மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பைச் சார்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரச படைகளால் கடத்தப்பட்டனர். 11.12.2011 அன்று கடத்தப்பட்ட இவர்கள் இருவரையும் விடுதலை செய்யக் கோரி கொழும்பில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிராக நடைபெற்றது.
வட கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டித்து நடத்தப்படும் மக்கள் போராட்டங்களில் சிங்கள மக்களின் பங்காற்றல் புதிய அரசியல் மாற்றத்திற்கான சூழலைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில் இருவரின் கடத்தலைக் கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்றை இந்த அமைப்பின் பிரித்தானிய கிளை ஏற்பாடு செய்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அரசிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களும் பங்காற்றுமாறு புதிய திசைகள் அமைப்பும் இனியொரு இணையமும் அழைப்பு விடுக்கின்றது.
மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தின் இலங்கை மற்றும் பிரித்தானிய பிரதிநிதிகளுடன் உடன்படும் கூறுகள் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபடும் நிலையிலும் இப் போராட்டம் பாசிச அரசிற்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையில் அனைவரினதும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் : இலங்கைத் தூதரகம் – லண்டன்
காலம் : 19/12/2001 திங்கள்.
நேரம் : மாலை 3:00 மணி முதல் 6 மணி வரை.
புதிய திசைகள் சரியான திசையில்…விஜய்