யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பை யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான இராணுவத்தினரே வழங்கி வருவதாக லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் அதிகரிப்பதற்கு பதிலாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு தரப்பு மாணவர்கள் பிரத்தியேகமாக கவனிக்கப்படுவது எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்பட வழிவகுக்கும் எனவும் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அதிகுறைந்த வாக்குகளைப் பெற்ற ரட்னஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டமை அறிந்ததே
இனவாத அடிப்படையில் யார் செயல்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென’றால் அதன் பாரதூரமான விளைவுகள் அனுபவிக்க வேண்டிவருவதும் மக்களுக்கே