யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கச் சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சீருடை அணிந்தோரே எம்மைத் தாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் தாண்டி எம்மை தாக்கியுள்ளனர்” என்றார்.