ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு.

நா‌ட்டு நலனை பா‌தி‌க்கு‌ம் அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ஆக‌ஸ்‌ட் 14ஆ‌ம் தே‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம்” எ‌ன்று இடதுசா‌ரி க‌‌ட்‌சிக‌ள் அற‌ி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்‌ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூ‌ட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டு நலனை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

வேலூரில் அடுத்த மாதம் 5ஆ‌ம் தேதியும், மதுரை, நெல்லை, கோவையில் 8ஆ‌ம் தேதியும், சேலம், திருப்பூரில் 10ஆ‌ம் தேதியும், தூத்துக்குடி, திருச்சியில் 11ஆ‌ம் தேதியும், திருவாரூர், ஈரோட்டில் 13ஆ‌ம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறும். திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்கரத் கலந்து கொள்கிறார். பொதுக்கூட்டங்களில் கம்யூனிஸ்‌ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் அடுத்தமாதம் 14ஆ‌ம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்” எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.