மகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளி நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளியை நேற்று சந்தித்து உரையாடினார். உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் தெளிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் வழமையாக காங்கிரஸ் அரசு பேசும் அதே விடயங்களின் மறு பிரதி போன்றே மோடி பேசியிருந்தார்.
இதற்கு பொழிப்புக்கூறிய புலம்பெயர் ஊடக்ங்களும், இந்திய பார்ப்பன-பல்தேசிய ஊடகங்களும் கோமாளித்தனமாகக் கருத்துக்கள் வெளியிட்டன. ஒரு புலம்பெயர் ஊடகம் மகிந்த ராஜபக்ச சிங்கள மந்திரீகர் ஒருவரின் தாயத்தை எடுத்துச்சென்று மோடிய மடக்கினார் எனத் தலைப்புச்செய்தி வெளியிட்டிருந்தது.
இன்னொரு ஊடகம் சுஜாத்தா சிங்கின் தலைக்கு மேலால் எட்டிப்பார்த்தது போல மோடி ராஜபக்சவுடன் கடுமையாக நடந்துகொண்டார் என்றது. மக்களுக்கு உண்மைகளை மறைத்து உணர்ச்சிவயப்படுத்தும் நோக்கத்துடன் பாசிஸ்டுக்களதும் கொலைகார்களதும் ஏஜன்டுகளாக மாறிப்போன இந்த ஊடகங்களின் ஒரே நோக்கம் பிழைப்பு மட்டுமே.
உங்களையும் சேர்த்துத்தான், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
You will not be able digest the real comment,
This is the way you people support-இந்திய பார்ப்பன-பல்தேசிய medias.