இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தடைந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியாவுக்கான இலங்கை தலைமை தூதர் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
மகிந்த ராஜபக்ச, வி.கே.சிங், நரேந்திர மோடி ஆகிய போர்க்குற்றவாளிகள் ஒரே மேடையில் அமரும் விழாவாக இது அமைகிறது.
அதே வேளை மோடிக்கு தமிழ் நாட்டில் ஆதரவளித்தவரான 100 பேர் மோடியுடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்டனர். டெல்லியில் நடத்தப்பட்ட ராஜபக்ச எதிர்ப்பு ஆர்பாட்டத்தைத் தடைசெய்யும் முகமாக வை.கோ கைது செய்யப்பட்டார். நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் ஈழத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட வை.கோபாலசாமி அரசியலில் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பில் கலந்துகொள்ளாமல் ஈழ ஆதரவு வாக்குக்களைத் தக்கவைத்துக்கொண்டார்.
டெல்லி பதவியேற்பு விழாவில் மன்மோகன் சிங் உடன் கைகுலுக்கிய ராஜபக்சவை அத்வானி தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டார்.
Thiru Vai.Ko. Is a senior Leader he should be sworn in the Minister post in the BJP Cabinet Tamil nadu Cheif Minister is in the Right Decision She should not Participate in the Function.