள் விரோத கருத்தியல் ரீதியான ஆதிக்கம் செலுத்த முனையும் எனுமொரு பிரபாகரனே(மக்கள் விரோத ஆயுத ஆதிக்கம் ) அன்றி வேறொன்றும் சமூக மாற்றம் சார்பானது அல்ல என்பது தெட்ட தெளிவு.

    .

    .

    இதற்க்கான முன் தயாரிப்பே கடந்த சில தினங்களில் நிகழ்ந்த இனிஒருவின் பண்பு மாற்றமாகும். வாழ்க இனிஒரு .

    .

    .

    அறிவழகன்
    // WELL SAID. BUT THE AIM OF THE ARTICLE IS NOT “போராட்டம்” VERY SORRY. wE WILL MEET UP LATER.

    • நாவலன் says:
      13 years ago

      தேவன்,
      பிரபாகரனில் ஆரம்பிக்கிறது உங்களது பின்னூட்டம். பிரபாகரன் என்ற தனிமனிதனை முன்வைத்து மட்டுமே கடந்த போராட்டம் முழுவதையும் மீளாய்வு செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. ஆனால் புலிகள் அமைப்பினால் திரட்டப்பட்ட பெருந்தொகையான மக்கள் பணம் குறித்து கேள்வியெழுப்பப்படுவது இன்னும் ஒரு தளத்திலும் தேவையாகின்றது. இதே வகையான பணம் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அழிப்பு முயற்சிகளில் முதலிடப்படுகின்றது.
      என்னைக் கடந்தே இங்கு அரசியல் செய்ய வேண்டும் என்று அழைப்புவிடுத்து ரயாகரன் இன்னும் இரண்டு மூன்று நபர்களோடு நடத்தும் அவதூறு சிறிதளவாகவேனும் உருவாகும் ஜனநாயக முற்போக்குசக்திகளையும் அழித்து வருவது உங்களுக்குத் தெரியும். ரயாகரனின் இணையத்தில் ஆதாரமின்றிய 200 இற்கு மேற்பட்ட என் குறித்த அவதூறுக் கட்டுரைகள் என்னை கிரிமினல் என்று குற்றம் சுமத்தும் அளவிற்கு விரிந்து சென்றது. இதுவே இப்போது கட்சி என்று இணைந்து மேற்கொள்கிறார்கள். இதற்கு பதிலளித்தால் உங்களைப் பொறுத்தவரை இணையப் போட்டி அல்லது அவதூறு என்றாகிவிடுகிறது.
      இதில் வேடிக்கை என்னவென்றால் 200 இற்கு மேற்பட்ட அவதூறுக் கட்டுரைகள் எதற்கும் நான் இதுவரை பதில் சொல்லவில்லை.அதற்கான தேவையும் ஏற்படவில்லை. மற்றப்படி, தாங்கள் வைத்திருக்கும் இணையத்தளங்களில் மாறிமாறி முதுகு சொறிவதற்காகப் பயனபடும் இந்த அவதூறுகளை நான் பொதுத் தளத்திற்குக் கொண்டுவர விரும்பவில்லை.
      விஜிதரன் போராட்டத்திற்கு ஹட்டன் நஷனல் கொள்ளைப் பணத்தை வழங்கியதாக இந்தக் குழு கூறும் போது ஒரு போராட்டத்தையும் மாணவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைகிறது. இது அருவருப்பானது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் புலிகள் அமைப்பிலிருந்து சூறையாடப்பட்ட மக்கள் பணம் குறித்துப் பேசுவதானால், இலங்கையில் நடந்த மிகப்பெரும் வங்கிக் கொள்ளையின் பணம் குறித்து கண்மூடிக்கொண்டிருக்க முடியாது. அது நான் போராட்டத்தோடு வாழ்ந்த காலத்திற்குரிய மக்கள் பணம் என்பது மட்டுமல்ல அது பல்கைக்கழகத்திற்குக் கொடுக்கப்பட்டதாக வேறு சொல்லப்படுகிறது.
      ஒரு மனிதனது,இனம் மொழி, தனி நபர் வாழ்வு, செயற்பாடுகள் குறித்துப் ஆதாரமின்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது அவதூறு. அதுவே மக்களின் சொத்துக்குறித்தும் ஒரு போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவது குறித்தும் பேசுவது அவதூறல்ல.
      தவிர, இரண்டு முன்று தனி நபர்கள், இணையத்தளம் போன்றவறை வைத்துக்கொண்டு இயக்கம் ஆரம்பிக்கும் இந்தக் கும்பல் தாம் உண்டு தமது பாடு உண்டு என வாழ்ந்துவிட்டுப் போகலாம். தனி நபர் குறித்த அவதூறுகளையே இயக்கமாக மாற்றி மற்றவர்கள் ஏதாவது எழுதிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவதூறுகளை மேற்கொள்ளும் இந்தக் கும்பல், தியாகிகளையும், போராட்டங்களையும், மரணித்தவர்களையும் கொச்சைப்படுத்துவது குறித்து ஒரு வரி எழுதியது என்பது புலிகள் குறித்தும் இயக்கங்கள் குறித்தும் பக்கம்பக்கமாக எழுதும் உங்களுக்கு அவதூறாகப் படுகிறது என்றால் நீங்கள் பரிதாபத்திற்குரியவர்.

      • thevan says:
        13 years ago

        1.ஆக்கபூர்வமான விவாதத்திட்குரிய தளமாகவே இனிஒரு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள், சிந்தனைகள்

        தாராளமாகவே மோதட்டும் இனிஒருவில்.

        .

        2.இந்த ரயாகரன் விவாதத்திற்குள் நுழைவது இங்கிதமில்லை,எனது நோக்கமுமல்ல.இருந்தும்:

        .

        “200 இற்கு மேற்பட்ட அவதூறுக் கட்டுரைகள் எதற்கும் நான் இதுவரை பதில் சொல்லவில்லை.அதற்கான தேவையும் ஏற்படவில்லை” ஆனால் “இப்போது கட்சி என்று இணைந்து மேற்கொள்கிறார்கள்” ஆகவே பதில்அளிக்க வேண்டும் ,அதற்கான தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது என்கின்ற வாதம் எனக்கு தவறாக படுகிறது. “இப்போதும் கட்சி என்று இணைந்து மேற்கொள்ளாவிட்டால்”?, மக்களின் சொத்துக்குறித்தும் ஒரு போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவது குறித்தும் பேசாமல் இருந்திருப்பேன்” என்ற இன்றைய நிலைப்பாடு குறித்து ஏமாற்றமாக உள்ளது.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Saba Navalan it was great listening to you. University of Jaffna was created in 1974 to send the trouble makers home from Colombo and Peradeniya Campuses. There has to be change in the basic mentality.

  7. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ////டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.—-யதீந்திரா ஆரியபாலா தாரகா என்ற பெயரில் எழுதியது ////ஆதாரம் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4230&Itemid=139

    • Thiruvel says:
      13 years ago

      சபாரத்தினத்தை இந்தியா அனுப்பியதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். இந்தியாவில் பாதுகாப்பாக இருந்த சிறீ ஐ ஆயுதங்களோடு இந்தியா இலங்கைக்கு அனுப்பியது. ஆனால் துப்பாக்கிகளுக்கு குண்டுகள் வழங்கப்படவில்லை. கட்டைபிராய் பகுதியில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. புலிகள் அடிப்பதற்கு தயார் செய்கிறார்கள் என்பது சிறீ இற்கும் இந்தியாவுக்கும் தெரியும். சிறி சுபாஸ் என்பவர் ஊடாக இந்திய அரசிடம் அறிவித்து குண்டுகள் வழங்க கேட்டதற்கு ரோ கடத்திக்கொண்டிருந்தது. கடைசியில் ரோ சிறீ ஐப் போடுவதற்கு ஈரோசிற்கும் உத்தரவு போட்டது. ஈரோசும் காட்டிக்கொடுக்க புலி சிறியைப் போட்டது, அவ்வளவுதான். கடைசிவரை புலிகளை தான் இந்தியா நம்பியது.அப்பாவியான பிரபாகரனை வளர்த்து சண்டைபிடிக்க வைத்து கடைசியில் அழித்தது. இதே போல தான் பிந்தரன் வாலே இற்கும் இந்தியா செய்தது.
      உங்கள் எல்லாருக்கும் தெரியும் பிரபாகரன் எவ்வளவு அப்பாவியும் முட்டாளும் என்று. இந்தியா அவரை தலைவனாக வளர்த்து பயன்படுத்தி 2 லட்சம் பேரோடு வன்னியில் அழித்து ஈழம் என்பதை கேள்விக்குரியதாக்கிவிட்டது.
      இதை புரிந்து கொண்டு தயவு செய்து நேர்மையாக போராட முன்வாருங்கள் இல்லை என்றால் இன்னும் பல அழிவுகள் நடக்கும். தெரிந்த உண்மைகளை மறைக்காமல் மக்களுக்கு சொல்லுங்கள்.

  8. RATHAN says:
    13 years ago

    என்ன மாதிரி எல்லாம் கதை பண்ணூகின்றார்கள் .ஏதொ தாங்கள் தான் ரோவின் தலைவர்கள் மாதிரியும் சிறீயை இலங்கைக்கு அனுப்பியது மாதிரியும் இருக்கு எழுத்து ,
    பத்து போத்தல்கள் குடித்தவன் சும்மா இருக்க அரை போத்தல் அடித்தவன் புசத்துகின்ரறான்.

  9. அரிச்சந்திரன் says:
    13 years ago

    //இலங்கை அரசிற்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிடுதலை மாணவர் போராட்டத்திலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதே இன்று எமக்கு முன்னால் உள்ள வினா..//

    சரியானதும் உண்மையானதுமான வினா நாவலன். இதற்கு, என்றுமே தங்களுக்கும் தங்களைப்போன்றவர்களுக்கு பதில் கிடைக்கவே கிடைக்காது. சரி… இதை தாண்டினாலும் செயல் ஒன்று இருக்கின்றது ஐயா, மூன்று வருசமாக இதைத்தானே மாறி மாறி நாறி எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள். இருந்தாலும் களமும் கடிவாளமும் இப்போதைக்கு சும்மாதான் கிடக்கிறது முடிந்தால் ஓட்டிப்பாருங்கள். 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      There is nothing those students can do except follow their education. The word Self Determination came into usage in 1948 because of Palestine and Kashmir. It will not go beyond that ever in any part of the world.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...