யாழ்ப்பாண நகரப்பகுதி வர்த்தகர்கள் பலரை கொழும்பிலிருந்து வந்த புலானயர்வுப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைகளின் போது, 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு கலப்பகுதி வரையில் கொழும்பிலிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்த வர்த்தகர்களே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் யாழ்பபாணத்திற்கு கப்பல் மூலம் பொருட்கள் எடுத்துவரப்பட்ட நடைமுறை தொர்பாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வர்த்தகர்களிடமிருந்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







