மத்திய இந்தியப் பகுதிகளில் பல் தேசிய நிறுவனங்கள் கனிமங்களைக் கொள்ளையிடுவதற்காக இந்திய அரச படைகளுடன் இணைந்து அப்பகுதிகளில் வாழும் மக்களை அழித்தும் அகதிகளாக்கியும் வேட்டையாடி வருகின்றன. இதற்கெதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுக்கள் போராடி வருகின்றனர். இந்தியா முழுவதும் மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மாவோயிஸ்டுக்களை வெற்றிகொள்வதாக சிறப்பு அதிரடிப்படைகளும் போலிசாரும் தெரிவித்து வருவது வழமையாகிவிட்ட நிகழ்வு.
12.12.12 அன்று சண்டிஸ்காரில் நடைபெற்ற மோதல் ஒன்றில் மாவோயிஸ்டுக்கள் மாவோயிஸ்ட் எனச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 9 பேரைக் கைது செய்ததாகவும் போலிஸ் அதிகாரி ராகுல் பகத் தெரிவித்துள்ளார். கைதானவர்களில் 6 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர் என அவர் இன்று பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.
மோதலில் 8 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஒருவரின் உடலை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் பழங்குடி மக்களின் விழா ஒன்றில் புகுந்த இந்தியப் போலீசார் அப்பாவிகளைக் கொலை செய்த பின்னர் மாவோயிஸ்டுக்கள் மோதலில் இறந்து போனதாக செய்திகளை வெளியிட்டமை அறிந்த ஒன்று.








