தென்மராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 52 பட்டாலியன் இராணுவத் தளத்தைத் திறந்துவைக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும் இனச் சுத்திகரிப்பின் சூத்திரதாரியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை யாழ்ப்பாணம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுதுமட்டுவாள் இற்கு இடமாற்றம் செய்யப்படும் இப்படைப்பிரிவின் இராணுவத் தளம் வன்னி இனப்படுகொலையின் முன்னரங்கமாகச் செயற்பட்டது. அதற்கான தேவை அற்ற நிலையில் யாழ்ப்பாணத்தை இராணுவ நிலமாகத் தொடர்ந்தும் பேணும் நோக்கத்தில் இந்த இராணுவத்தளம் இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதே வேளை அமரிக்க அரசும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இலங்கையை இராணுவமயமாக்குவதற்கு உதவி புரிந்து வருகின்றன. அமரிக்க இராணுவத்தின் இரகசியத் தளம் ஒன்று பலாலியில் கண்ணிவெடி அகற்றுவதற்கான அணி என்ற போர்வையில் செயற்பட்டு வருகின்றது. தெற்காசியாவையும், அது சார்ந்த கடற்பிராந்தியத்தையும் இராணுவ மயப்படுத்த இலங்கை இராணுவத்தை அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் பயன்படுத்தி வருவது ஆதாரபூர்வமான செய்தி ஆவணங்களாக வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அரசின் போர்க்குற்ற நாடகத்தின் ஒரு பகுதியாக சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களினை கையாளும் அமெரிக்க விசேட தூதர் ஸ்ரீபன் ஜே.ரெப் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து இரண்டு எதிரிகள் ஒரே நேரத்தில் யாழ்ப்பாணம் செல்வது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த புலம்பெயர் ஊடகங்கள் முனைகின்றன.
மக்களுக்குப் போலியான தகவல்களை வழங்கி அவர்களை மாயைக்குள் ஒடுக்கி வைத்திருக்க முயலும் பிழைப்புவாத ஊடகங்கள் இன்றும் அமெரிக்கா ராஜபக்ச குடும்பத்தைக் கைது செய்யும் நோக்கில் அவர்கள் பின்னால் அலைகின்றது என்ற வகையில் தகவல்களை வழங்கி வருகின்றன.
Who are you all talking about? Colonel Gothapaya Rajapakse. He is a nice guy born in 1950. He also went to the Ananda College in Colombo like many of my friends. They gave him trainning in Jungle Warfare at the Fort Rucker, Alabama, USA. They know that the Valvetiturai guys and gals learnt from the South American Drug Lords. If you want something you can approach him and get that done.