யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனப்பத்திரம் இன்று பல்கலைககழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. முன்னதாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தன்னையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துணை வேந்த்ராக நியமித்துள்ளதாக வேந்தராக நியமித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ரட்ணஜீவன் ஹூலை துணைவேந்தராக நியமிப்பதில் புலம் பெயர் அரசியல்வாதிகள் ஆர்வம்காட்டிவந்த அதே வேளை வசந்தி அரசரத்தினம் டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவு பெற்றிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார்.







