பிரித்தானியாவிலுள்ள இடதுசாரி அமைப்புக்களான Democracy and Class Struggle, பான் ஆபிரிக்கன் ஆகிய அமைப்புக்கள் யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்துள்ளன. உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று Democracy and Class Struggle தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.
(Protest and Boycott against Military Harassment at Jaffna University – Sri Lanka – Students brutally attacked)
பிரித்தானியாவில் வாழும் ஆபிரிக்கர்களின் பல போராட்டங்களை முன்னெடுத்த பான் ஆபிரிக்கன் அமைப்பு ஒடுக்கப்படும் உலகமக்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் ஒடுக்குமுறைக்கு மத்தியில் அவர்கள் நடத்தும் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்றும் கூறியுள்ளது. அமைப்பின் அறிக்கையின் தமிழாக்கம் நாளை வெளியிடப்படும்.
I still love that Clenched Fist.