Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாரிந்தப் “புத்திசீவிகள்”?

இனியொரு... by இனியொரு...
01/10/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
28
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. “புத்திஜீவிகளும்”, “சர்வதேசமும்” இன்னும் தன்னார்வ நிறுவனங்களும் தமது நிலங்களிலிருந்து அறுத்தெறியப்படும் மக்கள் கூட்டத்திற்கு எலும்புத் துண்டுகளை வீசியெறிந்து “உதவி” செய்வதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்.

கொதித்தெழும் மக்கள் கூட்டம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் அவதானமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

தம்மைப் “பன்முகத் தன்மை” கொண்டவர்களாகக் உருவமைத்து வெளிப்படுத்தும் இவர்கள் பிரதான முரண்பாடுகளிலிருந்து, தம்மை விடுவித்துக்கொண்டு குறுகிய முரண்பாடுகளுக்கு அழுத்தம் வழங்குகிறார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயான உள்ளக முரண்பாடுகள், சாதியம், பிரதேச முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள் என்பனவற்றிற்கு போலித்தனமான அழுத்தம் வழங்கி பிரதான மற்றும் அடிப்படை முரண்பாடுகளை நிராகரிக்கின்றனர்.

இது புதிய உலக ஒழுங்கைநிறுவ முயலும் அதிகார வர்க்கத்தின் பொதுவான ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலாகும்.

எங்கெங்கெல்லாம் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனவோ, எங்கெங்கெல்லாம் மக்கள் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் “புதிஜீவிகளதும்”, “தன்னார்வ நிறுவனங்களதும்”, “சர்வதேசியத்தினதும்” உடனடிப் பிரசன்னத்தைக் காணமுடியும். உலகின் பல்தேச நிறுவனங்களின் பணபலத்தோடு இயங்கும் இவர்களின் கவர்ச்சிகரமான அரசியல் இன்றைய சமூகத்தின் நச்சு வேர்கள்.

இந்தப் பின்னணியிலேயெ 71 “புத்திஜீவிகள்” இணைந்து வெளியிட்டிருக்கும் “தமிழ் சமூகத்திற்கும் அதன் அரசியல் சமூகப் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்” என்ற அறிக்கையைக் காணமுடியும்.

ஒடுக்கும் பாசிச அரசோடு இசைவாக்கம் அடைந்துகொள்ளக் கோரும் இந்த அறிக்கை, வடக்கிலிருந்து இரவோடிரவாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று வாதிட முனைகிறது.

வடக்கின் அரச அதிபருக்குக் கூட வெளியிலிருந்து வரும் எவரையும் சந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கிழக்குள் ஒவ்வோரு குடியேற்ற வாசியும் துப்பாக்கியின் மிரட்டலுடனேயே துயில் கொள்ளும் அவலத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இலங்கையில் நடந்துமுடிந்த இன அழிப்புக்கு எதிராக, வட கிழக்கில் முஸ்லீம் தமிழ் மக்களின் நிலத்தையும், கடலையும் கொள்ளையிடும் இலங்கை இராணுவ விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா போன்ற பல்தேசிய கம்பனிகளின் சுரண்டலுக்கு எதிராக,கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களின் விவசாய காணிகள் சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் பறிக்கப்படுவதற்கு எதிராக சம்பிரதாயத்திற்காவது ஒரு அறிக்கை எழுத முடியாத இந்த புத்திஜீவிகள் தமிழ் மக்களை முஸ்லீம் மக்களுக்கு எதிராக முன்னிறுத்தி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களே தடை என்கின்றனர்.

தான் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களிடையேயான முரண்பாட்டுகளைத் தூண்ட மகிந்த அரசு முயல்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் எமது “புத்திஜீவிகளும்” உள்வாங்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் வளர்வதில் எந்தத் தவறும் இல்லை.

சமூகப்பற்றுள்ள எந்த மனிதனுக்கும் முஸ்லீம்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இருக்க முடியாது. ஆனால் மனித விரோதிகளால் கொலைசெய்யப்பட்டு தெருக்களில் வீசியெறியப்படும் பிணங்களை மௌனமாய்க் கடந்துசென்று வடக்கின் இதயத்தில் அமர்ந்துகொண்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படாமைக்குத் வடக்குத் தமிழர்களே காரணம் என்று அறிக்கை விடுவது சந்தேகத்திற்குரியது.

அரசாங்கம், சிங்கள பௌத்தக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் மீள் குடியேற்றத்தை நிராகரிக்கிறது என்ற வெளிப்படையான உண்மையை மறைத்து, தமிழ்ப் பேசும் மக்களைக் குற்றம் சுமத்தும் அருவருக்கும் செயற்பாட்டின் ” புத்திஜீவித்தனத்தை” நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனச்சுத்திகரிப்பை நிறுத்துமாறு போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதும், புலிகளால் வெளியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் இலங்கை அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், மகிந்த பாசிச அரசிற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களை ஊக்கப்படுத்துவதும் இன்றைய எமது கடமையாகும்.

  உலகம் முழுவதும் தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலோடும், மேற்கின் ஜனநாயகச் சொல்லாடலோடும் மக்கள்முன் வருகின்ற மேல்தட்டு புத்திஜீவிகளின் சமரச அரசியல், எதிர்காலத்தை எச்சரிக்கும் அபாய அறிவிப்பாகும்.

தேடகம் – கனடா

அசை – பிரான்ஸ்

இனியொரு..

சமூகப் பாதுகாப்பு இயக்கம் -பிரான்ஸ்

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Signatories:

1. Mr. P. Ahilan 2. Dr. Darshan Ambalavanar 3. Ms. Jovita Arulanantham 4. Ms. Kundhavi Balachandran 5. Mr. Sivakolunthu Buvanakumar 6. Dr.GodwinConstantine 7. Dr.KumarDavid 8. Mr. R. Devarajan 9. Ms. Cayathri Divakalala 10. Dr. S. Ganesan 11. Mr. Shaseevan Ganeshananthan 12. Mr. P.B. Gowthaman 13. Dr. Rajan Hoole 14. Ms. Sithiravel Ithaiyarani 15. Mr. T. Antony Jeganathan 16. Ms. Vasuki Jayasankar 17. Dr. T. Jayasingam 18. Mr. D.B.S.Jeyaraj 19. Mr. Theliwattai Joseph 20. Mr. Ahilan Kadirgamar 21. Mr. Silan Kadirgamar 22. Ms. Niyanthini Kadirgamar 23. Ms. Sarvam Kailasapathy 24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai 25. Dr. S.V. Kasynathan 26. Mr. Thirukovil Kaviyuvan 27. Mr. Sathy Kulasingam 28. Mr. Prithiviraj Kulasingham 29. Prof. Vijaya Kumar 30. Ms. Maha Luxmy Kurushanthan 31. Mr. K.C. Logeswaran 32. Mr. S. Manisegaran 33. Mr. Chandrasekaran Manimaran 34. Mr. P. Muthulingam 35. Mr. V. Nandakumar 36. Ms. Malini Paramaguru 37. Ms. Nirmala Rajasingam 38. Ms. Vasuki Rajasingam 39. Mr. Sanjayan Rajasingham 40. Mr. C. Rajeshkumar 41. Ms. A. Renu 42. Ms. Kumudini Samuel 43. Ms. Rani Samuel 44. Dr. Paikiasothy Saravanamuttu 45. Dr. Muthukrishna Sarvananthan 46. Ms. Ambika Satkunanathan 47. Mr. Shyam Selvadurai 48. Rev. Jothini Seenithamby 49. Dr. T. Shanaathanan 50. Ms. M. Mangaleswary Shanker 51. Ms. C. Shanthini 52. Mr. Shobashakthi 53. Mr. P.N. Singham 54. Ms. Vasuki Sivakumar 55. Mr. K.S. Sivakumaran 56. Dr. Sumathy Sivamohan 57. Mr. Subramaniam Sivathasan 58. Mr. Balasingam Skanthakumar 59. Mr. M. Sooriyasekaram 60. Dr. K. Sritharan 61. Rev. M. Jude Sutharshan 62. Mr.H.D. Thampoe 63. Ms. Priya Thangarajah 64. Mr. Kandiah Thanikasalam 65. Mr.R. Thevamaran 66. Prof. S.Thillainathan 67. Dr.Sharika Thiranagama 68. Mr.M.Thiruvarangan 69. Mr.UmaVaratharajan 70. Mr.GodfreyYogarajah 71. Mr.RonnieYogarajah

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் தனது இணைப்பாளர்கள் அல்ல : மேர்வின் சில்வா

Comments 28

  1. Sri Sriskanda on Facebook says:
    13 years ago

    Single Sri Lankan Citizenship. Rights, previlages and responsibilities.

  2. a voter says:
    13 years ago

    //
    “யார் இந்தப் புத்திசீவிகள்?”  “புத்திஜீவிகள்”இ “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கஇ நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.//

     முதலில் உங்களது அறிக்கை எதுவித ஆதாரங்களுமற்று 71 நபர்கள் மீது -அவர்கள் அதிகார வர்க்கம் – என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஆதாரம் ஏதுமில்லை என்பதற்கு அப்பால் அதிகார வர்க்கம் என்கிற உங்களது அளவீடு வர்க்கம் குறித்த உங்களது புரிதலை வெளிக்காட்டுகிறது.
    // ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயான உள்ளக முரண்பாடுகள்இ சாதியம்இ பிரதேச முரண்பாடுகள்இ பாலின முரண்பாடுகள் என்பனவற்றிற்கு போலித்தனமான அழுத்தம் வழங்கி பிரதான மற்றும் அடிப்படை முரண்பாடுகளை நிராகரிக்கின்றனர்.//
    ஒடுக்கப்படும் இனங்கள் தம்மிடையேயான முரண்பாடுகளைக் களைவது அவர்கள் ஒன்றிணைந்து தமக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட உதவும் என்பது உங்களிற்குப் புரியவில்லையா அல்லது “மறுபடியும் ஒருநாள்” நாம் வல்லமை பெறும் போது மற்றைய இனங்களை ஒடுக்குவதற்கான தந்திரமா?
    //இந்தப் பின்னணியிலேயெ 71 “புத்திஜீவிகள்” இணைந்து வெளியிட்டிருக்கும் “தமிழ் சமூகத்திற்கும் அதன் அரசியல் சமூகப் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்” என்ற அறிக்கையைக் காணமுடியும்.//
    இந்த அறிக்கையில் அவர்கள் தம்மைப் புத்திசீவிகள் என்றோ வேறேதும் சீவிகள் என்றோ தெரியப்படுத்தவுமில்லை. உண்மையில் அப்படி அவர்கள் “சீவி”களாக இருந்து விட்டால் அதனைத் தெரியப்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஒருசிலர் புத்திசீவிகள் தான் என்பதை அவர்களது பெயரிலிருந்து காணமுடியும் (புத்திசீவிகள் என்றால் புத்தி மூலம் சீவிப்பவர்கள் – மூளை உழைப்பாளிகள் – என்று மட்டுமே பொருள்) மற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் அவர்களைப் புத்திசீவிகள் என்று அழைக்கிறீர்கள்?
    //ஒடுக்கும் பாசிச அரசோடு இசைவாக்கம் அடைந்துகொள்ளக் கோரும் இந்த அறிக்கைஇ வடக்கிலிருந்து இரவோடிரவாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று வாதிட முனைகிறது.//
    பாசிச அரசைக் குற்றம் சாட்டுவதில் இந்த அறிக்கை எந்த வகையிலும் தவறிவிடவில்லை. முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
    மாறாக அவர்களின் மீள் குடியேற்றத்திற்கு அரசு எந்தவகையிலும் உதவவில்லை என்று தான் அறிக்கை கூறுகிறது. அரசை “பேரினவாத அரசு” என்று அழைப்பதில் இந்த அறிக்கை பின்நிற்கவில்லை.
    இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவாகள் தனிநபர்கள். ஒரு அமைப்பின் பிரதிநிதிகளல்ல. இவர்களில் யார் ” தெருக்களில் வீசியெறியப்படும் பிணங்களை மௌனமாய்க் கடந்துசென்று ” கொண்டிருக்கிறார்கள்? மாறாக முஸ்லீகள் மீளக் குடியேற்றப்படுவதற்கு எதிராகவே தங்களது அறிக்கையும் பயன்படப்போகிறது.

    முக்கியமாக இந்த அறிக்கை தமிழ்த் தலைவர்களைக் குறை கூறுகிறதேழொழிய தமிழ் மக்களை அல்ல. 
    //இனச்சுத்திகரிப்பை நிறுத்துமாறு போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதும்இ புலிகளால் வெளியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் இலங்கை அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும்இ மகிந்த பாசிச அரசிற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களை ஊக்கப்படுத்துவதும் இன்றைய எமது கடமையாகும்.//
    எவ்வாறு முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் மகிந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப்போகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் நேசக்கரத்தை முஸ்லீம்களை நோக்கி நீட்டுவதனால் மட்டுமே.  இந்த அறிக்கை செய்வதும் அதுவே.

    • Shiva.P says:
      13 years ago

      //முதலில் உங்களது அறிக்கை எதுவித ஆதாரங்களுமற்று 71 நபர்கள் மீது -அவர்கள் அதிகார வர்க்கம் – என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஆதாரம் ஏதுமில்லை என்பதற்கு அப்பால் அதிகார வர்க்கம் என்கிற உங்களது அளவீடு வர்க்கம் குறித்த உங்களது புரிதலை வெளிக்காட்டுகிறது//
      நண்பரே அதிகாரவர்க்கம் என்பது உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம் என்பதிலிருந்து தான் பதில் அறிக்கை ஆரம்பிக்கிறது என்பதை புத்திசீவிக்காதவனும் புரிந்துகொள்வான். உங்களின் இந்தக் கூற்று பதிலறிக்கை குறித்த புரிதலுக்கான மறுப்பைக் காட்டுகிறது,
      //ஒடுக்கப்படும் இனங்கள் தம்மிடையேயான முரண்பாடுகளைக் களைவது அவர்கள் ஒன்றிணைந்து தமக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட உதவும் என்பது உங்களிற்குப் புரியவில்லையா அல்லது “மறுபடியும் ஒருநாள்” நாம் வல்லமை பெறும் போது மற்றைய இனங்களை ஒடுக்குவதற்கான தந்திரமா?//
      பதில் அறிக்கையில் இந்த முரண்பாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாது என்று சொல்லவில்லையே “போலித்தனமான” அழுத்தம் என்று குறிப்பிடப்பட்டதைக் கூட வாசிக்க மறந்துபோனீர்களே.
      //இந்த அறிக்கையில் அவர்கள் தம்மைப் புத்திசீவிகள் என்றோ வேறேதும் சீவிகள் என்றோ தெரியப்படுத்தவுமில்லை. உண்மையில் அப்படி அவர்கள் “சீவி”களாக இருந்து விட்டால் அதனைத் தெரியப்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஒருசிலர் புத்திசீவிகள் தான் என்பதை அவர்களது பெயரிலிருந்து காணமுடியும் (புத்திசீவிகள் என்றால் புத்தி மூலம் சீவிப்பவர்கள் – மூளை உழைப்பாளிகள் – என்று மட்டுமே பொருள்) மற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் அவர்களைப் புத்திசீவிகள் என்று அழைக்கிறீர்கள்?//

      புத்திசீவிகள் என்று அவர்கள் குறிப்பிட்டால் தான் உண்டோ. பிபிசியில் கூட இந்த அறிக்கை குறித்து சொல்லும் போது அப்படித்தானே சொன்னார்கள். அதை யாரும் மறுக்கவில்லையே. இதுதவிர,இன்று தமிழ்ப் பேசும் சமுதாயம் முழுவதிலும் அப்படி ஒரு படத்தை அவர்கள் வழங்கி உலாவருவதன் வெளிப்பாடாக ஏன் அப்படி அறிக்கை குறிப்பிடக் கூடாது. புதிசீவிகள் என்றால் புத்தியால் சீவிப்பவர்கள் என்ற வரைவிலக்கணத்தை வழங்கிய புலிகேசிபோல் ஆகிவிட்டீர்கள். அறிவு சீவிக்கும் மனிதர்கள் புத்தி சீவிகள் என்ற வரைவும் உண்டு. ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்த்துப் பாருங்கள்.

      //பாசிச அரசைக் குற்றம் சாட்டுவதில் இந்த அறிக்கை எந்த வகையிலும் தவறிவிடவில்லை. //
      இஸ்ரேலியப் பிரதமர் கடந்தவாரம் இராணுவத் தீர்வை எதிர்க்கிறோம் என்று சொன்னமாதிரி ஒரு வசனம்.
      //முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
      மாறாக அவர்களின் மீள் குடியேற்றத்திற்கு அரசு எந்தவகையிலும் உதவவில்லை என்று தான் அறிக்கை கூறுகிறது//
      “முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
      ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது.”இது அறிக்கை.
      பேரினவாத அரசு முஸ்லீம்களையும் மீள்குடியேற்ற அழுத்தம் வழங்குவோம் என்பது தெருவில் போகிற தமிழனின் மனோ நிலை.
      //இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவாகள் தனிநபர்கள். ஒரு அமைப்பின் பிரதிநிதிகளல்ல. இவர்களில் யார் “ தெருக்களில் வீசியெறியப்படும் பிணங்களை மௌனமாய்க் கடந்துசென்று ” கொண்டிருக்கிறார்கள்? //
      பூனை தான் கண்ணை மூடிக்கொண்டு பாப்பா குடிக்கும் என்று கேள்வி. அறிக்கையின் பெரும்பகுதி தன்னார்வ அமைப்புக்களின் ஓவர் ஹெட் சார்ஜபிள் காரர்கள். சிலர் அப்பாவிகள். ஆனால் கருத்தும் ஆளுமையும் யாரிடமிருந்து வருகிறது என்று சாதாரண தெருத் தமிழனுக்குத் தெரியும்.
      //முக்கியமாக இந்த அறிக்கை தமிழ்த் தலைவர்களைக் குறை கூறுகிறதேழொழிய தமிழ் மக்களை அல்ல. //
      நீங்கள் எழுதிய சின்னப் பின்னூட்டத்தில் முதலில் அறிக்கை அரசாங்கத்தை குறை கூறுகிறது என்கிறீர்கள் இறுதியில் தலைவர்களைக் குறை கூறுகிறது என்கிறீர்கள். எங்கே போய் முட்டிக்கொள்ள…..???
      //எவ்வாறு முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் மகிந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப்போகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் நேசக்கரத்தை முஸ்லீம்களை நோக்கி நீட்டுவதனால் மட்டுமே. இந்த அறிக்கை செய்வதும் அதுவே//
      என்று இறுதியில் நீங்களே சொல்லி அறிக்கை மகிந்த அரசை அல்ல மக்களைத்தான் குற்றம்சாட்டுகிறது என்று நாசூக்காக ஒத்துக்கொள்கிறீர்கள்.
      நாங்கள் ஆதரவுக்கரம் தராதபடியால் தான் முஸ்லீம்கள் மீள்குடியேற்றப்படவில்லை என்று அறிக்கை போலவே நீங்களும் கருதிக்கொள்ளுங்கள். உண்மை அதுவல்ல, மகிந்த கொம்பனி மீள்குடியேற்றுவதற்குத் தயார் இல்லை. அதற்காக முஸ்லீம் மக்களைப் போராடச் சொல்லி அறைகூவல் விடுங்கள். அவர்கள் போர்க்குணம் மிக்கவர்கள். போராடுவார்கள். தமிழ்ப் பேசும் மற்றைய சிறுபான்மை இனங்களையும் இணைத்துக்கொண்டு………..

      • a voter says:
        13 years ago

        முதலில் மக்களுக்கும் தலைவர்களுக்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ளுங்கள்.  முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு தமிழ்த் தலைமைகள் உட்பட சகல தலைவர்களுமே காரணம் – மக்கள் அல்ல. “பலாலியிலிருந்து வெளியேறிய மக்கள் மீளக் குடியேறும் வரை முஸ்லீம் மக்கள் மீளக்குடியேற முடியாது ” என்று சொன்னது யார்? அதற்கு எதிராக என்ன குரல் எழுப்பப்பட்டது?
        //நீங்கள் எழுதிய சின்னப் பின்னூட்டத்தில் முதலில் அறிக்கை அரசாங்கத்தை குறை கூறுகிறது என்கிறீர்கள் இறுதியில் தலைவர்களைக் குறை கூறுகிறது என்கிறீர்கள். எங்கே போய் முட்டிக்கொள்ள…..???//
        அரசாங்கத்தை மட்டும் குறை கூறுகிறது என்று நான் எங்கே சொன்னேன்? 

        // 
        //எவ்வாறு முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் மகிந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப்போகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் நேசக்கரத்தை முஸ்லீம்களை நோக்கி நீட்டுவதனால் மட்டுமே. இந்த அறிக்கை செய்வதும் அதுவே//
        என்று இறுதியில் நீங்களே சொல்லி அறிக்கை மகிந்த அரசை அல்ல மக்களைத்தான் குற்றம்சாட்டுகிறது என்று நாசூக்காக ஒத்துக்கொள்கிறீர்கள்.//
        ஆக உங்களது மொழியில் நேசக்கரத்தை நீட்டுவது என்பது குற்றம் சாட்டுவதற்குச் சமன். 
        // அதற்காக முஸ்லீம் மக்களைப் போராடச் சொல்லி அறைகூவல் விடுங்கள். அவர்கள் போர்க்குணம் மிக்கவர்கள். போராடுவார்கள். தமிழ்ப் பேசும் மற்றைய சிறுபான்மை இனங்களையும் இணைத்துக்கொண்டு……….//
        ஆக நான் அறைகூவல் விடுக்க வேண்டும் என்று தான் இத்தனை நாட்களாக முஸ்லீம் மக்கள் காத்திருக்கிறார்கள் என்று முடித்திருக்கிறீர்கள். 
        முஸ்லீம் மக்கள் தமது சக்திக்குட்பட்ட வகையில் இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு வழமை போலவே இதனை தமிழ் மக்களிற்கெதிராகத்திருப்பிவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது
        பிரதான சிறுபான்மை இனத் தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் இதனை வைத்து அரசியல் லாபம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

        நீங்களும் கூடவா?

  3. kathir says:
    13 years ago

    மேற்கண்ட 71 புத்திஜீவிகள் கையொப்பம் இட்டுள்ள அறிககையில் கையொப்பம் இட்ட ஒருசிலர் இந்த அறிக்கை கொண்டிருக்கும் சதி அரசியலோடு எந்தவித உடன்பாடும் அற்றவர்கள். அவர்கள் எப்படி இந்த சதிவலைபின்னலுக்குள் அகப்பட்டுக்கொண்டார்களோ தெரியவில்லை.

  4. Mathumitha says:
    13 years ago

    ஆபத்து  என்ன  என்றால்  இவர்கள்  இலங்கையில்  சென்று  தங்களை  புத்திசீவிகளாகவும்  ஜனநாயக வாதிகளாகவும்  காட்டி  பல பேரை  உள்வாங்கி  சீரளிக்கிறார்கள்.

  5. Ithayachandran says:
    13 years ago

    தமிழ் பேசும் மக்களின் நிலம் பறி போவது பற்றி ஏராளமான செய்திகள் தினந்தோறும் வருகின்றது. இங்கு மீள்குடியேற்றம் குறித்துப் பேசுவது
    வேடிக்கையாக இருக்கிறது. அம்பாறையில் முஸ்லிம் மக்களின் பூர்வீக மண் சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்படுவதை
    பற்றி இந்த புத்திசீவிக் குழு ஏன் பேசவில்லை. ஐயா ……நிலம் இருந்தால்தான் மீள்குடியேற்றம் செய்ய முடியும் என்கிற அடிப்படை
    யதார்த்தைத்தை இவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையா? . முஸ்லிம் மக்கள் யாழில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டுமென்பதை தமிழர்கள் எதிர்த்தார்களா? 1995 இலிருந்து சிங்கள இராணுவமே யாழ் குடாவை ஆட்சி செய்கிறது. அவர்களிடம் இந்த அழுத்தத்தை கொடுங்கள் புத்திமான்களே.
    தமிழர் தாயகத்தில் தற்போது தீவிரமாக நடைபெறும் திட்டமிட்ட நில அபகரிப்பிற்கு எதிராக இக்குழு போராட முன்வருமா?
    சந்தேகம்தான்…..

  6. டாக்டர். வீ. தேவன் says:
    13 years ago

    இப்படியான புட்டி-மான்கள் பருவத்துக்குப் பருவம் புற்றுக்களிலிருந்து வெளிவந்து நோட்டீஸ் விடுவார்கள். இவர்கள் முன்னாலும் பின்னாலும் சுமக்கும் பாரங்களை முதலில் அவிழ்த்துவிட்டு கதை சொல்லட்டும்.

  7. Veeramunaiyan says:
    13 years ago

    Look at these intelectuals- most of them are christians and well known for their anti LTTE stand. They would not condemn the Muslim Ministers and Members of Parliament who have done nothing for the welfare of the displaced Muslims for the last 15 years. They would not release a statement condemning the Sinhala governments for their failure to re settle the Muslims in Jaffna and Mannar. They have conveniently forgotten the fact that the government controls Jaffna District since 1995 and should the Sinhala governments wish to help the displaced Muslims by resettling them they could have done it easily.

    Why these so called intelectuals are not saying a word about the Tamils chased out from their villages by the Muslims in the Eastern province? Don’t they know what has happened to the Tamils lived in Meeravodai Thiyavaddan Meenodaikkaddu Thiraikerni Karavagu Veeramunai Oddamavadi Eravur and other villages in the Eastern province. I would urge these intelectuals to read the articles titled “Tamil villages that were destroyed” appeared in Virakesari a few years ago and subsequently published as a book by Jeyananthamoorthy M.P, to learn the atrocities committed by Muslims on Tamil villagers. By the by will they open their mouth to condemn the destruction of Swami Vivekananthar’s statue by the Muslims two days ago.

  8. Sri Sriskanda on Facebook says:
    13 years ago

    Everybody and anybody is saying all they can as nothing will change the status quo. If you break the law the Sri Lanka Police will take action. That is the bottom line here in the North and East.

  9. H.M. ரஹீம் says:
    13 years ago

    புத்திஐpவிகள் வெளியிட்ட அறிக்கையை பிரமுகப் பெண்னின் பிபிசி தமிழ் ஓசை பேட்டியும் கேட்டேன். இந்த பிரமுகப் பெண் சில மாதங்களுக்கு முன் எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். எங்கள் சமூகத்தில் அக்கறை மரியாதை செய்பவராக அவர் கதைத்தார். அதே நேரம் தமிழ் சமூக சகொதரர்கள் மேல் கடும் வெறுப்பாக கதைத்தார். எங்களுடைய பின்னடைவுக்கு வீழ்ச்சிக்கு காரணம் ஒட்டுமொத்த தமிழ் சமூகம்தான் என்றமாதிரி இவவின் கதை இருந்தது.அப்போதுதான் இவவின் தந்திரம் விளங்கியது.எங்களுக்கும் தமிழ் சகொதரர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி அதில் குளிர்காய பார்க்கிறார்கள் என்பது தெரிந்தது. இப்போது இவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த தந்திரம்தான் தெரிகிறது. இப்படியான நேரத்தில் நாங்கள் விழிப்பாக இருக்கிறோம். எங்களை பயன்படுத்தி அரசியல் செய்ய நாங்கள் இழிச்ச வாயாகள் இல்லை என்பதை இந்த இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இப்படிக்கு H.M. ரஹீம்

  10. Senan says:
    13 years ago

    //இலங்கையில் நடந்துமுடிந்த இன அழிப்புக்கு எதிராக, வட கிழக்கில் முஸ்லீம் தமிழ் மக்களின் நிலத்தையும், கடலையும் கொள்ளையிடும் இலங்கை இராணுவ விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா போன்ற பல்தேசிய கம்பனிகளின் சுரண்டலுக்கு எதிராக,கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களின் விவசாய காணிகள் சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் பறிக்கப்படுவதற்கு எதிராக சம்பிரதாயத்திற்காவது ஒரு அறிக்கை எழுத முடியாத இந்த புத்திஜீவிகள் தமிழ் மக்களை முஸ்லீம் மக்களுக்கு எதிராக முன்னிறுத்தி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களே தடை என்கின்றனர்.தான் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களிடையேயான முரண்பாட்டுகளைத் தூண்ட மகிந்த அரசு முயல்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் எமது “புத்திஜீவிகளும்” உள்வாங்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் வளர்வதில் எந்தத் தவறும் இல்லை.// good work. 

    புத்தியில்லாத- தம்மைத்தாமே ‘புத்திஜீவிகள்’ என சொல்லிக்கொள்ளும் சிலர். தலையிற் கனம் இல்லாமல் தலைக்கனம் பிடித்தவர்கள் சிலர் என்று – பல புலி எதிர்ப்பு மையம் சார் நபர்கள் தங்கள் இருப்பைக்காட்ட செய்த வேலையிது. 
    இவர்களது விவாதம் எவ்வாறு மேலோட்டமான பார்வையாக இருக்கிறது என்பதை பாருங்கள். தமிழ் தேசியத்தை எவ்வளவு குழப்பத்துடன் புரிந்து கொள்கிறார்கள் என்பதை அவதானிக்க. அரசு – அதன் செயற்பாடு பற்றி எவ்வளவு மட்டகரமான அறிவிருக்கிறது என்பதை பாருங்கள். அரசு நல்ல விசயத்தை செய்தாலும் தமிழ் அதிகாரிகள் அதை அனுமதிக்கிறார்கள் இல்லை என்று சொல்வதையும் கவனிக்க. 

    எடுத்தெறிந்து கதைப்பதன் மூலம் வாதங்களை வெல்லலாம் என்று நினைத்து அந்தரப்படும் வாதமுறையை விளக்க மேற்கண்ட உரையாடலை ஆதாரமாக சமர்ப்பிக்கிறேன். நிர்மலா உரையாடும் முறையைப் பாருங்கள்!

  11. Senan says:
    13 years ago

  12. noputhhhi says:
    13 years ago

    மோர்….


  13. Raja says:
    13 years ago

    சிறைக்குள் இருந்து வெளியில எடுத்ததுதான் பெரிய பிரச்சனையை போயிற்று. மக்களையே தவறு எண்டு வாய் கூசாமல் சொல்பவர்கள், யாருக்காக
    இதைப் பேசுகிறார்கள்? சரி…மண்ணாங்கட்டித் தமிழ் தேசியம் எண்டு ஒரு சாமான் இருக்கிறதா? எண்டு கேட்கிறார் அந்த அம்மையார். ஸ்டாலின் பற்றி அடிக்கடி இந்த இணையத்தில்
    எழுதுபவர்கள் தேசிய இனம் , தேசியம் பற்றி கொஞ்சம் எழுதலாமே. அந்த அம்மைக்கு கொஞ்சம் விளப்பம் வரும் ,

  14. P.V.Sri Rangan says:
    13 years ago

    நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள் தமிழுரிமைச்செடிகளை மேய்ந்துகொண்டபோது…

    71 புத்திசீவிகளது கையெழுத்து,அறிக்கை-கோரிக்கை குறித்து இந்த எதிர்ப்பறிக்கையையும்,தீபந்தொலைக்காட்சி உரையாடலையும் பார்த்தபின் இதைக் குறித்துச் சொல்வதும்,மக்களுக்கான தோழமை சேர்தலும் நமக்கு அவசியமான பணிகளாகிறது.எமது மக்கள்மீது பழிசுமத்திச் சிங்கள ஆளும் வர்க்கத்தையும்,இந்தியப் பிராந்திய நலத்தையும் காக்கமுனையும் இந்தச் சதிகாரர்களது அணித்திரட்சியும்,அவர்களது கோரிக்கைக்குள்- மொழிகளுக்குள் திணித்துத் தரப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களுக்குத் தரப்படும் உயிர்கொல்லி நச்சு விசம் ஆகும்.

    இதை,இன்னொரு இனத்தின்மீதான கரிசனையாக இந்த மேட்டுக்குடிகள் உரைப்பது,அந்தத் துரத்தியடிக்கப்பட்ட மக்களது வாழ்வை நாசமாக்கிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின்கயமைமிகு வரலாற்றை மறைப்பதில் மையமுறும்!

    இந்தப் பிரச்சனைகுறித்து வெறுமனவே”பொய்-உண்மை”எனக் கருத்தாட முடியாது.அல்லது, நிர்மலாவின் அகங்காரமென்றும்,ஆணவமென்றும் குறித்துக்கொண்டு,மேலே செல்லமுடியாது!நிர்மலா முன்வைப்பதும்,சேனன் முன்வைப்பதும் இரண்டும் வௌ;வேறு அடிப்படையைக்கொண்டது.நிர்மலா ஆளும்வர்க்க நலனுக்கொப்ப-அவர்களது வியூகத்தைத் தனது தலைமையில் நடாத்திக் கொண்டிருக்கும்போது, இவைகளுக்குள் மிரண்டுபிடிக்கும் ஆளும் வர்க்கத்தினது நலன்களுக்கேற்ப, இலங்கை-இந்திய அரச இராஜதந்திரம் புகுந்து நிர்மலா மொழிவுகளாக மேலெழுகிறது. சேனன் மக்களது குரலைப் பதியமிடும்போது இன்னும் விபரமாகச் செய்திருக்கவேண்டியவொரு சூழலைத் தவறவிட்டுள்ளார்.

    ஏலவே,புலிப் பாசிசத்தின் மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறியால் பழிவாங்கப்பட்ட மக்களினங்களை இணைத்து இத்தகையவொரு அரசியல் சூதாட்டத்தைச் செய்யக்கூடிய தகவமைப்பைச் செய்வதில் இந்தியச் சணாக்கியத்தின் வெற்றியை அன்றே பல கட்டுரைகளில் இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள்.

    புலிவழிப் போராட்டச் செல் நெறியை அந்நிய அடியாட்படைக்குரியதாகவே பேசியும் இருக்கிறோம்.அதன் விளைவுகள் முள்ளிவாய்க்காலில் அறுவடையாகியதும் வரலாறுதாம்.

    இதிலிருந்துதாம் இன்றைய இந்த நிர்மலாவின் ஆடுகளது முடிச்சை அவிழ்ப்துப்பார்க்க வேண்டும்.நிர்மலா மேய்ப்பது இந்திய-இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கான ஆடுகள் என்பதைக் கறாராகச் சொல்லிக்கொண்டு…

    இலங்கையில் நடந்தேறிய இனமுரண்பாடுகளானது முற்றிலும் வர்க்க நலன்களது அடிப்படையிலேயான முரண்பாடுகளாகவே மேலெழுந்தன.அந்த முரண்பாடுகளை இங்ஙனம் குறித்துங்கொள்வது சுலபம்:

    இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் உருவாகிய மூலதனத்தின் நலம் நோக்கிய முரண்பாடுகள்,சந்தை-வளம் போன்றவற்றைப் பங்கீடு செய்வதில் சிக்கல்களைக்கொணர்ந்தபோது,ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கின்ற ஆளும் வர்க்கப் போக்குகள்,ஒன்றையொன்று மொட்டையடிக்க முனையும்போது,அங்கே இனஞ்சார்ந்த முரண்பாடுகளாக அவை மக்களிடத்தில் உயிர்ப்பலிகளைக் கேட்டன.இந்த முரண்பாடுகளாக உயர்ந்த வர்க்க நலன் சார்ந்த இனஞ்சார் மூலதனக் குவிப்புறுதிக்கேற்ற அரசியற் கோசங்கள் மதஞ்சர்hந்த,மொழிசார்ந்தும்,பண்பாட்டுத்தளத்தில் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியற் தகவமைப்புகளை மெல்ல முன்னெடுத்துக்கொண்டன.

    தமிழ்த் தேசியவாதிகளது-அரசியற் கட்சிகளது கோரிக்கைகளுக்குள் அவர்களது எஜமானர்களது முரண்பாடுகள் மெல்லத்தலை காட்டின.அவ்வண்ணமே,சிங்களப் பாசிச அரசினது கோரிக்கைக்குள் சிங்கள ஆளும் வர்கத்தின் நலன்களும்,அதுசார்ந்த முரண்பாடுகளும் அதிவேகமாகக் கலவரமாகக்கூட மேலெழுந்துகொண்டது.இப்படி ஒவ்வொரு வர்க்கமும் முட்டி மோதும்போது,இனஞ்சார் அரசியலும்,அதுசார்ந்த அரசியல் நடவடிக்கைகளும் மொழுமொத்த இன நலனுக்கானதென்ற போர்வையில் மக்களை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பாரிய யுத்தமாகவும்-கலவரமாகவும் வெடிக்கிறது.

    அன்று,”முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களைக்கொல்” என்று இந்திய ரோ ஆலோசனை செய்த போது, புலிகள் கொன்றார்கள்-துரத்தியடித்தார்கள்.

    மக்களும் அதைத் தமிழர் நலனால் ஆதரிக்காதிருந்தாலும் ஆயுதத்தின் முன் மௌனமாகிக்கிடந்தார்கள்.அப்போது, சொன்னோம்,இது வரலாற்றுத் தவறென.

    வன்னியில் யுத்தம் நடந்தபோது,சிங்கள அரச விமானங்கள் 2008 வாக்கில் வன்னிக்குள் குண்டுபோட்டபோது பல தமிழ்த் தாய்மார்கள் தலைதெறித்து மரணித்துக்கிடந்தார்கள்-பாலகர்கள் தாயின் அணைப்பில் துவண்டு கிடக்க நாம் அனைவருமே வருந்திக்கொண்டோம்!இந்த வலியினால் பொருமிய புலி விசுவாசிகள், குறுந்தேசிய வாதச் சிக்கலுக்குள் விடிவைத் தேடிய அப்பாவி மக்கள்கூட அரச வன்கொடுமைக்கு எதிராகக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும்ச பதிலடியாக மக்கள் மத்தியிலும் பல குண்டுகள் வெடிக்க வேண்டுமெனச் சொன்னார்கள்.அப்போதும் இது தவறென்றோம்.

    அதன் இன்னொரு முனையிலிருந்த அவர்களது மடத்தலைவன் அநுராதபுரத்தில் விமானப்படைத் தளத்தைப் பேரங்கொடுத்துத் தாக்கி அழித்போது கூறிக்கொண்டார் : “சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினோம்” என்று.அதையும் தவறு,இது வரலாற்று வினையை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பில் உணர்த்திக் கொண்டதுண்டு.இது ஒரு தர்க்கமானது.

    ஒரு இனத்தைப்(தமிழ்பேசும் மக்களைப் பலவடிவில் கருவறுக்க) பழிவாங்கச் செய்த சதிகள் இவை.

    இந்திய ரோ அன்றே மதிப்பிட்டு விதைத்ததை, இன்று மிக இலாபத்தோடு அறுவடைசெய்கிறது.நிர்மலாவின் குரலூடாக விரியும் இந்தக் கோரிக்கையானது முற்றிலும் இந்திய-இலங்கை ஆளும்வர்க்கத்தின் நலன்சார்ந்த தகவமைப்பாகும்.தமிழ் நிலப்பரப்பெங்கும் சிங்கள இனவாத இராணுவத்தின் சர்வதிகார ஆட்சியின்கீழ் தமிழ் பேசும் மக்கள்மட்டுமல்ல மற்றைய சிறுபான்மை இனங்களும் கட்டுண்டுவாழும்போதும்,பேரினவாதக்கொடுமையினூடாக இதுவரை பல இலட்சம் மக்களைக்கொன்று குவித்த சிங்கள ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இன்னும் சுதந்திரமாக வாழ அனுமதிக்காதபோது இந்தக் கோரிக்கை வருகிறது-கவனத்தில் இதை எடுக்கவேண்டும்.

    தமிழ் மக்கள் தமது வாழ்வையே செப்பனிட முடியாதவொரு சூழலில் இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களைக் குடியிருத்துவதென்பதும்,அவர்களுக்குத் தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிரஜைகள் வசதி வாய்ப்பை நல்குவதும்,தோழமையைக்கொடுக்க வேண்டுமென்பதும்,மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்பதும் அரசியல் சதியாகும்.

    இந்திய ரோவினது ஆலோசனையுள் திட்டமிட்ட சதி அரசியலைத் தமிழருக்குச் சொந்தமாக்க முனைவதும்,வரலாற்றில் அந்தப்பழியை(முஸ்லீம்களைத் துரத்தியது) யாழ்ப்பாண மக்கள்மீது போடுவதும் இந்தியச் சாணாக்கியத்துக்கு அவசியமானது.இந்த அவசியத்தின் பொருட்டே நிர்மலா வாந்தியெடுக்கிறார்.

    பிராந்திய நலன்களுக்கிணைவாகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைப்போரை நசுக்க என்னென்ன வழி பார்த்தார்களோ, அதையே திட்டமிட்டு ஒரு இனத்தின் மைய முனைக்குச் சொந்தமாக்கிக் காலம் பூராகவும் பழியைச் சுமத்தித் தமிழர்கள் தேசிய விடுதலையைக் கேட்க-போராட உரித்தற்றவர்களென்றும், தமக்குள் இனவொடுக்குமுறையைச் செய்தவர்களென்றும் பட்டங்கட்டித் தொடர்ந்து சிங்க இனவாத ஒடுக்குமுறையை அதனுடன் சமப்படுத்திக்கொள்வதும்,தமிழர்களது சுயநிர்ணயத்தைக் காயடிக்கும் வியூகம்தாம்.

    இதற்கு நிர்மலாவோடிணைந்த அந்த 71 ஆடுகளும் கண்டடைந்த மேய்ப்பர்கள், இந்தியச் சாணாக்கியமாகும்.

    முஸ்லீம்மகளைத் துரத்திவிட்ட நிகழ்வு இன்றுவரையும் அரசியல் அமுக்கக் குழுவுக்கான தகவமைப்பைச் செய்கிறது.சிங்கள இனத்தைப் பகைப்படுத்திய சந்தர்ப்பத்தில் மகிந்தா பாசிசத்துக்கு அது இசைந்துபோக எத்தனித்தது.சிங்களது உச்சி பிளப்பு,வன்னிக்குள் பிரபாகரன் மண்டையை உயிரோடு பிளந்தது.

    இன்றுவரையும் மக்களைப் பிளந்து அரசியல் நடாத்துவதற்கு- யாழ்ப்பாண மக்களுக்குச் சாபமிட ,அன்று இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கிப்புலிகளால்துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களது வாழ்வு ஏதுவாகிறது, இந்திய நலனுக்குப் பேரின வாத அரசுகளுக்கு.

    இன்று தமிழ் மக்களை மன்னிப்புக்கோரச் சொல்லும் நிர்மலாவுக்குத் தெரியும், அதே போன்று சிங்கள இனமும்,அதன் அரசும், தமிழ்பேசும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பும்,நஷ்ட ஈடும் கட்டித் தமிழர்களது பாரம்பரிய பூமியைச் இராணுவச் சர்வதிகாரத்தின்கீழிருந்து விடுதலையாக்கி விடவேண்டும் என்றும்.

    ஆனால்,அந்த முக்கியமான கோரிக்கையை “அதிகாரம் என்பது பல தளங்களில் இயங்குவதாகச் சொல்லி ” அரச வன்கொடுமை இராணுவஜந்திரத்தையும்,அரச அதிகாரத்தையும்,மக்களது உரிமைக்கானதும்,பேரினவாதவொடுக்குமுறைக்கு முகங்கொடுப்பதுமான மக்களது போராட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்குள்பொருத்திச் சமனிட முனைவதும் பாரியக் குற்றம்.இது திட்டமிடப்பட்ட சதி.

    யாழ்ப்பாணத்திலிருந்து புலியை வெரட்டியடித்த இராணுவம்தாம் இன்று பதினைந்து ஆண்டுகளுக்குமேல் யாழ் வடபுலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.

    இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?

    அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா?

    அல்லது,இன்று செய்யும் நிர்மலா அரசியலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்வதற்காகப் “புலிகள் சொன்னாற்றாம் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியிருப்போம்” என்ற புத்தள முஸ்லீம் மக்களது குரலையும் சந்தேகிக்கவே வேண்டும்.

    அந்த வகையில் இந்த 71″புத்திசீவிகளது”கோரிக்கை-கையெழுத்து”அரசியலது ஆணிவேர் , பிரித்தாளும் பிராந்திய மேலாதிக்க இந்திய அரசினது மடியில் ஊன்றுவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவாவதும் நிர்மலாவின்பின் தமிழர்களை மேயத் துடிக்கும் அந்த ஆடுகளைக் கவனமாகத் துரத்தியடித்தே தீரவேண்டும்.

    இல்லையேல், இலங்கை முழுமொத்த மக்களது எதிர்காலப் பயிரையே இந்த ஆடுகள் மேய்து கொழுத்துத்தமது எஜமானர் களுக்கு இறைச்சியாகிவிடும்.

    எனவே,இவர்களது சதிக்கு எதிரான இந்த “யாரிந்தப் புத்திசீவிகள்” எனும் எதிர்ப்பறிக்கையை நான் ஆதரிக்கிறேன்-அவசியமெனவும் கருதுகிறேன்!

    ப.வி.ஸ்ரீரங்கன்,
    12.01.2011
    ஜேர்மனி.

  15. Sri Sriskanda on Facebook says:
    13 years ago

    Dr. Sumanasiri Liyanage said that there is a Tamil Nation in the Island fo Sri Lanka – Shri Lanka. Socialist Alliance.

  16. யோகன் says:
    13 years ago

    நிர்மலா சொன்னதில் ஒரு தவறும் இல்லையே.தவறு என நினைப்பவற்றை [ அரசு .தேசிய கூட்டமைப்பு ,உதவி நிறுவனங்கள்] தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
    நிர்மலா உரையாடும் முறையைப் பாருங்கள்! – சேனன்
    அதில் என்ன தவறு இருக்கிறது என்பது புரியவில்லை [ பெண்கள் என்றால் அடக்க ஒடுக்கமும் ,பூவும் பொட்டும் வைக்கவும் வேண்டுமோ ].தனது இயல்பிலேயே அவர் பேசுகிறார்.இந்த நிகழ்சியில் ஆத்திரப்பட்டது சேனன் தான்.அவர் சரியான கருத்தை முன் வைக்க மோனியாயாமல் தனது கருத்தை திணிக்க முயன்றார்.
    காதரும் ,நிர்மலாவும் இதில் தெளிவாக விசயங்களை பேசியுள்ளார்கள் என்பது எனது கருத்தாகும்.
    சேனன் ஆறுவது சினம்.

    யோகன்

  17. நெருஞ்சி says:
    13 years ago

    நிர்மலாவின் நடிப்பும் எடுப்பும்,இன்று புதிதாய்ப் பார்ப்பவர்க்கு,புரட்சிப் பூவாகப் படும்.மற்றப்படி தெரிந்தவருக்கு அது உழுத்துப் போன பருப்பு;உதவற்றது.
    காதர் ஏற்கனவே பெற்ற அபிஷேகம் காரணமாக,மங்காத்தவைப் பார்க்காது,கொடுத்த பதிலடி,தெரிந்தவருக்கு புரியும்.
    “முட்டாள்தனமாய் பேசிறார்” என்ற மங்காத்தா உறுமல்,காதரின் முகத்தில் கலவரச் சாயலை ஏற்படுத்தியது வெளிப்படையானது.

    நிர்மலா முதலே draft எழுதி அனுப்பி இருந்தால்,அந்த draft இன் உருவாக்கப்பட்ட திகதியுடனான emailஅல்லது word doc.அல்லது pdf file வெளியிட முடியுமா? எது genuine அல்லது கப்ஸா எது என நாம் தீர்மானிப்போம்.

  18. யோகன் says:
    13 years ago

    யார் எந்த உளவுபடையின் உத்தரவின் படி செயல் படுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.ஆகவே நிர்மலா இந்திய உளவுபடையின் கைக்கூலி ( ? ) என்பதும் , இதை எழுதுபவர்கள் யாரின் கைக்கூலி என்பதும் உலவுப்படைக்ளுக்கே வெளிச்சம்.!
    இந்த “போராட்டம்” தமிழ் மக்களுக்கு தந்த படிப்பினை என்ன ? இதிலிருந்து என்ன பாடம் படித்தார்கள்.?புலம் பெயந்த தமிழர்கள் உலக சுமுதாயத்திடமிருந்து என்ன பாடம் படித்தார்கள்.?
    யாழ்ப்பானத்தரின் மனநிலையில் கடுகளவேனும் மாற்றமுள்ளதா ? இன்றும் தாழ்த்தபட்ட சாதியை சேர்ந்தவர்கள் காணி ,வீடு இலகுவில் வாங்க முடிவதில்லை.

    இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?
    அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா? ப.வி.ஸ்ரீரங்கன்

    அவர்கள் [ அரசு ] தமிழர்களையும் ,முச்லீமகளையும் பிரித்து வைக்கவே விரும்புபவர்கள்.நேசக்கரத்தை முதலில் நீங்கள் நீட்டுங்கள்.(இதை நீங்கள் சிங்கள மக்களிடமிருந்து எதிர் பார்க்கிறீகள் இல்லையா ? )தமிழர்கள் வரவேற்றால் அடுத்து என்ன நடவெடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்பது தெரிய வரும்.அரசு அதை எதிர்த்தால் அதை அம்பலபடுத்துங்கள். இப்படியான ஆகக் குறைந்த இரு தரப்பு உரையாடலுக்கான முயற்சிகளை ” இந்திய உளவுப்படையின் ” செயல் என்று ஏன் பேச வேண்டும். இந்த முரண்பாட்டை நீக்குவது தமிழ் மக்களின் கடமை இல்லையா .???உள்ளூரில் உள்ளவர்கள் முகம் திருப்பி கொண்டு திரிந்தால் குடியேறும் முஸ்லீம் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

    சரி ஒரு பேச்சுக்கு இலங்கை அரசு குடியேற்றினால் என்ன சொல்வீர்கள்.? அரசின் கைக்கூலிகள்[ தொப்பி பிரட்டிகள் ] என்று சொல்லவா மாட்டீர்கள்.ஆகா மற்றவர்கள் செய்வது எல்லாம் தவறு.தமிழ் மக்கள் தான் அப்பாவிகள்.?

    மற்றவர்களை குற்றம் சாடியே புலிகள் தங்களை அழிவுக்கு கொண்டு சென்றார்கள். அதை எதிர்ப்பவர்கள் என்றவர்களும் அதே தவறை தான் செய்கிறார்கள்.இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் பிரபாகரன் செய்த்ததை தான் செய்வார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.ஏனென்றால் எல்லார் மனதிலும் ஒரு ” குட்டி பிரபாகரன் ” ஒழித்துக்கொண்டே இருக்கிறான்.

    அரசு குடியமர்த்தவில்லை.சரி நல்லிணக்கத்தை நீங்கள் துவங்கவேண்டிய கடமை உங்களுக்கு இல்லையா ?இந்த முரண்பாடு இருந்தால் இதை வைத்து யாரும் [ மக்கள் விரோதிகள் ]குழப்பங்களைத்தான் விளைபிப்பார்கள். அதற்க்கு நாம் ஏன் இடமளிக்கவேண்டும்.???

  19. thamizhan says:
    13 years ago

    அலிபாவும் 40 திருடர்களும் போல் ,நிர்மலாவும் 70 திருடர்களும் வெளிக்கிட்டினம் தமிழனை விற்பதற்கு. ஏற்கனவே செம்பு தூக்கி டக்கிளஸ், எட்டப்பன் கருணா எல்லாரும் தமிழனை விற்றது போதாது என்று , இவைகள் றூம் போட்டு யோசித்து வெளிக்கிட்டார்கள். சூடு சொரணை அற்ற நாதாரிகள்; தேசியத்தலைவரும், புலிகளும் பலமாய் இருக்கும் போது ஒரு கொம்பனாலும் தமிழனை அடிமை ஆக்கவோ, விக்கவோ முடியவில்லை, இன்று புலிகள் இல்லாத காட்டில் பன்னிகள் படுத்துக்கிடந்து பகல் கனவு காண்பது போல் இவெர்களும் கொழுப்பெடுத்துக் கொக்கரிக்கிறார்கள். மழை அடித்து வீதி ஓரக் குப்பைகள் அள்ளுப்பட்டு, அல்லோலப்பட்டு காணாது போவது போல் இந்தத்திருடர்களும் வெகு சீக்கிரம் காணாமல் போய் விடுவார்கள்: இதற்கு ஏன் வீண் கவலை 🙂 😀

  20. உமா வரதராஜன் says:
    13 years ago

    ‎’தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் கையெழுத்திட்டதாகக் குறிப்பிடப்படும் 71 புத்திசீவிகளின் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பதைக் கண்ணுற்றேன். இரண்டு மறுப்புக்களை கூற வேண்டியுள்ளது. 

    01. நான் புத்திசீவியல்ல. 
    02. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அவசியமானதொன்று என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அரசியல் தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இந்த முக்கிய கால கட்டத்தில் இத்தகைய அறிக்கை ஒன்று வெளியாவதை உள்நோக்கம் கொண்டதாகவும் திசை திருப்பும் எண்ணம் உள்ளதாகவுமே கருத இடம் உள்ளது. 

    கடந்த 29 ஆம் திகதியிலிருந்து இணையத்துடன் எதுவித தொடர்புமற்று வெளிநாட்டுப் பயணமொன்றில் இருந்த, என்னுடைய பெயர் எனது சம்மதம் இல்லாமல் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து எனது அதிருப்தியையும், மறுப்பையும், ஆட்சேபணையையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

  21. Sumathy Sivamohan says:
    13 years ago

    As an organizer of the statement ‘An appeal to the Tamil community and its Civil and Political Representatives’ I attest that Mr. Uma Varatharajan endorsed the statement.
    Thank you
    Sumathy Sivamohan, Dept. of English, University of Peradeniya

    • selvan says:
      13 years ago

      Lets see what the uma got to say.

    • Mamu says:
      13 years ago

      What a change over Mama, Now .. tune changeu…. 1…2….3..

      • selvan says:
        13 years ago

        உதுல யாரு யார சுத்துறான் எண்டு எங்கென்னடா தெரியும் மவனே

  22. selvan says:
    13 years ago

    உப்பிடி எத்தின பேர சுத்தினாங்களோ கடவுளுக்குத்தான் தெரியும்டா சாமி

  23. selvan says:
    13 years ago

    இன்னொரு சங்கதி இதில என்னடா எண்டா ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதாவது பெரியம்மா, அம்மா, மகள் என்று ஒரு பத்துபேருக்கு மேல வரும்போலிருகிறது. இதோடு அவுங்கட தேவாலயத்தை சேர்ந்தவர்களையும் சேர்த்தா இன்னும் ஒரு 20-25 தேறும். அதாவது 30வீதம் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் புத்திஜீவிகளாக தங்களை தாங்களே கூறிக்கொள்கிறார்கள். வேடிக்கயாக இல்ல உங்களுக்கு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...