எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதற்கான அதிமுக சட்டமன்றக் கூட்டம் இன்று மோதலில் முடிந்துள்ளது. மீண்டும் திங்கட் கிழமை கூடி ஆலோசிப்பதாக கலைந்து சென்றுள்ளார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது.அதில் அதிமுக மட்டும் 65 இடங்களில் வென்றுள்ளதால் அது பிரதான எதிர்க்கட்சி ஆனது. ஆனால், அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவரில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதில் மோதல் உருவாகி உள்ளது.
கூட்டம் துவங்குவதற்கு முன்பே வெளியில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் முக்கிய தலைவர்கள் தனியாக அறைக்குள் ஆலோசனை நடத்தினார்கள். பினன்ர் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கும் தொண்டர்கள் கோஷம் எழுப்ப திங்கள் கிழமை மீண்டும் கூட்டம் என அறிவித்து விட்டு கிளம்பி விட்டார்கள்.