இந்தியாவில் உலகின் அதிபயங்கர பாசிஸ்டும், இனக்கொலையாளியும், போர்க்குற்றவாளியுமான நரேந்திர மோடி என்ற இந்து வெறியன் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக இலங்கையில் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் மோடியை ஆட்சியில் அமர்த்தின. ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மோடி போன்ற கொலையாளிகளோடு இணைந்துகொள்வதா அன்றி கொலைகளுக்கு எதிரான மக்கள் கூட்டங்களோடு இணைந்து கொள்வதா என்ற சமன்பாட்டில் யாழ்ப்பாண பிந்தங்கிய பிற்போக்குத் தலைமைகள் மோடி ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்த வகையில் தமிழர்கள் கொல்லப்படும் போது மோடியைப் போன்று அண்ணார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற்றொரு சைவைப் பழமான வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய அதிகாரவர்கங்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விக்னேஸ்வரன் இந்த முறை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருமாறு மோடியை யாசிக்கும் அவமானகரமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடி போன்ற பாசிஸ்டுக்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பலகோடி மக்களைப் பகைவர்களாக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்து:
‘உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்’
Wait for The great actor Sampanthan’s & type writer king Anandasangaree’s statements..
என்னடா இனவழிப்பு… ….நீங்கள் செய்த அளவிற்கு பாதி அளவிற்குக்கூட மற்றவர்கள் செய்திருக்கமாட்டார்கள்……ராஜ பக்க்ஷே கூட மற்றவர்களைத்தான் இனவழிப்பு செய்தான். ஆனால் நீங்கள் சொந்த தமிழினத்தையே இனவழிப்பு செய்தீர்கள்…….இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கவேண்டியதில்லை………….
## Sampanthan’s & type writer king Anandasangaree’s statements ##
I don’t see any difference between Sampanthan’s & type writer king Anandasangaree’s statements and INI ORU articles.
Yes, all are came from same soil…
We all breath same air… Drink same water…
And proud to be Srilankam Tamils…
அப்போ சட்டி பானையை பார்த்து சிரித்த கதைதான் இது..
Yes…!
விக்கியின் அறிக்கையினை மூளையும் தமிழர் நலனிலும் அக்கறையுள்ள எவரும் பிழை சொல்லமாட்டார்கள். மோடி குஐராத் கலவரத்தில் பிழைவிட்டுள்ளார் என்பது உண்மை. அதற்காக இந்த நேரத்தில் அவரினை பகைப்பது தமிழர் நலனிற்கு எந்தவிதத்திலும் உதவாது. மாறாக இது ராசபக்சவின் நிலையினையே பலப்படுத்தும். இதுதான் சிலரின் உள்ளார்ந்த நோக்கமும்.
தமிழினப்படுகொலையின்போது விக்கி பார்த்துக்கொண்டிருந்தார் சரி நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீரகள்.