இந்தியா முழுவதும் இந்து பயங்கரவாதத்தையும், மத அடிப்படை வாதத்தையும் விதைக்கும் பயங்கரவாதக் ஆதரவுக் குழுக்களில் இந்து முன்னணி முன் வரிசையில் காணப்படுகின்றது. உழைக்கும் மக்கள் சார்ந்தும் ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும் செயற்படும் ஜனநாயக அமைப்புக்களை இந்து முன்னணி ‘நக்சல் பாரி’ அமைப்புக்களாக அறிவித்து தடை செய்யுமாறு அறிவித்துள்ள்ளது. தமிழக காவல் துறை தமிழ் நாட்டில் நக்சல்பாரி அமைப்புக்களின் செயற்பாடுகள் இல்லை என அறிவித்துள்ள நிலையில் போலிஸ் வேலையை தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளது இந்து முன்னணி என்ற பாசிச பயங்கரவாத அமைப்பு, தாங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ந்ததாகவும் நக்சல்பாரி அமைப்புக்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இந்து முன்னணி அறிக்கை விடுத்துள்ளது. நாளாந்தம் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இவர்களுக்கு ஆய்வு நடத்தக் கிடைத்திருப்பது யார் மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்பதே.
ஆய்வின் முடிவில் இந்து முன்னணியின் மாபெரும் கண்டுபிடிப்பு இதோ:
‘மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி போன்ற 26 பெயர்களை முகமூடியாகக் கொண்டு தமிழகம் முழுவதும் ஆயுத புரட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சென்னை புறநகர் ரயில்களில் தொடர்ந்து இவர்களது பிரச்சாரம், ஆயுத புரட்சிக்கு உண்டி வசூலும் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் மாணவர் தங்கும் விடுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பெயர்களில் தங்கி மாணவர்களை மூளை சலவை செய்து தங்கள் நாச வேலைக்கு கருவிகளாக மாற்றி வருகிறார்கள் நக்ஸல் பயங்கரவாதிகள். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் மாணவர்கள் இல்லாதவர்கள் தங்குவதைத் தடுத்து நிறுத்தி, மாணவர்களுக்குப் பாதுகாப்பு தந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.’
சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தும் வெகுஜன அமைப்புக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுவது அரசுகள் மட்டுமல்ல இந்து முன்னணி போன்ற பயங்கரவாத அமைப்புக்களுமே.
தமழ் நாட்டிலும், உலகம் முழுவதிலும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பயங்கரவாதத்தைத் தூண்டும் இந்து முன்னணியின் செயலைக் கண்டிப்பதன் ஊடாக மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
Hindus did loose their sovereignitiy to Moguls (Muslims) at Panipat. Freedom at Midnight by Dominique Lapiere and Larry Collins.
புரட்சிகர சக்திகளின் ஐக்கியம் மிக மிக அவசியமானது.எந்த மதவாதமாக இருந்தாலும் அது ஆளும் வர்க்கத்தின் கை கருவியே! புரட்சிகர சக்திகள் பிரிந்து இருக்கும் வரை சிங்கம் எருதுகளை வேட்டையாடிய கதைதான்.
புரட்சிகர அமைப்புகளின் ஒற்றுமை மிகமிக அவசியம்.அதுமட்டுமே இதற்கு எத்ரான நடவடிக்கையாகும்.தோழர் லெனின் சொன்னது போல் “தொழிலாளி வர்க்கத்திடம் ஒற்றுமையிருந்தால் அனைத்து இருக்கிறது,அது இல்லை என்றால் எதுவும் இல்லை”.