Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி:பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

இனியொரு... by இனியொரு...
05/09/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(2): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

 

கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.

thangesபரம்சோதி தங்கேஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமானிப்பட்டத்தையும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் அகதிகள் கற்கையில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றவர். தற்பொழுது தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினை மானிடவியல் துறையில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார். இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டுவரை கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும் கொழும்பிலுள்ள திட்டமிடல் சேவைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆய்வாளராகவும் கடமையாற்றினார். இவர் சாதி, இடப்பெயர்வு, இனத்துவம் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றினை வெளியிட்டுவருகின்றார்.

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி

cast-marriageயாழ்ப்பாணச் சாதியமைப்பில் தனித்துவமான பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, தென்னிந்தியச் சாதி முறைமையுடன் ஒப்பிடும் போது, யாழ்ப்பாணச் சாதி முறைமை அதன் அடுக்கமைவு மற்றும் வேறுபல முக்கிய அம்சங்களில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமாகும். தென்னிந்தியச் சாதி அடுக்கமைவில் பிராமணர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறும் அதேவேளை, யாழ்ப்பாணச்சாதி அமைப்பில் வெள்ளாளர் உயர் நிலையிலுள்ளோராகக் கணிப்பிடப்பட்டனர்.

வெள்ளாளர் தமது இந்துக் கோயில்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து பிராமணர்களை வரவழைத்தனர். வெள்ளாளர் தமது கோயில்களில் பிராமணர்களை வேலைக்கு அமர்த்தியமையாலும் பிராமணர்கள் வெள்ளாள நிலச் சுவாந்தர்களுக்கு ஊழியம் செய்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் வெள்ளாளரைவிடக் குறைந்த அந்தஸ்தினைக் கொண்டவராகக் கணிப்பிடப்பட்டனர் (Pfaffenberger 1982).

யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘சாதிக்குள் சாதி’ பார்க்கப்படுவது மரபுரீதியாக இருந்தது. இன்னொரு வகையில் கூறுவதாயின் ஒரு தனிப்பட்ட சாதிக் குழுவில் வேறுபட்ட சமூக அடுக்கமைவைக் கொண்ட சாதிகள் காணப்பட்டன. அதாவது ஒவ்வொரு சாதிக் குழுவும் சிறு அடுக்கமைவு அடிப்படையிலான பிரிவுகளைத் தன்னுள் உள்ளடக்கியிருந்தது.

உதாரணமாக வெள்ளாளர் சாதியினரிடத்தே காணப்பட்ட சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அகம்படியார், மடைப்பள்ளி, தனங்காரர், உள்ளுர்ச் செட்டியார், சிறு விவசாயி மற்றும் செம்பு எடா வெள்ளாளர் போன்ற குழுக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே போன்று திமிலர், முக்குவார், போன்றோர் கரையார் சாதியிலும் மரமேறிகள், செருப்புக்கட்டிகள் மற்றும் வேர்க்குத்திப் பள்ளர் போன்றோர் பள்ளர் சாதியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

JaffnaIsletsஇவ்வாறான உப பிரிவுகளை உள்வாங்கி இலங்கைத் தமிழர் சாதிகளைக் கணிப்பிடுகையில், சாதிகளின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்தது. சைமன் காசிச்செட்டி (1934) இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.

வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய பாகம்:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

தொடரும்..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முஸ்லிம்  மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன்

1989 கிளர்ச்சியாளர்களை நினைவுகூறும் விமல் வீரவன்ச முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிப்பது எங்ஙனம்?:மனோ கணேசன்

Comments 2

  1. Saravanan Kasruthi says:
    12 years ago

    போருக்குப் பிறகு  சாதி  புதிய பரிமாணத்தை  எடுத்துள்ளது.  ஆதிக்க சாதி வெள்ளாளரின்  தேசியமே தமிழ்த் தேசியம்  என்றும்  புலம்பெயர்ந்த்த  அவர்களில்  பலருக்கு சேவை செய்து  சாகடிக்கப்படும் அப்பாவிகளாக  தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் இருந்தனர். இன்று  தமிழ்த் தேசியம்  -நிர்வாணமாக  தன்னை  வெளிக்காட்டிக்கொள்ள  இலங்கை  தேசிய இன ஒடுக்கு முறைஉக்கு தாழ்த்தப்பட்டவர்ஜ்கள்  உள்ளாகின்றனர்.  அவர்கள்  இனிப் போராட வேண்டும்.

  2. Nakkeeran says:
    12 years ago

    விடுதலைப் போராட்டம் காரணமாக தமிழர்களிடையே காணப்படும் சாதி அமைப்பு தளர்ந்துள்ளது. குறிப்பாக அதன் தாக்கம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் குறந்துள்ளது. சாதிவிட்டு சாதி திருமணம் செய்து கொள்கிறார்கள். படித்த இளைஞர்களும் இளைஞிகளும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். பழைய காலம் போல் பெற்றோர்களிடம் இருந்து எதிர்ப்பு பெருமளவு எழுவதில்லை. தமிழ்நாட்டைப் போல் அல்லாது இலங்கைத் தமிழர்கள் தங்கள் சாதியை வெளியில் சொல்விக் கொள்வதில்லை. சாதிச் சங்கங்கள் வைப்பதில்லை. சாதி நோய் தொழில் வழி உருவாகியது. இதற்கு இந்து மதமும் ஒரு காரணி. சங்க காலத்திலும் தொழிலின் அடிப்படையில் இழிந்தோர் உயர்ந்தோர் என்ற பிரிவினை இருந்ததை பார்க்கிறோம். இந்த நோய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழினத்தை பிடித்துக் கொண்ட நோய். அது மறைய இன்னும் ஒரு நூறாண்டுகள் தேவைப்படும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...