இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச பாசிசம். உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இணைந்து அதிபயங்கரக் கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தை உருவாக்கிய இந்த நாள் மனித குலம் தோல்வியடைந்த நாள்.
இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போன்று கண்காணித்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை கீரிமலை கடற்பகுதிக்கு உயிரிழந்தவர்களுக்கான பிதிர் கடனை நிறைவேற்றுவதற்காக சென்ற அனந்தி சசிதரனை இராணுவம் இடைவழியில் தடுத்து நிறுத்தி மிரட்டியது.
அதற்கெதிரான போராட்டத்தை தனியாளாக அவர் முன்னெடுத்தார்.
கீரிமலைக்குச் செல்லும் வழியிலிருந்து வீடு திரும்பிய அனந்தி நல்லூர் கோவிலில் நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகத் தொலைபேசியில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல் வாதிகள் முதுகெலும்பற்றவர்கள் என்றும் தன்னோடு யாரும் ஒத்துழைக்கவில்லை என்றும் தனியாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற பாசிச வைபவமும், வடக்குக் கிழக்கின் துயரமும் இன்றைய இலங்கையின் விம்பம்.
ஆனந்தி அக்கா இன்று உங்களுடைய கட்சியினைச் சேரந்த பல பா. உ(mp) ,மாகாணசபை உறுப்பினர்களும் கிளிநொச்சியில் அறிவகத்தில் இதே அஞ்சலியினை செய்திருந்தனர். நீங்கள் ஏன் போகவில்லை. உங்களுக்குத்தேவை பிரபல்யம், அது கிடைச்சுதா?
‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பன். நீ அழுகிற மாதிரி அழு’
http://thenee.com/html/120514-2.html
அனந்தி அரசின் கையிலுள்ள சூழ்நிலைக் கைதி.
அரசியல் கட்சி என்பது, தலைமை நல்ல முடிவெடுத்தாலென்ன கெட்டமுடிவெடுத்தாலென்ன அதற்கு கட்டுப்படவேண்டியது அந்த கட்சியின் அங்கத்தவா்களின் கடமை.
முடிவுகளில் திருப்தி இல்லை என்றால் உள்ளேயே அதற்கு ஆதரவு தேடவேண்டுமே தவிர இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்வது அரசியல் அனுபவமற்றதனமாகும்.
புலிகள் இலங்கைத்தமிழரின் அரசியல் முதுகெலும்பை முறித்தார்கள்.
முறிக்கப்பட்டு புலிகழுடன் இணைந்தவர்களிற்கு எவ்வாறு முதுகெலும்பு
இருக்கும்?
அனந்திகு உங்களுக்குத்தேவை பிரபல்யம்
She’ll contest in next parliament election…
These are the moves… for that…
1995. Natesan Suntharesan. Batticaloa. Task Force. Honourable Mahinda Rajapakse.
பாம்பாட்டிகளின் கையில் இருக்கும் மகுடியின் இசைக்கு (அசைவுக்கு) ஆடும் பாம்பின் ஞாபகம் தான் திருமதி அனந்தி சசீதரன் அவர்களின் அறிக்கைகளை பார்க்கும் போது வருகின்றது. அரசியலுக்கு புதியவர்தானே. எதிர்காலத்தில் அனுபவங்கள் மேன்மேலும் ஆளுமையைக் கொண்டுவரலாம். சரி பிழைகளுக்கு அப்பால் திருமதி அனந்தி சசீதரன் அவர்களின் துணிவான நடவடிக்கைகளை மெச்சுவோமாக.
She has the guts to face the TNA… & within TNA…
May she is from Chulipuram…?
May be she is related to Late. Appapillai Amirthalingam…?